பிரித்தானியாவுக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்தப் போகிறதாம் இலங்கை?

புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு தேவையான வகையில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்தும் பிரித்தானியாவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல்களை வெளியிட இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக திவயின தெரிவித்துள்ளது. அத்துடன் பிரித்தானியாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சர்வதேச சமூகத்தின்…

டேவிட் கமரூன் இலங்கையில் இராஜதந்திர ஒழுங்குகளை மீறியுள்ளார்! இனங்களுக்கு இடையில்…

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இராஜதந்திர ஒழுங்குகளை மீறியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது இலங்கையின் மூத்த அரசியல்வாதி ஒருவரை கோடிட்டு பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் தமது இலங்கை பயணம் வெற்றியளித்துள்ளதாக கெமரோன் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை கமரூன், இலங்கைக்கு வந்தபோது…

கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!- ஆய்வாளர் கீதபொன்கலன்

கொமன்வெல்த் மாநாட்டை நடத்தி முடித்ததில் இலங்கைக்கு இராஜதந்திர ரீதியில் வெற்றியை ஏற்படுத்தியுள்ள போதிலும் அரசாங்கம் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களுக்கு அதிகளவு தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த கொமன்வெல்த் மாநாடு குறித்து இலங்கைக்கு வெற்றியா அல்லது அழுத்தமா என்பது குறித்து இலங்கை ஆய்வாளர் கீதபொன்கலன் பிபிசிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு…

இலங்கை தமிழர்களை இந்தியாவிடமிருந்து கெமரோன் களவாடிவிட்டார்: தெ ஏசியன் ஏஜ்

இந்தியா இதுவரை இலங்கை விடயத்தில் வகித்து வந்த பங்காற்றலை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் களவாடிவிட்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தெ ஏசியன் ஏஜ் என்ற இணையத்தளம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. இதுவரைக்காலமும் இந்தியா இலங்கையின் விடயத்தில் முக்கிய பங்கை வகித்து வந்தது. எனினும் கொழும்பில் இடம்பெற்ற…

போர் குற்றங்கள் தொடர்பில் சிலர் பகல் கனவு காண்கின்றனர்!- ராஜபக்‌ச

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிலர் பகல் கனவு காண்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தெரிவித்தார். கொழும்பு தெமட்டகொட சேன்புர தொடர் மாடி வீடுகளை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை…

இலங்கை மீது தொடர்ந்தும் சர்வதேச அழுத்தம் தேவை: சர்வதேச மன்னிப்பு…

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தொடர்ந்தும் அக்கறை காட்டவேண்டுமானால் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை பொதுச்செயலாளரின் பணிப்பாளர் ஸ்டீவ் க்ரௌசோ இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச சமூகத்துக்கு இலங்கைக்கு…

பிரித்தானிய பிரதமரின் குண்டு வீச்சால் அதிர்ந்து போயுள்ள இலங்கை அரசு!

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் மனித உரிமை மீறல் என்ற குண்டு வீச்சால் இலங்கை அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரதமர் டேவிட் கமரூன், வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின் கொழும்பில்…

இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு தேவை: ஜேக்கப் ஜூமா

இலங்கையில் நீண்ட காலமாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும் என தென் ஆப்ரிக்கா கோரியுள்ளது. போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணிய வைக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தென் ஆப்ரிக்கா தயாரகவுள்ளது என்று அதன் அதிபர்…

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மஹிந்த நிராகரித்தார்!

போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை தானே ஒரு சுயாதீன விசாரணையை நடத்தும் என்பது குறித்து அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது ஆட்சியின் மீது சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து எச்சரிக்கையும் செய்துள்ளார். ''கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு எவரும்…

எங்களை நாங்களே ஆளுகின்ற அதிகாரத்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை…

இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு நாம் தயாரில்லை, பொருளாதார கலாசார ரீதியாக நாம் தனித்துவமானவர்கள். எங்களை நாங்களே ஆளுகின்ற அதிகாரத்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை. எங்களுடைய நியாயமான கோரிக்கையை இனியும் நிராகரிக்க முடியாது அத்துடன் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

யாழில் கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் தமிழர்களின் உடையில் 350 புலனாய்வாளர்கள்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் யாழ்ப்பாணத்தில் சிவில் உடை அணிந்த இராணுவப் புலனாய்வாளர்கள் சகல இடங்களிலும் நிலை நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இந்த நிலையில், வடக்கு பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவின் அறிவுரையின்படி யாழ்.நகர…

இலங்கையின் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து கமரூன், மஹிந்தவிடம் உறுதியான பேச்சு!

ஜனாதிபதி மகிந்தவுடனான சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் அழுத்தம் கொடுத்துள்ளார். இந்த தகவலை பிரித்தானிய பிரதமரின் டௌனிங் வீதி அலுவலகம் தெரிவித்துள்ளது. டேவிட் கமரூன் நேற்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார்.…

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் பிரிட்டன்…

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும், படைகளின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் பிரிட்டன் உறுதியாகவுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் நேற்று யாழில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று பயணம் செய்த பிரிட்டன் பிரதமர், யாழ். பொதுநூலகத்தில் தமிழ்த் தேசியக்…

இலங்கை மனித உரிமை பிரச்சினைகளை நிவர்த்திக்க தவறினால், சர்வதேச விசாரணையை…

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை மனித உரிமை பிரச்சினை தொடர்பான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய தவறினால் சர்வதேச ரீதியான ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்படுவதை தவிர்க்க முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரித்தானிய…

இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு!

வடக்கு மாகாணத் தேர்தலுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அதிகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  நேற்று  வியாழக்கிழமை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம்.பி. க்கள்…

இலங்கையில் பாலியல் வன்கொடுமை! இராணுவத்தினர் மீது குறித்து விசாரணை நடத்த…

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியதாவது: இலங்கையில் இறுதிக் கட்டப்…

போர்க்குற்றங்கள் : “மறைக்க ஏதும் இல்லை” – மஹிந்த

இலங்கை அரசுக்கெதிராக எழுப்பப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கை மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டு காலப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய அவர், ஆனால் தனது அரசு தமிழ்ப்புலிக் கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்ததன் மூலம் இந்தக்…

பிரிட்டன் பிரதமர் கமருனுக்கு இலங்கை ஊடக அமைச்சர் கண்டனம்! நாட்டின்…

இலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச்செய்ய வேண்டும் என்று கூற, கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமருன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இது குறித்து இலங்கை  ஊடக அமைச்சர், கெஹெலிய ரம்புக்வெல, பிபிசியிடம் பேசுகையில், கமருன் பிரிட்டனில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரின் வாக்குகளைப்…

இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்கத் தான்…

இரு நாட்டு உறவுக்காக, நான், இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்கத் தான், இலங்கை வந்துள்ளேன். இவ்வாறு இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கையில், காமன்வெல்த் மாநாடு, நாளை துவங்குகிறது. "இந்த மாநாட்டில்…

கொழும்பு செல்ல முயன்ற காணாமல் போனவர்களின் உறவினர்கள் தடுக்கப்பட்டனர்

தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் அழுது புலம்பும் காட்சி   காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து, தகவல் தெரியாதிருப்பவர்கள் தொடர்பில் கொழும்பில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வடக்கில் இருந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பொலிசார் புதனன்று தடுத்து திருப்பி அ,னுப்பி வைத்திருக்கின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி…

மன்மோகன் சிங் வராதது உங்களுக்கு கவலையாக இல்லையா?: சனல் 4…

சில மணி நேரம் முன்னதாக பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள வர்த்தக பேரவையை ஆரம்பித்து வைத்த பின்னர், மகிந்தர் மாநாட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். அங்கே காத்திருந்த சனல் 4 கின் ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர் , மகிந்தரைப் பார்த்து உங்களோடு பேசலாமா ? என்று கேட்டுள்ளார்.…

கமலேஷ் சர்மா, மகிந்தவின் செயலாளரா?- மனோ கணேசன் கேள்வி!

ஐந்து கண்டங்களை சேர்ந்த 53 நாடுகளை கூட்டிணைக்கும் பொதுநலவாய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, இலங்கை நாட்டு அதிபரின் செயலாளரை போன்று நடந்து கொள்ள கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று…

அழைப்பு விடுத்தாலும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க போவதில்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

பொதுநலவாய மாநாட்டுக்கு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் பங்கேற்கப் போவதில்லை என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும் வட மாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், வீடழிப்பினைத் தடுத்து நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் பேராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று…