இந்தியாவில் இப்படியும் நடக்குது போலீஸ் அட்டூழியம்!

அலகாபாத்: உத்திரபிரதேச மாநிலத்தில் தெருவோரமாக நின்று வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி வியாபாரியை அடித்து துன்புறுத்தியதுடன், அவரை கீழே தள்ளி மோட்டார் வண்டியை நெஞ்சில் ஏற்றி துவம்சம் செய்த காட்சி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அலகாபாத் மார்கெட் வீதியில் பலர் தள்ளு வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் இந்த போலீசார் மாமூல் வாங்கி செல்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழியாக வந்த போலீஸ்காரர்கள் 4 பேர் ஒரு வியாபாரியின் வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லியிருக்கின்றனர். அவர் மறுக்கவே ஆவேசமுற்ற போலீசார் அவரை அடித்து கீழே தள்ளினர். வண்டியில் இருந்த காய்கறி மற்றும் கனிகள் ரோட்டில் சிதறி ஓடின. இதனை பார்த்த அக்கம் பக்கத்து வியாபாரிகள் என்ன செய்வது என அறியாமல் அதிர்ச்சியில் உறைந்து பார்த்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து கோபம் உச்சிக்கு ஏறியதும் அந்த வியாபாரியை தரையில் தள்ளி அவர் நெஞ்சில் மோட்டார் பைக்கை கொண்டு ஏற்றி அழுத்தி துவம்சம் செய்தவனர்.

இந்த சம்பவம் ஒரு சிலரால் கைத்தொலைபேசி மூலம் படமாக்கப்பட்டு பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காட்சி வெளியானதும் மாநிலம் முழுவதும் இந்த விஷயமே பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கிடையில் இது போன்ற வன்செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டில் பொதுநல வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் எஸ்.பி., கூறியுள்ளார்.

TAGS: