புதுடில்லி : 2009-2010 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009-10ல் 36.5 சதவீதமாக உயர்ந்திருந்த வேலையாற்றுவோரின் எண்ணிக்கை 2011-12ல் 35.4 சதவீதமாக குறைந்துள்ளது. வேலையில் இருப்போர் மற்றும் வேலையில்லாதோர் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்ப பெண்களும் சேர்க்கப்பட்டனர்.
இதில் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. நகர்புறங்களில் உள்ள 35 லட்சம் பெண்கள் வேலைக்கு செல்வோராகவும், அதேசமயம் 90 லட்சம் கிராமப்புற பெண்கள் வேலையில்லாதவர்களாகவும் உள்ளனர். ஆனால் ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கிராமப்புற மற்றும் நகர்புற ஆண்களில் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.