மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
சிஎம்: முன்னொரு காலத்தில் சீனா மலாக்காவைப் பாதுகாக்கவில்லையா, இப்போது மட்டும்…
சீனா, மலாக்காவில் நிறைய முதலீடுகளைச் செய்து அம்மாநிலத்தைத் தனது காலனியாக்கிக்கொள்ள முயலுகிறது என்று கூறப்படுவதை மறுதலிக்கிறார் மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன். காலனியாக்குவது அதன் நோக்கம் என்றால் நீண்ட காலத்துக்கு முன்பே அதைச் செய்திருக்கும் என்றாரவர். “சீனாவின் முதலீட்டாளர்கள் மலாக்காவைக் காலனியாக்கிக் கொள்ள விரும்புவதாகக் கூறுவோரிடம் சொல்லுங்கள், மலாக்காவைக் …
ஆயர் ஹீத்தாமில் டிஎபியின் சின் தோங் போட்டியிடுகிறார்
எதிர்பார்த்தவாறு ஜோகூர் ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் டிஎபியின் ஜோகூர் மாநில தலைவர் லியு சின் தோங் 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் மசீசவின் சார்பில் அதன் துணைத் தலைவர் வீ கா சியோங் களமிறங்கிறார். ஆயர் ஹீத்தாம் ஹரப்பான் தேர்தல் மையத்தில் டிஎபியின்…
லெம்பா பந்தாய் வாக்காளர்களின் முகவரி மாற்ற விண்ணப்பப் படிவங்கள் இசி-இடம்…
தங்களுக்குத் தெரியாமலேயே தங்களின் வாக்களிக்கும் முகவரிகள் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் நான்கு வாக்காளர்களும் , முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பம் செய்துகொண்ட விண்ணப்பப் படிவங்கள் தேர்தல் ஆணைய (இசி)த்திடம் உள்ளனவாம் இதை உறுதிப்படுத்திய இசி தலைவர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லா, வாக்காளர் பற்றிய தகவல்களில் மாற்றம் செய்வதற்கு போராங் ஏ பாரங்களைப் …
ஆசியான் உச்சநிலை மாநாட்டில், பெர்சே ஆதரவாளர்கள் நஜிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இன்று சிட்னியில், ஆசியான் – ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட நஜிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெர்சே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிட்னி, பெர்சே இயக்கத்தின் செயலாளர் ஜேசன் கோ, மஞ்சள் நிற டீ-சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசியான் முழுவதையும் சார்ந்த பல்வேறு மனித உரிமை…
டாக்டர் எம் : இசா சட்டத்தைப் பயன்படுத்தியதில் நஜிப்பும் பொறுப்பாளி
1987-ல் ‘ஓப்பராசி லாலாங்’ நடவடிக்கையின் போது, உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (இசா) கீழ், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதற்கு அரசாங்கத்தின் ஓர் உறுப்பினர் என்ற வகையில், நஜிப்புக்கும் பொறுப்புண்டு என்று டாக்டர் மகாதிர் கூறுகிறார். "இது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பு, நான் தவறு செய்ததாக அவர் நினைத்திருந்தால், என்னை விமர்சிக்கவோ…
ஜோ லோ-வை ஆதரிப்பது துரோகம், அம்னோ மூத்தத் தலைவர் சொல்கிறார்
1எம்டிபி-உடன் தொடர்புடைய, தொழிலதிபர் ஜோ லோ-வை ஆதரிப்பது நாட்டையும் அம்னோவையும் காட்டிக் கொடுப்பதற்கு ஈடானது என்று, அக்கட்சியின் மூத்தத் தலைவர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. அம்னோ மூத்த உறுப்பினர்கள் இயக்கத்தின் செயலாளர் முஸ்தாபா யாக்கோப், இந்த ஊழல் பற்றி நன்கு அறிந்த கட்சி தலைவர்கள், அதில்…
சைட் சாடிக் மூவாரை முகைதினுக்கு விட்டுக் கொடுக்கத் தயார்
பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், மூவார்மீது கண் வைத்திருந்தாலும் கட்சித் தலைவர் முகைதின் யாசின் அங்குப் போட்டியிட விரும்பினால் அத்தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். “முகைதின் பாகோவில் போட்டியிட்டாலும் மூவாரில் போட்டியிட்டாலும் அவரை 100விழுக்காடு ஆதரித்து வெற்றி பெற வைப்பேன்”, என்று …
அமெரிக்க டாலருக்கு எதிராக, ரிங்கிட்டின் மதிப்பு அதிகரிக்கும்
அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைவதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் ரிங்கிட்டுக்கான தேவை அதிகரிக்கும். இது அமெரிக்க டாலருக்கு எதிராக, 3.88-3.92 க்கு இடையே வர்த்தகம் செய்யப்படலாம் என வணிகர் ஒருவர் கூறியுள்ளார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், எச்ஆர் மெக்மாஸ்டருக்கு பதிலாக வேறொருவரை நியமித்தல் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ்…
தி எக்கோனோமிஸ்டுக்கு ஆத்திரப்பட்டு கடிதங்கள் எழுதுவது மட்டும் போதாது –…
தி எக்கோனோமிஸ்ட் பத்திரிகை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு புத்ரா ஜெயா பட்டும்படாமலும் பதிலளித்திருப்பது மலேசியாவிடம் எதிர்வாதம் செய்ய போதுமான சரக்கில்லை என்பதைக் காண்பிப்பதாய் சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி கூறினார். தி எக்கோனோமிஸ்டுக்குக் கடிதம் எழுத யுகே-க்கான மலேசியாவின் உயர் ஆணையரைப் பணிப்பதைவிட …
புத்ரா ஜெயாவால் புறக்கணிக்கப்பட்ட சுஹாகாம் ஐநாவின் உதவியை நாடுகிறது
மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) ஐநா மனித உரிமை மன்றத்தின் காலாந்தர கண்ணோட்ட(யுபிஆர்)த்துக்கு அனுப்பும் அறிக்கையில் மற்றவற்றோடு மலேசிய அரசாங்கம் மீதான முறையீடுகளும் இடம்பெற்றிருக்கும். முறையீடுகளில் தலையாயது, சுஹாகாம் 1999-இல் அமைக்கப்பட்டதிலிருந்து அதன் ஆண்டறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதில்லை என்பதுதான். அத்துடன் ஆண்டு ஒதுக்கீடான ரிம10மில்லியன் தன் செலவுக்குப் …
ஆஸ்திரேலியப் பிரதமருடனானப் படத்தை நஜிப் வெளியிட்டார்
நேற்று, முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்க்கம் டர்ன்பல்-உடன் எடுத்துக்கொண்ட படத்தை வெளியிட்டார். நேற்று, மகாதிர் ‘ஏபிசி நியூஸ்’ நேர்காணலில், நஜிப் ஆஸ்திரேலியப் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சி செய்வார் எனக் கூறியிருந்தார். இதனையடுத்து, நேற்று…
பாக்கத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கைக்கு இந்தியத் தலைவர்கள் வரவேற்பு
14-3-2018 இல், கோலாலம்பூர் செந்துல் கறி உணவகத்தில் பாக்கத்தான் ஹராப்பான் இந்தியத் தலைவர்கள் பாக்கத்தான் ஹராப்பானின் இந்தியர்களுக்கான சிறப்பு கொள்கை அறிக்கையை விவரித்தனர்.. அதில் கெஅடிலான், ஜ.செ.க ஆகியவற்றின் இந்திய நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களும் ஹிண்ட்ராப்பை பிரதிநிதித்து அதன் தலைவர் வேதமூர்த்தியும், மீராவை பிரதிநிதித்து .ராஜரத்தினமும்…
ஹாடி : மலேசியாவில் பொருளாதாரப் பிரச்சனைக்குக் காரணம் பக்காத்தான் தலைவர்கள்
இன்று மலேசியா எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குக் காரணம் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் என பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் கூறியுள்ளார். அந்தத் தலைவரின் பெயரைக் குறிப்பிடாமல், இன்றையப் பொருளாதார பிரச்சனைகளுக்கு, 80-களில் இருந்து நாட்டை ஆண்ட தலைவர்கள்தான் காரணம் என்றார் அவர். "நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார பிரச்சினைகள்,…
ஜிஇ14-இல் பினாங்கில் பல புதுமுகங்கள் களமிறக்கப்படுவர்
நெருங்கி வரும் 14வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்யும் பணிகளில் ஆளும் கட்சியும் எதிரணியும் ஈடுபட்டிருக்கும் வேளையில் பினாங்கில் டிஏபியும் பிகேஆரும் பல புதுமுகங்களைக் களமிறக்கப் போவதாக ஆருடங்கள் கூறப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 11-இல் பினாங்கில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியின் பத்தாமாண்டு விழாவில், பொதுத் தேர்தலில் டிஏபி …
‘ஒரு எடுபிடியா என்னைப் பதவி விலகச் சொல்வது’- ரயிஸ் ஆவேசம்
ரயிஸ் யாத்திம் பிரதமர் சொன்னால் அமைச்சர் நிலையிலான அரசாங்கச் சிறப்பு ஆலோசகர் பதவியைவிட்டு விலகத் தயார் ஆனால் “ஒரு எடுபிடி” சொல்லி விலக மாட்டார். “ஜாசா அதிகாரி துன் பைசுல் அரசாங்க ஆலோசகர் பதவியிலிருந்து விலகச் சொல்கிறார். ஜோ லோ-வை விசாரிக்க வேண்டும் என்றேன் அல்லவா, அதற்காக........பிரதமர் சொல்லட்டும் …
