நஜிப்: பெர்சேக்குச் சென்றவர்கள் 20,000-தான். மற்றவர்கள் அரசாங்கத்தின் பக்கம்

தம்மைப்  பதவி  விலகக்  கோரும் பெர்சே  பேரணி  பற்றிப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கொஞ்சமும்  கவலைப்படவில்லை.  “மலேசியாவில்  உள்ள  மற்றவர்களின்”  ஆதரவு தம்  அரசாங்கத்துக்கே  என்றவர்  கூறிக்கொண்டார். சில  ஊடகங்களில்  வந்துள்ள  செய்திகள்போல் 20,000  பேர்  பேரணிக்குச்  சென்றிருக்கலாம்.  ஆக 20,000  பேர்தான்  ஓரளவுக்கு  அதிருப்தியுற்றிருக்கிறார்கள். மற்ற …

ஜாஹிட்: பெர்சே 4 ஏற்பாட்டாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி

பெர்சே 4  பேரணியை  ஏற்பாடு  செய்வதற்கு  அச்சாணியாக  இருந்தவர்மீது  அதிகாரிகள்  கடுமையான  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  எனத்  துணைப்  பிரதமர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  வலியுறுத்தியுள்ளார். பேரணிக்குப்  பின்னணியில்  இருந்து  செயல்பட்டவர்களையும்  அதிகாரிகள்  கண்காணிக்க  வேண்டும்  என  உள்துறை  அமைச்சருமான  ஜாஹிட்  கூறினார். “அவர்கள்  என்னென்ன  செய்தார்கள்  என்பது …

பெர்சே 4 ரிம200 அலவன்ஸ் கொடுக்கிறதா?

  பெர்சே 4 பேரணியில் பங்கேற்றிருப்பவர்கள் ரிம200 அல்வன்ஸை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்திற்கு (KLSCAH)செல்லுமாறு வாட்ஸ்அப் மூலமாக பரப்பப்பட்டு வரும் செய்தி போலியானது என்று பெர்சே அறிவித்துள்ளது. "உங்களுக்கு நன்கொடை வேண்டுமென்றால், நஜிப்பிடம் செல்லுங்கள். நாங்கள் நன்கொடை அளிப்பதில்லை. நாங்கள் எங்களுடைய சுய…

பெர்சே 4 டி-சட்டை அணிந்திருந்ததற்காக 12 பேர் கைது

  தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பெர்சே 4 டி-சட்டையை அணிந்திருந்ததற்காக மலாக்காவில் போலீசார் 12 பேரை கைது செய்துள்ளனர். நேற்றிரவு மணி 10.30 அளவில் பண்டார் ஹிலிரில் நடந்த பேரணியின் போது 9 பேர் கைது செய்யப்பட்டதாக மலாக்க போலீஸ் தலைவர் சுவா கீ லய் கூறினார். மற்ற…

பெர்சே 4, 2 ஆவது நாள்: நாளிதழ்கள் மஞ்சள் நிறமாகின

நேற்று டாத்தாரான் மெர்தேக்காவில் களமிறங்கிய ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட பெர்சே 4 பேரணியினர் தலைநகர் கோலாலம்பூரை மஞ்சள் நிறமாக்கினர். இன்று அப்பேரணி குறித்த செய்திகளை வெளியிட்ட நாளிதழ்களின் முன்பக்க செய்தித் தலைப்புகள் பெர்சே 4 இயக்கத்தின் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தன. சீன மற்றும் தமிழ் நாளிதழ்கள் அவற்றின் முன்பக்க…

பெர்சே 4: “புத்ரா ஜெயா, தூய்மையாக இரு”

  பெர்சே 4 இன் இரண்டாவது நாள் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. அதிகாலையிலிருந்தே பெர்சே 4 பேரணியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இரவெல்லாம் தூங்காமல் பலர் சித்திரம் வரைவது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தினர். ஜாலான் ராஜா பகுதியில் பலர் தங்களுடைய உறக்கத்திலிருந்து எழுந்து அங்கிருந்த 4,000 க்கு மேற்பட்ட…

மக்கள் சக்தியின் முன் மத குருவின் மந்திரம் எடுபடாது, மகாதிர்

பிரதமர் நஜிப் ரசாக் "ஆர்எம்" என்ற ஒருவரின் வசியத்திற்கு உட்பட்டிருப்பதாக மகாதிர் கூறிக் கொண்டார். ஆனால், அவர் எவருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. "நஜிப் ஆர்எம்மின் வசியத்திற்கு ஆளாகியிருப்பது மட்டுமல்ல. ஆர்எம்முக்கு உலகம் முழுவதும் பல மத குருக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நஜிப் (அதிகாரத்திலிருந்து) விழ மாட்டார் என்று வாக்குறுதி…

இதுதான் “மக்கள் சக்தி”. சித்தி ஹஸ்மா கூறுகிறார்

  இன்று கோலாலம்பூரில் பெர்சே 4 பேரணிக்கு வருகையளித்திருந்த முன்னாள் பிரதமர் மகாதிரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா பெர்சே 4 பேரணியை "மக்கள் சக்தி" என்று வர்ணித்தார். இப்பேரணி பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று வற்புறுத்திக் கேட்டதற்கு இதுதான் மக்கள் சக்தி என்றாரவர். சித்தி ஹஸ்மா…

