இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
சிங்கள அதிகார வர்க்கத்திற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு என்றும் அடிபணியவில்லை:…
விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போராளிகள் இடையில் மிகப்பெரிய போராளி என ஊடகவியலாளரும் முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினருமான திலக் கோதாகொட தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகளை விட விடுதலைப்புலிகள் அமைப்பே அறிவுசார்ந்த மற்றும் தொழிலாளர் இடையில் சிறந்த சேர்க்கையை ஏற்படுத்தியது.…
தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார். குடாநாடு முழுவதும் படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றைய தினம் செய்யப்பட்டிருந்ததுடன்,…
மக்களின் உணர்ச்சிகளை அடக்க முற்பட்டால் தாக்கம் மிக மோசமாக இருக்கும்:…
எமது மக்களின் உணர்சிகளை இராணுவப் பலத்தின் மூலமாகவோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ அடக்க முற்பட்டால் அதன் தாக்கம் மிகமோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மரநடுகை விழாவில் கலந்து கொண்டு…
இலங்கை தமிழர் படுகொலை பற்றி நம்பகமான விசாரணை: டேவிட் கமரூன்…
தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான, ஒளிவுமறைவற்ற, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டேவிட் கமரூன் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், லண்டன் பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:– நான் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சென்று திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும்…
அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட அரசுக்குப் பீதியை ஏற்படுத்துகின்றன!…
அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட எமது அரசாங்கத்திற்குப் பீதியை ஏற்படுத்துகின்றன என்று தெரிகிறது. இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டது என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்:…
பிரபாகரனுக்கு இலங்கை பாராளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார். பிரபாகரனின் பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த ஏனைய போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
வடக்கு இராணுவ ஆளுநருக்கும் மாகாண சபைக்கும் முறுகல் வெடித்தது! ஆளுநரின்…
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் இராணுவ ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது. வடக்கு மாகாண முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ தெரியப்படுத்தாமல் மாகாண சபையின் ஆளணி மீளாய்வுக்…
பிரபாகரன் பிறந்த நாள்! யாழில் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனைகள் தீவிரம்!
யாழ். நகர் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் நேற்று மாலை முதல் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் நாளை மாவீரர் நாள் என்பன அனுஷ்டிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் நேற்று மாலை…
மாகாணசபை அதிகாரங்கள் ஜனாதிபதி போடும் பிச்சை அல்ல! அதிகாரம் ஆளுநருக்கா?…
மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும், அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தேவை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில்…
‘இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு உடன்பட வேண்டிவரும்’
இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று நாட்டு மக்களுக்குக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கான வழிமுறைகளை கடந்த காமன்வெல்த் மாநாட்டின் ஊடாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டின் இறுதியில் அரசு தலைவர்கள் வெளியிட்டுள்ள இணக்கப்பாடுகளின்படி, இலங்கையின்…
வடக்கில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்கள்! பெண்கள் அச்சத்தில்:…
வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அரச படைகளின் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைககளை உடனடியாக தடுதது நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று…
ஐ.நாவின் விசேட பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கலாநிதி ஷலோக்கா பேயானி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். எதிர்வரும்…
புலிகளின் அடுத்த தலைமையகம் மொரிசியஸ் நாட்டில் உருவாக்கப்படலாம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைமையகம் மொரிசியஸில் உருவாக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச புலனாய்வுப் பிரிவை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொரிசியஸில் 9 வீதமானவர்கள் தமிழர்கள் எனவும், மொத்த சனத்தொகையில் 75 வீதமானவர்கள் இந்திய தமிழர் பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால்…
வடக்கு மாகாணசபை ஆட்சியில் முட்டுக்கட்டைகள்! இணைத் தலைமையை ஏற்று செயற்பட…
இலங்கையின் வடக்கே, இரண்டு மாதங்களுக்கு முன்னர் உருவான வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். வடமாகாண சபையின் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும் அவர் பிபிசியிடம் கூறியிருக்கின்றார். வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிக்…
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் உரிய முறையில் பகிரப்பட வேண்டும் சுமந்திரன்
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் ஐக்கிய இராச்சிய ஆட்சி முறைமையின் கீழ் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து போன்றவற்றுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதேவிதமாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியும். எங்கள் பிரதேசங்களின் ஆட்சி…
தமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த மாவீரர்கள்…
தமிழ்மக்களுக்காக, தமிழீழ நாட்டிற்காக, தங்களையே அர்ப்பணித்த தற்கொடையாளர்களை நினைவில் கொள்கின்றநாள். தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள். இந்நாளில் நாம் எடுக்கின்ற உறுதிமொழி, களத்தில் காவியமான கதாநாயகர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த தமிழீழத் தாயக இலட்சியத்தை ஈடேற்றும்வகையில்…
தனி நாடு உருவாக நாட்டில் யுத்தம் இருக்க வேண்டும் என்பது…
உலக நாடுகளில் தனி நாடுகள் உருவாக யுத்தம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை எனவும் அந்த நாடுகளில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களின் செயற்பாடுகளே இதற்கு போதுமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை…
‘இராணுவம் குறைக்கப்பட வேண்டும்’: விதவைகள் மாநாடு
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுமார் 90 ஆயிரம் குடும்பங்களுக்கு பெண்களே தலைமை தாங்குவதாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விதவைகள் மாநாட்டிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து…
சர்வதேச விசாரணை தொடர்பில் பேச கமரூன் கூட்டமைப்புக்கு அழைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை லண்டனுக்கு வந்து வடக்கில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்தித்த போதே பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று பிரித்தானியா செல்ல…
சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும்: பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய உள்ளக விசாரணைகளை நடத்தவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானிய மீண்டும் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலகத்தின் சிரேஸ்ட அமைச்சர் பரோனெஸ் வர்ஸி இந்த கருத்தை நேற்று பிரபுக்கள் சபையில் தெரிவித்துள்ளார். எனவே பொதுநலவாய கொழும்பு மாநாட்டில்…
இலங்கை தொடர்பில் கமரூன் அணுகுமுறையை ஏற்காத இந்தியா!
இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் அணுகுமுறையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரி ஒருவரை கோடிட்டு இந்த செய்தியை இக்கோனொமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் அணுசரணையில் சர்வதேச விசாரணைகளின் அவசியத்தை பிரித்தானிய பிரதமர்…
என்றோ ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்ஜியம் உருவாகலாம்!- கலாநிதி…
இலங்கையை சர்வதேச விசாரணையென்ற தூக்குமேடையில் நிறுத்தும் மாநாடாகவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாடு அமையப் போகின்றது. எனவே டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடலாகாது என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளhர். அரசாங்கம் இப்போதிருந்தே இதற்கு முகம் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியாக…
இலங்கை இராணுவத்தின் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது!- டேவிட் கமரூன்
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை இராணுவம் நடத்தும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். தனது இலங்கை விஜயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிச் செல்ல இலங்கைக்கு இடமளிக்க போவதில்லை. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை…