ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
யூஐஏ பள்ளிவாசலிலிருந்து பிகேஆர் இளைஞர் தலைவர் ‘இழுத்துச் செல்லப்பட்டார்’
ஆர்ப்பாட்டம் நிகழ்வதற்கு முன்னதாக யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலில் பிகேஆர் இளைஞர் தலைவர் ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் வெள்ளிக் கிழமை தொழுகையில் ஈடுபடுவதிலிருந்து வெளியேற்றப்பட்டார். யூஐஏ பாதுகாவலர்கள் தம்மைப் பிடித்துக் கொண்டு கறுப்பு நிற புரோட்டோன் ஷத்திரியா கார் ஒன்றில் ஏற்றி பல்கலைக்கழக வளாகத்துக்கு…
சிறீலங்கா குறித்து ஆஸ்திரேலியாவில் மாநாடு
அக்டோபர் 28-ம் நாள் வெள்ளிக்கிழமை இன்று ஆஸ்திரோலியாவின் பேர்த் நகரில் 22-வது காமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி அக்டோபர் 30-ம் நாள்வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 20-ம் நாள் வியாழக்கிழமை, நேற்று உலகத்தமிழ் பேரவை மற்றும் ஆஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்தும் சிறீலங்கா குறித்த மாநாடு ஒன்று…
மலேசியா-பர்மா கைதிகள் பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு கூடுகிறது
குடி நுழைவுக் குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பர்மியக் குடி மக்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் திட்டத்தைக் கைவிடுமாறு அரசாங்கத்தை எதிர்க்கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களும் கேட்டுக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு அவற்றில் வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட…
அசீஸ் பேரியின் இடைநீக்கத்தை எதிர்த்து யுஐஏ-இல் ஆர்ப்பாட்டம்
யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ) பள்ளிவாசலுக்கு வெளியில் அப்பல்கலைக்கழகத்தின் நன்கு பிரபலமான சட்டவிரிவுரையாளர் அப்துல் அசீஸ் பேரி பணி இடைநீக்கம் செய்ப்பட்டதை எதிர்த்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து பள்ளிவாசலிலிருந்து வெளியில் வந்த மாணவர்கள் “அறிவு வாழ்க”, “கொடுமையை எதிர்ப்போம்”, “அசீஸ் பேரியை…
அஜிஸ் பேரிக்கு ஆதரவாக வழக்குரைஞர்களும் கல்வியாளர்களும் அணி திரளுகின்றனர்
அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இடை நீக்கம் செய்துள்ள அரசியலமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அஜிஸ் பேரிக்கு ஆதரவாக சட்டத்துறையிலும் கல்வித் துறையிலும் உள்ள அவரது நண்பர்கள் ஒன்று திரளுகின்றனர். அந்த நடவடிக்கை "அப்துல் அஜிஸின் கல்விச் சுதந்தரத்துக்கும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்தரத்துக்கும் ஏற்பட்டுள்ள அப்பட்டமான அத்துமீறல்" என மலாயாப்…
“மானபங்கத்துக்கு இலக்கானவர்” வலைப்பதிவாளர்கள் கூறிக் கொள்வதை மறுக்கிறார்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் பதின்ம வயது புதல்வரால் "மானபங்கப்படுத்தப்பட்டதாக" கூறப்பட்ட இளம் பெண், அந்த விவகாரத்தில் தாம் இழுக்கப்பட்டது மீது தாம் "அதிர்ச்சியும் அச்சமும்" அடைந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். மானபங்கப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பள்ளி மாணவியை சித்தரிப்பதற்குப் பல வலைப்பதிவாளர்கள் பயன்படுத்தியுள்ள படத்தில் உள்ள 21 வயதான…
சிறிய கட்டுமான நிறுவனத்துக்கு ரிம900மில்லியன் குத்தகையா?
பிகேஆர் தலைமைச் செயலாளர், சைபுடின் நசுத்யோன், கோலாலம்பூரில் ரிம900 மில்லியன் செலவில் மகளிர், குழந்தைகள் மருத்துவமனை கட்டும் குத்தகைப் பணி ஒரு சிறிய கட்டுமான நிறுவனத்துக்கும் அதன் பங்காளி நிறுவனமான யுஇஎம் குரூப் பெர்ஹாட்டுக்கும் வழங்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சைபுடின் குறிப்பிட்டது பினாங்கைத் தளமாகக் கொண்டுள்ள நஜ்கோம்…
கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீசாரை உள்துறை அமைச்சு தற்காக்கிறது
ஷா அலாம் கிளன்மேரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சு கூறியது. இளைஞர்கள் இருந்த திசையில் போலீசார் மூன்று முறை சுட்டதை, அந்தச் சம்பவம் பற்றிய புலனாய்வுகள் காட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று வழங்கப்பட்ட…
PPSMI மீதான பிரச்னை தேர்தல் விவகாரமாகிறது
அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்பிப்பது மீதான விவகாரம் பினாங்கில் சூடு பிடித்து வருகிறது. 13வது பொதுத் தேர்தலில் வாக்குகளை திசை திருப்பக் கூடிய வலிமையை அந்த விவகாரம் பெற்றிருப்பதால் பாரிசான் நேசனலும் பக்காத்தான் ராக்யாட்டும் அது குறித்து தங்கள் நிலையை அவசியம் அறிவிக்க வேண்டியிருக்கும். அடுத்த மாதத் தொடக்கத்தில்…
கல்வியாளர்களுக்கு சோகமான நாள்
"காரணம் கோரும் கடிதமே தேவையற்றது, அந்தப் பேராசிரியரை இடைநீக்கம் செய்தது விவேகமில்லாதது. அஜிஸ் பேரி உண்மையைத் தானே சொன்னார். ஆனால் அந்த உண்மைகள் அதிகார வர்க்கத்துக்குப் பிடிக்கவில்லை." பல்கலைக்கழகம், அஜிஸ் பேரி-யை இடைநீக்கம் செய்தது பார்வையாளன்: அம்னோவின் மோசடியான வழிகளை அம்பலப்படுத்தும் யாரையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு அம்னோ…
கடாபி பிடிபட்ட பின்னர் இறந்தார்
லிபியாவின் முன்னாள் தலைவர் முவாம்மார் கடாபி இன்று நடந்த சண்டையில் ஏற்பட்ட காயத்தால் பிடிபட்ட பின்னர் இறந்து விட்டதாக லிபியாவின் இடைக்கால ஆட்சியாளர்கள் கூறினர். கடாபியின் சொந்த ஊரான சிர்தேயில் இது நடந்தது. "அவர் (கடாபி) தலையிலும் கூட சுடப்பட்டார்", என்று தேசிய மாற்ற மன்றத்தின் அதிகாரி அப்டெல் மஜிட்…
ரஹிம் நோர் பெர்காசா ஆண்டுக் கூட்டத்தை திறந்து வைக்கிறார்
பெர்காசா என்ற மலாய் உரிமைகளை வலியுறுத்தும் அமைப்பின் தொன்னூற்றொன்பது தொகுதிகளைப் பிரதிநிதிக்கும் சுமார் 1,400 பேராளர்கள் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அதன் 2 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பர் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். தேவான் செண்டரம், கொம்பிளக்ஸ் செண்டரம், கோலாலம்பூர், தாமான் செதியாவங்சாவில் அக்கூட்டத்தில் 3,000 பார்வையாளர்கள் கலந்துகொள்வர்…
தெங்கு அட்னான்: ‘ஹிம்புன்’ ஏற்பாட்டில் அம்னோ சம்பந்தப்படவில்லை
ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணி (ஹிம்புன்) என அழைக்கப்படும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் அம்னோ சம்பந்தப்படவில்லை. வரும் சனிக்கிழமை ஷா அலாம் அரங்கத்தில் அதனை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பேரணியை ஏற்பாடு செய்வதற்கு முக்கியமான மூளையாக அம்னோ இருந்ததாகக் கூறப்படும் தகவல்கள் ஆதாரமற்றவை என அம்னோ தலைமைச் செயலாளர்…
‘சரவாக் திட்டங்களில் 90 விழுக்காடு இன்னும் அமலாக்கப்படவில்லை’
கூட்டரசு அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள மேம்பாட்டுத் திட்டங்களினால் சரவாக் மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டு வருவதாக எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூறிக் கொண்டனர். அவ்வாறு வாக்குறுதி கொடுக்கப்பட்ட திட்டங்களில் 92 விழுக்காடு இன்னும் தொடங்கப்படவே இல்லை என்பதே அதற்குக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டனர். கடந்த இரண்டு…
அஜிஸ் மீதான நடவடிக்கை மோசமான தரத்துக்கான காரணத்தை விளக்குகின்றது
அரசியலமைப்புச் சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி மீது அவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்கு முறைகள், மலேசிய உயர் கல்விக் கூடங்களின் உலக அளவிலான தரம் வீழ்ச்சி காண்பதற்கான காரணங்களை விளக்குகிறது. இவ்வாறு டிஏபி கட்சியின் தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறுகிறார். அந்த ஒடுக்குமுறைகள் "…
அசீஸ் பேரி இடைநீக்கம் (விரிவான செய்தி)
நேற்று, சட்ட விரிவுரையாளர் அப்துல் அஜிஸ் பேரி-க்குக் காரணம் கோரி கடிதம் அனுப்பிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம்(யுஐயு) இன்று அவரை இடைநீக்கம் செய்தது. பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை வழங்கிய அறிவிக்கையில் இந்த இடைநீக்க உத்தரவு அடங்கியிருப்பதாக மலேசியாகினி அறிய வருகிறது. முழுச் சம்பளத்துடன் அவர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடைநீக்கம்…
பினாங்கு வெற்றிக்காக லிம்-மிற்கு புளும்பெர்க் புகழாரம் சூட்டுகிறது
பினாங்கு மாநிலம் பின்பற்றுகின்ற வெளிப்படையான வர்த்தக சூழ்நிலைக்கும் நாட்டை ஆளும் பாரிசான் நேசனல் பின்பற்றுகின்ற மலாய்க்காரர்களுக்கு ஆதரவான கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை குறிப்பிட்டுள்ள புளும்பெர்க் நிதிச் செய்தி நிறுவனம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு புகழ் மாலை சூட்டியுள்ளது. அந்தக் கொள்கைகள் போட்டி ஆற்றலைக் குறைப்பதாக உலகப்…
அரசியலுக்குள் பிள்ளைகளை இழுக்க வேண்டாம் என்கிறார் ஷாரிஸாட்
எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி பிஎன் அரசாங்கமாக இருந்தாலும் சரி பிள்ளைகளை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். "நாம் பிள்ளைகளை அரசியல் அரங்கிற்குள் கொண்டு வரக் கூடாது என்பது என் கொள்கையாகும். எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி எவருக்கு அது…
பேச்சு நடத்தலாமே:ஹிம்புனுக்கு கிறிஸ்துவ தலைவர்கள் வலியுறுத்தல்
ஹிம்புன் தலைவர்கள் மதமாற்ற-எதிர்ப்புப் பேரணிவழி உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்குப் பதில் பேச்சுகளில் ஈடுபடலாம் என்கிறார் மலேசிய தேவாலயங்கள் மன்றத் தலைவர் பேராயர் தாமஸ் ட்சென். Read More
பேரணியில் சேர்ந்துகொள்க-முஸ்லிம் தலைவர்களுக்கு அறைகூவல்
அரசுசார்பற்ற அமைப்புகளின் கூட்டணியான ஹிம்புன், சனிக்கிழமை நடைபெறும் மதமாற்று-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு முஸ்லிம் அமைப்புகளையும் தனிப்பட்டவர்களையும் குறிப்பாக அரசியல் கட்சிகளின் முஸ்லிம் தலைவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறது. பன்மைத்துவம் மிக்க மலேசிய சமுதாயத்தில் தங்கள் சமயத்தைக் கட்டிக்காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக எல்லாக் கட்சிகளின் முஸ்லிம் தலைவர்களும் அப்பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்று…
அசீஸ் பேரி இடைநீக்கம்
நேற்று, சட்ட விரிவுரையாளர் அப்துல் அஜிஸ் பேரி-க்குக் காரணம் கோரி கடிதம் அனுப்பிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம்(ஐஐயு இன்று அவரை இடைநீக்கம் செய்தது. பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை வழங்கிய அறிவிப்பில் இந்த இடைநீக்க உத்தரவு அடங்கியிருப்பதாக மலேசியாகினி அறிய வருகிறது. முழுச் சம்பளத்துடன் அவர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடைநீக்கம்…
பெர்க்காசா தலைவர் பேரணியில் பேச்சாளர் இல்லை என்றாலும் அங்கு இருப்பார்
ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணி என அழைக்கப்படும் மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பங்கு கொள்கின்றவர்களுடைய உணர்வுகளை ஏற்பாட்டாளர்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். "நமது சமயத்தையும் இஸ்லாத்தின் புனிதத் தன்மையையும் தற்காக்கும் போராடும் போது அதனை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்.…


