அலகாபாத் ரயில் நிலைய நெரிசலில் சிக்கி 36 பலி

Allahabad railwayஅலகாபாத்: இந்தியாவின் உ.பி., மாநிலம் அலகாபாத் பிரயாகையில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 14ம் தேதி துவங்கிய கும்பமேளா, வரும் மார்ச் 10ம் தேதி வரை நடக்கிறது. நேற்று தை அமாவாசை என்பதால் அங்கு 3 கோடி பேர் புனித நீராடினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடினர்.

இந்நிலையில், நேற்று மாலை கும்பமேளாவில் கலந்து கொண்டவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக அலகாபாத் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இந்த ரயில் நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. மாலை 7 மணியளவில், அலகாபாத் ரயில் நிலையத்தில் 5 மற்றும் 6வது பிளாட்பாரங்களுக்குச் செல்ல பயன்படும் நடைமேடை பாரம் தாங்காமல் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் அப்போது நடைமேடையில் இருந்த பலர் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஸ்வரூப் ராணி மற்றும் ரயில்வே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மோசமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

TAGS: