மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
மரியா சின் பிகேஆர் குடும்பத்தில் ஒருவராகி விட்டார், நூருல் இஸ்ஸா…
பெர்சேயின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா இப்போது பிகேஆர் குடும்பத்தில் ஒருவர் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டதில் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா இதை உறுதிப்படுத்தினார். ஆனால், மரியா கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவார் என்றும் அவர்…
தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை: குவான் எங் அதிர்ச்சி என்கிறார், அஸ்மின்…
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள (மார்ச் 28 வரையில்) தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறுகிறார். அதே அறிக்கையை "நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு துரோகம்" என்று வர்ணிக்கிறார் சிலாங்கூர் மந்திரி பெசார்…
உங்கள் கருத்து: துவான் இப்ராகிம், நாடு வளமாக இருக்க வேண்டும்,…
பாஸ் துணைத் தலைவர்: எதிரிகள் தோற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதில் என்ன தப்பு? ஹங் துவாபிஜே: பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் அவர்களே, சிலாங்கூர் பாஸ் தலைவர் அஹமட் டுசுக்கி அப்ட் ரானி அவர்களே, முஸ்லிமாக மதம் மாறியவன் என்ற முறையில் உங்களுக்கு நம் …
ஜிஎஸ்டிக்கு எதிரான ஹரப்பான் பரப்புரை ஏப்ரல் 1 இல் தொடங்கிறது
ஜிஎஸ்டி வரிக்கு எதிரான பரப்புரையை எதிர்வரும் ஏப்ரல் 1 இல் தொடங்குவதற்கு பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவமன்றம் தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 1 ஜிஎஸ்டி வரியை பிரதமர் நஜிப் அறிமுகப்படுத்திய மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். அப்பரப்புரையின் கருப்பொருள் "மக்கள் ஜிஎஸ்டியை நிராகரிக்கின்றனர்" என்பதாகும். இன்று தொடங்கி ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு…
‘என்னுடன் வாதமிடத் தயாரா?’ : ‘கிழவர்’ மகாதிர் ‘இளைஞர்’ நஜிப்புக்குச்…
டாக்டர் மகாதிர் முகம்மட் பொது விவாத மேடையில் தம்மைச் சந்திக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மீண்டும் ஒருமுறை சவால் விடுத்துள்ளார். தம்மிலும் 30வயது குறைந்தவரான நஜிப், முன்பு இரண்டு தடவை ‘மறைப்பதற்கு ஏதுமில்லை’ கருத்தரங்குக்கு வராமல் ஏமாற்றி விட்டதாக மகாதிர் கூறினார். “ஜூலையில் எனக்கு 93 …
14வது பொதுத் தேர்தலில் ஐஎஸ், போலிச் செய்தித் தாக்குதல்: ஐஜிபி…
போலீசார் 14வது பொதுத் தேர்தலின்போது ‘கடைசி நிமிட திடீர்த் தாக்குதல்கள்” நிகழ்த்திக் குழப்பம் விளைவிக்கக் கூடிய சுமார் ஆயிரம் தனிப்பட்டவர்களையும் அமைப்புகளையும் அடையாளம் கண்டிருப்பதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார். தாக்குதல்கள் சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்புதல், ஆவி வாக்காளர்கள், ஐஎஸ் …
ஜொகாரி: எந்த நாடும் ஜிஎஸ்டியை இரத்துச் செய்ததில்லை
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட நாடுகளில் அரசாங்கங்கள் மாறியபோதும் ஜிஎஸ்டி இரத்துச் செய்யப்பட்டதில்லை என இரண்டாம் நிலை நிதி அமைச்சர் ஜொகாரி அப்துல் கனி இன்று கூறினார். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தம்முடைய ஆட்சியில் மலேசியப் பொருளாதாரம் “ஆசியப் புலி” ஆக மாறுவதற்கு ஜிஎஸ்டி தேவைப்பட்டதில்லை …
‘போலிச் செய்தி சட்டம் வெளிநாட்டு ஊடகங்கள்மீதும் பாயுமா?’
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போலிச் செய்திச் சட்டம் வெளிநாட்டு ஊடகங்கள்மீதும் பயன்படுத்தப்படுமா என்று புக்கிட் குளுகோர் எம்பி ராம்கர்பால் சிங் வினவியுள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் 1எம்டிபி விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன. சில ஊடகங்கள் பிரதமருக்கு அதில் தொடர்பிருப்பதாகக் கூட குற்றம் சாட்டியுள்ளன. “உத்தேச போலிச் செய்திச் …
பிஎம் ஆக முடியாத அளவுக்கு மகாதிருக்கு வயதாகி விட்டதா? நாளேடு…
வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிபெற்றால் 93-வயதை நெருங்கும் டாக்டர் மகாதிர் முகம்மட் உலகின் முதிய தலைவராகி விடுவார். இப்போது உலகின் மிக மூத்த தலைவராக இருப்பவர் கியூபாவின் ரவுல் கேஸ்ட்ரோ. ஜூன் மாதத்தில் அவருக்கு 87 வயதாகும். மகாதிர் நாட்டின் பிரதமரானால் வயதான காலத்தில் அவரால் …
பாஸ் சிலாங்கூர் மாநில அரசைவிட்டு வெளியேறிவிடுவதே நல்லது, சேவியர்
சிலாங்கூர் மாநில அரசிலிருந்து பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், ஆட்சிக்குழு உறுப்பினர்களும் வெளியேறுவதே மேல் என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். கடந்த சனிக்கிழமை 17-3-2018 கெஅடிலான், ஜ.செ.க மற்றும் பாஸ் ஆகியவை சிலாங்கூர் மாநிலத்தில்…
திருத்தப்பட்ட தேர்தல் தொகுதிகள் மீதான தீர்மானத்தை நிறுத்திவைக்க 10ஆயிரம் பேர்…
இன்று மொத்தம் 107 பேர் திருத்தப்பட்ட தேர்தல் தொகுதிகள் மீதான தேர்தல் ஆணைய(இசி) அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை நிறுத்தக் கோரி ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து கொண்டார்கள். மனு செய்த ஒவ்வொருவரும் சிலாங்கூரில் தொகுதிகள் திருத்தி அமைக்கப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் 100 க்கு மேற்பட்ட …
உங்கள் கருத்து: அள்ளிவிட்டான் கூட்டத்தில் தி எக்கோனொமிஸ்டையும் சேர்த்தாயிற்று
எதிர்க்கட்சிகளின் ‘பொய்மூட்டைகளை’ப் பிரசுரிக்கிறதாம் எக்கோனோமிஸ்ட்: மலேசிய தூதர் சாடல் கிம் குவெக்: சீனத்தில் ஒரு பழமொழி உண்டு, ‘வாய் திறக்காவிட்டால் நீங்கள் அறிவுகெட்ட ஜன்மம் என்பது தெரியாமல் போய்விடும்’ என்று. இப்பழமொழி யுனைடெட் கிங்டத்துக்கான மலேசிய உயர் ஆணையர் அஹமட் ரசிடி ஹசிசி-க்கு மிகவும் பொருந்தும். 1எம்டிபியில் MO1…
1எம்டிபி தொடர்பான புகார்களை, சுவிட்சர்லாந்து திருத்தியமைக்கிறது
சுவிஸ் நீதிமன்றம், பெட்ரோசவுடி இன்டர்நேஷனல் லிமிடெட் எரிசக்தி குழுவின் முன்னாள் இயக்குனரும், 1எம்டிபி ஊழலில் முக்கிய நபருமான சேவியர் ஜஸ்டோ, தனது முன்னாள் சக ஊழியர்களும் தனது சகாக்களுமான இருவர் மீது பதிவு செய்த குற்றப் புகார்களை மீளாய்வு செய்யவுள்ளது. 2009-ஆம் ஆண்டு முதல் 2012 வரை, ஆற்றல் தொழிற்துறையில் ஒத்துழைத்து…
நான் குதிரைச் சவாரி செய்வேன், கார் ஓட்டுவேன், உன்னையும் விரட்டுவேன்,…
தமது வயதைப் பற்றி உளறிக் கொண்டிருக்கும் பிரதமர் நஜிப்புக்கு பதில் அளித்த முன்னாள் பிரதமர் மகாதிர், 14 ஆவது பொதுத் தேர்தலில் நஜிப்பை தோற்கடிப்பேன் என்றார். தமது வயதைப் பற்றி பேசுகிறார்கள், 93 ஆவது வயதில் தாம் பிரதமராக முடியாது என்கிறார்கள். "ஆனால், 93 ஆவது வயதில்,…
மசீச 4 நாற்காலிகளை அம்னோவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) 4 நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படலாம் என நம்பப்படுகிறது. அம்னோ வேட்பாளர்களின் தொடர் பிரச்சாரத்தால், மசீச-வுக்கான இடங்கள் 36-ஆக குறைக்கப்படலாம் என்று தெரிகின்றது. 2008-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், மசீசவுக்கு 40 நாடாளுமன்றங்கள் கொடுக்கப்பட்டன. 2013-ல், குவாந்தான், கேலாங்…
இஜோக் நில மோசடி : எம்ஏசிசி ஒரு ‘டத்தோ’ உட்பட,…
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), சிலாங்கூர், மூக்கிம் இஜோக்கில் மாநில அரசுக்குச் சொந்தமான நில விற்பனை வழக்கு விசாரணைக்கு உதவ, ஒரு ‘டத்தோ’ உட்பட ஆறு நபர்களை இன்று கைதுசெய்தது. அனைத்து சந்தேக நபர்களும் இன்று மதியம் 12.45 முதல் மாலை 4 மணி வரையில், பெட்டாலிங்…
நான் இன்னும் அம்னோ உறுப்பினர்தான், நீக்கப்படவில்லை, ரயிஸ் கூறுகிறார்
முன்னாள் தகவல் துறை அமைச்சர் ரயிஸ் யாத்திம் 1எம்டிபி விவகாரத்தை கடுமையாகக் குறைகூறி வருகிறார். ஆனாலும், அவர் எல்லாவகையிலும் அம்னோக்காரராகவே இருந்து வருகிறார். ஆகவே, வரும் பொதுத் தேர்தலில் பிஎன்னிலிருக்கும் மலாய்க் கட்சியாகிய அம்னோவுக்கு பரப்புரை செய்வார். "நான் ஓர் அம்னோக்காரர். நான் இன்னும் நீக்கப்படவில்லை. நான்…
சின் தோங் ஆயர் ஈத்தாமில் வெற்றி பெற்றால், ஹரப்பான் புத்ரா…
ஜோகூர் டிஏபி தலைவர் லியு சின் தொங், ஜோகூரில் உள்ள ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றாரானால் பக்கத்தான் ஹரப்பான் புத்ரா ஜெயாவில் வெற்றிபெறுவது உறுதி என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். “அவர் வென்றால் புத்ரா ஜெயாவில் பக்கத்தான் வெல்லும்.. ஆயர் ஈத்தாம் …
செகாமாட் இராணுவ வாக்காளர்களுக்கு எதிரான மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி
வாக்காளர் பட்டியலில் 949 இராணுவ வாக்காளர்களையும் அவர்களின் துணைகளையும் சேர்த்துக்கொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி டிஏபியையும் அமனாவையும் சேர்ந்த 48 வாக்காளர்கள் செய்துகொண்ட மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 949 இராணுவ வாக்காளர்களின் பெயர்களும் அரசிதழில் தேர்தல் ஆணைய(இசி)த்தால் வெளியிடப்பட்டு விட்டன என்பதால் இனி …
உங்கள் கருத்து: செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் மகாதிரைப் பாராட்ட வேண்டும்
உங்களுக்கு வாக்களிப்பதும் அன்வாருக்கு வாக்களிப்பதும் ஒன்றாகுமா? - ஒருவகையில் ஒன்றுதான் என்கிறார் மகாதிர் விஜிபி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் முன்பு அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு “வருத்தப்படுவதாக”க் கூறியுள்ளார். அந்த வகையில் சமரசம் செய்துகொண்டு “அலிபாபாவையும் அவரின் 40 திருடர்களையும்” ஒழித்துக்கட்ட வேண்டிய நேரம் …
ஹரப்பான் ஒரே சின்னத்தில் போட்டிபோடுவது ஒரு கேள்விக்குறி
பக்கத்தான் ஹரப்பான் சின்னம் வாக்குச் சீட்டில் இடம்பெறும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அக்கூட்டணி ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்திலேயே பங்காளிக் கட்சிகள் அனைத்தும் போட்டியிடலாமா என்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது. அது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை தலைமை மன்றத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பில் கட்சிகள் புதன்கிழமை நடைபெறும் …
நஜிப்பின் முன்னாள் உதவியாளர் புதிதாக ஒன்றைக் கூறுகிறார், தேர்தல் ஆகஸ்ட்…
14வது பொதுத் தேர்தல் ஏப்ரல் நடுப்பகுதிக்கும் மே நடுப்பகுதிக்குமிடையில் நடக்கலாம் என்று பலரும் ஆருடம் கூறிக்கொண்டிருக்கும் வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முன்னாள் உதவியாளர் புதிதாக ஒன்றைக் கூறுகிறார். தி எட்ஜ் பினான்சியல் டெய்லியில் பத்தி எழுதிய ஓ ஈ சன், ஆண்டின் நடுப்பகுதியில் பல விழாக்கள் …
மரினா மகாதீர் : நாங்கள் இருவரும் ஒத்த சிந்தனைக்கு வந்துவிட்டோம்
மகாதிரின் 22 ஆண்டுகாலப் பிரதமர் பதவி உட்பட பல விசயங்களில், இதற்கு முன்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், தற்போது தானும் தன் அப்பாவும் ஒத்த சிந்தனைக்கு வந்துவிட்டதாக, மகாதிரின் மூத்த மகள் மரினா மகாதிர் கூறியுள்ளார். முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடனான ஒத்துழைப்பு, ஊழலை…











