யாழ் பல்கலைக்கழகம் தமிழர்களுக்கு மட்டும் உரியதா?

இலங்கையில் இடம்பெற்ற போருக்கு முன்னும் சரி, பின்னும் சரி கல்வி நிறுவனங்களும் போரின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. யாழ்பாணப் பல்கலைக்கழகம் 1987 இல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில் நடந்த சண்டையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானதில் இருந்து பல போர்க் காயங்களுக்கு உள்ளானது.…

விக்கி உனக்கு பிரபாகரனுக்கு நடந்தது போலத்தான் நடக்கும்!!! சிங்கள இணைங்களில்…

சமீபகாலமாக வடக்கு முதல்வரை குறிவைத்து, பல மோசமான செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை அரசின் பங்கு இருக்கின்றபோதும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில முக்கிய புள்ளிகளின் பங்களிப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க , உனக்கும் பிரபாகரனுக்கு நடந்தது போல தான் நடக்கும் என்று முதல்வரை…

புதிய தளத்துக்குள் நுழைகிறதா தமிழ் கூட்டமைப்பு!

தடம் மாறுகிறதா தமிழ் தேசியம் என்ற தலைப்பில் மன்னாரில் கடந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான தலைவர்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள்ஹ பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சூழல் மற்றும் இங்கு சுமத்தப்பட்டிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான…

“உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என அழுதுகாட்டிய…

முள்ளிவாய்க்கால் வீதியுடாக வட்டுவாகல்பாலம் கடந்து முல்லைத்தீவின் மையப்பகுதியை நோக்கி மக்கள் வெள்ளம் போல் நகர்ந்துகொண்டிருந்தார்கள். மக்கள் வெளியேறிக்கொண்டிருந்த பாதையைத் தவிர்த்து வீதியின் இரு கரையோரமுமாக இராணுவத்தினர் முள்ளிவாய்க்காலை நோக்கித் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர். பெரும் எண்ணிக்கையில் மக்களின் வருகையை எதிர்பார்த்து அதற்கேற்ற வகையில் பல பாதுகாப்பு…

இலங்கையில் முன்னேறிவரும் மனித உரிமை மீறல்கள்- பிரித்தானியா

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்ந்தும் முன்னேறிச் செல்வதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள மனித உரிமைகள் முதன்மைப்படுத்தல் நாடுகளின் தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இலங்கையின் சிவில் சமூக சூழ்நிலை மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பு விடயங்களில்…

1983 கறுப்பு யூலை நினைவேந்தலும் ஈழத்தமிழர்களின் சர்வதேசம் நோக்கிய கோரிக்கையும்…

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவபடை நீக்கம் என்பது பொறுப்புக் கூறலுக்கும்தமிழ்த் தேசியச் சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும் என 1983கறுப்புயூலை நினைவேந்தல் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரவித்துள்ளார். 1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும், தமிழ்த்தேசிய இனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன…

புலம்பெயர் வாழ் மக்களின் பலமும், பலவீனமும்!

உலக விடயங்களில் பொது நலம், சுய நலம் போன்று பலம், பலவீனம் என்பதும் பலரினால் பலவிதங்களில் ஆராயப்பட்டுள்ளது. பொது நலத்தில் சுயநலமா? அல்லது சுயநலத்தில் பொதுநலமா? என்பது போல் பலம் பலவீனமாகிறதா? பலவீனம் பலம் ஆக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இன்று உலகில் பதில் கிடைத்ததாகவில்லை. இலங்கைத் தீவு வாழ் ஈழத்…

மாகாண அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் எடுபிடியாக இருக்க முடியாது! விக்கினேஸ்வரன்

மாகாண அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் எடுபிடியாக இருக்க முடியாது. இரு அரசாங்கங்கள் இடையிலும் புரிந்துணர்வு உண்டாக வேண்டும். புரிந்துணர்வு இல்லையாயின் நாம் சரியாக செயற்பட முடியாது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் அதிகாரிகள் குழு ஒன்று இன்றைய தினம் யாழ். குடாநாட்டுக்கான…

புலம்பெயர் தமிழர்களை மீள அழைக்கும் இலங்கை!

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்களை மீளவும் குடியேறுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், யுத்த காலத்தில் பல்லாயிரகணக்காக தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருக்கின்றனர். இந்நிலையில் கடந்த…

கைது செய்வதிலும் பார்க்க சுடுவது இலகுவானது! இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை

அத்துமீறும் தமிழக மீனவர்களை கட்டுபடுத்த துப்பாக்கிச் சூடு நடத்துவதே ஒரே வழியென அரசாங்கம் அறிவித்துள்ளது. வட மாகாண மீனவ சங்கத் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் அதனை…

மீள்குடியேற்ற செயலணிக்கு வடக்கு முதல்வர் ஆட்சேபனை

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்ய மத்திய அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மீள்குடியேற்ற செயலணியை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 57ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போது மத்திய அரசாங்க ம் வடகிழக்கு மாகாணங்களில் குறிப்பாக…

யுத்தம் இளைஞர், யுவதிகளின் சக்திகளை வீணடித்துள்ளது! கூட்டமைப்பு சாடல்

30 ஆண்டு கால கொடிய யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த எமது இளைஞர், யுவதிகளின் சக்திகள் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது யுத்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அவர்களின் சக்திகள் வெளிகொண்டு வரப்பட வேண்டும். அதற்கு கிராம மட்டத்தில் விளையாட்டுக்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்றத்தில்…

ஏழு வருடங்கள் கடந்த போதிலும் ஆறாத உளக்காயங்களுடன் வன்னி மக்கள்!

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையிலும் அது ஏற்படுத்திச் சென்ற வடுக்கள் பாதிக்கப்பட்டோர் உள்ளங்களிலுருந்து இன்னும் நீங்கி விடவில்லை. அன்றாடம் தமது வாழ்க்கைக் கோலங்களில் வலிகளைச் சுமந்தவாறே அவர்கள் வாழ்கின்றார்கள். தொன்றுதொட்டு கலாசார, பண்பாடுகளுடன் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்களை இழந்து, தமது உறவுகளை…

வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே வரிச் சலுகை வழங்கப்படும்

அளித்த வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்பட்டாலேயே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இலங்கையின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதுஇந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வரா உள்ளிட்ட பிரதிநிதிகள்பிரசல்ஸிற்கு விஜயம் செய்துள்ளனர். இதில், இலங்கை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக…

ஒரு கூர்வாளின் நிழலில் எனக்குத் தெரிந்த தமிழினியை காணவில்லை! முன்னாள்…

ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…

மலேசிய உதவிப்பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மலேசிய உதவி பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi (டட்டுக் சேரி கலாநிதி அஹமட் ஹமிடி) நாளை இலங்கை வரவுள்ளார். இதன்போது அவர் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளார். இரு நாட்டு நல்லுறவின் ஒருக்கட்டமாக அவரின் விஜயம் அமையவுள்ளதாக…

தலைவரை இழுத்து பேசிய விமல் வீரவன்ச!

பிரபாகரன் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லையாம்!! விமல் குமுறுகின்றார் சிங்­கள மாண­வர்களை தாக்­கிய சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் யாழ். பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள், தமிழ் அடிப்­ப­டை­வா­தி­கள் மற்றும் இன­வா­தி­க­ளுமே உள்­ளனர். விடு­தலைப்புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் காலத்தில் கூட இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சி தெரி­வித்­துள்­ளது. உத்­தேச அர­சியலமைப்பு திருத்­தமும்…

தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது : பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்

தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழத்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நடைபெற்ற “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வுநிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர்…

தமிழ் மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன்

தமிழ் மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மன் அரசாங்கத்தின் உதவியில் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை- ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால…

வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிகள் ஏற்றுக் கொள்ளவார்களா ?

தமிழர் தரப்போடு முஸ்லிம் காங்கிரஸ் என்றுமே இணையாது ! இணையும் தேவை இல்லை! ஒரு கொள்கை இல்லாது ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன நமக்கு முழு அமைச்சு அரை அமைச்சு கிடைத்தால் சரி என்கின்ற கூட்டம்தான் முஸ்லிம் அரசியல் கூட்டம். ஹக்கீம் அணியை எடுத்துக் கொண்டால்…

மஹிந்த, மைத்திரி அரசு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களுக்கு செய்தது…

நாங்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் எது வித பலனும் இது வரை கிடைக்கவில்லை என கண்ணீர் மல்ல மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா குறிப்பிட்டுள்ளார். எனது மகனை கடத்திச் சென்றவர்கள் இவர்கள் தான் என அடையாளப்படுத்திய போதும் இது வரை…

சிங்கள மக்களிடத்தில் காணப்படும் அர்ப்பணிப்பு தமிழ் மக்களிடத்தில் இல்லை! யாழ்.…

நல்லிணக்கத்திற்கு சிங்கள மக்கள் தேவைக்கு அதிகமாகவே அர்ப்பணிப்பு செய்துள்ள போதிலும் தமிழ் மக்கள் அர்ப்பணிப்பினையோ முன்னுதாரணத்தையோ வழங்கத் தவறியுள்ளனர். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்…

வாழ்வாதார உதவி வேண்டாம் எமது பிள்ளைகளே வேண்டும்! காணாமல் ஆக்கப்பட்டோரின்…

"வாழ்வாதார உதவிகள் எவையும் எமக்குத் தேவையில்லை. அதனை நாம் ஏற்கப்போவதில்லை. எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தினர். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் நேற்று சந்தித்து தமது பிரச்சினைகளைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதற்கான கலந்துரையாடலை ஏற்பாடு…