பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்

tmsoundararajan_tms_tamil_playback_singer_பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார்.

இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் நேற்று சனிக்கிழமை அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91.

தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் ‘ராதே என்னை விட்டுப் போகாதடி” என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார்.

தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக அவர் பாடியிருக்கிறார்.

TAGS: