காஞ்சனாவைத் தொடர்ந்து கோவை சரளா எதிர்பார்க்கும் பகடை பகடை!

மனோரமா காமெடி வேடத்தில் இருந்து அம்மா வேடங்களுக்கு ப்ரமோஷன் ஆனபோது, கவுண்டமணி- செந்திலின் காமெடி கூட்டணியில் இணைந்தவர் கோவை சரளா. கவுண்டமணியும் கோவையைச்சேர்ந்தவர் என்பதால் சரளாவுக்கு தான் நடித்த படங்களில் தொடர்ந்து சான்ஸ் கொடுத்து வந்தார். அப்போது மனோரமாவின் இடம் காலியாக இருந்ததால் அந்த இடத்தை எளிதில் கைப்பற்றிய…

சான்ஸே இல்லை – அனிருத் நடிக்கும் படம்!

கொலவெறி பாடல் ஹிட்டானதும் அனிருத்தை இசையமைக்க அணுகியவர்களைவிட, அவரை நடிக்கக் கேட்டு அணுகியவர்களே அதிகம். கண்டேன் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் அனிருத்தை தங்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக அணுகியபோது, அவருக்கு ஒரு கோடி சம்பளம் தரவும் முன் வந்தது. அனிருத்தோ தேடி வந்த பட வாய்ப்பை ஸாரி…

யாமிருக்க பயமே பாகம் – 2 தயாராகிறது?

கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில், கடந்த மாதம் வெளியாகி, 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது -யாமிருக்க பயமே. இப்படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் டி கே. இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.…

லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் எந்திரன் 2

தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் – எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி சிட்டி ரோபோவாகவும், வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும் இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன்…

கோச்சடையான் வெற்றிப்படமா? தோல்விப்படமா?..! – தயாரிப்பாளர் விளக்கம்..!

150 கோடியில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படம், முதல் மூன்று நாட்களில் சுமார் 42 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது. அதை வைத்து ரஜினியின் முந்தைய படமான எந்திரனின் வசூலை கோச்சடையான் மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கோச்சடையான் படம் வர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவிவிட்டது…

மீண்டும் நாயகனாகும் அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி நாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, பம்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெரிய அளவில் அப்போது பேசப்பட்டவர். ரஜினிக்கு தம்பியாக தளபதி படத்தில் நடித்தார். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு…

இளையராஜாவின் 71வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாட்டம்! – 71 ஆயிரம்…

இசைஞானி இளையராஜா (ஜூன் 2ம் தேதி) தனது 71வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக தனது இசைப்பயணத்தை தொடங்கிய இளையராஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து, இசைக்கே ‘ஞானி’யாக…

பாலிவுட்டில் சறுக்கியதா கோச்சடையான்?

கோச்சடையான் வெளியான 3 நாட்களில் 42 கோடி வசூல் செய்ததாக தகவல் வந்தது. உலகம் முழுவதும் நல்ல வசூலை தான் தந்துள்ளதாம், ஆனால் பாலிவுட்டில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்னும் அதிர்ச்சி செய்தி ஒன்றை தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறியது "குறுகிய நேரத்திலும், பட்ஜெட்டிலும்…

‘காவியத் தலைவன்’ தாமதம்…ஏ.ஆர். ரகுமான் காரணமா….?

‘அரவான்’ படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கி வரும் படம் ‘காவியத் தலைவன்’. பல மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் மெதுவாகவே வளர்ந்து வந்தது. சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. சுதந்திரக் காலத்திற்கு முந்தைய கதையாக இருப்பதாலும், பல சவாலான காட்சிகள் இருப்பதாலும் படத்தின் படப்பிடிப்பு…

‘லிங்கா’ தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி…!

ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ள 'லிங்கா' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம். இது சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து கசிந்துள்ள செய்தியில் பல தயாரிப்பாளர்கள் 'லிங்கா' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்க போட்டி போடுகிறார்களாம். பொதுவாகவே,…

சித்த வைத்தியர்களை கிண்டல் செய்யலீங்க: பரத் அலறல்

பரத் தற்போது நடித்து வரும் படம் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. இது பரத்திற்கு 25வது படம். அவருக்கு ஜோடியாக அட்டக்கத்தி நந்திதா நடிக்கிறார். எல்.ஜி.ரவிசந்தர் என்ற புதுமுகம் இயக்குகிறார். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமியும், விநியோகஸ்தர் மோகனும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படம் கிராமங்களில்…

நடிகர், நடிகைகள் அபரிமிதமாக சம்பளம் பெறுவதை குறைத்துக் கொள்ள வலியுறுத்தல்

திரைப்படத் தொழிலைக் காக்க நடிகர், நடிகைகள் அபரிமிதமாக சம்பளம் பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என மதுரை, ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் ஆர்.செல்வின்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கெüரவத் தலைவர் ஜி.என்.அன்புச்செழியன் முன்னிலை வகித்தார். தமிழ்த் திரைப்படத்துறையினருக்கான நலவாரிய திட்டத்தின்கீழ்,…

பார்வதிமேனனின் கனவை நனவாக்கிய உத்தமவில்லன்!

