அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நிற்பதால் ஐ.நா. சபையும் அடிபணிந்து விட்டது!…

இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்பதால் இலங்கை விடயத்தில் ஐ.நா. சபையும் அடிபணிந்து நிற்பதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பெருந்தெருக்கள் அபிவிருத்தி, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்…

இலங்கையின் செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது!

குறுகிய காலத்திற்குள் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவுகள் ஊடாக, இருதரப்பினருக்கும், பொதுவான பல விடயங்கள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்தின், கூட்டுப் பாதுகாப்புப் பற்றியும், ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இரு நாடுகளும் ஆற்றல் பெற்றுள்ளதாக ஐ.நாவிற்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி…

ஐ.நா குழு வெளியிட்டுள்ள தகவல் போலியானது! முன்னாள் அமைச்சர் பீரிஸ்

திருகோணமலை கடற்படை முகாமை பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் குழுவிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எந்தவொரு நாடும் வெளிநாட்டு குழுக்களை தமது நாட்டின் கடற்படை முகாம்களுக்குள் இதுவரை அனுமதிக்கவில்லை என சுட்டிக்காட்டிய ஜி.எல்.பீரிஸ், தற்போதைய அரசாங்கம் ஐ.நாவின் வலிந்து…

புலம் பெயர் தமிழர்கள் உதவினால்! யார் கையையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை!…

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது தமிழ் உறவுகள் வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவி செய்தாலேயே தமிழ் மக்கள் மற்றவர்களிடம் கை ஏந்தும் நிலை வராது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் இரனைப்பாலையில் எமது தாயகம்…

திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை அதிகாரிகள் விரைவில்…

திருகோணமலையில் இயங்கி வந்த இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த போது அவர்களை புலனாய்வுப் பிரிவினர், குறித்த இரகசிய…

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் அரசாங்கம் காண்பிக்கும் நல்லெண்ணம்!

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் புதிய அரசாங்கம் நல்லெண்ணப் போக்கை வெளிக்காட்டி வருவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கும் நாட்டின் அபிவிருத்திகளில் அவர்களை பங்கேற்கச் செய்வதற்கும் புதிய அரசாங்கமானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த அரசாங்க காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக…

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியதைப் பெற்றுத் தருவோம்; விக்னேஸ்வரனிடம் சமந்தா…

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுத்து பெற்றுத் தருவோம் என்று ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், தம்முடனான சந்திப்பில் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்த சமந்தா பவருக்கும்,…

தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே வெளிநாட்டு நீதிபதிகள் குறித்த கோரிக்கை!…

வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னம் மூலமாக மட்டுமே போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த முடியும் என்று இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிநாட்டு நீதிபதிகளை மட்டுமே கொண்ட…

வட மாகாண இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்!- சமந்தாவிடம் விக்னேஸ்வரன்…

வட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா…

பல தமிழ் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவை என்று கருதப்பட்ட பல அமைப்புக்கள் மீது விதித்திருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. இலங்கை அரசின் சிறப்பு வர்த்தமானி வெளியீடு ஆனாலும், தமிழீழ விடுதலைப்புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, மற்றும் ஏனைய சில அமைப்புகள் மீதான தடை தொடரும் என வெள்ளிக்கிழமை…

இலங்கையில் இரகசிய சித்திரவதைக் கூடம் இல்லை: முன்னாள் கடற்படை தளபதி…

இலங்கையில் இரகசிய சித்திரவதைக் கூடங்கள் செயற்பட்டதாக ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதுபோன்ற இரகசிய சிறைகள் எதுவும் செயற்படவில்லை என்று அந்நாட்டுக் கடற்படையின் முன்னாள் தலைமை தளபதி வசந்த கரன்னகொட மறுத்துள்ளார். இலங்கையின் திருகோணமலை கடற்படை தளத்தில் பூமிக்கடியில் இரகசிய சிறைக்கூடம் ஒன்றை ஐ.நா. குழு…

திருமலை இரகசிய வதைமுகாம் தகவலை ஐ.நா. அதிகாரிகளுக்கு வழங்கியது யார்?…

திருகோணமலையில் கடந்த வாரம் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவினால் வெளியிடப்பட்ட கடற்படை இரகசிய வதை முகாம் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாம் தொடர்பில் கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், குறித்த முகாமில் சித்திரவதைகள் இடம்பெற்ற சந்தேகம்…

திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் குறித்து விசாரணை: வெளிவிவகார அமைச்சு

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இயங்கிய இரகசிய தடுப்பு முகாம் பற்றி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. தடுப்பு முகாம்கள் இரகசியமான முறையில் கையாளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானபோது அதனை எச்சந்தர்ப்பத்திலும் மூடி மறைக்க இந்த அரசாங்கம் எத்தனிக்கவில்லை மாறாக சரியான தகவல்களை பெற்றுத் தாருங்கள் விசாரணை நடத்தி…

பெண் ஒருவர் தவறு செய்தால் மரண தண்டனை, ஆனால் ஆண்…

இலங்கைப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யவேண்டும் என்று சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சவுதியில் பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் வேறு ஆண் ஒருவரோடு தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு மரண தண்டனையும்,. தொடர்பு வைத்த ஆணுக்கு 100 சவுக்கடியும்…

முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தின் இன்றைய நிலை!

தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி வீரமரணத்தை தழுவிய வீரமறவர்களின் மாதம் இம் மாதமாகும். கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை மாவீராநாள் வாரமாகும். அந்தவகையில் இன்று மாவீரர் நாளின் தொடக்கநாள் . 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராக போராடி ஆயிரக்கணக்காண மாவீரர்கள் மாண்டு…

2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது: அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட…

2016ம் ஆண்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்க் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாம் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்படப் போகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கனடா உறங்கா விழிகள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கான…

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் கதி இன்னும் தெரியவில்லை

இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டவர்களின் கதி என்ன ? அந்த…

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்: ஐநா கவலை

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டு குழுவினர் இதனைத் தெரிவித்துள்ளனர். தமது விஜயத்தின் போது சந்தித்த காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக…

தமிழ் மக்களின் போராட்டங்களை புரிந்து கொள்ளாதவரை நல்லாட்சி மலராது: யோகேஸ்வரன்

தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பெரும்பான்மை மக்கள் புரிந்துகொள்ளாதவரை இந்த நாட்டிலே நல்லாட்சி மலராது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற விடயத்தில் இன மத கட்சி பேதமின்றி ஒருமித்து குரல்கொடுத்ததைப் போன்று…

மலையக மக்களுக்கும் தனியாக அதிகாரப்பகிர்வு அலகு அவசியம்! சர்வகட்சிக் குழுக்…

தேசிய இனப்பிரச்சினைக்குக் கூடிய விரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும், அரசியல் தீர்வு பொறிமுறை உருவாக்கப்படும்போது அதில் மலையக மக்களுக்கும் தனியான அதிகாரப்பகிர்வு அலகு அவசியம் என்றும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட…

என்னை பலிகடாவாக்க எம்.ஏ.சுமந்திரன் முயற்சி; விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கட்சிக்குள் தனக்கு இதுவரை காலமும் இருந்து வந்த மதிப்பு குறைகின்றதோ என்கிற எண்ணத்தில் தன் மீது குற்றங்களைச் சுமத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வானொலியொன்றுக்கு அண்மையில் செவ்வியொன்றை வழங்கியிருந்த எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பில்…

பாரீஸ் குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பாம்!

பிரான்ஸில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரான்ஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு இணையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இக்குண்டுவெடிப்பு சம்பவத்துடன்…

இலங்கை முன்னேற்றப் பாதையில்! பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோருகின்றது ஐரோப்பிய…

சிறையில் உள்ளவர்களை விடுவித்து பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்த பின்னர் இலங்கையில் முன்னேற்றக்கரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசாங்கம் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீண்டும் சர்வதேசம்…