மகாதிர்: “பங்ஸாட்” நஜிப் போக வேண்டும்

  மலேசியாவை அம்னோ தொடர்ந்து ஆளாவிட்டால், மலாய்க்காரர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நஜிப் தெரிவித்திருந்த கருத்துக்கு மகாதிர் இப்போது பதிலடி கொடுத்துள்ளார். "அந்த "பங்ஸாட்" போய்விட்டால், நாம் "பங்ஸாட்லா" ஆக மாட்டோமென நான் நினைக்கிறேன்" என்று பாசிர் கூடாங்கில் இன்று கூடியிருந்த மக்களின் ஆரவார பெருமுழக்கத்திற்கிடையில் மகாதிர் கூறினார்.…

மகாதிரும் அவரது துணைவியாரும் பெர்சே 4க்கு திடீர் வருகை

  முன்னாள் பிரதமர் மகாதிரும் அவரது துணைவியாரும் பெர்சே 4 பேரணிக்கு திடீர் வருகை மேற்கொண்டனர். அவர்களது வருகை டாத்தாரான் மெர்தேக்கா மற்றும் கோலாலம்பூர் மாநகர் மண்டபத்திற்கிடையிலான பகுதியில் குழுமியிருந்து மக்களை அதிர்சி அலையில் மூழ்கடித்தது. சுமார் இரவு மணி 7.30 க்கு அங்கு வந்த அத்தம்பதிகளை பேரணிக்கு…

பெர்சே 4: நஜிப் வெளியேற்றப்பட வேண்டும், பெக்கான் பெண்கள்

  மாலை மணி 6.30 அளவில் பேரணியில் கலந்து கொண்டிருப்பவர்களை ஓய்வெடுத்துக்கொள்ளுமறு பெர்சே 4 பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்ட வேளையில், பகாங், பெக்கானிலிருந்து வந்திருந்த அலிமின் என்று மட்டும் அடையாளம் கூறிக்கொண்ட ஒரு பெண் தாம் அங்கேயே இரவைக் கழிக்கப் போவதாக கூறினார். பெர்சே இப்போது முன்னெடுத்துள்ள பிரச்சனை…

பெர்சே 4 பேரணியில் பங்கேற்க மகாதிர் …..?

  கோலாலம்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெர்சே 4 பேரணியின் நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஜொகூர், பாசிர் கூடாங்கில் இன்று பின்னேரத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மகாதிர், "நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்", என்றார். இன்று முன்னேரத்தில், "மலேசியா இன்று: நாம்…

பெர்சே 4: நம்பிக்கியில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யுங்கள் என்கிறார் மரியா

  பின்னேரம் மணி 4.20 அளிவில் பேசிய பெர்சே 4 தலைவர் மரியா சின் அப்துல்லா அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா (நஜிப்புக்கு எதிராக) தீர்மானத்தை தாக்கல் செய்யுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். 'அரசாங்கம் அலட்சியப்படுத்த முடியாத ஒரு செய்தியை நீங்கள் உரக்கமாக…

பெர்சே செய்திகள்

மாலை  மணி  4 அளவில்  சுமார் 100,000 பேர்  டட்டாரான்  மெர்டேகாவைச்  சுழ்ந்து  கொண்டிருந்தார்கள். மெர்டேகா  சதுக்கத்தைச்  சுற்றிக்  கூட்டம்  பெருகிய  வேளையில்  கூட்டத்தில்  இருந்து  சிலர்  வெளியேறுவதையும்  காண  முடிந்தது. போலீசார்  அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும்  அவர்கள்  தலையிடவில்லை.  கூட்டத்தைக்  கண்காணித்துக்  கொண்டு  மட்டுமே  இருந்தார்கள். மெர்டேகா …

பெர்சே 4 பேரணியில் ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்

  கோலாலம்பூர், மெர்தேக்கா டாட்டாரான் - பெர்சே 4 பேரணியில் பங்கேற்பதற்காக வந்துள்ள மக்களின் எண்ணிக்கை ஓர் இலட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. பிற்பகல் மணி 4.10 அளவில் சிலர் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. பிரிக்பீல்ட்ஸ் பகுதியிபிருந்து சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு வந்து சேர்ந்த பெர்சே…

மெர்டேகாவை முன்னிட்டு கருத்துவேறுபாடுகளைத் தள்ளி வைப்பீர்: சாலே வேண்டுகோள்

மலேசியர்கள் தங்கள்  அரசியல்,  சித்தாந்த  வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து  விட்டு  தேசிய  நாளைக்  கொண்டாடுவதில்  ஒன்றுபட  வேண்டும்  எனத்  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்  கேட்டுக்கொண்டிருக்கிறார். “நாம்  ஒன்றுபட்டிருப்பதைக்  காண்பிக்க  தேசிய  நாளைக்  கொண்டாடுகிறோம். நாடுதான்  நமக்கு  எல்லாமும்  என்ற  நம்பிக்கை நமக்கு  இருக்கும்போதுதான்  நம்மால்  முன்னேற …

பெர்சே பங்கேற்பாளர்கள் நாட்டுப்பற்றவர்கள்: பிரதமர் சாடல்

சட்டவிரோத  பெர்சே  பேரணியின்  ஏற்பாட்டாளர்களையும்  பங்கேற்பாளர்களையும் நாட்டுப்  பற்றில்  குறைந்தவர்கள்  என  நஜிப்  அப்துல் ரசாக் வருணித்தார். அரசியல்  கோட்பாடுகள் மாறுபடலாம்  ஆனால், தேசிய  நாள்  என்கிறபோது  காலனித்துவப்  பிடியிலிருந்து  தாய்நாட்டை  விடுவித்த  விடுதலைப்  போராட்ட  வீரர்களை  நினைவுகூறும்  வகையில் ஜாலோர்  கெமிலாங்கைப்  பறக்கவிட்டு  கொண்டாட வேண்டும்  என்று …

பேரணியில் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது

பிற்பகல்  2 மணி  அளவில்  சுமார்   30ஆயிரம்  பேர்  கோலாலும்பூர்  மத்தியில்  திரண்டிருப்பதாக  மலேசியாகினி  நிருபர்கள்  மதிப்பிட்டிருந்தனர். பேரணியில்  கலந்து  கொண்டிருப்பவர்களுக்குப்  பல  தரப்பினரும் ஊக்கமளித்து  வருகிறார்கள். Nandos உணவகம்  இலவச  பானங்களை  வழங்கி  வருகிறது. இன்னும்  சிலர் பேரணி  பங்கேற்பாளர்களின்  தாகத்தைத்  தீர்க்க  200 பெட்டிகளில்  கணிம  நீர் …

பாஸ் நஜிப்மீது நம்பிக்கை போய்விட்டதை நினைத்து கவலைப்படுங்கள்; டி-சட்டை கவலை…

பிஎன்  அரசாங்கம்  டி-சட்டைகளைப்  பார்த்து  பயப்படுவது  தேவையற்றது  என்கிறது  பாஸ். “பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் மீதுள்ள  நம்பிக்கை, பொருளாதாரத்தின்  மோசமான  நிலை, நஜிப்பின்  பிம்பம்  சரிந்திருப்பதால்  முதலீட்டாளர்களின் நம்பிக்கை  குறைந்திருப்பது ஆகியவற்றை  எண்ணித்தான்  அவர்கள்  அஞ்ச  வேண்டும்”, என பாஸ் துணைத்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான் …

முகைதின் பேரணியில் கலந்துகொள்ள மாட்டார்

அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின் பெர்சே  பேரணியில்  கலந்துகொள்ளப்போவதில்லை  என  அவரின்  முன்னாள்  அரசியல்  செயலாளர்  அறிவித்துள்ளார். முகைதின்  பேரணிக்குச்  செல்வார்  எனச்  சமூக   வலைத்தளங்களில்  வந்துள்ள  செய்தி  பொய்யானது,  தீய  நோக்கம்  கொண்டது  என்று  முகம்மட்  நர்டின்  ஆவாங்  கூறினார். “பொறுப்பற்றவர்கள்  அப்படி  ஒரு  செய்தியைப் …

இன்று பெர்சே பேரணி

இன்னும்  சற்று  நேரத்தில் கோலாலும்பூர்,  கூச்சிங்,  கோத்தா  கினாபாலு  ஆகிய   நகரங்களில்  பெர்சே 4 பேரணி  தொடங்கும். பேரணியும்  பேரணியின்  அடையாளமான  மஞ்சள்நிற டி-சட்டை  அணிவதும்  சட்டவிரோதமானவை  என  போலீஸ்  அறிவித்துள்ளது.  என்றாலும் பேரணியில்  பல்லாயிரக்கணக்கானோர்  திரள்வார்கள்  என  எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன்  2012ஆம்  ஆண்டு  பெர்சே  பேரணியில்  100,000 …

சரவாக் ரிபோர்ட் ஆசிரியர்: மலேசிய போலீசாரின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது

  சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரவுனுக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ் பெறுவதற்கு மலேசிய போலீஸ் விடுத்திருந்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்துள்ளது. சிவப்பு நோட்டீஸ் என்பது அனைத்துலக கைது ஆணைக்கு ஒப்பானது. இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டால் இன்டர்போலின் 190 உறுப்பிய நாடுகளுக்கும் ஒரு தனிப்பட்ட நபர்…

பெர்சே 4 டி-சட்டை அணிவதற்கு அரசாங்கம் தடை விதிக்கிறது

  பெர்சே 4 டி-சட்டை அணிவது இப்போது சட்டவிரோதமாகும். இன்று மாலை அரசாங்கம் இத்தடையை அதன் கெஜட்டில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது. பெர்சே 4 டி-சட்டையும் பெர்சே 4  பேரணி சம்பந்தப்பட்ட இதரப் பொருள்களும் "விரும்பத்தகாதவை" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இச்செயல்முறை உத்தரவு இன்று மாலை சட்டத்துறை அலுவலக…