தமிழ்நாடு தனி நாடாவதை ஆதரிப்பீர்களா…? அமெரிக்காவிடம் கேட்ட திமுக!

india-tamil-naduசென்னை: இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று தமிழ்நாடு முடிவு செய்தால் அதை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அப்போதைய அமெரிக்கத் தூதரிடம், அப்போது திமுக அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த கே.ராஜாராம் கேட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கடிதத் தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தக் கேள்வியை அமெரிக்க தூதரிடம் கேட்டுள்ளார் ராஜாராம்.

இதுகுறித்த விவரம் 1975ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு சென்னை துணைத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட ரகசியக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.

ராஜாராம் கேட்டது என்ன?

ஒரு வேளை, இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியாகப் பிரிந்து தனி நாடாக விரும்பினால், அந்த முடிவை எடுத்தால், அதை அமெரிக்க அரசு ஆதரிக்குமா…?

அமெரிக்கா அளித்த பதில் என்ன?

இதற்கு அமெரிக்க தூதரக அதிகாரி ராஜாராமிடம் பதிலளிக்கையில், நிச்சயம் அப்படிப்பட்ட முடிவை அமெரிக்கா ஆதரிக்காது. இந்தியாவின் ஒருங்கிணைந்த தன்மையை மட்டுமே நாங்கள் ஆதரிப்போம். இந்தியா மட்டுமல்ல, வேறு நாடுகளிடமும் கூட இப்படித்தான் நாங்கள் நடந்து கொள்வோம் என்றாராம்.

TAGS: