தீவிரவாத தாக்குதல்: உலக அளவில் இந்தியாவுக்கு 4ம் இடம்!

mumbai_attackடெல்லி: தீவிரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் அடிக்கடி நிகழ்கிறது. தாக்குதலை தடுக்க எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏதாவது ஒரு நகரத்தில் தாக்குதல் நடைபெறுவதும், பலநூறு உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

காஷ்மீரோ, கோவை மாநகரமோ குண்டு வெடிப்புகளுக்கு இலக்காகிக் கொண்டுதான் இருக்கிறது. நாடாளுமன்றத்தின் உள்ளேயே கூட தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடைபெறும் அளவிற்கு இந்திய நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் உள்நாட்டு கலவரம், பிரிவினைவாத மோதல், தீவிரவாதிகள் தாக்குதல் என தொடர்ந்து நடந்துகொண்டேதான் உள்ளன. அதிலும் இது போன்ற தீவிரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவை தெற்கு ஆசிய நாடுகள்தான் என்கின்றன ஒரு கணக்கெடுப்பு.

உலக அளவில், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து 4-ம் இடத்தில் இந்தியாவில்தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நிகழ்வதாக சர்வதேச தீவிரவாத புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

TAGS: