தமிழ்ப் பள்ளிகளை மேற்பார்வைச் செய்ய தமிழ் கல்வி கற்ற அதிகாரிகளே வேண்டும்

தமிழ்ப் பள்ளிகளை மேற்பார்வைச் செய்ய தமிழ் கல்வி கற்ற அதிகாரிகளே வேண்டும் தேசிய பள்ளிகளில் மட்டுமல்ல தேசிய மாதிரி பள்ளிகளிலும் கல்வி அமைச்சு உரிய கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் கூறுகிறார்.

தேசிய மாதிரி தமிழ், சீனப் பள்ளிகளை மேற்பார்வையிடுவதற்கும் அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கும் அம்மொழிகள் அறிந்த அதிகாரிகளை ஏன்  நியமிக்கவில்லை என மேலவையில் செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பிய போது, கல்வி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தேசிய கல்வி முறையின் மேம்பாட்டிலும் தரத்திலும் கல்வி அமைச்சு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. இவ்விசயத்தில் தேசிய பள்ளிகளில் மட்டும் அல்ல தேசிய மாதிரி தமிழ் சீனப்பள்ளிகளிளும் அமைச்சு உரிய கவனமும் அதீத அக்கறையும் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டர். மனித வளம், அடிப்படை வசதி, நிதி உதவி போன்றவற்றை பள்ளிகளுக்கு வழங்குவதோடு, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து கல்விக் கழங்களும் நிர்ணயக்கப் பட்டுள்ள இலக்கை அடைவதை உறுதி செய்யும் பொருட்டு அவ்வப்போது   சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

சம்பந்தப்பட்ட பள்ளிகளில் குறிப்பாக தமிழ், மெண்டரின் மொழிகளின் தரத்தை சோதனை இடுவதற்கு அம்மொழிகளில் பரீட்சையும் உடைய அதிகாரிகளே அனுப்பப் படுகின்றனர். தேசிய பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப தமிழ், சீனப் பள்ளிகளிலும் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றாரவர். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்லவே!

உதாரணத்திற்கு அண்மையில்  புக்கிட் புருந்தோங் தமிழ்ப் பள்ளியை சோதனையிட வந்த அத்தனை அதிகாரிகளும் மலாய்காரர்கள். அப்பள்ளியின் மொழி தரத்தையும் போதனை தரத்தையும் இவர்கள் எவ்வாறு நிர்ணயிக்க முடியுமென அப்பள்ளியின்  பேற்றோர் ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியதோடு மனக் குறையும் கொள்கிறது.

குறிப்பாகக் தொடக்க நிலை சீன, தமிழ்ப் பள்ளிகளில் இதுகாறும் மலாய் அதிகாரிகளே மேற்பார்வைக்கு வந்துள்ளனர் என்ற கூற்றை மெய்ப்பிப்பதற்கு ஆசிரியர்களைக் கேட்டால் தெரியும்.

அத்துடன், மொழி தெரியாமல் குறிப்பிட்ட சில ஆசிரியர்களின் கருத்துக்களை செவிமடுத்து ‘ரிப்போர்ட்’ எழுதுவதுதான் முறையா? இத்தனை ஆண்டுகாலம் இந்த வினோத முறையைக் கடையாண்டு வந்த கல்வி அமைச்சு,  தமிழ்ப் பள்ளிகளின் தரத்தில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது?

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன்