ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா நடவடிக்கை

agusta_westlandலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இத்தாலிய நிறுவனம் ஃபின்மெக்கானிக்காவிடம் இருந்து இந்தியா 12 ஹெலிகாப்டர்களை வாங்குகின்ற 75 கோடி டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடைமுறைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது.

ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முறைப்படி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஏழு நாட்களில் பதிலும் கோரியிருக்கின்றது.

இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு இந்த நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி இத்தாலியில் பதவி விலகியுள்ளார்.

ஃபின்மெக்கானிக்காவுக்கு பிரிட்டனில் துணை நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட மூன்று ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுவிட்டன.

TAGS: