13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி வலியுறுத்தி வருகிறார் –…

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை கொண்டுள்ளதாக, பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை காண்பித்து வருகிறார்.…

இந்தியாவில் இருந்து எங்களை போகச் சொல்லாதீர்கள்!: இலங்கை அகதிகள் கருத்து

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத்…

போர் தொடர்பில் நம்பிக்கையான பொறுப்புக்கூறல் அவசியம்: பான் கீ மூன்

இலங்கையின் போர் தொடர்பில் நம்பிக்கையான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த பொறுப்புக்கூறல், சர்வதேச நியமத்தில் அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். செயலாளரின் அலுவலக பேச்சாளர் எரிக் கானெக்கோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போர் விடயத்தில் பொறுப்புக்கூறல் என்ற…

தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவித்தால் மீள்குடியேற்றத்துக்கு பிரிட்டன் உதவும்

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என பிரிட்டன் உறுதியளித்தது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் ஹுயோ ஸுவைர் மற்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன்…

காட்சிப் பிழை தானோ… ச.ச.முத்து

"நீங்கள் எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ - மாகவி பாரதி"- எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் அப்படி இருக்காது. இயல்புநிலை போலவே தோன்றும்.ஆனால் இயல்புநிலை இது இல்லை. காட்சிப் பிழைகளாக இவை எம் பார்வைக்குள் விழுகின்றது. ஆனால் பிழை என்றும் இந்த காட்சிகள்…

போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்துமாறு கோரும் அமெரிக்க அதிகாரி

இலங்கைக்கு எதிரான போர்குற்ற விசாரணைகளை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் தெரேசா ஷேபர், அமெரிக்கா அரசாங்கம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் ஹூசைனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் உதவியுடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில், சகவாழ்வு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும்…

இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த…

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீபவன் (63) இன்று பதவியேற்றுக் கொண்டார். ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கு ஒன்றில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு அளித்ததால் கடந்த 2013-ம் ஆண்டு சொத்துக்கணக்கை சரியாக காண்பிக்கவில்லை என குற்றம்சாட்டி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஷிரானி…

அகதிகளின் வாழ்வாதாரத்துக்கு என்ன உத்தரவாதம்? இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் இந்தியா…

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய உத்தரவாதத்தை இலங்கை அரசு அளிக்கும் என்று அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் இந்தியா கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்ததை தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தியாவின் சார்பில்…

‘இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை’ – பிரித்தானிய பிரதமர்

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இங்கு லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல்…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறு மைத்திரியிடம் வடமாகாண சபை…

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடமாகாண சபை ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களால் ‘1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்தல்’…

இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய வேண்டும்: பொன்.செல்வராசா

புதிய ஜனாதிபதி அவர்கள் சிறுபான்மையினம் நசுக்கப்படகூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனை நாங்கள் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். இருந்த போதிலும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டியிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற…

நிலமும், வேலைவாய்ப்பும் கிடைத்தால் இலங்கை திரும்ப அகதிகள் விருப்பம்

இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்   இலங்கையில் தங்களுடைய நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டால், தாயகம் திரும்பத் தயாராக இருப்பதாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான இலங்கை அகதிகள் கூறுவதாக இந்திய நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன்…

ஜ.நா விசாரணை மூலமே தீர்வு! உள்ளக விசாரணை வேண்டாமென்கிறார் சுரேஸ்!!

எக்காரணம் கொண்டும் ஜ.நாவினது போர்க்குற்ற விசாரணைகளை பின்போடுவதையோ அல்லது கைவிடுவதையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுரேஸ்பிறேமச்சந்திரன். https://www.youtube.com/watch?x-yt-cl=84924572&v=v0VLrywWqzo&x-yt-ts=1422411861&feature=player_embedded யாழ்ப்பாணத்தினில் இன்று புதன்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்:- புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்…

காணாமல் போனோரை மீட்டுத்தரக்கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனீயீர்ப்பு போராட்டம்!!

வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடந்த காலத்தில் அராஜக அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் கடத்தல்களால் காணாமல் போகச்செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளை மீட்டுத்தரக்கோரி மீண்டும் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது.தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் உருவாகி இருக்கும் நல்லாட்சிக்கான அரசாங்கத்தை நோக்கி எதிர்வரும் இரண்டாம் திகதி திங்கட்கிழமை காலை 9மணிக்கு…

இராணுவக்குறைப்பு பிரதானம்! பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிரிடம் வலியுறுத்தினார் முதலமைச்சர்!!

முதலில் வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்.அதற்கேதுவாக படையினரது எண்ணிக்கை நாட்டின் அனைத்து பகுதிகளிற்கும் பரவலாக்கப்படவேண்டுமென யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்கூறியுள்ளார். சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களிடையே விபரித்த அவர் புதிய அரசின் செயற்பாடுகள் பல இடத்தில் நன்மை பயக்கின்றது.…

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரத்தியேக…

வடக்கு - கிழக்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகளைத் தீர்ப்பதற்கு நிறைவேற்று அதிகார சபைக்கு விடுத்து பிரத்தியேக சிறப்புக் குழு­வொன்­றினை அமைக்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரசபை ஒன்றுகூடியபோது, அவ் ஒன்றுகூடலுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக்…

மார்ச்சுக்கு முன்னர் ஐ.நா விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு…

இலங்கை தொடர்பான ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஆட்சி பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு…

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை: ஜனாதியிடம் ராயப்பு ஜோசப் வேண்டுகோள்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி   இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இந்த வருட இறுதிக்குள் நடவடிக்கை எடுப்பதற்கு புதிய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். ஞாயிறன்று அவர்…

நரேந்திர மோடி இலங்கை தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்- ரணில்

இலங்கை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்று இலங்கையின் பிரதமர் ரணில் வி;க்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய குடியரசுத்தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஒன்றுகூடலில் அதில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். இலங்கையும் இந்தியாவுடன் வரலாற்று உறவுகளை புதுப்பித்து இணைந்து செல்ல தயாராகவுள்ளதாக ரணில்…

இலங்கை அகதிகள் மீளக்குடியமர ஐக்கிய நாடுகள் உதவி

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பி மீளக்குடியமர ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் உதவவுள்ளன. இதனை இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்,ஐக்கிய நாடுகளின் அகதிகள் சபையின் பிரதிநிதி குலாம் அபாஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் லிபூஸ் சௌக்பூவா ஆகியோரை சந்தித்த…

ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு செல்லுமா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்துலக ஆலோசகரை அவசரமாக ஜெனீவாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ளது. இலங்கையில் ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான…

சிறிலங்கா மீதான சர்வதேச விசாரணை தொடர வேண்டும்!

அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை. இதேவேளை சிங்களத் தலைவர்களுடன் தனிப்பட்ட நட்பை பேணுவோரும், பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோரும், சிங்களத் தலைவர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்தோரும், தனிப்பட்ட ரீதியில்…

தமிழர் தரப்பை ஏமாற்­றுமா ஜெனீவா?

ஜெனீ­வாவில் இருந்து மேற்­கொள்­ளப்­படும், இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் இறு­திக்­கட்­டத்தை எட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன. அடுத்த மாத இறு­திக்­குள்­ளாக இந்த விசா­ரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்டு விடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அவ்­வாறு சமர்ப்­பிக்­கப்­பட்டால் தான், அடுத்த கட்­ட­மாக மார்ச் 25ம் திகதி அதனை ஐ.நா.…