ஜைட்: ராஜா பெத்ரா, அன்வாரைக் குறை கூறுவது நியாயமில்லதாது

ராஜா பெத்ரா கமாருதின், எதிர்த் தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை கடுமையாகக் குறை கூறி விட்டு வலுவான எதிர்த்தரப்புத் தேவை எனச் சொல்வது முற்றிலும் பொருத்தமற்றது என முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் கூறுகிறார். எதிர்த்தரப்பு தொடர்பாக ராஜா பெத்ரா வெளியிட்ட அறிக்கைகள் மீது அவர் கருத்துரைத்தார். அந்த…

ஆர்ப்பாட்டம் செய்த மாணவரின் கார் தாக்கப்பட்டது

வார இறுதியில் யுனிவர்சிடி பெண்டிடேகான் சுல்தான் இட்ரிஸில் (யுபிஎஸ்ஐ) போலீசாரால் தாக்கப்பட்ட மாணவரான முகம்மட் சப்வான் அனாங், தாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேளையில் தம் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதாகக் கூறினார். ஜனவரி 1 அதிகாலை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றபோது அந்த கெனாரி கார் யுபிஎஸ்ஐ கிழக்கு…

பல்கலைக்கழக மாணவர் குந்தியிருப்பு மறியல் பொது ஒழுங்கிற்கு மருட்டலாக இல்லை…

"மாணவர்கள் யாரையும் தூண்டவில்லை. இடையூறும் செய்யவில்லை. அதனால் போலீசார் அவர்களை அப்படி நடத்தியிருக்க வேண்டியதில்லை." மாணவர்: நண்பருக்கு உதவிய போது நான் அடிக்கப்பட்டேன் மூண்டைம்: ஆர்ப்பாட்டாக்காரர்களையும் ஆட்சேபிக்கின்றவர்களையும் சமாளிக்கும் போது படைபலத்தைப் பயன்படுத்துவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். மாணவர்கள் வன்முறையில் இறங்கி பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க முனைந்தால்…

ஆர்பிகே நேர்காணல்: ஹேரிஸ் இப்ராகிம் பதவி துறந்தார்

ராஜா பெட்ராவின் நேர்காணல் நேற்று ஸ்டிரேய்ட்ஸ் டைம்ஸ் (NSD) நாளிதழில் வெளிடப்பட்டதைத் தொடர்ந்து மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (MCLM) தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் (Haris Ibrahim) அவ்வியக்கத்தின் தலைவர் பதவியிலிருந்து  விலகிக்கொண்டார். ஹேரிஸ் அவரது முடிவை இன்று அவரது வலைதளத்தில் பதிவு செய்தார். அந்த நேர்காணல் அவரது "சிரமமான முடிவிற்கான"…

கோயில் நிலத்தை அபகரித்தது இந்து அறவாரியம்

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் பினாங்கு 2-ம் முதலமைச்சர் பி.ராமசாமி, புத்தாண்டு பிறந்துள்ள வேளையில் பட்டர்வர்த் இந்துகளின் சினத்துக்கு ஆளாகியுள்ளார். இன்று பட்டர்வர்த்தில், பல கோயில்களைப் பிரதிநிதித்து சுமார் 30 பக்தர்கள், ராமசாமி ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்களை இந்து அற வாரியம் தனியார் வியாபாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார் என்று கூறி…

ஹீரோவாக இருந்து ஜீரோவான ராஜா பெட்ரா

“ஆர்பிகே-க்கு வீட்டு நினைப்பு வந்துவிட்டது. நாடு திரும்பிவர விரும்புகிறார்.அதனால், கொள்கைகளை விற்றுவிட்டார்.” ஆர்பிகே: அன்வார் பிரதமர் ஆகும் தகுதியற்றவர் குழப்பமற்றவன்: ஆர்பிகே (ராஜா பெட்ரா கமருடின்) மீது மதிப்பு வைத்திருந்தேன். ஆனால், இப்போது அடியோடு இல்லை என்றாகிவிட்டது. அன்வார் இப்ராகிம் பற்றி இதுவரை கேள்விப்பட்ட விசயங்களிலிருந்து அவர் ஒரு…

அஸ்ரி: மாணவர்மீதான நடவடிக்கை “அரசுக் கொடுமையின் அடையாளம்”

மாணவர் கூட்டமொன்று தஞ்சோங் மாலிமில் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தைக் கலைக்க போலீஸ் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டது ஒரு “தேசிய துயரம்”  என்று வருணித்த பெர்லிஸ் முன்னாள் முப்தி முகம்மட் அஸ்ரி சைனல் அபிடின், அது ஒரு கொடுங்கோல் அரசாங்கத்தின் அடையாளமுமாகும் என்றார்.  “ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடித்துக்காயப்படுத்தப்பட்டது கண்டு அதிர்ச்சி…

தாக்கப்பட்ட மாணவர்: போலீஸ்காரர் பொய் சொல்லச் சொன்னார்

தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரீஸ் கல்விப் போதனை பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 17 மாணவர்களில் ஒருவரை அவருடைய காயம் கீழே விழுந்ததால் ஏற்பட்டது என்று ஓர் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பெபாஸ் என்ற அமைப்பின் தலைவர் முகம்மட் ஷாப்வான் அனாங்கை மருத்துவமலையில் ஒரு போலீஸ்…

ஆர்பிகே: அன்வார் பிரதமராக தகுதியற்றவர்

அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு தகுதியற்ற வேட்பாளர் என்று கடல்கடந்து வாழும் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமாருடின் கூறினார். ரிபோமாசி காலத்தில் இவர் அன்வாரை தற்காத்தவர். உத்துசான் மலேசியாவின் வார இறுதி பதிப்பான மிங்குவான் மலேசியாவுக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில் அன்வார் அவரது சொந்தக் கட்சி பிகேஆரையும் அவர்…

போலீசாரின் நடவடிக்கையால் மாணவர்கள் காயமடைந்தனர்

புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில், தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரீஸ் கல்வி போதனை பல்கலைக்கழகத்திற்கு (யுபிஎஸ்ஐ) வெளியில் கல்விச் சுதந்திரம் கோரி அமைதியாகக் கூடியிருந்த மாணவ ஆர்வலர்களை போலீசார் மூர்க்கத்தனமாக கலைத்த பின்னர், சுமார் 20 மாணவர்களை கைது செய்தனர். கலைந்து செல்லுமாறு தஞ்சோங் மாலிம் ஒசிபிடி…

புதிய ஆண்டில் எழுச்சி தொடரட்டும்!

பிறப்பின் ஆனந்தம் எல்லையற்றது. பிறந்துள்ள இப்புதிய ஆண்டில் கடந்த ஆண்டு கண்ட எழுச்சிகளும் சீற்றங்களும் தொடரும். காரணம், மனிதகுலம் வளர்ச்சி என்ற போர்வையில் உண்டாக்கிய ஏற்றத்தாழ்வுகளும் தேவைக்கு அதிகமான இயற்கையை பிழிந்து வருவதன்வழி உருவாகும் பருவநிலை மாற்றமும்; மானுடம் என்பது பொருளியல் உற்பத்திற்குப் பணையம் வைக்கப்பட்டு, மனிதர்களே பொருட்கள்…

பாங்க்: ஷாரிஸாட், எனது முன்னுதாரணத்தைப் பின்பற்றுங்கள்

ஊழல்களில் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் மகளீர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் மற்றும் துணை நிதி அமைச்சர் அவாங் அடெக் ஹுஸ்ஸின் ஆகிய இருவரும் தம்முடைய முன்னுதாரணத்தைப் பின்பற்றி பதவி விலகுமாறு மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்தின் (எம்எசிசி) முன்னாள் ஆலோசகர் ரோபர்ட் பாங்க் கேட்டுக்கொண்டார்.…

ஸாக்காத் நிதியில் மோசடி என்பதை மறுக்கிறார் ஜமில் கீர்

ஸாக்காத் நிதியியை தாம் தவறாகப் பயன்படுத்தியாக கூறப்படும் புகாரையும் அவரது வீடு பற்றிய பிரச்னையையும் பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் கொடுமையானது என்று கருதுகிறார். ஓர் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு ஆய்வுகள் செய்திருக்க வேண்டும். இந்த அறிக்கையைப் பொறுப்பற்ற தரப்பினர் பெரிதுபடுத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அவர் கருதுகிறார்.…

கிளந்தானில் அன்வார் துண்டறிக்கை விநியோகித்த 13பேர் கைது

நேற்று மாலை, கிளந்தானில் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கு மீதான துண்டறிக்கைகளை விநியோகம் செய்த பிகேஆர் உறுப்பினர் 13 பேர் போலீசால் கைது செய்யப்பட்டனர். அந்த அறிக்கையில் குதப்புணர்ச்சிII  வழக்குக்  காலவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அடுத்த வாரம் மாச்சாங்கில் மாற்றரசுக் கட்சித் தலைவரின் ‘செராமா’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவலும் அதில்…

இண்ட்ராப்: ஒரே வாரத்தில் நான்கு இந்து கோயில்கள் உடைக்கப்பட்டன

ஒரு வார காலத்தில் நான்கு இந்து கோயில்கள் உடைக்கப்பட்டன என்று இண்ட்ராப் இயக்கம் கூறியுள்ளது. அவை: கெடா, பத்து பெகாகாவிலுள்ள ஸ்ரீ காளியம்மன் இந்து கோயில், காப்பாரில் இரண்டு கோயில்கள் - ஓம் ஸ்ரீ காளியம்மன் கோயில் மற்றும் பெயரற்ற ஒரு கோயில், மற்றும் கோலாலம்பூரில் ஸ்ரீ முனேஸ்வரரர்…

மன்னிப்பு கேளுங்கள், இல்லையேல் மன்னரிடம் கூறுவோம், அமைச்சருக்கு எச்சரிக்கை

ஸாக்காத் நிதியில் "மோசடி செய்ததற்காக" பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரும் மற்றும் இருவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிகேஆருடன் தொடர்புடைய அரசு சார்பற்ற (என்ஜிஒ) ஜிங்கா 13 இன்று அம்மூவரையும் கேட்டுக்கொண்டுள்ளது. அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அந்த விவகாரம் அகோங்கிடம் கொண்டு செல்லப்படும் என்று அந்த…

சிஜேயிடம் புகார் செய்தாக கூறப்படுவதை கர்பால் மறுக்கிறார்

தலைமை நீதிபதியின் அலுவலகத்தில் தீர்ப்பை திருடிய நீதிபதி விவகாரம் குறித்து தாம் புகார் செய்ததாக கூறப்படுவதை மூத்த வழக்குரைஞர் கர்பால் சிங் மறுத்ததோடு அப்புகாரில் நற்கூறு ஏதும் இல்லை என்று அந்த அலுவலகம் இன்று எடுத்திருந்த முடிவு குறித்து வியப்படைவதாக கூறினார். "பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களிலிருந்து விசாரணை செய்யுமாறு நான்…

அன்வாரின் கைக்கருவி ஆகிவிடாதீர்: UiTM மாணவர்களுக்கு எச்சரிக்கை

யுனிவர்சிடி டெக்னோலோஜி மாரா (யுஐடிஎம்) துணை வேந்தர் சாஹோல் ஹமிட் அபு பக்கார், பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் “பயன்படுத்திக்கொள்ள” இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கில் ஜனவரி 9-இல் தீர்ப்பளிக்கப்படுவதன் தொடர்பில், பிகேஆர் ஏற்பாடு செய்துள்ள பேபாஸ் அன்வார்901 (அன்வார்…

சட்ட விரிவுரையாளர்: பாதிரியார் கருத்தில் தேச நிந்தனை இல்லை

அருள்திரு இயு ஹொங் செங், சனிக்கிழமை பேசியதில் தேசநிந்தனை கருத்து இருப்பதாக தெரியவில்லை. அரசமைப்பின் 153வது பகுதி தொடர்பில் சில முக்கிய விவகாரங்களை அவர் கவனப்படுத்தியுள்ளார், அவ்வளவுதான். இவ்வாறு மலேசியாகினியிடம் கூறிய பன்னாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அசீஸ் பாரி, பெர்காசா மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்கும்…

நீதிபதி “தீர்ப்பைத் திருடினார்” புகார் நிராகரிப்பு

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திருடிப் பயன்படுத்திக்கொண்டார் என்ற புகாருக்கு ஆதாரமில்லை என்று தலைமை நீதிபதி அலுவலகம் இன்று அறிவித்தது. எனவே வழக்குரைஞர் கர்பாலின் புகார் நிராகரிக்கப்படுவதாக தலைமை நீதிபதியின் தனி அதிகாரி சே வான் சைடி சே வான் இப்ராகிம் இன்று…