இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகள் ஆரம்பம்- பேரவைக்கு எதிராக வேண்டுமென்றே சில…
வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்குழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும்,…
தமிழ் மக்கள் இன்னமும் காத்திருக்கும் நிலைமை! புத்தாண்டிலாவது தீர்வு வேண்டும்!…
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஓராண்டு நிறைவை அரசாங்கம் கொண்டாடவுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் தமது நிலங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த ஆண்டிலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு…
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை!
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சாட்சியமளிக்கும் சாட்சியாளர்களை அச்சுறுத்தி அழுத்தம் கொடுப்போரை சட்ட ரீதியாக தண்டிக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரமுண்டு. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்போருக்கு…
தீர்வு பெறும் விடையத்தில் சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார்: சிறீதரன்
தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளையினுடைய புத்தாண்டு…
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்! கூட்டமைப்பு வரவேற்பு
வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளை விடுவிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 701 ஏக்கர் காணியை விடுவிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கூட்டமைப்பின்…
ஈழத்தமிழர் போராட்டத்துடன் தங்கள் போராட்டத்தை ஒப்பிட்ட குர்திஷ் போராளிகள் தலைவர்
ஈழத் தமிழர்களின் போராட்டங்களின் நியாயத்தை உணரத் தவறியது போன்று சர்வதேசம் குர்திஷ் போராளிகளின் போராட்ட நியாயங்களையும் உணரத் தவறியுள்ளதாக சப்ரி ஓக் வேதனைப்பட்டுள்ளார். குர்திஷ்தான் தனிநாடு கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் குர்திஷ்தான் சமூக ஒன்றியத்தின் (கேசிகே) நிறைவேற்றுக்குழு உறுப்பினரா சப்ரி ஓக் இதுதொடர்பாக அவர்களுக்கு ஆதரவான செய்திச்…
புலம்பெயர் தமிழர் போராட்டம் ஊடாகவே தமிழர்களின் உரிமைகளை வென்றெக்கமுடியும்! விராஜ்…
புலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாகவே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என விராஜ் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். சிங்கள முற்போக்கு இடதுசாரிய செயற்பாட்டாளரும், தமிழர் போராட்டத்திற்கான நீண்ட கால ஆதரவாளருமான விராஜ் மெண்டிஸ் இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும்…
‘பொது நிலைப்பாடு’ பற்றி தமிழ்- முஸ்லிம் தலைவர்கள் பேச்சு
இலங்கையில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்…
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம் – அதிக கவனம் செலுத்தும்…
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டமை தொடர்பாகவும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து அவதானித்து வருவதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக வழிமுறைகளில் உரிமைகளை பெறுவதற்கான மக்கள் செயற்பாடுகளை அமெரிக்கா வரவேற்கும். ஆனாலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயலாற்றுவது அவசியம் என அமொிக்கா எதிர்ப்பார்ப்பதாக தூதரக…
புலிகளால் மட்டுமல்ல, இந்தியாவாலும் அச்சம் கொள்ளும் இலங்கை! வான் பாதுகாப்பில்…
இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் இந்தியா தொடர்பில் இலங்கை அரசாங்கமானது எச்சரிக்கை கலந்த உணர்வோடு நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. த டிப்ளோமட் எனப்படும் சர்வதேச ராஜதந்திர உறவுகள் குறித்த சஞ்சிகையில் இது தொடர்பான கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகள் மூன்று…
கிராமம் – கிராமமாகச் சென்று கலந்துரையாடல்கள் – கருத்தரங்குகள்- குருபூசைகள்…
கிராமமாகச் சென்று இந்துசமயத்தின் வளர்ச்சிக்காக கலந்துரையாடல்கள் – கருத்தரங்குகள் – குரு பூசைகள் – விழாக்கள் போன்ற சமய நிகழ்வுகளை நடாத்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நேற்று (29) வேதாகமமாமணி எஸ்.இரவிச்சந்திரக்குருக்கள் தெரிவித்தார். திருக்கோணமலை மாவட்ட இந்துசமய அபிவிருத்திச் சபையின் முதலாவது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டம்…
இலங்கையில் ஜனநாயகம் மேம்பட்டுள்ளது: அமெரிக்கா
நிறைவடையும் இந்த ஆண்டில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிடத்தக்க ஜனநாயக மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் சமாதானத்தை நோக்கிச் செல்ல முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டில் இலங்கை, நைஜீரியா,…
எம் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தில் நீங்கள் காட்டும் இரகசியம் ஏன்?
