சுமுகமான உறவு நிலை ஏற்பட வேண்டுமானால், அராசங்கம் தனது நிலைப்பாட்டை…

அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையிலான முறுகல் நிலையும் அதிகரித்துள்ள இடைவெளியும் குறைந்து இருதரப்பினருக்கும் இடையில் சுமுக உறவு நிலை ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வவுனியா புளியங்குளத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்வவுனியா வடக்கு பிரதேச செயலகமாகிய நெடுங்கேணி செயலகப் பிரிவுக்கு…

சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை! சம்மதிப்பவருக்கே ஜனாதிபதி தேர்தலில் வாக்கு!

இனப்பிரச்சினை தொடர்பில் எவர் தரப்பு சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சு வார்த்தைக்கு சம்மதிக்கின்றாரோ அவருக்கே தமிழ் மக்களது வாக்குக்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விழுமென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம். யாழ்.ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த…

வடக்கில் இராணுவ முகாம் அமைப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை முதலமைச்சர் நிராகரித்தார்

வட மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். இவ்வாறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் 25 இராணுவ முகாம்களை புதிதாக அமைப்பதற்காக விண்ணப்பட்டுள்ளது. எனினும்ää இந்த விண்ணப்பங்களை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முகாம்கள் அமைக்கப்படவிருந்ததாக…

வடக்கில் பயங்கர இராணுவ ஆட்சி: மாவை எம்.பி

வெளிநாட்டவர்கள் வட பகுதிக்கு செல்வதை தடை செய்யும் அரசாங்கம், அங்கு வாழ்கின்ற மக்கள் திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த தடை உத்தரவை அரசு செயற்படுத்துகின்றது என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம்…

வி.புலிகள் பயங்கரவாத அமைப்பென்ற ஐரோப்பிய முடிவு ரத்து: நீதிமன்றம் உத்தரவு

ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை ரத்து செய்து லக்ஸம்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை விதித்த முடிவை நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து வி.புலிகள் அமைப்பு நீக்கப்படவில்லை.   விடுதலை புலிகள் அமைப்பை…

வைக்கோல் பட்டடைகளைக் காக்கும் நாய்களாக இருப்போம்! முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சவால்!!

வைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபையின் செயற்பாடுகள் இருப்பதாக ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்துக்கூறியுள்ளார். வைக்கோல் பட்டடை என்று குறிப்பிட்டது எங்கள் வடமாகாண மக்களை. வடமாகாண சபையை நாய் என்று கூறியுள்ளார். எங்கள் வைக்கோல் பட்டடையின் ஒரு பகுதியை அவரது ஒரு சகோதரர் தீ வைத்துப் பொசுக்கியதால்தான் ஜெனீவாவில் விசாரணை நடக்கின்றது. மற்றைய…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்! அனந்தி அழைப்பு!

போர் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது எனக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வருடக்கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டுமெனப்பலமுறை வடமாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றியும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்பட்டிருக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார் அனந்தி சசிதரன். அரசியல் கைதிகள் தொடர்பில் அவர்…

இலங்கை அரசு எம்மை திரும்பிப் பார்க்கவில்லை! இடம்பெயர்ந்த மக்கள் குற்றச்சாட்டு!!

இடம்பெயர்ந்த எம்மீது சர்வதேச நாடுகள் காட்டும் இரக்கத்தில் சிறு துளியேனும் இலங்கை அரசு காட்டவில்லை. யுத்ததால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர சகலதையும் கொடுத்து விட்டோம் எனக் கூறும் அவர்கள் எமது சொந்த இருப்பிடத்தை விடுவதற்கு இன்னும் தயாராக இல்லை என்று வலி வடக்கு முகாம்…

மண்ணுக்குள் உரமாகிப் போன அனைத்து உயிர்களை நெஞ்சில் சுமந்து விரைந்து…

சிறீலங்கா அரசாங்கத்தை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள அனைத்து உறவுகளும் தம்மிடம் உள்ள சாட்சிப்பதிவுகளை தமிழ் அமைப்புகளிடமோ, ஐ.நா. மனிதவுரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழுவிடமோ விரைவாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அன்பான தமிழீழ மக்களே! சர்வதேசத்தின் மௌனத்தினால் சிங்கள தேசம் தமிழர் இனப்படுகொலையை மிக வெற்றி…

இலங்கையரை நாடுகடத்த மலேசிய அரசாங்கம் தீர்மானம்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரை  இன்று நாடுகடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்கெய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் மொஹமட் ஹுசைன் என்ற நபரே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில்…

தமிழீழத்தை தீவிரமாக ஆதரித்த சுப்பிரமணிய சுவாமி: வெளிவராத பல தகவல்கள்

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக தமிழீழம் கிடைக்க வேண்டுமென்று காரசாரமான கருத்தாடல்களை மேற்கொண்டவர். இப்போது மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய தோழனாக இருக்கிறார். இது குறித்து தமிழ் மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர் என லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர்…

முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு உதவி – யாழில் இந்தியத் தூதர்!

இலங்­கைக்கு முன்­னு­ரி­மையின் அடிப்­ப­டையில் இந்­திய அர­சாங்கம் எதிர்காலத்­திலும் தொடர்ந்து உத­வி­களை வழங்கும். யாழ்­தேவி ரயில் சேவை இன்று (நேற்று) ஆரம்­பிக்­கப்­ப­டு­வது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது என்று இந்­திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரி­வித்தார். யாழ்ப்­பா­ணத்­திற்­கான யாழ்­தேவி ரயில் சேவை நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ­வினால் பளை ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து…

13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட மாட்டாது…

13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களின் போது 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம்…

ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு…

தமிழீழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று…

புலி ஆதரவு அரசியல்வாதிகளினால் வடக்கு மக்களுக்கு தடை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அரசியல்வாதிகளினால் வடக்கு மக்களுக்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என கோரியுள்ளனர். யாழ்தேவி ரயில் பாதை அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். வடக்கில் நடைபெறும்…

மோடிக்கு சுவாமி ஒரு பொருட்டல்ல! – மாவை

ஈழத் தமிழர் விடயத்தை திசை திருப்பும் சுப்பிரமணிய சுவாமி, மகிந்தவுடன் செய்த சதிகளை எல்லாம் தாண்டி எம்மை இந்தியா அழைத்தது நடந்த வெளிவராத தகவல்களை வெளிப்படுத்தினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா. முன்னைய இந்திய காங்கிரஸ் அரசுக்கு இருந்த குற்ற உணர்ச்சி இன்றுள்ள பாரதிய…

வடபகுதி மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும்: மகிந்த

இலங்கையின் வடபகுதிக்கு மூன்றுநாள் விஜயமாகச் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதுடன் விடுதலைப்புலிகள் நடத்திவந்த வங்கியில் மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு தொகுதியை உரிமையாளர்களான 25 பேரிடம் கையளித்துள்ளார். விடுதலைப் புலிகளின் வங்கியில் நகை அடகு வைத்திருந்த…

பொதுபல சேனாவை கட்டுப்படுத்தாவிடின் ஐ.எஸ்.ஐ.எஸ் நுழையும்: இலங்கைக்கு அபாய சமிக்ஞை

இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் பௌத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனாவை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால், இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைவதற்கு அதிகபட்ச சாத்தியப்பாடு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எஸ்.ஆர்.ஏ. அமைப்பு (Security Risk Asia) இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. டெல்லியில் இயங்கும் எஸ்.ஆர்.ஏ. அமைப்பின் பிரதானி பிரிகேடியர்…

இன்னும் இருப்பது 20 நாட்களே! ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்கள் திரட்டும்…

புலம்பெயர் தமிழர்கள் செறிந்த வாழும் நாடுகளில் முதன்மையான கனடாவில் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களைத் திரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பில் இதற்கான பணிகளை இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் (ICPPG) இது தொடர்பிலான விழிப்பூட்டல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கனடாவினைச் சேர்ந்த பன்முகத்தளங்களில் பங்காற்றுகின்ற…

தமிழ்த்தலைவர்கள் ஜனாதிபதியுடன் பேசவேண்டும்! இந்து இளைஞர் முன்னணி

தமிழ்த் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே வடக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியேற்படும் என்று இந்து இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் தமிழ் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பின்னிற்பது ஏன் என்றும் அந்த அமைப்பு வினா…

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படும் யோசனைகள் அமுல்படுத்தப்பட மாட்டாது: அரசாங்க…

நாட்டின் சட்டத்திற்கு முரணாக வடக்கு மாகாண சபையினால் நிறைவேற்றும் எந்த யோசனையாக இருந்தாலும், அதனை செயற்படுத்தாது இருக்கும் உரிமை அரசாங்கத்திற்கு இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அரசாங்க இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் அமுலில் இருக்கும் சட்டத்திற்கு முரணான யோசனைகள், வட மாகாண சபையில்…

ஜனாதிபதியின் வடமாகாண விஜயத்தை வடக்கு முதல்வர் புறக்கணிப்பார்

இலங்கை ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை புறக்கணிக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வடமாகாண விஜயத்தை வடக்கு முதல்வர் புறக்கணிப்பார் இலங்கை ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாண சபையுடன் ஒத்துழைக்காத காரணத்தினாலும், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம்…

நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளும் நடைமுறையாகாது

இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை அரசாங்கம் ஏன் இன்னும் அமைக்காமல் இருக்கின்றது…