பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம்! இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது!…

13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைக்காண முடியும். புதிய அரசியலமைப்பின் ஊடாக இதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசியல் தீர்வு…

சரணடைந்தவர்கள், கைதானவர்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்!

முல்லைத்தீவு 58வது இராணுவப் படைத்தளத்தில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய ஆவணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த ஆவணத்தை மன்றில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு 58வது இராணுவ படையணி முகாம் அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுடைய…

சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் 58வது படை பிரிவில் உள்ளதா? தெரியாது…

இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்ததில் இராணுவத்தின் 58வது படைப் பிரிவில் சரணடைந்து காணாமல் போனவர்கள் என தெரிவிக்கப்படும் நபர்கள்…

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு வழங்கப்படும்: மனோகணேசன்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுத்திட்டதைப்பெறுவதையே மலையக மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கோரிவருவதாகவும் இந்த ஆண்டுக்குள் அந்த தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் எனவும் தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு கலந்துரையாடல் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலை…

முன்னாள் போராளிகளின் நல்வாழ்வுக்காக புலம்பெயர் சமூகம் உதவிடத் தயாரா?

முன்னாள் போராளிகளின் நல்வாழ்வுக்காக மறுவாழ்வுக்காக பொது நிதியத்தை உருவாக்கி செயற்படுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் முன்வருவார்களானால் அவர்களுக்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றேன் என தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு கலந்துரையாடல் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். லங்காசிறி செய்திச் சேவைக்கு பிரத்தியோகமாக வழங்கிய செவ்வியிலேயே…

சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை 58-ம் படையணி ஒப்படைக்க வேண்டும்! முல்லை.…

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணத்தை இராணுவத்தின் முல்லைத்தீவு 58ம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58 ஆம் இராணுவ படையணி அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல்கள் அந்தப் படையணியின் முகாம் அலுவலகத்தில் இருப்பதாக…

ஈழத் தமிழருக்கு இழைத்த அநீதிகளுக்காக அல்ல!

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மஹிந்த ராஜபக்ஸ நடத்திய கொடூர இனக்கொலையை இந்த உலகமே அறியும். முப்பதாண்டுகளாக ஒடுக்கப்படும் ஈழ மக்களின் உரிமையை நிலைநாட்ட தனி ஈழம் கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழ் மக்களையும் கொன்றழித்து தனி ஈழப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்றிகளில் கொடூரமாக…

உள்ளக விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும்!

உள்ளக விசாரணையின் போது முன்னாள் ஆட்சியாளர்களால் இராணுவத்தினர் நடத்தப்பட்ட முறை, இராணுவ வீரர்களை கொல்வதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு வழங்கப்பட்ட பணம், அதில் அவர்கள் வாங்கிய துப்பாக்கிகள் உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலத்திற்கு வருமென அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு…

மைத்திரி, ரணில் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் தமிழர்கள்!

தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவந்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழர்களின் நம்பிக்கையினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக…

சிங்கள தலைவர்கள் அனைவரும் பொறுப்புக் கூறியாக வேண்டும்!

அன்று நாம் தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டுடன் பயணித்திருந்தால் இன்று இத்தனை இழப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆகவே, அதற்கு தெற்கின் சிங்கள தலைவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பு உருவாக்கம்…

இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!’

அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.  இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்ட…

‘இலங்கையில் சீதனத்தை தடைசெய்ய நடவடிக்கை வேண்டும்’

இலங்கையில் திருமணங்களின் போது சீதனம் வாங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இலங்கையில் சீதன நடைமுறையினால் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலேயே பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள்…

தமிழ் வேண்டாம்; தமிழ் கடவுள்கள் வேண்டும் என்பது மஹிந்தவின் கோமாளிக்…

தமிழ் மொழி வேண்டாம். ஆனால், திருட்டுத் தேங்காய் உடைப்பதற்கு தமிழ்- இந்துக் கடவுள்கள் வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் கோமாளிக் கொள்கை என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசகரும மொழி ஆணைக்குழுவினால் கொழும்பு…

நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்கு நாங்களும் காரணம்! த.சித்தார்தன் எம்.பி

நாட்டில் ஏற்பட்ட இந்த அழிவுகளுக்கு நாங்களும் ஒரு காரணம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் புளொட் அமைப்பின் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாங்கள் தேர்தலில் வெற்றி பெற…

அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை

இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே பிபிசியிடம் தெரிவித்தார். வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றார் தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய…

தமிழர் பிரச்சினையை கை கழுவுகிறதா இந்தியா? – ஹரிகரன்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்தும் இடம்பெற்றிருக்கவில்லை. இது இந்திய ஊடகங்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக புதுடில்லியைத்…

இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது ?

உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளவர்கள். ஒருவர் தனியாகவோ அல்லது பலர் கூட்டாகவோ இன்னொருவரின் அல்லது இன்னொரு கூட்டத்தினரின் உரிமை, சுதந்திரத்தைப் பாதிக்காமல்…

ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்

ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச…

ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக வழக்கு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளில் பிரதான கொள்கையை மீறியமை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைனுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வெளிநாடுகளில் உள்ள சிங்களவர்கள் அடங்கிய குழுவொன்று தீர்மானித்துள்ளது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட்டதன் மூலம் மனித உரிமை…

தற்கொடை செய்த போராளிகள் தற்கொலை செய்யும் அவலம்!-யார் பொறுப்பு

தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை. எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின்…

வெளிநாட்டு நீதிபதிகளை பயன்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட மாட்டாது: ஹூசைன்

இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் வெளிநாட்டு நீதிபதிகளை பயன்படுத்துமாறு எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கப்படாது என ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையானது பக்கசார்பற்றதும் சுயாதீனமானதுமாக இருக்க வேண்டும் எனவும்…

அமிர்தலிங்கம் காட்டிய வழியை கூட்டமைப்பு நிராகரிக்குமா!

தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஒன்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக விளங்கிய அமிர்தலிங்கத்துக்கு எதிரானது.அடுத்தது வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கர நேசனுக்கு எதிரானது முதலாவது பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அரசுத் தரப்பில் அங்கம்வகித்த அமைச்சர் தொண்டமான், பிரதி நீதி அமைச்சர்…

மக்களின் இழப்பிற்கு புலிகளா? இராணுவமா காரணம்? சர்வதேச உதவி தேவை!…

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டு தொடர்பிலான கலந்துரையாடல்களில் சர்வதேச நாடுகள் பங்கேற்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இறுதி தீர்ப்பு இலங்கையின் நீதியமைப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கேரளாவின் குருவாயூருக்கு இன்று வழிபாட்டுக்கு சென்றிருந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் இதனை…