இந்தியாவுக்காகவே விடுதலைப் புலிகளுடன் போரிட்டேன் : மனம் திறந்தார் மஹிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியாவே உதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனை ஒருபோதும் பகிரங்கப்படுத்தியது கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். "தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 30 ஆண்டுகாலமாக நீடித்த யுத்தத்தை உங்களது…

பொட்டு அம்மான் குறித்து உண்மையை வெளியிட்டார் கோத்தா!

புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றாரா?” என்பது குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், இறுதி…

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் இலங்கையில் உள்ளதாக சிங்கள ஊடகம்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு…

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை:…

படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கும், விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னரே உத்தரவிட்டிருந்த போதிலும் இதுவரையிலும்…

வடக்கில் கைப்பற்றிய ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மத்திய…

விடுதலைப் புலிகள் பொறுப்பிலும் போரின் போது வீடுகளில் கைவிட்டு சென்ற நிலையில், மீட்கப்பட்ட சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய ஆபரணங்களை மீண்டும் கையளிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இந்த…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 55 வது நாளாக தொடர்கிறது

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை   ஐம்பத்தி ஐந்தாவது    நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.  கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல் கடந்த மாதம் 20-02-2017  அன்று  …

தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மருதங்கேணிப் பிரதேச செயலகத்திற்கு கடந்த மாதம் ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் 32 ஆவது நாளாகவும் தீர்வின்றி முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகள் தொடர்பாக அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டும் என வலியுறுத்திக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து…

அழிக்கப்பட்டனர் 1 இலட்சம் மக்கள்! அனைத்தும் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டதா?

உலகம் கடந்து வந்த பாதையில் பல்வேறு இன அழிப்புகள் அரங்கேற்றப்பட்டு கொண்டு வந்தன. அவற்றின் நோக்கம் அதிகார வெறி மட்டுமே. ஆனால் இன அழிப்புகளுக்கு தீர்வுகளும் தீர்ப்புகளும் கிடைத்ததா என்றால் அது சிந்திக்கப்பட வேண்டிய விடயம். காலப்போக்கில் மேல் வடுக்கள் போல, குற்றங்களும் மறைந்து விடும் அல்லது மறைக்கப்பட்டு…

சம்பந்தனிடம் உருக்கமான கோரிக்கை!

இலங்கை அரச படைகளான இராணுவத்தினரால் தம் கண்முன்னே கூட்டிச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிந்து அவர்களை மீட்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுளை மீட்டுத் தருமாறு கோரி…

இலங்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பில்லை; ஐ.நா.வுக்கு சர்வதேச மன்னிப்பு…

இலங்கையிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை குறித்த கடிதத்தில்…

வட மாகாண சபையினால் எமது எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகாத நிலை! கணேஸ்வரன்…

எங்கள் போராட்டத்தின் மூலமாகவே வடமாகாண சபை எமக்குக் கிடைத்துள்ளது. ஆனால், அந்த வடமாகாண சபையூடாக நாம் எமது எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்துள்ளார். பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை…

இதுதான் பிரச்சினை என்றால் பதவி விலகத் தயார் : சம்பந்தன்…

மக்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால் தான் பதவி விலகவும் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தவைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முடியாவிட்டால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களும் தங்களின் பதவிகளை துறந்துவிட்டு…

தமிழ்த் தலைமை உறுதியாக இருந்திருந்தால் இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு…

தமிழ்த் தலைமைகள் உறுதியாக இருந்திருந்தால் பொறுப்புக்கூறலை தட்டிக்கழிக்கும் இலங்கை அரசினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல. அது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள்…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது!

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை புத்தாண்டை முன்னிட்டோ அல்லது வேறு காரணங்களின் அடிப்படையிலோ உடனடியாக விடுதலை செய்ய முடியாது என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் பனம் உற்பத்தியாளர்களுக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ். மத்திய கல்லூரியில் நடை…

புதிய அரசியல் அமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பு தற்போது அவசியம் இல்லை!…

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இது தருணம் இல்லை என்று அரசியல் அமைப்பு தொடர்பான அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி என்பன தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன், எம். ஏ.சுமந்திரன், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, நிமால்…

அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்?

சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள்…

புதிய அரசியல் அமைப்பு பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

புதிய அரசியல் அமைப்பின் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிரேஸ்ட அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இந்த அரசியலமைப்பு தொடர்பில் தாமத நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிய அரசியலமைப்பின் யோசனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.…

புதிய அரசியலமைப்பில் மலையக மக்களுக்கு நிர்வாக அதிகாரம் வேண்டும்: ராதாகிருஸ்ணன்

புதிய அரசியமைப்பில் மலையக மக்களுக்கு நிர்வாக அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஸ்ணன் கோரியுள்ளார். செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். மலையக மக்களை பொறுத்தவரை தனிநாட்டை அவர்கள் கோரவில்லை. அதிகாரங்களையே கோருகின்றனர். எனவே இந்த அதிகாரங்கள், புதிய அரசியல்…

யாழில் மீண்டும் ஆவா குழு : ஐந்து இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வைத்து ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலேயே குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21…

இரண்டாவது நாளாக போராட்டத்தில் குதித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்! சி.சிவமோகன்

பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு, கேப்பாபுலவு மக்களின் காணிகளில் இருந்து இராணுவமும் விமானப்படையும் உடனடியாக வெளியேற வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். இந்த நிலையில் இரண்டு நாளாக இன்று இடம்பெற்றும் உணவு , நீர் ஒறுப்பு போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனுடன் செயலாளர் அன்ரனி…

சொன்னதை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்!

தனது அறிவுரையை கேட்டிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைமை இன்றும் செயற்பாட்டில் இருந்திருக்கும் என தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர் கருத்து வெளியிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னைய காலத்தில் மக்களுக்கு…

தமிழர் தரப்பின் பலம் உடைக்கப்பட்டு விட்டதா? குயின்டஸ் துரைசிங்கம்

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில், தற்போது தமிழர் தரப்பிடம் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் என்ன? இலங்கை அரசு ஐ.நாவில் கையாண்ட தந்திரங்கள் என்ன? என்பது பற்றி கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் குயின்டஸ் துரைசிங்கம் லங்காசிறி 24இன் செவ்வியில் கலந்துகொண்டு ஆராய்ந்துள்ளார். மேலும், தமிழர்…

வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்களை பகிரும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்…

வடக்கு, கிழக்கிற்கு விசேட அதிகாரங்களைப் பகிரக்கூடிய வகையில் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசமைப்பு மறுசீரமைப்புக்கு மாத்திரமே நாங்கள் அனுமதிப்போம். புதிய அரசமைப்பொன்று கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாரில்லை என்று…