காஷ்மீர் எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவம் கடும் துப்பாக்கி சண்டை

kashmir-border-india-pakistanஇந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் தயாராக இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ சோதனை சாவடியில் இந்திய ராணுவத்தினர் சோதனை நடத்தினர்.

அப்போது இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு வீரர் காயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து காஷ்மீரில் சவான் பத்ரா ராணுவ சோதனை சாவடி மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இந்திய ராணுவம் தாக்கியது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.

TAGS: