மலேசியாவின் சுதந்திரத்திற்கு இளைய தலைமுறையினர் போதிய மதிப்பு அளிப்பதில்லை என்ற கவலைகள் எழுந்த நிலையில், நேற்று நடைபெற்ற மெர்டேக்கா அணிவகுப்பில் கலந்து கொண்ட பல இனங்களைச் சேர்ந்த மக்களை முன்னாள் பிரதமர் பாராட்டினார். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, நேற்று நடைபெற்ற அணிவகுப்பைக் காண வந்திருந்த பார்வையாளர்களில்…
கேஜே: எம்ஏசிசி அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டது ஒரு மிரட்டல் நடவடிக்கை
இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள் இருவர் பிரதமர் துறை அலுவலகத்திற்கு திடீரென இடம் மாற்றப்பட்டதைக் கண்டித்திருக்கிறார். “இப்படிப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எம்ஏசிசி-யை மிரட்டும் வேலையும் நிற்க வேண்டும்”, என்றாரவர். எம்ஏசிசியைப் பலவீனப்படுத்த அதற்கு எதிராக நெருக்குதல் …
பிரதமர்: அம்னோ சமூக வலைத்தளங்களை நிரப்ப வேண்டும்; பொய்ச் செய்திகளை…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ கட்சியினர் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தி கட்சிக்கும் தலைவருக்கும் எதிரான “பொய்யான கருத்துகளை” எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “முகநூல் டிவிட்டர் கணக்குகள் திறங்கள். வலைப்பதிவர் ஆகாவிட்டாலும் முகநூல் டிவிட்டர் பழக்கமே போதுமானது. “பொய்யான கருத்துகளைக் கண்டால் அவற்றை எதிர்க்கலாம்”. செராஸில் …
‘ஒரு அம்னோ தலைவர் கட்சியைக் குழிதோண்டிப் புதைக்கக் கங்கணம் கட்டிக்…
வெளியில் செல்ல வேண்டிய அம்னோ தலைவர் ஒருவர் கட்சியைக் குழிதோண்டிப் புதைப்பதில் முனைப்பாக இருக்கிறார் என்று ஜோகூர் அம்னோ தலைவர் ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். “அவரின் தந்தையும் தாயாரும் கட்சிக்காகப் போராடியவர்கள் ஆனால், இந்தத் தலைவரோ அம்னோவை அழிக்கப் பார்க்கிறார். “இந்தத் தலைவர் விடுப்பில் செல்ல வேண்டும், பதவி …
தி எட்ஜ் தடை செய்யப்பட்டதற்கு 300பேர் கண்டனம்
கடன்களால் தொல்லையுறும் 1எம்டிபி பற்றிச் செய்திகள் வெளியிட்டதற்காக தி எட்ஜ் பத்திரிகை இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டிக்க முன்னூறுக்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டனர். கோலாலும்பூர் செண்ட்ரல் மார்க்கெட்டில் கூடிய எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வழக்குரைஞர் மன்றக் கட்டிடத்துக்கு அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் அறிவிப்பு அட்டைகளை …
ஆமாம் சாமிகளால் தன்னை மறந்திருப்பவர்கள் பதவி இறங்க மாட்டார்கள்
நேற்று பாகோ அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினின் பேச்சு தம் முன்னாள் ‘போஸை’க் குத்திக் காட்டுவதுபோல் இருந்தது. “சில நேரங்களில் நம்மைச் சுற்றியிருக்கும் ஆதரவாளர்கள், ‘பராவாயில்லை சார், எல்லாம் நல்லா இருக்கு, கவலையே வேண்டாம் சார், ஆமாம் சார்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.…
அன்வார்: விசாரணையாளருக்குத் தொல்லை கொடுக்காதீர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்தக் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியன் பற்றி விசாரணை செய்து வரும் விசாரணையாளர்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். சுங்கை பூலோ சிறையிலிருந்து தம் வழக்குரைஞர் மூலமாக வெளியிட்ட அறிக்கை …
ஜாஹிட்: எம்ஏசிசி விசாரணையாளர்கள்மீது இனிமேலும் நடவடிக்கை இல்லை
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, புதன்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்ட மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) விசாரணையாளர்கள்மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதி அளித்துள்ளார். எம்ஏசிசி அதிகாரிகள், அரசுக்குச் சொந்தமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனம் ரிம42 மில்லியனை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்கில் போட்டதாகக் கூறப்படுவதை …
கொடையாளர்தான் ரிம2 பில்லியனை சொந்தக் கணக்கில் போடும்படி பிரதமரிடம் கூறினாராம்
மத்திய கிழக்குக் கொடையாளர் ரிம2.6 பில்லியனை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கின் சொந்தக் கணக்கில் போட்டு வைப்பதையே விரும்பினாராம். நஜிப்பே இதனைத் தெரிவித்ததாக முகைதின் யாசின் கூறினார். “எதற்காக அதை உங்கள் கணக்கில் போட்டீர்கள் என்று அவரிடம் (நஜிப்) கேட்டேன்? ‘கொடையாளர்தான் போடச் சொன்னார்’ என்றவர் பதிலளித்தார்”, என …
சரவாக் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைத்தது சரியே- முறையீட்டு…
சரவாக்கில் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைத்தது செல்லாது என்ற சரசாக் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்த்து தேர்தல் ஆணையம் செய்த முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் இன்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இதன்படி தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைத்தது சரிதான் என்றாகிறது. மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய …
ஷஹிடான்: பெர்லிஸ் அம்னோ யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்
பெர்லிஸ் அம்னோ தொகுதிகள் அவற்றின் ஆண்டுக் கூட்டங்களைத் தொடக்கிவைக்க யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம் என மாநில தொடர்புக் குழுத் தலைவர் ஷாஹிடான் காசிம் கூறினார். அம்மாநிலத்தில் உள்ள மூன்று அம்னோ தொகுதிகளும்- கங்கார், ஆராவ், பாடாங் புசார்- அம்னோ தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் அல்லது உச்சமன்ற …
நஜிப்பின் 1எம்டிபி பற்றிய பதில்கள் புத்தகமாக வருகிறது
1எம்டிபி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் நஜிப்பின் பதில்களை சிறப்பு விவகார இலாக (ஜாசா) புத்தகமாக வெளியிடவிருக்கிறது. அப்புத்தகம் நாடு தழுவிய அளவில் வெளியிடப்படும் என்று ஜாசாவின் தலைமை இயக்குனர் முகமட் புவாட் ஸார்காசி கூறினார். "மகாதிர், சரவாக் ரிபோர்ட், மலேசியாகினி மற்றும் மலேசியன் இன்சைடர் ஆகிவை எழுப்பியவையின்…
விஸ்மா டிஎபிக்கு நன்கொடை வழங்கியவர்கள்: வந்து பட்டியலைப் பாருங்கள்
பினாங்கு, ஜாலான் ரங்கூனில் அமைந்திருக்கும் விஸ்மா டிஎபி கட்டுவதற்கு அளிக்கப்பட்ட நன்கொடை அக்கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட வங்கிக்கணக்குகளில் போடப்படவில்லை என்று பினாங்கு டிஎபி அறிவித்தது. பல்வேறு நிதி திரட்டல் நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் கட்சியின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது என்று மாநில டிஎபி சோசலிச இளைஞர் பிரிவின்…
புதிய டிஏபி கட்டிடத்துக்குப் பணம் எங்கிருந்து வந்தது? அம்னோ இளைஞர்கள்…
பினாங்கு அம்னோ இளைஞர் பகுதி, அந்தத் தீவில் மாநில டிஏபி பல மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டிய அலுவலகக் கட்டிடத்துக்குப் பணம் எங்கிருந்து வந்தது எனக் கேள்வி எழுப்பியது. 2008-இல் லிம் குவான் எங் முதலமைச்சராக வந்த இரண்டாண்டுகளில் கட்டப்பட்ட அக்கட்டிடத்துக்குப் பணம் வந்த விதத்தை டிஏபி தெரிவிக்க …
7 மாதங்கள் ஆகியும் கீர் தோயோ வழக்கில் தீர்ப்பைக் காணோம்
ஆகஸ்ட் 19 வந்தால் ஏழு மாதமாகும். ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ-வின் மேல்முறையீடு மீது கூட்டரசு நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்காதிருக்கிறது. கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க நாள் எதுவும் இன்னும் வரையறுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.…
பிகேஆர்: ஸெட்டிமீது தவறான முறையில் விசாரணை மேற்கொண்டால் ரிங்கிட் பாதிப்புறும்
