முஹைடின்: இசி தலைவர் விலக வேண்டியதில்லை

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அழியா மை தொடர்பில் தேர்தல்  ஆணையத்தை (இசி) விசாரிக்கப் போவதால் இசி தலைவர் அப்துல் அஜிஸ்  முகமட் யூசோப் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் கூறுகிறார். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அந்த மையின் விநியோகம் பற்றி…

துணைப் பிரதமர்: குழந்தைகள் மதமாற்றம் தொடர்பான 2009ம் ஆண்டு முடிவு…

பெற்றோர்களில் ஒருவர் குழந்தைகளை இஸ்லாத்துக்கு தன்மூப்பாக மதம்  மாற்றுவதற்கு எதிராக 2009ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவு, நடப்பு  சூழ்நிலைகளிலிருந்து மாறுபட்ட அப்போதைய சூழ்நிலைகளில் எடுக்கப்பட்டது  என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் சொல்கிறார். 2009 முடிவு 'அப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என  அவர் நாடாளுமன்ற வளாகத்தில்…

சிலாங்கூரில் ஊராட்சி தேர்தல் மசோதா அடுத்த ஆண்டு கொண்டுவரப்படும்

சிலாங்கூர் அரசு ஊராட்சி தேர்தல் சட்ட முன்வடிவு ஒன்றை  வரைந்து வருகிறது. அடுத்த ஆண்டு அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டவுடன் ஒன்றிரண்டு ஊராட்சி மன்றங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் மாநிலச் சட்டமன்றத்தில் இன்று கூறினார்.…

மதமாற்றச் சட்டமசோதா: மசீசாவும் மஇகாவும் என்ன செய்யப்போகின்றன?

உங்கள் கருத்து  ‘சட்டமியற்றலில் என்ன நடக்கிறது என்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதைத்தான் மசீசவும் மஇகாவும் விடுக்கும் அறிக்கைகள் உணர்த்துகின்றன. ’ மதமாற்றச் சட்டம் திருத்தப்படுவதை அறிய மஇகாவும் ‘அதிர்ச்சி’ ஆரீஸ்46: மசீசாவும் மஇகாவும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாமலேயே முஸ்லிம்-அல்லாதாரின் அரசமைப்பு உரிமைகளைக் கீழறுக்க அம்னோ கமுக்கமாக…

குற்றச் செயல்கள் கூடுகிறது என்பது கற்பனை அல்ல என்கிறார் கைரி

இந்த நாட்டில் குற்றச் செயல் நிலவரம் மோசமடைந்து வருகிறது என சில  தரப்புக்கள் சொல்வது கற்பனை அல்ல என்பதை இளைஞர் விளையாட்டு  அமைச்சர் கைரி ஜமாலுதின் ஒப்புக் கொண்டிருக்கிறார். நேற்று முன் தினம் அவருடைய புக்கிட் டமன்சாரா வீட்டில் திருடர்கள் கொள்ளையடித்த பின்னர் அவர் அவ்வாறு ஒப்புக் கொண்டுள்ளார்.…

திரங்கானு பிஎன்: சபாநாயகரைச் சேர்த்தால் எங்களுக்கு இன்னும் பெரும்பான்மையே.

திரங்கானு கோலா பெசுட் இடைத் தேர்தல் முடிவுகள் பிஎன் வழி நடத்தும்  திரங்கானு மாநில அரசாங்கத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் சொல்கிறார். அந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றாலும் மாநிலச் சட்டமன்றத்தில்  16க்கு 16 என்ற நிலை…

‘BR1M பணத்தைக் குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்’

BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையை கணவனுக்கும்  மனைவிக்கும் சமமாக பிரித்துக் கொடுப்பது பற்றி அரசாங்கம் பரிசீலித்து  வருகின்றது. மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது நிதித் துணை அமைச்சர் அகமட்  மஸ்லான் அந்தத் தகவலை வெளியிட்டார். குடும்பத்தில் உள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த உதவித் தொகையில்…

அழியா மை குளறுபடியை விசாரிக்க எம்ஏசிசி பணிப்படை

மலேசிய உழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அழியா மை குளறுபடி பற்றி புலனாய்வு செய்ய ஒரு பணிப்படையை அமைத்துள்ளது. அந்த மையை வாங்கியதிலும் அதை மே 5 தேர்தலில் பயன்படுத்தியதிலும் தவறு நிகழ்ந்துள்ளதா என்று அப்பணிப்படை ஆராயும் என்று ஆணையத்தின் விசாரணை இயக்குனர் முஸ்தபார் அலி கூறியதாக சினார்…

குகன் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய ஏன் எங்கள் நிதிகளைப்…

"குகன் வழக்கில் அரசாங்கம் ஏன் முறையீடு செய்ய வேண்டும் ? அதிகாரத்தைத்  தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனிநபர் அதனை ஏன்  செய்யக் கூடாது." குகன் வழக்கு: அரசாங்கம் மேல் முறையீடு செய்யும் என்கிறார் ஸாஹிட் பல இனம்: உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அவர்களே, சிவில்…

பக்கத்தானில் இணைவதற்கு பிஎஸ்எம் தொடர்ந்து பேசும்

பக்கத்தான் கூட்டணியில் சேர்வதற்கு மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று அக்கட்சியின் 15ஆவது காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அதே வேளையில், பிஎஸ்எம் ஓர் இடதுசாரி கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் இறங்கும் என்று அதன் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செலவன் கூறினார். கேமரன் மலையில் ஜூன் 28…

’51 மில்லியன் ரிங்கிட் செலவான ஜிஎஸ்டி குழுவின் முடிவுகள் என்ன?

ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை அமலாக்குவதற்கான ஆய்வுக்காக  அமைக்கப்பட்ட 51 மில்லியன் ரிங்கிட் குழுவின் முடிவுகளை வெளியிடுமாறு  குளுவாங் எம்பி லியூ சின் தொங் அரசாங்கத்தைக் கோரியுள்ளார். "மக்கள் நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரசாங்கம் ஜிஎஸ்டி ஆய்வை மறைக்கக்  கூடாது என பக்காத்தான் ராக்யாட்டும் மலேசிய மக்களும் விரும்புகின்றனர்,"…

மலாக்கா அரசாங்கம் செவிமடுக்கத் தயார் ஆனால் சோதனை செய்ய விரும்புகிறது

மலாக்கா அரசாங்கம் ஜோங்கர் வாக் சர்ச்சை தொடர்பில் பல்வேறு தரப்புக்களின்  கருத்துக்களைச் செவிமடுக்கத் தயாராக உள்ளது. என்றாலும் அந்தப் பகுதியில்  ஏற்படும் போக்குவரத்து நெரிசலைப் போக்க ஒத்துழைக்குமாறு   சுற்றுலாவுக்கு பொறுப்பான அதன் துணை ஆட்சி மன்ற உறுப்பினர் கசாலி  முகமட் கேட்டுக் கொண்டார். "அந்தச் சாலையை மூடுவதால் போக்குவரத்து…

குகன் வழக்கு: அரசாங்கம் மேல் முறையீடு செய்யும்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த  போது மரணமடைந்த ஏ குகன் குடும்பம் சமர்பித்த சிவில் வழக்கில் வழங்கப்பட்ட  தீர்ப்பை எதிர்த்து அரசாங்கமும் போலீசும் மேல் முறையீடு செய்து கொள்ளும். அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி இன்று வெளியிட்டார். அரசாங்கமும்…

பட்டப்பகலில் கைரி ஜமாலுதின் வீட்டில் திருடர்கள் கொள்ளை

அமைச்சருடைய வீடு ஒன்றில் நேற்று திருடர்கள் கொள்ளையிட்டுள்ளதை  கோலாலம்பூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த அமைச்சரது பெயரை அவர்கள் வெளியிடவில்லை என்றாலும் அது  இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதினுடைய தாயாருக்கு  சொந்தமானது என நம்பப்படுகின்றது. புக்கிட் டமன்சாராவில் உள்ள அந்த பங்களா வீட்டில் கைரியும் அவரது மனைவியும் வசித்த…

ஜோகூர் ஆசிரியர்களின் இணையத்தள நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்

ஜோகூர் கல்வித் துறை அம்மாநில ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஆகியோரின் சமூக ஊடக நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. இத்தகவலை, நேற்று கல்விக் கருத்தரங்கு ஒன்றில் வெளியிட்ட ஜோகூர் கல்வித் துறை இயக்குனர் முகம்மட் நோர் கனி    ஆசிரியர்கள் அரசு-எதிர்ப்பு கருத்துகளை டிவிட்டர், முகநூல் போன்றவற்றில் பதிவுசெய்யக் கூடாது…

மதமாற்ற சட்டமசோதாவை நிறுத்த குருத்வார்களும் கோரிக்கை

மலேசிய குருத்வார் மன்றமும் (எம்ஜிசி),  பெற்றொரில் ஒருவரின் ஒப்புதலுடன் சிறார்களை மதமாற்றம் செய்ய வகைசெய்யும் சட்டமசோதாவை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுப்போருடன் இப்போது சேர்ந்துகொண்டிருக்கிறது. “பெற்றோரில் ஒருவர் தன் குழந்தையைத் தன்மூப்பாக மதமாற்றுவது அரசமைப்புக்கு விரோதமானது என்பதுடன் தார்மீக ரீதியாகவும் மனசாட்சியின்படியும் நீதியின்படியும் தப்பான செயலாகும்....என்பதை…

மலாக்கா டிஏபி பேராளருடைய கார் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டது

மலாக்கா ஆயர் குரோ டிஏபி மாநில சட்டமன்ற உறுப்பினர் கூ போ தியோங்-கின்  கார் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது. அந்தக் கார் மீது கல்லும்  எறியப்பட்டுள்ளது. இன்று காலை மணி 7.30 வாக்கில் தமது ஹொண்டா சிஆர்வி காரின் பின்புறத்தில்  சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்ததாக கூ…

எம்ஏசிசி தாயிப் புலனாய்வைத் தாமதப்படுத்த காரணங்களைச் சொல்கிறது

"எம்ஏசிசி எங்களுக்கு கால வரம்பைக் கூறுங்கள். தாயிப் மாஹ்முட் மீதான  புலனாய்வு இவ்வாண்டு முடியுமா ? அடுத்த ஆண்டு ? பத்து ஆண்டுகள் ?  அல்லது...?" ஆவணங்கள் எம்ஏசிசி: பெருவாரியாக இருப்பதால் தாயிப் புலனாய்வுக்குக் காலம்  பிடிக்கிறது காமிகாஸி: சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டுக்கு எதிராக உள்ள  பல…

சபா ஆர்சிஐ-யின் முக்கிய சாட்சி சாட்சியமளிப்பதற்கு முன்பு காலமானார்

சபாவில் அந்நியர்களுக்குச் சட்டவிரோதமாக குடியுரிமை வழங்கப்பட்டதாகக்  கூறப்படுவதை விசாரிக்கும் அரச ஆணையத்தின் முன்பு சாட்சியமளிப்பதற்கு  முன்னதாக முக்கியமான சாட்சியான எம்டி முத்தாலிப் என்ற அப்துல் முதாலிப்  டாவுட் காலமானார். 51 வயதான அவர் நேற்று அதிகாலை மணி 3.00க்கு காலமானார். அவருக்கு  மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.…

மெட்ரிக்குலேசன்: எது உண்மை?

  -மு.குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், ஜூன் 29, 2013. நான் கடந்த வியாழக்கிழமை மெட்ரிகுலேசன் விவகாரமாக நாடாளுமன்றதில் கேள்வி கேட்ட பொழுது, இவ்வருடம் 1,500 இடங்கள் இந்திய மாணவர்கள் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் கூறியிருந்தார் . ஆனால் துணைக் கல்வி அமைச்சரோ ஒதுக்கப்பட்ட இடங்களில்…

கர்பால்: மாநிலச் சட்டமன்ற இடங்கள் இரட்டைப் படை எண்களாக இருப்பதை…

எட்டு மாநிலங்களில் தொங்கு சட்டமன்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அவற்றில்  உள்ள மொத்த இடங்கள் இரட்டைப் படை எண்களாக இருப்பதை தேர்தல் ஆணையம்  சரி செய்ய வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். இவ்வாண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் தேர்தல் தொகுதி எல்லைகள் மறு  நிர்ணயத்தின் போது இரட்டைப்…

‘ஆவணங்கள் பெருவாரியாக இருப்பதால் தாயிப் மீதான புலனாய்வுக்கு காலம் பிடிக்கிறது’

சரவாக் முதலமைச்சர் தாயிப் மாஹ்முட்-டுக்கு எதிரான ஊழல் புகார்களை  விசாரிக்கும் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புலனாய்வாளர்கள்  பெருவாரியான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அத்துடன்  சாட்சிகளும் நாடு முழுவதும் நிறைய உள்ளனர். அதனால் தாயிப் மீதான  புலனாய்வு நீடித்துக் கொண்டே போகிறது. இவ்வாறு அதன்…

மசீச: மதம் மாற்ற மசோதா தேசிய சமரசத்துக்கு எதிரானது

குழந்தைகள் மதம் மாற்றம் சம்பந்தப்பட்ட கூட்டரசுப் பிரதேச இஸ்லாமியச் சட்டத்  திருத்தம் 'வஞ்சமாக' தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மசீச சாடியுள்ளது. அந்த மசோதா முஸ்லிம் அல்லாதாருடைய உரிமைகளை மீறுவதால்  'அதிர்ச்சியளிக்கிறது' என்றும் அதன் உதவித் தலைவர் கான் பிங் சியூ ஒர்  அறிக்கையில் கூறினார். "அந்த மசோதா அதிகம்…