அடுக்குமாடி மாடும்! கோவணம் வாங்க பணமும்!

[கா. ஆறுமுகம் ] முனுசாமியும், முனியம்மாவும் மலேசியாவில் பிறந்திருந்தும் இன்னும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. இவரோடு சண்முகம், குப்பன், சுப்பன், பெருமாள், அஞ்சலை, மாலதி, பவாணி என்று இன்னொரு 42,000 மலேசிய இந்தியர்களுக்கும் இதே கதிதான். அதேவேளை அண்மையில் குடியேறிய ஆயிரக்கணக்கான அயல் நாட்டவர்களுக்கு மலேசிய அரசாங்கம் குடியுரிமைகளை வழங்கியுள்ளது.…

“புரஜெக்ட் ஐசி” விசாணைக்கு அரசு ஆணையம் வேண்டும், டோம்போக்

சாபாவில் சட்ட விரோத குடியேறிகள் மற்றும் கள்ள குடியுரிமை ஆவணம் குறித்து ஓர் அரச விசாரணை ஆணயம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆணைய விசாரணை தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்று அப்கோவின் தலைவர் பெர்னட் டோம்போக் ஆலோசனை கூறினார். தோட்டத் தொழில் மற்றும்…

கடற்படை வழங்கிய “முகவர் கட்டணம்” பற்றி விளக்க ஜாஹிட் தயார்

தற்காப்பு அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, கடற்படை வாங்கிய ஆறு காவல் படகுகள் பற்றி விளக்கம் தேவையென்றால் கித்தா கட்சி தலைவர் சைட் இப்ராகிம் தம்மை வந்து பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். “மேல்விவரங்கள் பெற என்னைச் சந்திக்குமாறு சைட்டை அழைக்கிறேன்”, என்றாரவர். அப்படிப்பட்ட வினாக்களுக்கு விளக்கம் அளிக்க…

பிப்ரவரியிலிருந்து அழியா மையைப் பயன்படுத்த EC முடிவு

பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்யும் பணி பிப்ரவரி முதல் தேதிக்குள் முடிந்துவிடும் என்று தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (PSC) இன்று அறிவித்தது. பிஎஸ்சி, இந்த அறிவிப்பைச் செய்வதற்குமுன் அழியா மை எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதைத் தேர்தல் ஆணைய…

முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா காலமானார்

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா,78, செர்டாங்  மருத்துவமனையில் இன்று காலை மணி 6.05க்குக் காலமானார். எதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால்,  நீண்ட நாள்களாகவே அவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது. அரிபின் காலமானதை மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ…

கர்பால்: ராமசாமி விவகாரம் மீது டிஏபி-யே முடிவெடுக்கட்டும்

டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி.ராமசாமியுடன் பொதுவில் வாய்ச்சண்டையில் ஈடுபட்ட கட்சி தேசியத் தலைவர் கர்பால் சிங், அந்நெருக்கடிக்குக் கட்சிக்குள் தீர்வு காண்பதையே விரும்புவதாகக் கூறுகிறார். “கட்சிக்குள்ளேயே இதற்குத் தீர்வு காண்போம்”, என்ற அவர், உயர்ந்த பதவியில் இருந்தாலும் கட்சியின் உத்தரவை மீறிப் பேசினால் கடும் நடவடிக்கையிலிருந்து தப்ப…

தேர்தலில் கழுதை ஜெயிக்குமா?

வேலு: கோமாளி, கழுதை தேர்தலில் நின்றால் ஜெயிக்குமா? நீங்கள் நின்றால் என்ன செய்வீர்கள்?  கோமாளி: ஒன்பதாவது பொதுத் தேர்தலின்போது (1995) உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்ற பழனிவேலுவின் தேர்தல் விபச்சார உரையை கேட்க நேர்ந்தது. "கழுதை கழுத்தில் பாரிசான் சின்னத்தை கட்டினால் போதும், கழுதை கூட ஜெயிக்கும்" என்றார்.…

பினாங்கு மசீச இளைஞர் தலைவரும் 439பேரும் கட்சி விலகினர்

நேற்றிரவு பினாங்கு மசீச இளைஞர் தலைவர் எங் ஹியாப் பூன், கட்சியிலிருந்து விலகுவதாக  திடீர் அறிவிப்பைச் செய்தார். தம்முடன் 439 உறுப்பினர்களும் கட்சி விலகியிருக்கிறார்கள் என்று எங்(வலம்) தெரிவித்தார்.இதன் விளைவாக இரண்டு மசீச கிளைகள் மூடப்பட்டன.  “என் சகாக்களும் நானும் கட்சித் தலைவர்களின் ஒழுக்கக்கேடுகளையும் நெறிமுறையற்ற செயல்பாடுகளைக் கண்டும்…

செய்திநாயகர் 2011…யார்?

கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஆண்டை முடிவுற்கு கொண்டு வரும் டிசம்பர் மாதத்தில் தவறாமல் ஒரு செய்திநாயகரை மலேசியாகினி தெரிவுசெய்துள்ளது. "செயல்பாடுகள் வழி தலைப்புச் செய்திகளை உருவாக்குகின்றவர், பொது விவாதங்களின் போக்கில் விளைவுகளை ஏற்படுத்துகின்றவர் மற்றும் மலேசிய அரசியலில், நல்லதற்கோ தீயதற்கோ, தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர்", செயல்நாயகர் என்று வர்ணிக்கப்படுகிறார்.…

நீதிபதி பதவிவிலக வேண்டும், கர்பால் மீண்டும் வலியுறுத்து

கருத்துத்திருடு குற்றம் சாட்டப்பட்டு அதற்கு எவ்வித மறுமொழியும் கூறாதிருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் மாலிக் இஷாக் பதவி விலக வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் கர்பால் இன்று மறுபடியும் வலியுறுத்தினார். நீதிபதி அப்துல் மாலிக் “ ஒழுக்கக்கேடான செயல்” புரிந்திருப்பதாகவும் எனவே பொதுநலன் கருதி அவர்  பதவி…

தீர்ப்புக்கு முன்னதாக அன்வார் புயல்வேகச் சுற்றுலா

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,  ஜனவரி 9-இல், குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்குமுன் நாட்டுக்குள் புயல்வேகச் சுற்றுலா ஒன்றை மேள்கொள்வார். ஜனவரி 3-இலிருந்து 8வரை ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பாகாங், திரெங்கானு, கிளந்தான், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் 18 இடங்களில் அவர் பேசுவார்.  தீர்ப்பில் குற்றவாளி…

இங்கா தொடர்புடைய தையல்காரரிடம் போகுமறு என்னிடம் கூறப்பட்டது, சட்டமன்ற உறுப்பினர்

டிஎபி மாநில செயலாளர் இங்கா கோர் மிங் தொடர்புடைய தையல் நிறுவனத்துடன் வணிகத்தில் ஈடுபடுமாறு ஈப்போ மாநகர் மன்றம் மட்டும் கூறப்படவில்லை என்று ஒரு முன்னாள் டிஎபி சட்டமன்ற உறுப்பினர் கூறிக்கொண்டார். தங்களுடைய சம்பிரதாய உடைகளை ஈதன் & எல்டன் தையல் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைத்து…

குட்டையைக் குழப்பாதிருக்க மெளனம் காக்கிறார் அருள்திரு இயு

கிறிஸ்துவ சமயத் தலைவரான அருள்திரு இயு ஹொங் செங், கிறிஸ்மஸ் நிகழ்வு ஒன்றில் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால் எழுந்துள்ள களேபரம் தொடர்பில் கருத்துரைக்க மறுக்கிறார். இன்று காலை மலேசியாகினியுடன் பேசிய நேசனல் இவேன்செலிகல் கிறிஸ்டியன் ஃபெல்லாசிப் (என்இசிஎப்)பின் தலைவர், அது பற்றிய சர்ச்சையில் குதித்து “குட்டையை மேலும் குழப்ப”…

எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ஊழல் ஊழல்தான்

“முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் கீர் தோயோ சொல்கிறார், ‘நான் ஒன்றும் கையூட்டு பெறவில்லையே.குறைந்த விலைக்கு நிலம் வாங்கினேன்,அவ்வளவுதான்’. என்ன வேடிக்கை, பார்த்தீர்களா.”   ஊழல் குற்றச்சாட்டுக் கையூட்டு பெற்றதற்காக அல்ல-கீர் விளக்கம் வீரா: சிலாங்கூர் முன்னாள் எம்பி முகம்மட் கீர் தொயோ அவர்களே,   குற்றவியல் சட்டம் பகுதி 165-இன்கீழ்தான்…

பெர்காசா: தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் ரெவ.இயு விசாரிக்கப்பட வேண்டும்

கடந்த சனிக்கிழமை ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அரசமைப்புச் சட்டம் 153 குறித்து கேள்வி எழுப்பிய ஒரு கிறிஸ்துவ சமய குரு மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலாய் உரிமைகளுக்காகப் போராடும் பெர்காசா கேடுக்கொண்டுள்ளது. ரெவரெண்ட் இயு ஹோங் செங் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகள்…