ஜிஇ14 : முஹிட்டின் மூவாரில் போட்டியிடுவார் என்று ஊகிக்கப்படுகிறது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ஆளுங்கட்சியைத் தூக்கியெறியும் நோக்கத்துடன், பாரிசான் நேசனல் கோட்டையாக விளங்கும் சில இடங்களில், பக்காத்தான் ஹராப்பான் தனது முக்கியத் தலைவர்களைக் களமிறக்கவுள்ளதாக ஊகங்கள் வலுக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கவர் பெர்சத்து தலைவர், முஹிட்டின் யாசின், தனது நாடாளுமன்ற தொகுதியான பாகோவைவிட்டு, இம்முறை மூவாரில் களமிறங்குவார் என்று…
டாக்டர் எம்: எனக்கு வாக்களிப்பது, அன்வாருக்கு வாக்களிப்பதைப் போன்றது
துன் டாக்டர் மகாதீரும் அன்வார் இப்ராஹிமும், நாட்டு அரசியலில் அதிகம் தொடர்புடைய இரண்டு நபர்களாவர், அதேசமயம் இந்தத் தொடர்பில் அடிக்கடி மாற்றங்களும் ஏற்படுவதுண்டு 1980-களில், குருவாகவும் சீடராகவும் இருந்த இவர்களது உறவு, 1998-ல் இறுக்கமான எதிரிகளானது. ஆனால், தற்போது பாரிசானை எதிர்க்க, எதிரணியில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். ‘ஏபிசி…
நஜிப் : எந்த நாடும் முதியவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பதில்லை
டாக்டர் மகாதிர் முகமது, பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை, பிரதமர் நஜிப் மீண்டும் சர்ச்சையாக்கினார். உலகில் எந்த நாடும், பக்காத்தான் ஹராப்பான் செய்ததைப் போல, 93 வயதான ஒருவரை அரசாங்கத்தின் தலைவராக நியமிக்காது என நஜிப் கூறினார். "ஒரு முதியவரை அரசாங்கத் தலைவராக எந்த நாடும் தேர்வு செய்யுமா? இல்லை.…
நஜிப்பிடம் இருந்து விலகி இருங்கள், ஆஸ்திரேலியப் பிரதமருக்கு மகாதீர் ஆலோசனை
இவ்வார இறுதியில் ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்பல், பிரதமர் நஜிப் ரசாக்கைச் சந்திக்காமல், அவரிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென டாக்டர் மகாதீர் கூறினார். ஆஸ்திரேலியாவின் ‘ஏபிசி நியூஸ்’ நேர்காணலில், நஜிப் சர்வதேச தலைவர்களுடன் சேர்ந்து படங்கள் எடுத்துகொண்டு, தனது தரத்தை உயர்த்தி காட்ட…
ஆயர் ஹீத்தாம் ஹரப்பான் வேட்பாளரை மகாதிர் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்
ஜோகூர், ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதிக்கான ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளரை அக்கூட்டணியின் தலைவர் மகாதிர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார். மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்ஙின் கோட்டையான அத்தொகுதியில் டிஎபி அதன் 52 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் போது அந்த அறிவிப்பு செய்யப்படும் என்று…
நஜிப் பிஎன்பி பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரிம2,000 கொடுக்கிறார்
14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் நஜிப் பெர்மோடலான் நேசனல் பெர்ஹாட் (பிஎன்பி) பணியாளர்களுக்கு ஒரு-முறை மட்டும் ரொக்கப் பணம் கொடுப்பதாக இன்று அறிவித்தார். இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பிஎன்பியின் 40 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நஜிப்,…
உள்ளூரில் மட்டும்தான் வழக்கு தொடுக்கும் துணிச்சலா? நஜிப்புக்கு எம்பி கேள்வி
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உள்ளூரில் தம்மை விமர்சிக்கும் விமர்சகர்களையும் ஊடகங்களையும் எதிர்த்து வழக்கு தொடுக்கத் தயங்குவதில்லை ஆனால், வெளிநாடுகள் என்று வரும்போது அந்தத் துணிச்சலைக் காண முடியவில்லையே. இன்று மக்களவையில் அரச உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறிய தியோ நை ச்சிங்(டிஏபி- கூலாய்), ஒருவேளை வெளிநாட்டு …
அமனாவில் சேர்ந்தார் மாபுஸ்
பொக்கோக் சேனா எம்பி, மாபுஸ் ஒமார் இன்று பாஸிலிருந்து பிரிந்துவந்த கட்சியான அமனாவில் சேர்வதாக அறிவித்தார். 34ஆண்டுகளாக பாஸ் உறுப்பினராக இருந்தவர் மாபுஸ். ஒரு நேரத்தில் அக்கட்சியின் உதவித் தலைவராகவும் இருந்தார். ஆனால், 2015-இல் பழமைவாதிகள் அக்கட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அவர் ஓரங்கட்டப்பட்டார். புதிய தலைமைத்துவம் பாஸின் மூத்த …
















