அதிபர் சுசிலோ புகை மூட்டத்துக்காக அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார்.

சுமத்ரா தீவில் மூண்ட காட்டுத் தீயினால் எழுந்த புகை மூட்டத்தினால்  பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் இந்தோனிசிய அதிபர் சுசிலோ பம்பாங்  யூதயோனோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று மாலை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய  அவர், சிங்கப்பூரிடமும் மலேசியாவிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதே வேளையில் அவ்விரு…

நாட்டை அழிக்க வேண்டாம் என அகோங் எம்பி-க்களிடம் சொல்கிறார்

"நாட்டை அழிக்கக் கூடிய எதனையும் செய்ய வேண்டாம்" என யாங் டி  பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா, எம்பி-க்களுக்கு  நினைவுபடுத்தியுள்ளார். 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு அனைவரையும்  கேட்டுக் கொண்ட அவர், எம்பி-க்கள் நாட்டுக்கு பிளவுபடாத விசுவாசத்தை காட்ட  வேண்டும் என்றும்…

அன்வார்: அரச உரை ஆணையல்ல, விவாதத்திற்கு உரியது

நாடாளுமன்றத்தில் யாங் டி பெர்துவான் அகோங் ஆற்றிய உரை மக்களவைக்கு  கொடுக்கப்படும் 'உத்தரவு அல்ல' என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிம்  கூறுகிறார். நாட்டுத் தலைவர் ஒருவர் என்ற முறையில் நிர்வாகியின் கருத்துக்கள் வாதங்கள்  ஆகியவற்றை கொண்டது அந்த அரச உரையாகும் என அவர் சொன்னார்.  அதனால் அதனை…

கார்களுக்கான கலால் வரியைக் குறைக்க அரசாங்கம் எண்ணவில்லை

கார் விலைகளை குறைக்கும் பொருட்டு கலால் வரியை குறைக்க அரசாங்கம்  எண்ணவில்லை. இவ்வாறு அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட்  கூறுகிறார். "வாகனங்களுக்கான கலால் வரியைக் குறைக்க அரசாங்கம் திட்டமிடவில்லை.  ஏனெனில் அது நாட்டுக்கு முக்கியமான வருமான ஆதாரமாகும்," என்றார் அவர். நாட்டின் வரவு செலவுப் பற்றாக்குறையை…

சிலாங்கூர் பிஎன் -னுக்கு நோ தலைவராகலாம்

மே 5 பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் மோசமான அடைவு நிலையைப்  பெற்றதைத் தொடர்ந்து அந்த மாநில அம்னோ தலைவராக தஞ்சோங் காராங்  எம்பி நோ ஒமார் நியமிக்கப்படுவார் என  எதிர்பார்க்கப்படுகின்றது. அவருடைய நியமனத்தை அந்த மாநிலத்திலுள்ள பெரும்பாலான அம்னோ  தொகுத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக பெரித்தா ஹரியான் செய்தி…

இனி தேர்தல் முடிவு சரிதானா என்ற பேச்சுக்கே இடமில்லை:அமைச்சர்

மாற்றரசுக் கட்சி எம்பிகள் அனவரும் பதவிஉறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இனி அவர்கள், தேர்தல் முடிவுகள் சரியா, அரசாங்கம் சட்டப்பூர்வமானதா என்றெல்லாம்  கேள்வி எழுப்பக் கூடாது என்கிறார் பிஎன் அமைச்சர் ஒருவர். நேற்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் 89 பேரும் நாடாளுமன்றத்தில் எம்பிகளாக பதவி ஏற்றபோதே ‘505 கறுப்புதின’ இயக்கம் முடிவுக்கு…

ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடக்கூடாது: சுற்றுலா அமைச்சர்

சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூட வேண்டாம் என்று மலாக்கா முதலமைச்சர் (சிஎம்) இட்ரிஸ் ஹருனைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில், செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி.  அந்த இரவுச் சந்தை மலாக்கா சுற்றுலா துறையின் இன்றியமையா பகுதியாக விளங்குகிறது என்பதால்…

டிஏபி எம்பி: முக்ரிஸை உதவித் தலைவராக்கப் பார்க்கிறார் மகாதிர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தம் புதல்வர் முக்ரிஸ் மகாதிரை அம்னோவின் உதவித் தலைவர்களில் ஒருவராக்க வேலை செய்து வருகிறார் என்று டிஏபி-இன் குளுவாங் எம்பி லியு சின் தொங் கூறினார். அதற்காக நடப்பு உதவித் தலைவர்களில் ஒருவராக உள்ள அஹமட் ஜஹிட் ஹமிடியை அப்பதவியிலுருந்து அகற்றுவதுதான்…

