ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தக்க ஆதாரங்கள் இல்லை

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கும் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதும் எம்மிடம் இல்லையென சனல் 4 ஆவணப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் தெரிவித்துள்ளனர். ஜெனிவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். பேஸ்மென்ட் பிலிம்ஸ்…

ஐஎம்எப் உடன் இணைந்து செயல்படுவதில் சிக்கல் இல்லை

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு தயங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் தடம்பதிக்கும் சீன நிறுவனங்கள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்காக 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வது குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் பெட்ரோசீனா நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக ஐந்து ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதில் சிங்கப்பூரை சேர்ந்த பெட்ரோசீனா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதை, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழு ஆமோதித்துள்ளது.…

துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம்

இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்…

சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை

சீன கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் அலிசப்ரி இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், சீனாவின் கப்பல் இலங்கையில் தரித்துநிற்பதற்கு இலங்கை அனுமதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள அலிசப்ரி இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள்…

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளின்கின் உறுதிசெய்ய வேண்டுமென, அந்நாட்டின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இலங்கையில் அரச படைகள் மற்றும் இதர அரச அமைப்புகளால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரமன சித்திரவதைகள் குறித்து…

பங்களாதேஷிடம் பெற்ற முழு கடனையும் செலுத்திய இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும் நிதி பரிமாற்ற வசதிக்கு அமைய இலங்கை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை  அந்நாட்டுக்கு வழங்கப்படவிருந்த எஞ்சிய கடன் தொகையான 50 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன. இலங்கை மொத்தமாக  பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை கடனாக…

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை

மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர். செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் நேற்று இரவு இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

சீனாவின் உதவியின் கீழ் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு வீட்டுத் திட்டம்

சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோர், திறமையான கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் வழங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன், 1996 வீடுகளை நிர்மாணிக்கும் உடன்படிக்கை எதிர்வரும் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவின்…

இலங்கையில் தீவிரமடையும் டெங்கி நோய்

இம்மாதத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கி நோயாளர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கி கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, இந்த மாத காலப்பகுதியில் இதுவரை 2,003 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். முன்னைய மாதங்களை விட…

957 மருத்துவர்கள் சேவையில் இருந்து விலகல்

இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் மருத்துவர்கள் வைத்தயி சேவையில் இருந்து விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா  குழுவில் தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை, முன்னறிவிப்பின்றி சேவையில் இருந்து விலகியமை மற்றும் குறிப்பிட்ட சேவைக்…

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் ஐ.எம்.எப் பரிசீலனை செய்ய வேண்டும்

இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் ஐ.எம்.எப் பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக…

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்

2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. போட்டிகள் 2024 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 15வது இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 16 அணிகள் 4…

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மதியம் கட்டளை பிறப்பித்தது. தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து, செப்டம்பர்…

நிபா வைரஸைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்துங்கள்

நிபா வைரஸ் இந்தியா, வங்காளதேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை அதிக ஆபத்துள்ள வைரஸ் என அறிவித்துள்ளதாகவும், இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் வரை இருப்பதால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம்…

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு நிறைவு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சாரா ஹகெட் முன்னிலையில் நடைபெற்றது. இதன்படி, இது தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை வழங்கப்படும் என நீதிபதி…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில், வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய  அரச நிர்வாகம்,…

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை வௌியிட முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார் உயிர்த்த…

இலங்கையின் முதல்தர கிரிக்கெட் வீரர் மீது ஐசிசி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் சபை ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வீரர்களில் இலங்கையின் முன்னாள் முதல்தர வீரரான சாலிய சமந்தவும் இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு…

ஈரானிய ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சற்று முன்னர் நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுத்த அழைப்பையும் கலாநிதி…

இலங்கைக்கும் மெட்டாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் Sir ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இதன்போது, இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு…

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை

கொழும்பில் மருதானை பிரதேசத்திற்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மருதானையில் உள்ள சி.எஸ்.ஆர் எனப்படும் சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்தில் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செயற்பட்டிருந்தன. எனினும் இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும்…