எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார்!

இந்திய மத்திய அரசு அனைத்து ஈழப் போராளிக் குழுக்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார். இவ்வாறு விகடனில் வெளியாகும் கழுகார் பதில்கள் பத்தியில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. கேள்வி:  மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததால்தான் அன்றைக்கு முதலமைச்சராக…

முள்ளிவாய்க்காலில் 2,000 பேரும் தளபதி சூசையின் இறுதி நிமிடமும்

கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் இறுதி நேரம் பற்றிய தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி இந்தியாவில் நடைபெற்ற தேர்தலின் முடிவை அறிவிக்கும் நாள். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அன்றைய தினமே புலிகளுக்கு ஒரு நல்ல செய்தி…

மன்மோகன் சிங் ஆட்சி மகா மோசம்… மக்கள் மனசு கருத்துக்…

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக முடிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசின் ஆட்சி பற்றி மக்களிடம் நல்ல மதிப்பு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் மனசு என்ற பெயரில் விகடன் நடத்திய சர்வேயில்…

லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ…

அரசியல் தீர்வு குறித்து இந்தியக் குழுவினருடன் கூட்டமைப்பு பேச்சு

இலங்கையின் வடக்கே அதிகரித்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரசன்னம், மீள்குடியேற்றம், மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவையும் நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பேசியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு மேலாகவும் சென்று…

இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் விடுதலை

இந்திய கடல் எல்லையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. பலமுறை எச்சரிக்கை விடுக்கப் பட்ட போதும், அதனை கண்டுகொள்ளாத இலங்கை கடற்படையினர் அவ்வப்போது மீனவர்களை கைது செய்தும் சென்று வருகின்றனர். கடந்த மார்ச்…

‘புலிகளின் செய்தியாளர் லோஹினி ரதிமோகனை இலங்கைக்கு அனுப்பக் கூடாது’

ஐக்கிய நாடுகள் சபையின் அகதி அந்தஸ்து பெற்றிருக்கின்ற நிலையிலும், ஐக்கிய அரபு இராட்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் செய்தியாளரான லோஹினி ரதிமோகன் அவர்கள் குறித்து எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கான அமைப்பான ஆர் எஸ் எஃப் கவலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 11 ஆம் திகதி ஐக்கிய…

“சுயாட்சி அதிகாரங்களை கொண்ட இடைக்கால அரசு தேவை”

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமையும் ஒரு ஆட்சி முறை இந்தியாவில் இருப்பது போல்…

‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களும், வெறுப் பூட்டும் நடவடிக்கைகளும் உடனடியாக முடிவுக்கு Read More

தமிழக திரைப்படங்களை இலங்கையில் தடை செய்யக் கோரிக்கை

தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை இலங்கையில் திரையிட தடை விதிக்கப்பட வேண்டும் என்று ராவண சக்தி என்னும் கடும்போக்கு பௌத்த அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருக்கிறது. இது குறித்த மனு ஒன்றை செவ்வாயன்று இலங்கை தணிக்கை சபையிடம் தாம் கையளித்ததாக ''ராவண சக்தி'' அமைப்பின் செயலாளர் இத்தாகந்த சத்தாதிஸ்ஸ தேரர்…

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை! இலங்கை அரசு

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில், கடந்த மாதம் 27–ந் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இலங்கையை நட்பு நாடு என அழைக்கக்கூடாது என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க…

அகதி அந்தஸ்து கொடுத்தும் அடைத்து வைத்துள்ளது ஏன்?

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் அளிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் தம்மை முகாமிலிருந்து வெளியில் விடாது அரசாங்கம் தடுத்துவைத்துள்ளதாகக் கூறும் 28 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவோருக்கான மெல்பர்ன் இடைக்கால முகாமில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் இங்கு இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.…

இலங்கையில் ஆபத்து : அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் –…

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று நடுக் கடலில் விபத்துக்குள்ளாகி காப்பாற்றப்பட்டுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறாக இலங்கை அகதிகள் 19 பேர் டுபாயில் அடைக்களம் கோரியுள்ளனர். இந்நிலையில் இவர்களை எதிர்வரும் 11ஆம்…

இலங்கை தூதருக்கு இந்தியா பாடம் : விசா தராமல் இழுத்தடிப்பு

சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ள துணை தூதருக்கு, விசா தராமல், இந்தியா காலம் கடத்துவதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில், 2009ல் நடந்த சண்டையின்போது, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்காத ராஜபக்ஷே அரசுக்கு, தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கு சுற்றுலா வந்த இலங்கை பயணிகளும், புத்த பிட்சுகளும்…

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி கேள்விக் குறியாக உள்ளது : அமைச்சர்…

இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாட்டில் சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா என்று எண்ணத் தோன்றுகிறது என்று நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்தார். அண்மையில் கொழும்பின் பிறநகர் பகுதியான பெப்லியானவில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில்…

தமிழ் பத்திரிகைப் பணிமனைகள் மீது சிங்களர்கள் தாக்குதல்

இலங்கை கிளிநொச்சியில் உதயன், சுடர் ஒளி ஆகிய பத்திரிகை பணிமனைகள் மீது சிங்கள குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது. நாளிதழின் விநியோகப் பணிகளை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் அப்பத்திரிகையின் கிளிநொச்சி பணிமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி பணிமனை சேதமடைந்திருப்பதுடன்…

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கை இளைஞர்கள் கைது

இலங்கையின் வடபகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அண்மைக் காலங்களில் அதிகரித்திருப்பதாக Read More

மதவாதத்தை ராஜபக்சே அரசுதான் ஊக்குவிக்கிறது; மக்கள் இயக்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி Read More

காணி வழங்கும் அதிகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதிகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்கு மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அறிவிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. விதிகளுக்கமைய அரசாங்க காணிகளை…

மதவாதத்தை ஏற்க முடியாது இலங்கை அதிபர் ராஜபக்சேபேச்சு

கொழும்பு: "எனது அரசு, மத மற்றும் இனவாதத்தை ஆதரிக்காது,'' என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில், மாமிச உணவுகளில், 'ஹலால்' முத்திரை இடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாமிச உணவுகளில் தற்போது, 'ஹலால்' முத்திரை இடப்படுவதில்லை. இலங்கையில், முஸ்லிம்…

புலிகளுக்கு உதவிய நாடுகளை காட்டிக் கொடுப்பேன் என்கிறார் கேபி

கொழும்பு: ஈழப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன் என்று கேபி என்ற குமரன் பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கைக்கு சர்வதேச அளவில் தற்போது நெருக்கடி அதிகரித்து வருகிறது.…

இலங்கை ஏற்றுமதியில் பெரும் வீழ்ச்சி

இலங்கையில் ஏற்றுமதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் கணிசமான அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது அரசின் 'மஹிந்த சிந்தனையில்' திட்டமிட்டிருந்த ஏற்றுமதி இலக்குக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சிறிது கவலை அளிக்கக் கூடிய வகையில் இருந்தாலும், இதிலிருந்து மீள முடியும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி…

இனவாதிகளின் செயற்பாடுகளே அன்று புலிகள் உருவாகக் காரணம் : விக்கிரமபாகு

தற்போது அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளை ஒத்த செயற்பாடு உடையவர்களாலேயே ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவெடுத்தது என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…