இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த அதிகாரமில்லை: சர்வதேச நீதிமன்றத்தின் துணைப்…

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை என அந்த நீதிமன்றத்தின் வழக்குகள் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் அஹமட் பா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து அவர்…

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பசில்! இன்ப அதிர்ச்சியில் நாமல்!

மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது அமெரிக்காவின் Houston மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. இதனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும், ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷவும் திருப்திலுள்ளதாக அரசின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தமிழர்களை சூறையாடுவதே அரசாங்கத்தின் நோக்கம்: சீ.வி. விக்னேஸ்வரன்

புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று வந்து விடுவார்கள் என்று அரச தரப்புக் கூற தொடங்கியுள்ளதாகவும், ஏதோ ஒரு காரணத்தை கூறி தமிழ் மக்களை சூறையாட வேண்டும் என்பதை அவர்களின் நோக்கம் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமராட்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே…

வடமாகாண சபையில் அரசாங்கம் அரசியல் யாப்பை மீறுகிறது: த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு

இலங்கையின் வடக்கு மாகாணசபையின் நிர்வாக விடயத்தில் அரசியலமைப்பை மீறும் விதத்தில் மத்திய அரசு செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது. குறிப்பாக, வடக்கு மாகாண ஆளுநர் அரசியலமைப்பை மீறும் விதத்தில் செயற்படுவதால் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான சட்டமுறையான தீர்மானமொன்றை நிறைவேற்ற மாகாணசபையால் முடியும் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும்…

தமிழ் மக்களுக்கு சுயாட்சியை பெற்றுக்கொடுக்க வடமாகாண சபை உழைக்க முன்வர…

தமிழ் மக்களும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக் கூடிய சுயாட்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மூன்றாவது…

அரசியல் நோக்கத்துக்காக மீனவர்களை ஜெயலலிதா பணயம் வைத்துள்ளார்: இலங்கை குற்றச்சாட்டு

தமது அரசியல் நோக்கத்துக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், இலங்கை மீனவர்களை பணயக் கைதிகளாக வைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத்குமார வீரக்கோன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இந்திய மீனவர் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே இலங்கை மீனவர்களை ஜெயலலிதா தடுத்து வைத்துள்ளதாக வீரக்கோன் குற்றம்…

வட மாகாண சபையின் இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரிப்பு

வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது. வட மாகாண சபையின் நிர்வாகம் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் இரண்டு தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு பதிலாக தமிழர் ஒருவரை மாகாண ஆளுனராக நியமிக்க…

வடகிழக்கில் இராணுவம் வெளியேற்றப்பட்டு முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்

இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்கள், காணாமல் போன குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், பிள்ளைகள், பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர்…

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா பிரதிநிதிகளுக்கு…

எதிர்வரும் மார்ச் மாதம் கூடும் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில், இலங்கை தொடர்பான விடயங்கள் முக்கிய இடம் வகிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் மனித உரிமை, பொறுப்புக் கூறல் மற்றும் தமிழ் சிறுபான்மை இனத்தின் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது யோசனை கொண்டு…

பதுமன் தலைமையில் புலிகளை மீண்டும் உருவாக்க கோத்தபாய இரகசிய திட்டம்!…

இலங்கையில் தற்பொழுது செயற்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தாக்குதல் நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பித்து, சர்வதேச நாடுகளை ஏமாற்றி இறுதியில் அதனை தமது இருப்புக்காக பயன்படுத்தும் அரசாங்கத்தின் ரகசியமான திட்டம் ஒன்று அம்பலமாகியுள்ளது. இவ்வாறு லங்கா வெப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முக்கியமான ரகசிய திட்டம்…

  இறுதி நேரத்தில் என்ன நடந்தது ? புதிய…

தமிழீழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை விசாரிக்க நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal)கடந்த சனவரி ,2010 அயர்லாந்திலுள்ள டப்ளினில் நடத்திய விசாரணையின், இரண்டாவது அமர்வு கடந்த டிசம்பர்-7,2013 அன்று ஜெர்மனியில் தொடங்கியது. அங்கே காண்பிக்கப்பட்ட போர்குற்ற ஆதார வீடியோவை இங்கே வாசகர்களுக்காக நாம் இணைத்துள்ளோம். 7 நிமிடங்கள் காண்பிக்கப்பட்டும்…

இறுதிக்கட்டப் போர் குறித்து கெலும் மக்ரே ஜெர்மனியில் சாட்சியம்

ஜெர்மனியில் நேற்று நடைபெற்ற மக்கள் நம்பிக்கை தீர்ப்பாயத்தில் வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே சாட்சியமளித்தார். இலங்கையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர், சிங்களவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மக்ரே சாட்சியமளித்துள்ளார். அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த 11 நீதிபதிகள் இந்த…

வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட சர்வதேசத்தின் தலையீடு அவசியம்!- அகாஷியிடம் சம்பந்தன்…

தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுத்து வடக்கில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்ட வேண்­டு­மானால் சர்வதேசத்தின் தலை­யீ­டுகள் அவ­சியம். வடக்கில் ஜன­நா­யகத்திற்­காக அர­சியல் ரீதி­யி­லான தீர்வு ஒன்­றி­னையே எதிர்­பார்க்­கின்றோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். மேலும் வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தி­னரை உட­ன­டி­யாக வெளி­யேற்றி தமிழ் மக்­களின் பாது­காப்­பினை…

தமிழர்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்துவதிலும் கிறிஸ்தவ குருமார்களின் பங்களிப்பு அளப்பரியது: சீ.யோகேஸ்வரன்

தமிழர்களின் போராட்டங்களிலும், தமிழர்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்துவதிலும் கிறிஸ்தவ குருமார்களின் பங்களிப்பு அளப்பரியது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மத ரீதியாக நாம் இந்துக்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர்களாகவிருந்தாலும் நாம் இன நீதியில் நாம் தமிழ் தாயின் பிள்ளைகள் என்றும்…

சிங்களவர்களை எங்கே குடியேற்றுவது?: வட மாகாண சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்…

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது  என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள…

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, இந்திய அமைதிப் படையினர் பாரிய மனித…

கடந்த காலத்திலும் தற்போதும் இந்தியா, இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளை மீறி வருவதாக இலங்கையின் பாதுகாப்பு இணைத்தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது. ரொஹான் எதிரிசிங்க என்பவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது மனித உரிமைகளை காரணம் காட்டி இந்திய பிரதமர், பங்கேற்கக்கூடாது…

ஜெனிவா மாநாட்டுக்கு முன்னர் இலங்கை மனித உரிமைச் சட்டம் திருத்தப்படும்:…

ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டுக்கு முன்னதாக, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மாஹாநாம ஹேவா தெரிவித்தார். அவர் மேலும்தெரிவிக்கையில், மேற்கொள்ளப்பட உள்ள புதிய திருத்தங்கள்…

ஜேர்மனியில் மக்கள் நிரந்தர தீர்ப்பாயம் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஆராய்வு

ரோம் நகரை தலைமையகமாக கொண்ட மக்கள் நிரந்தர தீர்ப்பாயம், இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள் முன்வைக்கும் யுத்த குற்றச்சாட்டுகளை ஆராயும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. தற்போது தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு ஜேர்மனியின் - பர்மன் நகரில் இடம்பெற்று வருகின்றது. மக்கள் நிரந்தர தீர்ப்பாயம், இலங்கை மற்றும் இங்கு வாழும் தமிழ்…

இந்து சமுத்திரத்தில் மிதக்கும் கோத்தபாயவின் ஆயுத களஞ்சியம்: இந்தியாவின் பாதுகாப்புக்கு…

கடற்கொள்ளையர்களை அடக்கும் நோக்கம் என்று கூறி நாடு ஒன்றின் சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய கடற்படைத் தளபதி அத்மிரல் டி.கே. ஜோஷி தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் அவர் இதனை கூறியுள்ளார்.…

மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக அறிக்கை

மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை தயாரித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…

எமது மக்களின் விடிவுக்காக எவ்வளவு தூரமும் பயணிப்போம்! வடமாகாண முதலமைச்சர்…

எங்கள் தன்மானத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் எமது மக்களின் விடிவுக்காகவும், விமோசனத்துக்காகவும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அந்தவகையில் அரசாங்கத்துடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவும் நாம் தயாராகவே உள்ளோம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இராணுவத்தினர் வடமாகாணத்தை விட்டு…

விடுதலைப் புலிகளை கட்டியெழுப்ப முயற்சி!: 17 தமிழ் அரசியல்வாதிகள் மீது…

தமிழ் அரசியல்வாதிகள் 17 பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுடன் இணைந்து இரசியமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்திய அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை…

போர் குற்றம் சுமத்தும் கெலும் மக்ரே முடிந்தால் நீதிமன்றத்தில் சாட்சியங்களை…

போர் குற்றங்களை சுமத்தி வரும் சனல்  தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே, முடிந்தால் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியங்களை முன்வைக்குமாறு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சவால் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கெலும் மக்ரே தனது ஆவணப்படங்களை சகல இடங்களிலும் திரையிட்டு விட்டு அமெரிக்காவுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில்…