இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
கேலம் மேக்ரேவுக்கு எதிராக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
நான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படவில்லை என சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். புலிகளிடம் நான் சம்பளம் பெற்றுக்கொள்ளவில்லை. நான் ஓர் படைப்பாளி, படைப்பாளி தனக்கு விருப்பமான ஓர் படைப்பை உருவாக்கும் உரிமை காணப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில்…
ஏன் இந்த வன்மம்……?
அவர்கள் ஒருமுறைதான் கொன்றார்கள். ஆனால் ஏதோ காரணங்கள் சொல்லி சொல்லி நிதமும் கொல்வது இருக்கிறதே அது கொலையாளிகளின் வன்மத்தைவிடவும் கேவலமானது. இசைப்பிரியாவை உயிருடன் சிங்கள மிலேச்சர்கள் பிடிப்பதுபோன்ற காணொளியை சனல்-4 வெளியிட்ட நாளில் இருந்து மீண்டும் மீண்டும் அந்த பெண் எழுத்துக்களாலும் ஒளிப்படங்களாலும் கீறிக்கிழிக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்வது…
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் பொருட்கள் காமன்வெல்த் கண்காட்சியில்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைவினைப் பொருட் கண்காட்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. எதிர்வரும் 13 ஆம்திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை கொழும்பில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கைவினைப் பொருட்கள் காமன்வெல்த்…
‘மன்மோகன் சிங் முடிவு எமக்கு பின்னடைவு அல்ல’: இலங்கை
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாதது தமக்கு தோல்வி இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதிருக்க முடிவுசெய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பிபிசியிடம் கூறினார். 'மன்மோகன் சிங் வராமல் இருக்க முடிவு…
நிகழ்ச்சி நிரலுக்கு முரணாக பேச பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு இடமளிக்கப்பட…
பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டின் போது நிகழ்ச்சி நிரலுக்கு முரணாக பேச, பிரித்தானிய பிரதமர் கமரூனுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென மாநாட்டின் போது கமரூன் யோசனை ஒன்றை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக…
இந்தியா தீர்வைப் பெற்றுத் தருமென்றே ஒவ்வொரு தமிழனும் நம்புகிறான்: தஞ்சை…
தமிழ்நாட்டின் தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உரையாற்றியுள்ளார். அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் கால நதியிலே, தனித்துவமான சரித்திரத் தீவுகள் பலவற்றைக் கொண்டிருக்கும் உலகின் மூத்த குடித் தமிழ்த் தேசிய இனத்தின், வரலாற்றுச் சிறப்பு…
தமிழ்த் தேசியத்தின் தளத்தை வலுப்படுத்த மொரீஷியசில் நடைபெறும் மாநாடு
தமிழ்த் தேசியத்தின் தளத்தை உலகளாவிய ரீதியில் வலுப்படுத்த மொரீஷியசில் "புலம்பெயர்ந்த தமிழர் மாநாடு" நடைபெறுகின்றது. தமிழீழம், தமிழ்நாடு உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து மொரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் அனுசரணையுடன் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு மூன்று நாட்கள் இந்தமாநாட்டை ஒழுங்கு செய்து நடாத்துகிறது.…
யாழ்ப்பாணம் வரும் உலகத் தலைவர்களை ஏமாற்ற அரசாங்கம் நடத்திய நாடகம்
மயிலிட்டியை முற்று முழுதாக ஆக்கிரமிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உலக நாடுகள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள நிலையில் அவர்களை ஏமாற்றுவதற்காகவே அகதிகளை அவசரமாக வேறிடங்களில் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் பல்வேறு…
இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க பொதுநலவாயத்தின் மேற்பார்வையில் உள்நாட்டின் விசாரணைக்குழு!-…
இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பொதுநலவாயத்தின் மேற்பார்வையில் உள்நாட்டின் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன், சித்திரவதைகளுக்கு எதிராக அமைக்கப்படும் உள்நாட்டு விசாரணைக் குழுவுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.…
இலங்கையில் சர்வதேச விசாரணை கோருவேன் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் கூறியுள்ளார். காமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கை செல்லும் தருணத்தை பயன்படுத்தி அங்கு பல தரப்பட்டவர்களுடனும் இதனை தான் பேசுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள பிரதமரின்…
அரசுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் உண்ணாவிரத்தில் தம்பிராசா!- 2வது…
வலி.வடக்கில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்க கோரியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் த.தம்பிராசா நேற்று முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் யாழ்.முற்றவெளியிலுள்ள முனியப்பர் கோயில் முன்றலில் அவர்…
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம்: பிரித்தானிய பிரதமர்
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படாவிட்டால் சர்வதேச விசாரணைகள் தேவை என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டை புறக்கணிக்குமாறு கெமரோனுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார் பிரித்தானியாவிலுள்ள தமிழ் சமூகம் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு…
இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும் – சம்பந்தன் கருத்து
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் மட்டும், அது இலங்கையின் மனித உரிமைச் செயல்பாட்டை அங்கீகரிப்பதாக யாரும் கருத முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
கெலும் மக்ரே மற்றுமொரு காணொளியை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்: சிங்கள ஊடகம்
சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே மற்றுமொரு காணொளியை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்யவும், முன்னாள் புலிகளை சந்திக்கவும் மக்ரே திட்டமிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு குறித்த செய்தி சேகரிப்புத் திட்டம் மக்ரேக்குக் கிடையாது. இலங்கை தொடர்பில் மற்றுமொரு…
இலங்கைக்கு எதிரான போராட்டங்களே எங்கள் மீது தாக்குதல் நடத்த காரணம்:…
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவில் நடைபெறும் போராட்டங்கள் காரணமாகவே இலங்கை கடற்படையினர் தம்மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களை காட்டிலும் கடந்த இரண்டு வாரக்காலப் பகுதியில் இலங்கையின் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும் தாக்குதல்…
வலி வடக்கு மக்கள் மீது நடத்தப்படுவது யுத்தமா? மிரட்டலா?
வலி. வடக்கில் பொது மக்களின் காணிகளை நிரந்தரமாகவே கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை. மேலும் தொடர்கின்றன. யுத்தத்தின் போது அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட மாட்டாது. அவை படைத்தரப்பின் பயன்பாட்டுக்கே என்ற செய்தி மீண்டும் மக்களைச் சேர்ந்துள்ளது. முடிவடைந்த வாரத்தில், கடந்த 23 வருடங்களுக்கு முன் உயர்பாதுகாப்பு…
”நோ பயர் சோன்” காணொளி பொதுநலவாய நாடுகள் அமைப்பு கவலை!-…
இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் அரசாங்க தரப்பு மேற்கொண்ட யுத்தக்குற்றங்களை வெளிப்படுத்தும் ''நோ பயர் சோன்'' காணொளி, பொதுநலவாய நாடுகள் அமைப்பை கவலையடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுநலவாய நாடுகளின் செயலகத்தின் பேச்சாளர் ரிச்சட் உக்கு, நேற்று தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார். சனல் 4 தயாரித்த…
”இவர்தான் பிரபாகரனின் மகள்” !- ”அது நான் இல்லை” என்கிறார்…
ஈழ இன அழிப்புப் போருக்கு இன்னும் ஓர் ஆதாரமாக வெளிவந்திருக்கிறது இசைப்பிரியாவின் வீடியோ. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, இப்போது இசைப்பிரியா உயிருடன் நடமாடும் காட்சிகளை வெளியிட்டுள்ளது. மனதை கனக்கச் செய்யும் அந்தக் காட்சியில்... சேறு நிரம்பிய ஒரு…
இலங்கை : ’56 மனிதர்களும் 144 யானைகளும் உயிரிழப்பு’
இலங்கையில் யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக 56 மனிதர்களும், 144 யானைகளும் இந்த வருடத்தில் உயிரிழந்திருப்பதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. கடந்த வருடத்தில் 63 மனிதர்களும், 230 யானைகளும் உயிரிழந்திருப்பதாக அந்தத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த வருடத்திலும்பார்க்க, இந்த வருடம் யானைகளின்…
யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் போன்று சிங்களவர்களும் வாழ இடமளிக்கப்பட வேண்டும்!
யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் போன்றே சிங்களவர்களும் வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ரவி குமார் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் தமிழர்களை யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு சிங்கள மக்கள் கோரவில்லை. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் வாழ்வதனைப் போன்று, யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாழ ஏற்பாடு செய்யப்பட…
இலங்கையையும் சேர்த்துச் செல்வதில் அக்கறையாக உள்ளோம்!- கமலேஸ் சர்மா
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்துக்காக இலங்கையையும் சேர்த்துச் செல்வதில் தாங்கள் அக்கறையாக இருப்பதாக கொமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஷ் சர்மா கூறுகிறார். அத்துடன், இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்தத்துக்கு பொருந்தாத…
சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி போலியானதில்லை என்றால் சுதந்திரமான விசாரணை…
இலங்கை மீது போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, ஒளிப்பரப்பட்ட சனல் 4 தொலைக்காட்சியின் புதிய காணொளி உண்மையானது என்றால் மட்டும் அது பற்றி சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். ஆளும் கூட்டணியில் அங்கம்…
தமிழர்கள் விழிப்புடன் செயற்படாவிட்டால் எமது நிலங்களை மேலும் இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய…
போராட்ட காலங்களில் எம்மினம் இழந்த இழப்புக்களுக்கும், விலைமதிப்பற்ற உயிர்ச்சேதங்களுக்குமான பலாபலன்களை இப்போது அரசாங்கம் கூறும் சமாதான காலத்தில் பெற்றுக்கொள்ள முடியுமா? என்ற வினாவிற்கு விடைகாண முடியாமல் உள்ளது என கிழக்கு மாகாண உறுப்பினர் த.கலையரசன் கூறினார். அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் தலமையில் ஆலையடி வேம்பு…