இண்டர்லோக் மீட்டுக்கொள்ளப்பட்டதா? இந்திய NGO-களுக்கு நம்பிக்கை இல்லை

ஐந்தாம் படிவ இலக்கிய நூலான இண்டர்லோக் மீதான பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதாகக்  கூறப்படுவதில் இந்திய NGO-கள் கூட்டமைப்பின் பேராளர்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. இவ்வாண்டு தொடக்கத்தில் ஒரு பாட நூலாக அறிமுகமான அந்நாவல் குறித்து பல்வேறு தரப்பினரும், குறிப்பாக இந்திய சமூகத்தினர் ஓராண்டு காலமாகக் குறை கூறி வந்ததை…

பிகேஆர்: குதப்புணர்ச்சி தீர்ப்புநாளில் குழப்பம் விளைக்க எண்ணவில்லை

குதப்புணர்ச்சி II வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நாளான ஜனவரி 9-இல், பேரணி நடத்தவும் “குழப்பம்” விளைவிக்கவும் மக்களைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படுவதை பிகேஆர்  மறுக்கிறது. பிகேஆர் உறுப்பினர்களைப் பேரணி நடத்துமாறு தாம் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறும் குறுஞ்செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். “அதை…

நாளேடு ராமசாமியின் குற்றச்சாட்டை மறுக்கிறது

ஆங்கில நாளேடான த ஸ்டார், பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர் பி.ராமசாமி தம் கூற்று திரித்துக் கூறப்பட்டிருப்பதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்து தம் செய்தியாளர் சொல்வதே உண்மை என்றும் சாதிக்கிறது. “பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர் பி.ராமசாமியுடனான நேர்காணலை அடிப்படையாக வைத்து எங்கள் செய்தியாளர் இயன் மெக்இண்டயர் எழுதிய…

ஷாரிசாட்டிடமிருந்து பதவிவிலகல் கடிதம் இல்லை:முகைதின்

சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், பதவி விலகுவதாகக் கடிதம் கொடுக்கவில்லை என்று முன்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்னர் கூறியதையே துணைப் பிரதமர் முகைதின் யாசினும் இன்று எடுத்தொலித்தார். யுஐடிஎம் பூஞ்சாக் ஆலமில் செய்தியாளர்கள் வினவியதற்கு, “தா’ அடா (அப்படி ஒன்றும் இல்லை)”,…

ராமசாமி, எம்எஸ்எம்-இடம் பேசக்கூடாது என்ற முதலாவது விதியை மறந்து விட்டார்

“அரசுதொடர்புடைய எம்எஸ்எம், மாற்றரசுக் கட்சியைத் தாக்கும் வாய்ப்பு எப்போ எப்போ என்று காத்திருக்கின்றது. இது தெரிந்தும் டிஏபி தலைவர்கள் எம்எஸ்எம் வழியாகத்தான் தங்கள் மனக்குறைகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறார்கள்.” "திரித்துக் கூறிவிட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும்" பெயரிலி_4031: செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டுவது நல்லதல்ல என்பது பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர்…

கடல்பெருக்கால் திரெங்கானு கடற்கரை பாழானது

திரெங்கானுவில், கடல்பெருக்கும் ராட்சத அலைகளும்  பல கடற்கரைகளை அரித்துப் பாழாக்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவு மோசமான கடல் சீற்றம் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம்வரை நீடிக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ள கடலின் சீற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்று டுங்குன்.டுங்குனில் தெலுக் லிபாட் கடற்கரையைப்…

முகைதின்: பாரிசான் வளர்த்த ஒற்றுமையை அழித்து விடாதீர்

பாரிசான் மிகச் சிரமப்பட்டு உருவாக்கிய நாட்டின் ஒற்றுமையை கீழறப்புச் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கடும் எச்சரிக்கை விடுத்தார். "நாம் என்றுமே உதாசீனப்படுத்தாத அடிப்படை முயற்சிகளில் ஒன்று வலுவான ஒற்றுமைக்கான  சூழ்நிலையை உருவாக்கியதாகும். "கடந்த 54 ஆண்டுகளாக நாம் உருவாக்கிய இதற்கான அடித்தளம்…

திரித்துக்கூறி விட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும்

துணை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறியிருப்பது குறித்து கொஞ்சமும் கலக்கம் உறாத பி.ராமசாமி,  செய்தித்தாள் ஒன்று தாம் சொன்னத்தைத் திரித்துக் கூறியதுதான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம் என்று பழியைச் செய்தித்தாள்மீது போட்டிருக்கிறார். டிசம்பர் 23-இல் த ஸ்டார் செய்தித்தாளில்…