போலீசார் பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்டார் அசீஸை விசாரிப்பதென முடிவு செய்தால் விசாரணை முழுக்க முழுக்க வெளிப்படையாக நடக்க வேண்டும் என பிகேஆர் வர்த்தக, முதலீட்டுப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. ஸெட்டி அனைத்துலக நிதி வட்டாரங்களில் நன்கு மதிக்கப்படுபவர். அவருக்கு எதிராக எடுக்கப்படும் அரசியல் நோக்கம் கொண்டதாகக் கருதப்படும் …
எதிரணித் தலைவர்கள் எம்ஏசிசி-க்கு ஆதரவு
எதிரணித் தலைவர்கள் இன்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) தலைமையகம் சென்று எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்தின்மீது விசாரணை நடத்துவதற்காக அழுத்தத்துக்கு இலக்காகியுள்ள அந்த ஆணையத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியனில் ரிம42 மில்லியன் எஸ்ஆர்சி இண்டர்நேசனலிலிருந்து …
‘தேடப்படும்’ கிளேய்ருக்கு யுகே போலீஸ் பாதுகாப்பு
மலேசிய போலீசார் கைது செய்ய விரும்பும் சரவாக் ரிப்போர்ட் தலைமைச் செயலாளர் கிளேர் ரியுகாஸல் பிரவுனுக்கு பிரிட்டிஷ் போலீசார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். மலேசிய ஊழல் விவகாரத்தை ஆய்வு செய்ததற்காக தாம் பின்தொடரப்படுவதாகவும் படமெடுக்கப்படுவதாகவும் ரியுகாஸல் புகார் செய்ததை அடுத்து அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ரியுகாஸலிடமிருந்து புகார் பெற்றதை …
எம்எசிசிக்கு மலேசியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்
பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் ரிம2.6பில்லியன் குறித்து விசாரித்து வரும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் 1,000…
ஸைட் அறைகூவல்: நஜிப்பிற்கு எதிராக 100,000 மக்கள் பங்கேற்கும் பேரணி
பிரதமர் நஜிப்பிற்கு எதிராக ஓர் இலட்சம் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்த வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் அறைகூவல் விடுத்துள்ளார். அனைத்து பின்னணிகளை யும் கொண்ட 100,000 மக்கள் பங்கேற்கும் ஒரு பேரணியை அமைதியாக பிரதமர் நஜிப்பிற்கு எதிராக நடத்த வேண்டும்…
எம்டிபி சிறப்புப் பணிக்குழு இனிமேலும் தேவையில்லை
1எம்டிபி விவகாரத்தை விசாரித்து வந்த சிறப்புப் பணிக்குழு இனிமேலும் தேவையில்லை என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்துறை தலைவர் முகம்மட் அப்பாண்டி அலி ஆலோசனை கூறியுள்ளார். ஆகவே, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்எசிசி) சட்டத்துறை தலைவரின் ஆலோசனைப்படி அதன் சொந்த அறிக்கையை வெளியிடுகிறது. சட்டத்துறை தலைவரின் ஆலோசனைப்படி…
ரிம2.6பில்லியன்: கொடுத்தவர் பெயர் இரகசியம்
பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6பில்லியன் எங்கிருந்து வந்ததது என்பதற்கான விளக்கத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்றுள்ளது . ஆனால், மத்தியக்கிழக்கிலிருந்து வந்த அப்பணத்தை கொடுத்தது யார் என்பதை வெளியிட முடியாது என்று அந்த ஆணையம் கூறுகிறது. பிரதமர் கணக்கில் அப்பெருந்தொகையை வைத்த நன்கொடையாளர்…
அம்னோவுக்கு ரிம2.6பில்லியன் நன்கொடை: அது ஏன் முகைதினுக்கு தெரியவில்லை?
பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6பில்லியன் அம்னோவுக்கானதாகும் என்றால், அது எப்படி அம்னோவின் துணைத் தலைவரான முகைதின் யாசினுக்கு தெரியாமல் போனது? பாரிசானின் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் டாலான் நேற்று ஒரு தொலைக்காட்சி நேர்க்காணலில் அந்தத் தொகை ஓர் அரசியல் நன்கொடை என்று கூறியிருந்ததற்கு…
பாஸ்: நஜிப் ரிம2.6பில்லியன் நன்கொடையாளருக்கு வேலை செய்கிறாரா?
மக்கள்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் எஜமானர்கள். அவர் அவர்களுக்கு பதில் கூற கடமைப்பட்டிருக்கிறார் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் பிரதமருக்கு நினைவுறுத்தினார். ஆகவே, ரிம2.6பில்லியன் நன்கொடை வழங்கியவர் யார் என்பதை நஜிப் வெளிப்படுத்த வேண்டும் என்று துவான் இப்ராகிம் கூறினார்.…


