ஜம்முவில் துப்பாக்கிசூடு: ஆர்எஸ்எஸ் தலைவரும், மெய்காவலரும் பலி

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திரகாந்த் மீதும், அவரது தனது மெய்காவலர் மீதும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மெய்காவலர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், சந்திரகாண்ட் அடைந்த படுகாயங்களால் இறந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுசெத் சிங் (பிராந்த் சங்க சாலாக்) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் எழுகின்ற தேசியவாத சமூகத்தின் குரலை அமைதியாக்குதவற்கான முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியோரை உடனடியாக கண்டுபிடித்து, பொது மக்களின் உயர்வான மனப்பான்மையை பாதுகாக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

செவ்வாய்கிழமை கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவிற்கு வெளியே மிகவும் அருகில் நின்று அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சந்திரகாந்தும் , அவரது மெய்காவலரும் சுடப்பட்டனர்.

மருத்துவமனையில் கூடிய பெருங்கூட்டம்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவரின் மெய்காப்பாளர் சம்பவ இடத்தில் இறந்துள்ளார் என்றும், சந்திரகாந்த் என்ற இனம்காணப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் ஜம்முவிலுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று முன்னதாக காவல்துறை தெரிவித்தது.

மாவட்ட மருத்துவமனைக்கு வந்த சந்திரகாந்த் மிகவும் அருகில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுமார் 12.45 மணிக்கு சுடப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

இதனை தொடர்ந்து போராட்டம் வெடித்ததால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கிஷ்த்வார் நகரில் மாவட்ட நீதிபதி அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. -BBC_Tamil

TAGS: