இந்த வேகம் யாருக்கப்பா வரும்…! 15 ஆயிரம் பேரை மீட்ட ‘மோடி’

india23613aஉத்ரகண்ட்: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய 15 ஆயிரம் குஜராத் பக்தர்களை அதிகாரிகள் படையுடன் சென்று பத்திரமாக மீட்டு வந்தார் மோடி . இவரது அசுர வேக செயல்களை பக்தர்களும் , பா.ஜ., தொண்டர்களும் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

பருவ மழை காரணமாக வட மாநிலங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் 40 ஆயிரம் பேர் வரை ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதியை குஜராத் முதல்வர் மோடி சென்று பார்வையிட்டார்.

இவர் தன்னுடன் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஒரு ஐ.பி.எஸ்., ஒரு ஐ.ஏ.எஸ்., ஒரு ஐ. எப்.எஸ்., மற்றும் குஜராத் மாநில் நிர்வாக துறை அதிகாரிகள், இரண்டு டி. எஸ்.பி., 5 இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை கொண்ட குழுவினரை உடன் அழைத்து சென்றார். இவர்களுடன் லோக்கல் பா.ஜ., தொண்டர்களும் இணைந்து கொண்டனர். அங்கு மீட்பு பணியின் களத்தில் தானே நேரில் இறங்கினார். ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் தவித்த குஜராத் பக்தர்களை மீட்டார்.

இதற்கென 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் வரவழைக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏற்றி டேரோடூனுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் இவர்கள் 4 விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வர 25 சொகுசு பஸ்கள் தயார் நிலையில் இருந்தன . மொத்தம் 15 ஆயிரம் குஜராத்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மோடி தானே களத்தில் இறங்கி தமது மாநில மக்களை மீட்டு வந்த சம்பவம் இம்மாநில மக்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

இதற்கிடையே மோடி, வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை. குஜராத் மக்களை மட்டுமே காப்பாற்ற வந்துள்ளார். என காங். குறை கூறியுள்ளது.

TAGS: