வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர், எரிபொருள் மானியங்கள், பள்ளி பராமரிப்பு, சுகாதார வசதிகள், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி, மின்னணு விலைப்பட்டியல் (e-invoicing), மற்றும் சிறிய வியாபாரிகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதாகக் கூறுகிறார். வீடமைப்பு…
ரிம2.6 பில்லியன் கொடை வழங்கியது ஒரு குற்றச் செயலல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோமீது நம்பிக்கை கொண்ட ஆதரவாளர்களிடமிருந்து ரிம2.6 பில்லியனை நன்கொடையாக பெற்றது ஒரு குற்றச்செயல் அல்ல என்கிறார் கைரி ஜமாலுடின். “மலேசியாவில் அரசியல் கட்சிகள் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை பெறுவதைத் தடுக்கச் சட்டமில்லை”, என அம்னோ இளைஞர் தலைவர் கூறினார். எனவே, நஜிப்பின் வங்கிக் கணக்கில் …
ஜோகூர் எம்பி: அம்னோவால் ஊழலைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது
ஜோகூர் மந்திரி புசார் காலிட் நோர்டின், ஊழலைக் கண்டு அம்னோ வாயைப் பொத்திக் கொண்டிருக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருப்பது பலருக்கும் வியப்பளிக்கிறது. இவ்வளவுக்கும் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. “அம்னோவால், மலாய்க்காரர் போராட்டத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் விசுவாசம் என்ற பெயரில் சில தரப்பினரைத் தற்காக்கக் கட்சி பயன்படுத்தப்படுவதைப் …
ஷாபியின் தொகுதி ‘கலவர’த்துக்கு அஞ்சி நஜிப்பைப் புறக்கணித்தது
ஷாபி அப்டாலின் செம்பூர்ணா அம்னோ தொகுதி அதன் ஆண்டுக் கூட்டத்துக்கு நஜிப் அப்துல் ரசாக்குக்கு விடுத்த அழைப்பை மீட்டுக்கொண்டு துணைத் தலைவர் முகைதின் யாசினை அழைத்துள்ளது. ஆகஸ்ட் 15-இல் நடைபெறும் அத்தொகுதி ஆண்டுக் கூட்டத்துக்கு நஜிப் வந்தால் நிலவரம் கலவரமாகிடலாம் என்ற அச்சமே காரணமாகும் பிரதமருமான நஜிப், 1எம்டிபி …
ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ மீது இணையத்தில் கிண்டல்கள், கேலிகள்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரிம2.6 பில்லியன் நன்கொடைகளாகக் கிடைத்த பணம் என்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் அறிவித்திருப்பதை இணைய மக்கள் டிவிட்டரிலும் முகநூலிலும் பலவகையாகக் கிண்டல் செய்திருக்கிறார்கள். பெரும்பாலான பதிவுகள் நஜிப்பைக் குறைகூறுகின்றன. அப்படிக் குறை கூறுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைப் …
கைரி: ரிம2.6 பி. அம்னோ ஆதரவாளர்கள் கொடையாக வழங்கியது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்தக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் அம்னோ ஆதரவாளர்கள் வழங்கிய பணம் என்கிறார் கட்சியின் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். “நான் அறிந்தவரை அது ஆதரவாளர்களும் கொடையாளர்களும் வழங்கிய பணமாகும். “அது கொடையாளர்களிடமிருந்தும் ஆதரவாளர்களிடமிருந்தும் கிடைத்த நன்கொடை என எம்ஏசிசி கூறியிருப்பதே …
1எம்டிபி: இறுதியில் உண்மை வென்றது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரிம2.6 பில்லியன் நிதி அமைச்சுக்குச் சொந்தமான நிறுவனத்திலிருந்து வந்த பணம் அல்ல என்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் கண்டுபிடித்துக் கூறியதை 1எம்டிபி வரவேற்றது. “எம்ஏசிசி-இன் அறிக்கை 1எம்டிபி-இலிருந்து பணமெதுவும் பிரதமர் கணக்குக்கு மாற்றிவிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. “பிரதமருக்கு …
1எம்டிபி மீதான பிஏசி விசாரணை தள்ளிப் போடப்பட்டது
பொதுக் கணக்குக் குழுவின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் பின்னர் அது நடைபெறும் என்றும் 1எம்டிபி-க்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்று, நிதி அமைச்சின்வழி நாடாளுமன்ற பிஏசி செயலாளரிடமிருந்து 2015 ஆகஸ்ட் 4, 5, 6, 17, 18 ஆகிய நாள்களிலும் செப்டம்பர் 8, 10-இலும் நடைபெறவிருந்த பிஏசி விசாரணை தள்ளிப் போடப்பட்டிருப்பதாகவும் …
திரெங்கானு சுல்தானின் சிற்றப்பா பாஸிலிருந்து விலகினார்
சுல்தான் திரெங்கானு சுல்தான் மிஸான் சைனல் அபிடினின் சிற்றப்பா தெங்கு ஸ்ரீ படுகா ராஜா தெங்கு இப்ராகிம் பாஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். ஆறாண்டுகளாக பாஸ் உறுப்பினராக இருந்த தெங்கு இப்ராகிமுக்கு கடந்த கட்சித் தேர்தலில் முற்போக்காளர்கள் நிராகரிக்கப்பட்டது பிடிக்கவில்லை. அதனால் அதிலிருந்து விலகினார். தெங்கு இப்ராகிம் கோலா திரெங்கானு …
1எம்டிபி தகவல் கசிவு தொடர்பில் எம்ஏசிசி உயர் அதிகாரியிடம் போலீஸ்…
போலீசார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவரை புத்ரா ஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில் விசாரித்து வருகின்றனர். 1எம்டிபி புலனாய்வுத் தகவல்களைக் கசிய விட்டது தொடர்பில் அந்த விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது. புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மூவர் பிற்பகல் மணி 2.45க்கு எம்ஏசிசி …
முன்னாள் எம்பி: புதிய அமைச்சரவை 1எம்டிபி அமைச்சரவை
முன்னாள் கெடா மந்திரி புசார் சனுசி ஜுனிட் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அமைச்சரவையை மட்டம் தட்டிப் பேசியுள்ளார். “யாரெல்லாம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைச் சாடிகிறார்களோ அவர்கள்தாம் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். “அந்த வகையில் இது 1எம்டிபி அமைச்சரவைபோல் காட்சியளிக்கிறது. 1எம்டிபி-யைத் தற்காக்கும் அமைச்சரவை. 1எம்டிபி-யை அம்பலப்படுத்தும் …
அம்னோ அடிநிலை உறுப்பினர்கள்: பிரதமர்மீது பாசம் உண்டு, ஆனால், ரிம2.6…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த வார இறுதியில் கட்சியில் 3மில்லியன் உறுப்பினர்களின் ஆதரவு தமக்கிருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனாலும், கட்சியின் அடிநிலை உறுப்பினர்களில் சிலர் 1எம்டிபி குற்றச்சாட்டுகள்மீதான உண்மை தெரிய வேண்டும் என்கிறார்கள். “பிரதமர் அவருடைய கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியன் பணம் என்னவானது …
கதை கட்டுவோர்மீது மின்னல்வேக நடவடிக்கை: ஜாஹிட் சூளுரை
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “கதை கட்டுவோர்”மீது எச்சரிக்கையின்றியே நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். “இது எச்சரிக்கை இல்லை. எச்சரிக்கை இன்றியே நடவடிக்கை எடுப்பேன். அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும். “எதையும் இட்டுக்கட்டிக் கூறாதீர்க்கள். இதுதான் ஜாஹிட் ஹமிடி, சரியா?”, என உள்துறை அமைச்சருமான …
மகாதிர்: ஐஆர்பி பிரதமர் கணக்கைச் சோதித்ததா?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கணக்கில் யுஎஸ்$700மில்லியன் மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படுவதை உள்நாட்டு வருமான வரி வாரியம் (ஐஆர்பி) அறியுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கேள்வி எழுப்பியவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். இன்று தம் வலைப்பதிவில் அக்கேள்வியை எழுப்பிய மகாதிர், வருமான வரி வாரியத்தின் சோதனைக்கு ஆளான …
பிரதமர்: அமைச்சரவை மாற்றம் முடிந்தது; அடுத்த வேலையைக் கவனிப்போம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவை மாற்றங்கள் முடிந்து விட்டன என்பதால் அதை விட்டு முன்னே சென்று அதைவிட முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். “மக்களின் தேவைகளைக் கவனிக்க வேண்டும்”. பிரதமர் இன்று புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசினார்.…
முகைதின்:1எம்டிபிமீது வாயைப் பொத்திக் கொண்டிருக்க மாட்டேன்
1எம்டிபி போன்ற விவகாரங்கள் மக்கள் சம்பந்தப்பட்டவை. அதனால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க முடியாது என்கிறார் துணைப் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட முகைதின் யாசின். குளுவாங் அம்னோ தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய முகைதின் தாம் குற்றம் ஏதும் செய்ததாகக் கருதவில்லை என்றார். தம் நண்பர்கள் அம்னோ துணைத் தலைவர் …
சமூக ஆர்வலர்கள்: சோதனையில் தோற்றார் துணைப் பிரதமர்
நேற்று #TangkapNajib(நஜிப்பைக் கைது செய்) பேரணி தொடங்குவதற்குமுன் 29 பேர் கைது செய்யப்பட்டதானது பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும் என்று பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். “உண்மையில் #TangkapNajib பேரணியே புதிய துணைப் பிரதமரும் போலீசுக்குப் பொறுப்பாகவுள்ள உள்துறை அமைச்சர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அளவிடும் ஒரு முயற்சிதான். “பொதுமக்களைப் பயமுறுத்தும் …
அனல் பறக்கும் குளுவாங் அம்னோ ஆண்டுக் கூட்டம்
குளுவாங் அம்னோ தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் அல்டான்துன்யா கொலை விவகாரமெல்லாம் கிளறப்படும் என்பதால் அது அனல் பறக்கும் கூட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆண்டுக்கூட்டத்துக்கு வருகை புரிந்த அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினுக்கு சிரம்பான், கோத்தா மலாக்காபோல் அல்லாது சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சுமார் 400 …
நஜிப் கூறுகிறார்: 1எம்டிபி சொத்துகள் மீது சீனாவும் காட்டாரும் ஆர்வம்…
கடனில் மூழ்கிக்கிடக்கும் 1எம்டிபியின் சொத்துகள் மீது காட்டாரும் சீனாவும் ஆர்வம் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நஜிப் கூறியதாக பெர்னாமாவின் சனிக்கிழமை செய்தி கூறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காட்டாரின் அமிர் ஸீக் தாமின் பின் ஹாமாட் அல்-தானியும் பிரதமர் நஜிப்பும் சந்தித்தனர். அப்போது அமிர் 1எம்டிபியின் சொத்துகள் மீது ஆர்வம்…
முகமட் ஹசான்: நெகிரி செம்பிலானில் எல்லாம் அம்னோவுக்கே வேண்டும்
நெகிரி செம்பிலான் சட்டமன்ற தொகுதிகள் அனைத்தையும் பாரிசான் பங்காளிக் கட்சிகளின் உதவி இல்லாமல் அம்னோ கைப்பற்ற முடியும் என்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசார் முகமட் ஹசான் இன்று கூறினார். பிரச்சனைகளில் சிக்கித் தத்தளிக்கும் பாரிசான் பங்காளிக் கட்சிகளை அவற்றின் போக்கிற்கே விட்டு விடுவோம். அவை செத்துத்…
#TangkapNajib ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது: 20 பேருக்குமேல் கைது
#TangkapNajib ஆர்ப்பாட்டத்தை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே போலீசார் முறியடித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களில் 20 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி போலீஸ் தலைமையகப் பேச்சாளர் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். இதனிடையே, போலீசார் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையை மூடியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்களிடம் உடனடியாக இடத்தைக் காலி …
#TangkapNajib ஆர்ப்பாட்டம்: இதுவரை 10 பேர் கைது
பிற்பகல் மணி 2.30 அளவில், #TangkapNajib(நஜிப்பைக் கைது செய்) ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகுவின் உதவியாளர் ஜேய் ஜேய் டென்னிஸ் உள்பட சுமார் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் போலீஸ்மீது பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக அங்குள்ள வழக்குரைஞர் …
#TangkapNajib பேரணிக்கு முன்னதாக போலீஸ் குவிப்பு
கோலாலும்பூரில் #TangkapNajib (நஜிப்பைக் கைதுசெய்) பேரணியை ஒடுக்குவதற்காக போலீசார் நிறைய குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 80 போலீசார் ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக பிற்பகல் மணி 1.30க்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூட திட்டமிட்டிருக்கும் சோகோ விற்பனை மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். சோகோ மாலுக்கு எதிரில் மூன்று போலீஸ் வாகனங்களும் …
மகாதிர் 1எம்டிபி பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ளப்போகிறாரா?
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் பற்றி வலைப்பதிவில் கருத்துரைப்பதை நிறுத்திக் கொள்ளக்கூடும். போலீசால் கைது செய்யப்படலாம் என்ற பயம்தான் காரணம். அவ்விவகாரம் பற்றிக் கருத்துரைப்பதே “குற்றமாக”ப் பார்க்கப்படுவதால் அதன்மீது கருத்துரைக்கப்போவதில்லை என்று நேற்று மகாதிர் கூறியிருந்ததை வைத்து இனி அவர் அதைப் பற்றி …