சசி இயக்கிய பூ படத்தில் தமிழுக்கு வந்தவர் பார்வதிமேனன். கேரளத்து நடிகையான இவர் அந்த படத்தில் அற்புதமாக பர்பாமென்ஸ் பண்ணியிருநந்த போதும் அதையடுதது கோடம்பாக்கத்தில் அவருக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. அதனால், மலையாள படங்களில் நடித்து வந்த பார்வதி, டிராபிக் படத்தின் தமிழ் ரீ-மேக்கான சென்னையில் ஒருநாள் படத்தில்…

பிரமிக்க வைக்கும் அஜீத்தின் பைக் ரேஸ் காட்சிகள்!

அஜீத் நடித்த பல படங்களில் சண்டை காட்சிகளின்போது பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். இதனால், அவரது காலில்கூட அறுவை சிகிச்சை செய்தார். ஆனபோதும், தொடர்ந்து ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆரம்பம், வீரம் படங்களில் சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாத அஜீத், இப்போது…

இளையராஜா பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடப்படுகிறது!

இளையராஜா சினிமாவில் பிசியாக இசையமைத்து வந்தபோது, அவருக்கு ரசிகர் மன்றம் வைப்பதற்கு பலர் நான் நீயென்று போட்டி போட்டனர். ஆனால், அப்படி வந்த யாருக்கும அவர் அனுமதி கொடுக்கவில்லை. அதையும மீறி மன்றம் திறந்தவர்கள் மீது வழக்குப்போட்டு அந்த மன்றங்களை மூட வைத்தார். அந்த அளவுக்கு ரசிகர் மன்றம்…

கோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை! சிம்பு கருத்து!!

ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தை பார்த்தவர்களெல்லாம் அந்த படத்தைப்பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறி வருகிறார்கள். அதிலும் ரஜினியின் நண்பரான கமல், படத்தைப்பார்த்து விட்டு, இயக்குனர் செளந்தர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார். மற்றபடி படத்தைப்பற்றி அவர் பெரிதாக எந்த கருத்தும் சொல்லவில்லை. இந்த…

யுவன்சங்கர்ராஜாவின் ராசியான ஒலிப்பதிவுக் கூடம் மூடப்பட்டது!

பிஸி இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா இருந்தபோது அவரது ஆஸ்தான ஒலிப்பதிவுக் கூடமாக இருந்தது - கலச என்ற ரெக்கார்டிங் தியேட்டர்! சில வருடங்களுக்கு முன்புவரை பரபரப்பாக இருந்த இந்த ரெக்கார்டிங் தியேட்டர் தற்போது மூடப்பட்டுவிட்டது! சென்னையிலேயே அதிநவீன கருவிகளைக் கொண்ட ஒலிப்பதிவுக்கூடம் என்று பெயர் பெற்றிருந்த கலச தியேட்டர் மூடுவிழா…

சந்தானத்தின் சம்பளம் மீண்டும் கிடுகிடு!

சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தபோது படத்துக்குப்படம் அவரது சம்பளம் உயர்ந்து கொண்டிருந்தது. சம்பளத்தை அதிகமாக கொடுத்தால்தான் கால்சீட் தருவார் என்று அவராக கேட்காமலேயே சில படாதிபதிகளே அவரது படக்கூலியை உயர்த்தி விட்டனர். பின்னர் அவர்களே சந்தானம் படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்க்கொண்டேஇருக்கிறார் என்று குறை சொன்னதும் நடந்திருக்கிறது. இந்த நிலையில்,…

பணம் போடாமலே பல கோடி லாபம் பார்க்கும் தனுஷ்!

தயாரிப்பாளர்களில் அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் யார் என்றால்…. நடிகர் தனுஷ்தான். நடிகராக பல கோடிகள் சம்பளம் வாங்கும் தனுஷ், இன்னொரு பக்கம் படத்தயாரிப்பிலும் செமத்தியாய் அறுவடை செய்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து டாணா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் தனுஷ்.…

வெளியான மூன்றே நாட்களில் ரூ.42 கோடி: கோச்சடையான் சாதனை

2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்து வெளியான கோச்சடையான் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் படங்களுக்கு இந்தியாவிலொ போதிய வரவேற்பு இல்லததால் கோச்சடையான் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவிவந்தன. ஆனால்…

குடியின் தீமைகளைச் சொல்லும் ‘அப்பா… வேணாம்ப்பா…’

பொதுவாக சமுதாயத்தில் பல பேர் குடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் குடி நோயாளிகள் அல்ல. தன் நிலை தெரிந்தும் குடியைவிட முடியாமல் குடித்து, குடித்தே துன்பப்படும் மனிதர்களே குடி நோயாளிகள். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் இந்த ‘அப்பா.. வேணாம்ப்பா..’. இந்தப் படத்தின் இயக்குனர் வெங்கட்ரமணன் பல தொலைக்காட்சித் தொடர்களில்…

இளையராஜா இசையில் “கிடாபூசாரிமகுடி”!

தமிழ்த்திரை விருட்சம் சார்பாகத தமிழ்மணி தயாரிக்கும் படம் “கிடாபூசாரிமகுடி”. இந்த படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம்தேவ் நடிக்கிறார்கள். நாயகியாக நட்சத்திரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம்புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, செவ்வாழை ராசு, போண்டாமணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர் நடித்திருகின்றனர். கதை, திரைக்கதை,…

கையில் 5 படங்கள்: பிசியானார் அட்டக்கத்தி தினேஷ்

ஈ, ஆடுகளம், மவுனகுரு படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்த தினேஷ், அட்டக்கத்தி படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். மீண்டும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்தானா என்ற கவலையுடன் இருந்தவருக்கு கிடைத்தது குக்கூ…