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வோம் என்று கூறிக் கூறி ஏமாற்றியமை தலைவர் பிரபாகரனுக்கு செய்த முதலாவது தீங்கு என்பதை தமிழ் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் பேரவையை இரகசியமாக கூட்டியது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.…
தமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா? பாதிக்குமா?
சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க அவர்கள் 2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார். சிரால் தற்போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின்…
தமிழ் மக்கள் பேரவையில் ஒருபோதும் இணையோம்! சம்பந்தன் தலைமையில் அரசியல்…
எதிரிகள் - துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுலை இயக்கம் (ரெலோ) ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அந்த இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம்…
சுதந்திரத்தின் பின் முதல் தடவையாக இலங்கையின் யாப்பை தயாரிக்கும் தமிழ்…
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் பொது அமைப்புக்களும் இணைந்து இலங்கை நாட்டுக்கான அரசியல் யாப்பை உருவாக்குகின்றன என இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 1972, 1978 ஆகிய அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களின்போது தமிழர்கள் அதில் பங்கேற்கவில்லை. 1972ஆம் ஆண்டில் யாப்பில் உத்தியோகபூர்வ மொழி…
சிங்கள ராணுவ முகாமில் இருந்து தப்பிக்கும் முன் நாள் தமிழ்…
விடுதலைப் புலிகளோடு இலங்கை அரசு இறுதி யுத்தத்தில் ஈடுபட்டவேளை, கருணா அணியில் இருந்த சிலரை புலனாய்வுப் பிரிவில் இணைத்தார்கள். இவர்களில் சிலரே புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவி பல தாக்குதல்களை நடத்திவந்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் , மூத்த தளபதிகள் செல்லும் இடங்களை கவனித்து தாக்குதல் நடத்தவென ஒரு பிரிவு…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பு!– சம்பந்தன் பயன்படுத்திக்…
தமிழ் மக்கள் பேரவை - இன்றைய அர்த்தத்தில், தமிழ் அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு பெயர். தற்போதைக்கு இது ஒரு பெயர் மட்டுமே. இதன் அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்துத்தான், இதன் அரசியல் இருப்பை மதிப்பீடு செய்யமுடியும். பொதுவாக தமிழ்ச் சூழலில் ஒரு நோய் உண்டு. அதாவது,…
2009ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே?: வி.பு. அரசியற் பொறுப்பாளர்…
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். கருணா, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன். 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜூன்…
அழுத்தங்களுக்கு வளையுமா அரசாங்கம்?
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடிக்கடி ஏன் இலங்கைக்கு வருகின்றனர் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு சூழலில் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவரும் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டு விட்டுத் திரும்பியிருக்கிறார். அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச்…
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகிறார்! விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
எதிர்வரும் 2016ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானங்களின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளார். எனினும் ஜெனீவாத்…
வடக்கில் மையம் கொள்ளும் மைத்திரி….!
இது மகிந்த ராஜபக்சவின் அதிரடி ஆட்சியின் யுகம் அல்ல. ரணில் – மைத்திரியின் இராஜதந்திர ஆட்சி. தமிழர்களின் எதிர்கால அரசியலை, தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கப்போகும் ஆட்சி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இலங்கையில் தமிழர்களின் இருண்ட காலம் என்று வர்ணிக்ககூடிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
நியாயமான அரசியல் தீர்வு விடயத்தில் ஏளனப்போக்கு வேண்டாம்!
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரமானது நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமது அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் வகையிலான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை பெறுவதற்கு சுதந்திரத்தின் பின்னர் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நியாயமான தீர்வு என்பதனை காண முடியவில்லை. எமது நாட்டின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும்…


