டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கியால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 61.3 சதவீதம் குறைந்து 43 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 118,291 உடன்…
சிலாங்கூர் எம்பி கபடதாரிகளின் அப்பன், நோ கூறுகிறார்
சர்ச்சைக்குரிய கின்ராரா-டமன்சாரா விரைவுசாலை திட்டம் தொடர அனுமதி கொடுத்துள்ள சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி “கபடதாரிகளுக்கெல்லாம் அப்பன்” என்று மாநில அம்னோ வருணித்துள்ளது. அஸ்மின் மக்களுக்குச் சேவையாற்றப்போவதாகக் கொடுத்த வாக்குறுதியை மறந்து சுய ரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளார் என சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமார் கூறினார்.…
நகர்புற ஏழைகள் பகுதி-நேர வேலை செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்
நகர்புற ஏழைகள், நகரங்களில் வேலை செய்து ரிம3,000 அல்லது குறைவாக வருமானம் பெறுவோர், வியாபாரம், பகுதி-நேர வேலை போன்றவை செய்து குடும்ப வருமானத்தைப் பெருக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது நகர்புறங்களில் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினத்தை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என மலேசிய முஸ்லிம் …
பாக்’ லா: பைபிளை எரிக்காதீர்
முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி, பைபிளை எரிக்கும் வேலையெல்லாம் கூடாது என்பதை வலியுறுத்தினார். பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி இஸ்லாத்தின் புனிதத்தைக் காக்கத்தான் பைபிளை எரிக்க வேண்டும் என்றார் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுப்பதில்லை என அரசாங்கம் முடிவு செய்திருப்பது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு …
எண்ணெய் விலை மேலும் குறைந்தால் உதவித் தொகைக்கு அவசியமிருக்காது
எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு யுஎஸ்$73 என்ற நிலைக்குக் குறைந்தால் அதன் பின்னரும் அரசாங்கம், நிதிச் சுமைக்கு உதவித் தொகைகள்தான் காரணம் எனச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எண்ணெய் விலை அந்த நிலைக்குக் குறைந்தால் அரசாங்கம் உதவித் தொகை என்ற பெயரில் எதுவும் வழங்க வேண்டிய அவசியமிருக்காது என …
மக்கள் எழுச்சி என்று மிரட்டுவது தேச நிந்தனைக் குற்றமாகும்
குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் தெரு ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என பிகேஆர் கூறியிருப்பது பொது ஒழுங்குக்கு விடுக்கப்பட்ட மருட்டல் என மக்கள் முற்போக்குக் கட்சி (பிபிபி) கருதுகிறது. பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா அவ்வாறு கூறியது “ஒரு மிரட்டல்” என்பதுடன் அரசாங்கத்துக்கு எதிராக …
பிஎஸ்எம் பக்கத்தானில் சேராது
பல ஆண்டுகள் காத்திருப்புக்கும் பல கருத்து வேறுபாடுகளுக்கும் பின்னர், பக்கத்தான் ரக்யாட்டில் சேரும் எண்ணத்தை பிஎஸ்எம் கைவிட்டது. ஆனாலும், ஆளும் பாரிசான் நேசனல் அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியில் பக்கத்தானுடன் சேர்ந்து பணியாற்ற அது விருப்பம் கொண்டிருக்கிறது. “14வது பொதுத் தேர்தலில் ;பிஎன்னைக் கவிழ்க்க பக்கத்தானுடன் தேர்தல்கூட்டு வைத்துக்கொள்ள பிஎஸ்எம் …
அரசாங்கம் என்எப்சி குத்தகையை இரத்துச் செய்யும்
அரசாங்கம், நேசனல் பீட்லோட் கார்ப்பரேசனு(என்எப்சி)க்குக் கொடுக்கப்பட்ட குத்தகையை இரத்துச் செய்து கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதற்காக அந்நிறுவனத்தின்மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கும். நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்து வடிவிலான பதிலில். என்எப்சி அரசாங்கம் அதற்குக் கொடுத்த ரிம250 மில்லியன் கடனுக்கு 2014-இல் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைச் …
போலீஸ்: பிபிஎஸ் உறுப்பினர்கள் சீருடைகளை ஒப்படைக்க வேண்டும்
சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டுள்ள தன்னார்வக் காவல் படை(பிபிஎஸ்)யின் உறுப்பினர்கள் அவர்களின் சீருடைகளையும் மற்ற பொருள்களையும் சங்கப் பதிவதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. உள்துறை அமைச்சு சங்கங்கள் சட்டத்தின் பகுதி 5-இன்கீழ் பிபிஎஸ் சட்டவிரோதமானது என அறிவித்திருப்பதால் “அதை மதித்து நடப்பது நல்லது” என மாநில போலீஸ் தலைவர் …
அரசியல்வாதிகளின் பேச்சுகளை அரசாங்கம் ஒற்றுக்கேட்பதில்லை
பொதுமக்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொலைபேசி பேச்சுகளை அரசாங்கம் ஒற்றுக்கேட்பதில்லை எனப் பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜுலியன் டான் கொக் பிங்(டிஏபி-ஸ்டேம்பின்)-கின் கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக இவ்வாறு பதில் அளித்தார்.
ஓ, முருகா!
கனிமநீர் போத்தலில் ஒட்டப்பட்டிருக்கும் ஹலால் சின்னத்திற்கு அடுத்து ஒட்டப்பட்டுள்ள ஓர் இந்து தெய்வத்தின் படம் "வழிபாட்டு கூறுகளை" கொண்டிருக்கலாம் என்று மலேசிய பயனீட்டாளர்கள் சங்கம் (பிபிஐஎம்) கூறுகிறது. அம்மாதிரியான போத்தல்களை தயாரிப்பதற்கு அவற்றை தயாரித்த சுவான் சின் செண்ட். பெர்ஹாட்டிற்கு "தீய நோக்கம்" இருக்கலாம் என்று பிபிஐஎம்மின்…
நஸ்ரி: விவேகானந்தா ஆசிரமம் பாதுகாக்கப்பட வேண்டும்
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்திருக்கும் 110 ஆண்டுகால விவேகனந்தா ஆசிரமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சுற்றுப்பயணம் மற்றும் கலாச்சார துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் அந்த ஆசிரமத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேசுகையில் கூறினார். ஆசிரமம் அமைந்துள்ள அந்நிலம் மேம்படுத்தப்படுவதை நிறுத்துவதற்காக…
அன்வார்: ஷாபி திரும்பவும் கல்லூரி சென்று சட்டம் பயில வேண்டும்
அரசுத் தரப்பு வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவின் வாதங்களைக் கேட்டு ஆத்திரமடைந்த அன்வார் இப்ராகிம், ஷாபி திரும்பவும் கல்லூரி சென்று சட்டம் படிக்க வேண்டும் என்று கடுப்பாகக் கூறினார். அந்த அனுபவம் வாய்ந்த வழக்குரைஞர், எதிர்த் தரப்பு முன்வைத்த வாதங்களுக்குப் பதிலளிக்காமல் அரசியல் சொற்பொழிவாற்றினார் என்றாரவர். ஷாபி நீதிமன்ற …
பிபிஎஸ் சொத்துகள் முடக்கப்படும்
பினாங்கு மாநில அரசால் உருவாக்கப்பட்ட தன்னார்வக் காவல் படை(பிபிஎஸ்)-யின் வங்கிக் கணக்கும் சொத்துகளும் முடக்கப்படும். அது ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து இவ்வாறு செய்யப்படுகிறது. உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, 1966ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டப்படி பிபிஎஸ் சட்டத்துக்குப் புறம்பான அமைப்பு என நேற்று …
மைக்கி: அட்னான் ஆசிரமத்தைக் காக்க வேண்டும்
கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், பிரிக்பீல்ட்சில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுவாமி விவேகாநந்தா ஆசிரம் அமைந்துள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள மறு-மேம்பாட்டுத் திட்டத்தில் தலையிட வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கக் கூட்டமைப்பு (மைக்கி) தலைவர் கே.கே. ஈஸ்வரன், தெங்கு அட்னான் மேம்பாட்டுப் …
பிகேஆர்: அன்வார் சிறைக்கு அனுப்பப்பட்டால் மக்கள் பொங்கி எழுவர்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஆர்ப்பாட்டங்கள் நடப்பது உறுதி என்று அதன் உதவித் தலைவர் தியான் சுவா எச்சரிக்கிறார். நீதி மாளிகைக்கு வெளியில் 500 பேருக்கு மேற்பட்ட ஆதரவாளர்களிடையே பேசிய தியான் சுவா, கோலாலும்பூரில் வார இறுதியில் ஆதரவாளர்கள் ஒன்றுதிரட்டப்படுவர் …
அஸ்மின்: குப்பைகளைக் கண்டால் என்னிடம் சொல்லுங்கள்
மந்திரி புசார் அஸ்மின் அலி, மூன்று மாதங்களில் சிலாங்கூரைக் குப்பையற்ற மாநிலமாக மாற்ற உறுதி பூண்டிருக்கிறார். குப்பைகளைக் கண்டால் புகார் செய்வதற்காக தம் கைபேசி எண்ணையும் அவர் கொடுத்திருக்கிறார். இதன் தொடர்பில் எல்லா நகராட்சி மன்றங்களுக்கும் அவர் கண்டிப்பான உத்தரவைப் போட்டிருக்கிறார். “பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்றம், சுபாங்…
மஇகா: 2020-இல் தேவாலயங்களே இருக்கமாட்டா
முஸ்லிம்- பெரும்பான்மை பகுதிகளில் தேவாலயங்கள் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதை மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜா கண்டித்துள்ளார். போகும் போக்கைப் பார்த்தால் 2020-இல் முஸ்லிம்- அல்லாதாருக்கு வழிபாட்டு இல்லங்களே இருக்காது போல் தெரிகிறது என்றாரவர். முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. 2020-இல் அது மலேசிய மக்கள் தொகையில் 70 விழுக்காடு …
எம்பி: அமைச்சரவை ஒத்துக்கொள்ளாவிட்டால் குருப் விலகுவாரா?
பைபிளை எரிக்கப்போவதாக இப்ராகிம் அலி விடுத்த மிரட்டலைச் சட்டத்துறைத் தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப்-பின் கோரிக்கையை அமைச்சரவை ஏற்கவில்லை என்றால் குருப் பதவி விலகத் தயாரா? இப்படி ஒரு சவாலை விடுத்துள்ளார் பாஸ் கட்சியின் சிப்பாங் எம்பி ஹனிபா மைடின். நாடாளுமன்ற …
பங் மொக்தார்: புரோட்டோனின் போலிகளைக் கண்டு வெட்கப்படுகிறேன்
தேசிய கார் தயாரிப்பாளரான புரோட்டோன் “சுயமாக” கார் தயாரிக்காமல் மற்ற கார் தயாரிப்பாளர்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே கார் தயாரிப்பதைக் கண்டு அவமானத்தால் கூனிக் குறுகிப்போவதாக கினாபாத்தாங்கான் பிஎன் எம்பி பங் மொக்தார் ரடின் கூறுகிறார். “முன்பு மிட்சுபிஷி. இப்போது ஹொண்டா. உடல் மலேசியாவுடையதாகவும் உள்ளிருப்பது ஜப்பானுடையதாகவும் இருப்பதால் பயன்…
பிள்ளை பராமரிப்பு விவகாரத்திலிருந்து நழுவுகிறது அரசாங்கம்
குழந்தை பராமரிப்பு உள்பட, வெவ்வேறு சமயத்தவர் சம்பந்தப்பட்ட திருமணப் பிரச்னைகள் மாநில அளவில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம். ஏனென்றால், ஷரியா நீதிமன்றமும் இஸ்லாமிய விவகாரங்களும் மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. “அவற்றைக் கூட்டரசு அரசாங்கத்திடம் கொண்டு வராதீர்கள். மாநில அரசுகளுக்கே திரும்பிச் …
பாஹ்மிக்கும் நண்பர்களுக்கும் ஆதரவாக மாணவர்கள் யுஎம்-மை ஆக்கிரமிப்பார்கள்
வெள்ளிக்கிழமை மலாயாப் பல்கலைக்கழக (யுஎம்) மாணவர்கள் அப்பல்கலைக்கழகத்தை ‘ஆக்கிரமித்துக் கொள்வர்’. கடந்த வாரம் பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் எண்மருக்கு எதிராக எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைக் கண்டிக்கும் வகையில் அவர்கள் அந்நடவடிக்கையை மேற்கொள்வார்கள். மாணவர் ஒற்றுமையைக் காண்பிக்க, அவர்கள் காலை மணி 9--இலிருந்து மாலை மணி…
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்: நீதிமன்றம் தீர்ப்பு
எம்பிகள் நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு சம்பளமும் மற்ற ஊதியங்களும் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது. 2009-இல் ஒராண்டுக் காலம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தபோது தமக்குச் சம்பளம் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ சம்பளம் கொடுக்கப்பட …
எஸ்பிஎம் வினாத்தாளில் இனச் சர்ச்சையைத் தூண்டும் தலைப்புகளைக் கண்டு எம்பி…
Info Didik வெளியிட்டிருக்கும் எஸ்பிஎம் மேற்கோள் நூல் ஒன்றில் பகாசா மலேசியாவில் கட்டுரை எழுதும் பகுதியில் “சீனர்கள் மலாய்க்காரர்களைக் கொல்ல விரும்புகிறார்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு மாணவர்கள் கேட்டுகொள்ளப்பட்டிருந்து கண்டு சிபு டிஏபி எம்பி ஒஸ்கார் லிங் அதிர்ச்சி அடைந்தார். அதுபோல் பல தலைப்புகள். அது முந்திய ஆண்டுகளில் வெளிவந்த …


