இந்திய அரசாங்கத்தினால் தேசிய நெருக்கடி நிலையாக விபரிக்கப்பட்டுள்ள வட இந்திய வெள்ளத்தில் அகப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களை ஹெலிக்கொப்டர்கள் மூலம் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுகின்ற பாதுகாப்புப் படையினர், வீதிகளையும், பாலங்களையும் திருத்துவதற்காகவும் திண்டாடிவருகின்றனர்.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட உத்தராகாண்ட் மாநிலத்தில் இருந்து உயிர் தப்பியவர்களை ஒரு சிறப்பு ரயில் ஏற்றிவருகிறது.
மேலும் மழை பெய்யலாம் என்று வந்த வானிலை எதிர்வுகூறல், அங்கு ஒரு அவசர உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரண நிறுவனங்களிடையே ஒரு ஒருங்கிணைப்பு கிடையாது என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என்பது குறித்த கடுமையான கேள்விகளை முதலமைச்சர் எதிர்கொள்கிறார்.
500 க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாகக் கூறப்படுவதுடன், இழப்பு மேலும் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன. -BBC
ஆழ்த்த அனுதாபத்தை தெரிவிதுக்கொல்வோமாக! பேரிடர் !! பக்தர்களுக்கு கிடைத்த பெரிய ஏமாற்றம் , கொடுமையுளும் கொடுமை !! ஒன்றுமட்டும் புரியவில்லை, எதற்கு அலைகிறார்கள் நமது மக்கள் ? தமிழகத்தில் இல்லாத கோவில்களா? இருப்பினும் அடுத்த மாநிலத்தில் உள்ள தெய்வ தளங்களே ஈர்க்கபட்டு எதையோ தேடி அலைகிறான் , அழிகிறான் ! மலேசியா மக்கள் , தமிழ் நாட்டு கோவில்களுக்கு படையெடுப்பு , தமிழ் நாட்டு மக்கள் ஆந்திராவுக்கு படையெடுப்பு அல்லது வட மாநிலங்களுக்கு படையெடுப்பு. சொந்த ஊர் தெய்வங்கள் மீது நம்பிகையில்லையா? ஏன் ? பணமும் போய், உயிரும் போய், பிணமாக வருகிறார்கள். பரிதாபம், பரிதாபம் .