அல்டான்துயா கொலையில் நஜிப்புக்குத் தொடர்பில்லை

அல்டான்துயா கொலை வழக்கை நடத்தும் அரசுதரப்பு அந்த மங்கோலிய பெண்ணின் கொலையுடன் அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்பைத் தொடர்புப்படுத்த எந்தக் காரணமுமில்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியது. வழக்கின் முதல் குற்றவாளி தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி “தம்முடைய செயலுக்குத் தாமே பொறுப்பு”என்று ஒப்புக்கொண்டிருப்பதை துணை சொலிடிடர்-ஜெனரல்…

புகை மூட்டம் போர்ட் கிளாங்கில் அபாயகரமான அளவில் சிலாங்கூரில் ‘மிகவும்…

போர்ட் கிளாங்கில் இன்று காலை காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு  அபாயகரமான அளவை எட்டியது. அங்கு அந்தக் குறியீடு 487 ஆகப்  பதிவானது. அதே வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 'மிகவும் ஆரோக்கியமற்ற  நிலை' பதிவாகியுள்ளது. சுற்றுசூழல் துறை இன்று காலை 7.00 மணிக்கு வெளியிட்ட விவரம்: பந்திங் (292),…

ஜகார்த்தா, நெருப்பு இல்லாமல் புகையாது

"அந்த மலேசிய நிறுவனங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள்,  அபராதம் விதியுங்கள். அவற்றை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புங்கள். அந்த  நிறுவனங்கள் எங்கிருந்து வந்தன, யாருக்குச் சொந்தம் என்பது பற்றி எங்களுக்குக்  கவலை இல்லை." ஜகார்த்தா: மலேசியாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலத்தில்  நெருப்பு அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்தை மீறுகின்றவர்கள்…

‘ஜோங்கர் சாலை இரவுச்சந்தை மூடப்பட்டதற்கு அரசியல்தான் காரணம்’

மலாக்கா மாநகரில் ஜோங்கர் சாலையில் நடைபெற்று வந்த வாரஇறுதி இரவுச் சந்தை மூடப்பட்டது பொதுத் தேர்தலில் “மாற்றரசுக் கட்சியை ஆதரித்த சீன வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் பதிலடி” என வருணிக்கப்பட்டுள்ளது. “ இந்நடவடிக்கை மக்களை மேலும் அந்நியப்படுத்தும்”, என டிஏபி-இன் கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் சின் சூங் சியோங்…

சுமத்ரா காட்டுத் தீ தொடர்பில் இருவர் கைது

சுமத்ராவில் நிலத்தை துப்புரவு செய்யும் பொருட்டு சட்டவிரோதமாக தீயை  மூட்டியதற்காக இரண்டு குடியானவர்களை இந்தோனிசியப் போலீசார் கைது  செய்துள்ளனர். கடந்த பல நாட்களாக அண்டை நாடுகளான சிங்கப்பூரையும் மலேசியாவையும்  புகை மூட்டம் சூழ்ந்துள்ள வேளையில் கைது செய்யப்பட்டுள்ள முதல் நபர்கள்  அவர்கள் ஆவர். காற்றுத் தூய்மைக் கேட்டுக்கு பொறுப்பானவை…

போலீஸ்காரர்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதினார்கள்

நாடாளுமன்றத்தைக் காத்துநின்ற போலீஸ்காரர்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள்  மோதினார்கள் என்றும் அதில் பல போலீஸ்காரர்கள் காயமடைந்தனர் என்றும் முகநூலில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கோலாலும்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சாலே கூறினார். போலீஸ்காரர்களைத் தாக்குவதற்குமுன் அவர்கள் போத்தல்கள், முட்டைகள், சாயம் முதலியவற்றை வீசி எறிந்து போலீசாருக்கு சின மூட்டினர். “ஆனாலும், மேலும்…

போர்ட் கிளாங்கில் புகை மூட்டம் மிகவும் அபாயகரமான அளவை எட்டியது

போர்ட் கிளாங்கில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாய அளவை  எட்டியுள்ளதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா  கூறினார். "போர் ட் கிளாங்கில் உள்ள உணர்வுக் கருவிகளில் (Sensors) பிற்பகல் மூன்று மணி  அளவில் அந்தக் குறியீடு 314ஐ தாண்டியது. மற்ற கண்காணிப்பு நிலையங்களில்…

வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கவும்

புகை மூட்ட நெருக்கடியால் மூவாரிலும் மலாக்காவிலும் ஊரடங்கை விதிக்கும்  போது தொழிலாளர்களையும் அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சேர்த்துக்  கொள்ள   வேண்டும் என தேசிய வங்கி ஊழியர் சங்கம் கூறுகிறது. காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 'மிகவும் அபாயகரமான' அளவை எட்டிய  பகுதிகளில் பள்ளிக் கூடங்களை…

குவாந்தானில் பள்ளிகள் நாளை திறக்கப்படும்

குவாந்தானில் புகை மூட்டம் காரணமாக இன்று மூடப்பட்ட 120  பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்படும் என பாகாங் கல்வித் துறை இயக்குநர்  ரோஸ்டி இஸ்மாயில் கூறினார். என்றாலும் வகுப்பறைகளுக்கு வெளியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  அந்தப் பள்ளிக்கூடங்கள் அனுமதிக்கப்பட மாட்டா என அவர் சொன்னார். "எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் நாளை பள்ளிக்கூடங்களுக்குத்…

காட்டுத் தீயை அணைக்க இந்தோனிசியாவுக்கு 2 மில்லியன் டாலர் தேவை

இந்தோனிசியா ரியாவ் மாநிலத்தில் மூண்டுள்ள காட்டுத் தீயை அணைக்க  அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 20 பில்லியன்  ரூப்பியாவையை செல்வு செய்ய வேண்டியிருக்கும் என அந்த நாட்டின் தொழில்  நுட்ப மதிப்பீடு பயன்பாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அந்த காட்டுத் தீயிலிருந்து எழுந்த புகை, ரியாவ் மாநிலத்தையும்…

பதவி விலக முடியாது : இசி மீண்டும் வலியுறுத்து

ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி என்னதான் வாய்கிழிய கோரிக்கை விடுத்தாலும் தேர்தல் மன்ற (இசி) உயர் அதிகாரிகள் பதவிவிலகும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அவ்வாணையத்தின் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார். தங்களைப் பதவிவிலகக் கோருவது பொறுப்பற்றதாகும் என்பதுடன் அது அரசமைப்புக்கு விரோதமான செயலுமாகும் என்றாரவர். “இசி சட்டப்படி தவறு…

கல்வியில் தகுதிமுறை என்பது சீனர்களுக்குதான் நன்மையாக உள்ளது

மலாய் ஆலோசனை மன்றத் தலைவர் இப்ராகிம் அபு ஷா, கல்வியில் தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய நடைமுறை அகற்றப்பட வேண்டும் என்று கூறியிருப்பதை மலாய்க் கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர். “தகுதிமுறையால் கல்வியில் சீனர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். அது மலாய் மாணவர்களுக்கு நன்மை செய்யவில்லை. உயர்கல்வி நிலையங்களில் மலாய் மாணவர்களின்…

புகைமூட்டம் மோசமானால் வெளிவேலைகளை நிறுத்த வேண்டும்

புகைமூட்டம்  வருந்தத்தக்க அளவுக்கு  மோசமடையுமானால் வெளிவேலைகளைக் குறைப்பது அல்லது ஒட்டுமொத்தமாக நிறுத்துவது நல்லது என பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை (டோஷ்) தலைமை இயக்குனர் டாக்டர் ஜொஹாரி பஸ்ரி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். “வெளி இடங்களிலும் கட்டுமானப் பகுதிகளிலும் வேலை செய்வோரின் நலங்காக்க முதலாளிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். “பாரம்…

தவறு செய்துள்ள மலேசிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என…

இந்தோனிசியா,  மலேசிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் புகை மூட்ட  நிலவரத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சுகாதார அமைச்சர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். "புகை மூட்டத்துக்கு மலேசிய நிறுவனங்கள் காரணமாக இருந்தாலும் கூட  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நான் இந்தோனிசிய அதிகாரிகளைக்  கேட்டுக் கொள்கிறேன்," என…

ஜாலான் பார்லிமெண்டில் போராளிகள் போராட்டம், 26 பேர் கைது செய்யப்பட்டனர்

கோலாலம்பூர் பாடாங் மெர்போக் திடலில் தங்கள் முகாம்களிலிருந்து  அகற்றப்பட்ட 50க்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் போராட்டத்தை ஜாலான்  பார்லிமெண்டுக்கு  இன்று தொடர்ந்தனர். அவர்களில் மாணவர் போராளி அடாம் அட்லி அப்துல் ஹலிமும் ஒருவர்  ஆவார். நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கிச் செல்லும் முக்கியச் சாலையில்  காலை பத்து மணி தொடக்கம்…