மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் வாசகங்களை அடிப்படையாகக் கொண்டே ஒரு முடிவுக்கு வரமுடியும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அரசியல் ரீதியிலான தீர்வொன்றுக்கு செல்லுமாறு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை விடுத்து வந்ததாக அவர் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விரைவில் வடமாகாண தேர்தலை நடத்தி முடிக்குமாறும் குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் இலங்கையிடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.