மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
மஇகா வேட்பாளர் பட்டியல் குறித்து சுப்ரா மெளனம்
ம இகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஇகாவின் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட மறுக்கிறார். வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகக் கூறிய சுப்ரமணியம், இப்போது எந்தெந்த தொகுதிகளை வைத்துக்கொள்வது எவற்றை மற்ற பங்காளைக் கட்சிகளோடு மாற்றிக் கொள்வது என மஇகா பிஎன் தலைமையுடன் விவாதித்துக் …
கெராக்கான் வேட்பாளர் பட்டியல் தயார்
கெராக்கான் கட்சி 14வது பொதுத் தேர்தலுக்கான அதன் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது. நேற்று கட்சித் தலைமையகத்தில் கூடிய மத்திய செயல் குழு வேட்பாளர்களைக் கவனமாக மதிப்பிட்டு முடிவு செய்திருப்பதாக கட்சித் தலைவர் மா சியு கியோங் கூறினார். இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் பிஎன் தலைவர் நஜிப் …
அன்வார் இப்ராஹிம்-இன் ஈர்ப்பு நஜிப்பிடம் உண்டு
பிரதமர் நஜிப், முன்னாள் அம்னோ தலைவர்களின் குணங்களைப் பெற்றிருக்கிறார் என, அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா கூறியுள்ளார். முன்னாள் பிரதமரின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம்-இன் கவர்ச்சியும் அவரிடம் உள்ளது என்று அனுவார் முசா தெரிவித்தார். “துன் அப்துல்லா படாவியின்…
நஜிப் தொடர்ந்து இருந்தால் நாடு குட்டிச்சுவர்தான், மகாதிர் கூறுகிறார்
பக்கத்தான் ஹரப்பான் நாட்டிற்கு மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதை நம்ப மறுப்பவர்கள் சிலர் இருக்கின்றனர் என்பதை இன்று ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் மகாதிர், இதற்கான மாற்று மிக மோசமானதாக இருக்கும் என்று எச்சரித்தார். சூழ்நிலையை மாற்றியமைக்க பக்கத்தான் ஹரப்பானால் எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தைக் கொண்டவர்கள்…
ஜமால்: வரும் புதன்கிழமை, மஞ்சள் சட்டை இருந்தால், சிவப்பு சட்டையும்…
எதிர்வரும் புதன்கிழமையன்று, தேர்தல் தொகுதி வரையரை மறுபரிசீலனைக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் ‘பெர்சே’-வின் நடவடிக்கையைத் தடுக்க, 10,000 உறுப்பினர்களை அணிதிரட்ட உள்ளதாக ‘செஞ்சட்டை’ இயக்கத் தலைவர் ஜமால் முகமட் யுனூஸ் சற்றும் தயங்காது எச்சரித்துள்ளார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், குழப்பத்தை ஏற்படுத்தவும் அரசாங்கத்தை அவமதிக்கவும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…
பொய்ச் செய்தி தடுப்புச் சட்டவரைவு ஊடகங்களைக் கட்டுப்படுத்தும், பத்திரிக்கையாளர் சங்கம்…
பொய்ச் செய்திகள் பரப்பும் நபர்களை இலக்காகக் கொண்ட பொய்ச் செய்தி தடுப்புச் சட்டவரைவு, ஊடகங்கச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் என தீபகற்ப மலேசியா தேசியப் பத்திரிக்கையாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. "இந்த மசோதா, ஊடகங்களுக்குப் பரந்தளவில் விளைவை ஏற்படுத்தும். ஏனென்றால், செய்தியின் ஆதாரங்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் நிதியாளர்கள் மீது கடுமையான தண்டனைகள்…
‘இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லும் சுதந்திரம்கூட இனி மலேசியர்களுக்கு…
பொய்செய்தித் தடுப்புச் சட்டம் என்பது மற்றொரு அடக்குமுறை கருவி என்கிறார் மலேசியாகினி தலைமைச் செய்தியாசிரியார் ஸ்டீபன் கான். மலேசியாகினியை அதன் தலைமைச் செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரனுடன் கூட்டாக நிறுவியவரான கான், ‘1984’ நாவலில் ஜார்ஜ் ஆர்வெல் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார். “ஜார்ஜ் ஆர்வெல் எழுதினார், ‘சுதந்திரம் என்றால் …
பொய்ச் செய்திகளுக்கு ரிம500ஆயிரம் தண்டம், 10 ஆண்டுச் சிறை
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவு “பொய்ச் செய்திகள்” பரப்புவோருக்கு ரிம500,000 வரை அபராதம் அல்லது பத்தாண்டுச் சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வகை செய்கிறது. “செய்திகளோ, தகவல்களோ, தரவுகளோ, அறிக்கைகளோ அவை கட்டுரைகளாகவோ காணொளிகளாகவோ, ஒலிப்பதிவுகளாகவோ அல்லது வேறு எந்த வகையினதாக …
பங்களா-கேட் விவகாரம்: இன்று விசாரணை தொடங்கியது
பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், இரு-மாடி பங்களா வாங்கிய விவகாரம்மீதான வழக்கு இன்று பினாங்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பினாங்கு முதலமைச்சர் ஒருவர்மீது ஊழல் வழக்கு தொடரப்படுவது இதுவே முதல்முறை என்பதால் இவ்வழக்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்குவிசாரணை 23 நாள்களுக்கு மே இறுதிவரை நீடிக்கும் …
சரவாக் வாக்காளர் ‘உலகின் மிக வயதானவரா?’
சரவாக் வாக்காளர் பட்டியலைப் பார்த்துக்கொண்டு வந்த பெட்ராஜெயா டிஏபி சோசலிஸ்ட் இளைஞர் பகுதி விளம்பரப் பிரிவுச் செயலாளர் அப்துல் அசீஸ் இசா அதில் முகமட் சைட் பின் முகம்மட் அர்ஷாட் முகம்மட் சைட் என்ற பெயரைப் பார்த்து அதிர்ந்து போனார். பெயர் அதிர்ச்சி அளிக்கவில்லை, அவர் 1868, ஜனவரி …
1எம்டிபி : நடுநிலை என்பது, தீயவர்களைப் பாதுகாப்பது என்பதல்ல என்கிறார்…
1எம்டிபி பிரச்சனையில், பாஸ்-இன் நடுநிலைமை, அது குற்றத்தை ஆதரிக்கிறது என்று அர்த்தம் இல்லை, என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். தவறு என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, யாரையும் தண்டிக்க கட்சி விரும்பவில்லை என்பதால் பாஸ் இந்த நிலைபாட்டை எடுத்துள்ளது என்று அவர் சொன்னார். "இந்த நடுநிலை,…
அமைச்சர்: நாட்டின் பொருளாதார நிலை நிச்சயமற்ற நிலையில் இருந்தாலும், வெற்றிகரமாகவே…
அண்மைய காலமாக, நாட்டின் பொருளாதார நிலைமை நிச்சயமற்று இருந்தபோதிலும், வெற்றிகரமாகவே இருப்பதாக இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் காணி கூறினார். கணிக்க இயலாதப் பொருளாதாரச் சூழலில் இருந்த போதிலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நிர்ணயிக்கப்பட்ட அதன் பிரதான செயல்திறன் குறியீட்டு (கேபிஐ) இலக்கை அது அடைந்துள்ளது என்று…
போலியான செய்தி எதிர்ப்புச் சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்படும்
போலியான செய்தி எதிர்ப்புச் சட்ட மசோதா மக்களவையில் முதல் வாசிப்புக்காக நாளை தாக்கல் செய்யப்படும். போலியான செய்திக்கு எதிர்ப்புச் சட்டம் இயற்றும் கருத்தை சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓத்னான் சைட் கடந்த ஜனவரியில் வெளியிட்டார். அதற்காக புத்ரா ஜெயா ஒரு சிறப்புக் குழுவை அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.…
எதிரணி வென்றால், பெல்டா குடியேறிகள் கடும் விளைவுகளுக்கு ஆளாவர், நஜிப்…
14 ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பெல்டா குடியேறிகள் அவர்களுடைய செம்பனை அறுவடைகளை விற்பனை செய்வதில் பல இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரதமர் நஜிப் அவர்களிடம் கூறினார். அதுமட்டுமல்ல, இது தேசிய பொருளாதாரத்தின் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாரவர். இதுதான் நிகழும்,…
போலீஸ்காரர்கள் அரசாங்கத்தின் கையாள்கள் அல்லர், நஜிப் கூறுகிறார்
போலீஸ்காரர்கள் அரசாங்கத்தின் கையாள்கள் என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப், அவ்வாறான குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றார். சிலர் போலீசார் அரசாங்கத்தின் கையாள்கள் என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அது வருத்தத்திற்குரியது என்று கூறிய நஜிப், போலீசார் பெறும் சம்பளத்திற்கு அவர்கள் எதுவுமே செய்வதில்லை என்பதோடு குற்றச் செயல்கள்…
எஸ்.பி.ஆர்.-இன் தொகுதி வரையறை, பாரிசானுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக்…
தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தேர்தல் தொகுதி வரையறை மறுஆய்வு, பாரிசானை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிபெற வைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆய்வாளர் வோங் சின் ஹூவாட், இது நாடாளுமன்ற தொகுதிகள் சமநிலையை மோசமாக்கலாம் என்று ‘தி ஆஸ்திரேலியன்’ செய்தித்தாளிடம் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.…
அரசியல் கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டாம், மக்களுக்கு ரஃபீடா வேண்டுகோள்
14-வது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அரசியல் கட்சிகளுக்கு கடன்பட்டிருப்பதாக ஒருபோதும் உணரவேண்டாம் என்று முன்னாள் அம்னோ மகளிர் தலைவர், ரஃபீடா அஜிஸ் மக்களைக் கேட்டுக்கொண்டார். தனி மனிதர் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், நாட்டின் எதிர்காலம் முக்கியமானது என்று, இன்று தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.…
‘இனவாத அரசியலை நிறுத்துக’, சர்வதேச இனப் பாகுபாடு அழிப்பு தினத்தில்,…
2018, மார்ச் 21-ல் அனுசரிக்கப்பட்ட ‘சர்வதேச இனப் பாகுபாடு அழிப்பு தின’த்தை முன்னிட்டு, நேற்று மலேசிய சோசலிசக் கட்சியினர் (பி.எஸ்.எம்.) நாடு தழுவிய அளவில் இனப்பாகுபாட்டை எதிர்த்து, துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். மலேசியாவில் ஒரு நோயாகப் பரவிவரும் இனவாத அரசியலை நிறுத்த வேண்டுமென மக்கள், அரசாங்கம், அரசியல் கட்சிகள்…
உங்கள் கருத்து: சொல்வதைச் சொல்லிவிட்டுப் பிறகு மன்னிப்பு கேட்பது: எம்பி…
குண்டர்போல் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்: நெகிரி எம்பிக்கு பெட்ரியோட் கோரிக்கை கவலைகொண்டான்: நெகிரி செம்பிலான் மந்திரி புசார் (எம்பி) மாநில மக்களுக்கு பேராவமானத்தைக் கொண்டு வந்து விட்டார். எவ்வளவோ மரியாதை வைத்திருந்தேன் அவர்மீது. பெரும்பாலும் அம்னோ இளைஞர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய அவர் பிஎன் அரசாங்கத்தை …
மெட்ரிகுலேசன், ஐ.பி.தி.ஏ.-யில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி
மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் பொது உயர்க்கல்வி நிறுவனங்களில் (ஐ.பி.தி.ஏ.) இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆய்வு செய்வதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று தெரிவித்தார். நாட்டின் ஐ.பி.தி.ஏ.-வில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தற்போது ஏழு விழுக்காடு இலக்கை எட்டவில்லை என்று அவர் தெரிவித்தார். "இந்திய மாணவர்களின்…
சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளராக, பிரதமரின் சிறப்பு அதிகாரி
பாரிசான் சார்பாக சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளர் யார் என்பது இன்னும் கேள்விக்குரியாக இருக்கும் நேரத்தில், பல்வேறு ஊகங்களும் எழும்பியுள்ளன. ஆக அண்மையில், பிஎன்னின் மந்திரி பெசாராக நியமிக்கப்படவுள்ளவர், பிரதமரின் சிறப்பு அதிகாரி இஷாம் ஜாலில் என்று பெயர் அடிப்படுகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியான இஷாம், பாஸ் கட்சியின்…
ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தும் தைரியம் எனக்கு முன்பிருந்தவர்களிடம் இல்லை, நஜிப்…
ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துவது பற்றி 1984 ஆம் ஆண்டிலியே ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதைச் செய்வதற்கான "அரசியல் துணிவு" அப்போதைய மத்திய அரசிடம் இல்லை என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். ஜிஎஸ்டி ஒரு சரியான முடிவு, ஆனால் அது ஓர் அரசியல் விளைவுடன் வந்தது என்று தேசிய உருமாற்றத்…
போலியான செய்தி எதிர்ப்பு சட்டத்தை ரோஸ்மா ஆதரிக்கிறார்
போலியான செய்தி எதிர்ப்பு சட்டத்தை இயற்றுவதற்கான புத்ரா ஜெயாவின் திட்டத்தை தாம் ஆதரிப்பதாக பிரதமர் நஜிப்பின் துணைவி ரோஸ்மா மான்சூர் கூறுகிறார். "நான் அதை ஆதரிக்கிறேன் - போலியான செய்திக்கான புதிய சட்டம் - நான் அதை ஆதரிக்கிறேன்", என்று கோலாலம்பூரில் இன்று ஒரு நிகழ்ச்சியில் ரோஸ்மா…

















