‘காரணமின்றி 2 மணிநேரம் தடுத்துவைத்த காவல்துறை மன்னிப்பு கோரவேண்டும்’

இலங்கையில் போரின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்று நாட்டின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் காவல்துறையை எச்சரித்துள்ளார். நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலித்தபோதே தலைமை நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறினார். நியாயமான காரணமின்றி…

‘இலங்கை மாநாட்டில் ஆஸ்திரேலியா கலந்துகொள்ளும்’

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இலங்கை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதை தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அதில் தாம் கலந்துகொள்வோம் என்றும் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சரான பிரண்டன் ஓ கொன்னர் அவர்கள் தற்போது இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கையின்…

‘மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் தினத்திலேயே தமிழர்களுக்கு விமோசனம்’

மகிந்த தலைமையிலான இன்றைய அரசாங்கம் என்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றதோ அன்றைய தினத்தில்தான் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்துப் பகுதி மக்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி மற்றும்…

வடக்கில் தேர்தல் நடத்தினால் தனிநாடு உருவாகிவிடும்: விமல் வீரவன்ச

கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடாது என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழர்கள் வாழும் வடமாகாணத்தில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்திருக்கிறார். இந்தியா, அமெரிக்கா…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு?

இலங்கையில் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அணியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாக பதிவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்பட வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளும் இரண்டு வார காலக்கெடு விதித்துள்ளன. அடுத்துவரும் இரண்டு வார…

இனவாதப் போக்கை எதிர்த்து கொழும்பில் பேரணி

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த இனவாத எதிர்ப்பு பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அண்மைக்காலமாக கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தப் பேரணி நடந்துள்ளது. இந்த இனவாதத்துக்கு எதிரான ஊர்வலத்தை ''சர்வதேச சதி'' என்று கூறி ஒரு இடத்தில் ஒரு…

‘இலங்கையில் காமன்வெல்த் மாநாடு’: கனடா அதிர்ச்சியும் கவலையும்

காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகளுடைய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இவ்வாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற ஒரு முடிவு என கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்பு என்பது அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமை, ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விழுமியங்கள் சார்ந்த…

‘பணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று கோரிக்கை விடுக்கும் கனடா மற்றும் மனித உரிமை அமைப்புகள் முன்னாள் புலிகளிடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் பணம்வாங்கிக் கொண்டு வேலை செய்வதாக இலங்கை அரசாங்கம் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். தம்மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் காமன்வெல்த் மாநாட்டை…

‘போர் காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்’

வட-இலங்கை மக்கள் யுத்த காலத்தைவிட தற்போது பயப் பீதியுடன் வாழ்வதாக அங்கு பயணம் செய்துள்ள நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மக்களின் உரிமைகளையும் காணிகளையும் அபகரிக்கும் வேலையில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தேசியப் பாதுகாப்பை போலவே நாட்டு மக்களின் வாழ்க்கையையும்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நல்ல முன்னேற்றம்: இந்திய தூதரகம்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த அரசு உதவியுடன் நடந்து வரும் வீடு கட்டும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40,000…

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது : கனேடிய பிரதமர்

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை (காமன்வெல்த் மாநாடு) இலங்கையில் நடத்தக் கூடாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் மீண்டும் கோரியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு வேறு ஒரு நாட்டில் நடைபெறுவதனையே விரும்புவதாகத்…

ராஜபக்சேவுக்கு நெருக்கமான நபரே என்னை கற்பழித்தார்: ரஷ்யப் பெண் புகார்

இலங்கையில் தங்காலை பகுதியில் கற்பழிக்கப்பட்ட பெண் சில அதிர்ச்சியாக தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த கற்பழிப்பைத் தடுக்க முயன்ற அவரது காதலர் கொலையும் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது. 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் தினத்துக்கு ஒரு நாள் முன் நடந்த இந்த சம்பவம் குறித்து இதுவரை அமைதி காத்து வந்த…

இந்திய அரசுடனான நட்புறவு நல்லமுறையில் உள்ளது : ராஜபக்சே

இந்திய அரசுடனான நட்புறவு நல்லமுறையில் உள்ளதாக, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இலங்கையில், 2009ல் நடந்த இறுதி கட்ட சண்டையின் போது போர் குற்றம் நடந்ததாகவும், சரணடைந்த ஏராளமான விடுதலை புலிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், தமிழக அரசு உட்பட அங்குள்ள அரசியல் தலைவர்கள் இலங்கை அரசு மீது…

யாழ் வலிகாமத்தில் 6 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரிப்பு

இலங்கையின் வடக்கே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட…

மனோ கணேசன் தரப்பினர் மீது தாக்குதல்

இலங்கையில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்ட 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மீது சிலர் நடத்திய தாக்குதலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். கொட்டகலை நகரில் இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின்…

‘மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்’ – அமெரிக்கா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் இலங்கை அரசாங்கம் இருப்பதாக…

இலங்கையில் நீதித்துறை சுதந்திர மீறல்களை ஆராய சட்டத்தரணிகள் குழு

இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படியாக இடம்பெறும் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிலையியற் குழுவொன்றை நியமித்துள்ளது. நாடுமுழுவதிலும் நடக்கின்ற இவ்வாறான சம்பவங்கள் பற்றி அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த தமது பிரதிநிதிகள் ஊடாகவும் பொதுமக்கள் ஊடாகவும் தகவல்களைப் பெற்று இலங்கை…

தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வோம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பணிகள் இடம்பெற்று வருவதோடு எதிர்வரும் மே-18ம் நாள் உலகத் தமிழர்களின் முரசறைவாக தமிழீழ சுதந்திரச சாசனம் முரசறையப்படவிருக்கின்றது. உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழினமே ஈழத் தமிழினத்தின் பாதுகாப்பு அரணாக மட்டுமல்லாது…

ஆஸியிலிருந்து 39 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை(18.4.13) ஆஸ்திரேலிய அரசின் சிறப்பு விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் சென்றடைந்துள்ளனர். இதில் 31 தமிழர்கள், 8 பேர் சிங்களவர்கள் என்றும், அதிலும் இருவர் சிறுவர்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள்…

யாழ் சிறார் காப்பகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் ?

யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள இரட்சணிய சேனை சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சிறுமிகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் சிறுமியொருவரைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த இல்லத்தில் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச்…

அனைத்து துறைகளிலும் இந்திய பணியாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

இலங்கையில் கட்டுமானத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய பயணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது. இலங்கையின் முதலீட்டு சபையிடம் இந்திய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

இலங்கைக்கான நிதியுதவியை 20% குறைக்கும் அமெரிக்கா

இலங்கைக்கு அளித்து வரும் நிதியுதவில் 20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதேசமயம் மாலத்தீவுக்கான நிதி உதவியை அதிகரித்துள்ளது. இதற்கான பரிந்துரையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். இலங்கையின் வடகிழக்கு பகுதியில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி…

வட இலங்கை மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்:…

மேலோட்டமாக பார்ப்பதற்கு அமைதியும் நிம்மதியும் நிலவுவது போலத் தோன்றினாலும், இலங்கையின் வட பகுதியில் உள்ளே மக்களிடையே கடும் கோபமும் குறைகளும் உள்ளன என்று அங்கு அண்மையில் சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவின் ஒரு உறுப்பினர் கூறுகிறார். போருக்கு பின்னர் வட மாகாணத்தில் சிறிதளவு அமைதி திரும்பியிருந்தாலும், அங்குள்ள…