ஈரானில் பிடிப்பட்ட 29 குமரி மீனவர்கள் விடுவிப்பு

indian_fishersநாகர்கோவில்: வழி தவறிச் சென்று ஈரானில் பிடிபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்களை அந்த நாடு விடுவித்துள்ளது.

கத்தார் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயற்கை சீற்றத்தால் வழி தவறி சென்ற குமரி மாவட்டம் கேரளாவை சேர்ந்த 29 மீனவர்கள் ஈரான் நாட்டு கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர்.

மீனவர்களின் முதலாளிகள் இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தினர். இதையடுத்து அவர்கள் இக்கிஷ் தீவில் உள்ள துறைமுகத்தில் படகில் தங்க வைககப்பட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இது தொடர்பாக இந்திய மத்திய அரசு மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது.

இந்நிலையில் இந்த 29 மீனவர்களும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இந்த தகவலை ஈரானில் உள்ள தூதரக அதிகாரி மனோஜ், ஹெலன் டேவிட்சன் எம்பிக்கு தெரிவித்துள்ளார். மீனவர்கள் அபுதாபிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவுமம் குமரி மீனவர்கள் இன்று திருவனந்தபுரம் வழியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: