வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர், எரிபொருள் மானியங்கள், பள்ளி பராமரிப்பு, சுகாதார வசதிகள், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி, மின்னணு விலைப்பட்டியல் (e-invoicing), மற்றும் சிறிய வியாபாரிகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதாகக் கூறுகிறார். வீடமைப்பு…
எரிபொருள் விலை பத்து சென் குறைகிறது
இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலை ஒரு லீட்டருக்கு 10 சென் குறைகிறது. ரோன்95 இன் புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.05; ரோன்97 க்கு ரிம2.45. டீசலின் விலை ஒரு லீட்டருக்கு ரிம1.95 ஆகும். இப்புதிய விலை ஆகஸ்ட் 1 நள்ளிரவு 12.01 மணியிலிருந்து…
டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் சமூக ஆர்வலர்கள் கைது
சமூக ஆர்வலர்கள் இருவர் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தைவிட்டு வெளியேறும்போது கைது செய்யப்பட்டனர். ஒருவர் மாணவர் தலைவர் ஆடம் அட்லி. மற்றவர் லென்சா கம்முனிகேசன்ஸ் அதிகாரி சுக்ரி அப்ட் ரசாப். சுக்ரி, தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால், ஆடம் எதற்காகக் கைதானார் என்ற விவரம் தெரியவில்லை.…
தி எட்ஜின் இடைநீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனச் சுமார் 70 பேர் கோலாலும்பூரில் தி எட்ஜ் ஊடகக் குழுமத்தின் தலைமையகத்துக்கு வெளியில் ஒன்றுதிரண்டு அதற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். 1எம்டிபி-யைக் குறைகூறும் செய்திகளை வெளியிட்டதற்காக தி எட்ஜ் நாளேடும் தி எட்ஜ் வார இதழும் உள்துறை அமைச்சால் தற்காலிகமாக …
அது‘தீய அறிக்கை’- துணைப் பிரதமர் சாடல்
சரவாக் ரிப்போர்ட் இணையத்தளம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை என்று கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டு அதன் மூலம் பிரதமரைக் குற்றவாளியாகக் காண்பிக்க முயல்வதாக அஹ்மட் ஜாஹிட் ஹமிடி சாடியுள்ளார். “அது பிரதமருக்கு எதிராக எதிர்மறையான எண்ணத்தை உருவாக்க முயலும் ஒரு தீய அறிக்கை”, என்று …
பிரதமருக்கு எதிராக குற்றப் பத்திரிகையா? மறுக்கிறது எம்ஏசிசி
சிறப்புப் பணிக் குழு, எஸ்ஆர்சி இண்டர்நேசனல்மீது மேற்கொண்ட விசாரணை தொடர்பில் குற்றப் பத்திரிகை எதுவும் தயாரிக்கப்படவில்லை என மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியது. அந்த விசாரணை இன்னும் தொடர்வதாகவும் விசாரணை அறிக்கை எதுவும் சட்டத்துறை தலைவர்(ஏஜி) அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் அந்த ஆணையம் இன்று ஓர் அறிக்கையில் …
எதிர்க்கப்போவதில்லை என்பதைக் கண்ணீர் நீர் மல்கக் கூறினார் முகைதின்
“கட்சியை மிகவும் நேசிக்கிறேன். அதனால் எதிர்த்துப் போராட மாட்டேன்”, என முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். பாகோ பிஎன் தொகுதித் தலைவர்களிடையே பேசியபோது முகைதின் அவ்வாறு கூறியதாக சைனா பிரஸ் அறிவித்துள்ளது. அனைவரும் கட்சியின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய அம்னோ துணைத் …
ஸெட்டிக்கு மாரடைப்பா? இல்லை என்கிறது பேங்க் நெகரா
பேங்க் நெகாரா அதன் கவர்னர் ஸெட்டி அக்டார் அசீஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்ததாக ஏஸ்ட்ரோ அவானி அறிவித்துள்ளது. ஸெட்டி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறும் செய்தியை மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் நிராகரித்தார். ஸெட்டி எப்போதும்போல் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 1எம்டிபிமீது விசாரணை …
விடுப்பில் செல்வீர்: பிரதமருக்கு லாபிஸ் அம்னோ கோரிக்கை
ஜோகூர் லாபிஸ் அம்னோ இளைஞர் பகுதி, 1எம்டிபி சிறப்புப் பணிக்குழு அதன் பணியை இடையூறின்றிச் செய்வதற்கு வசதியாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விடுப்பில் செல்ல வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. நஜிப், பொதுக் கணக்குக்குழு உறுப்பினர்கள் நால்வரை அமைச்சரவையில் இழுத்துப் போட்டுக் கொண்டு அப்துல் கனி பட்டேலைச் சட்டத்துறைத் தலைவர் …
பிஏசி அதன் விசாரணையைத் தொடரும்
அடுத்த மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் பொதுக் கணக்குக் குழுவின்(பிஏசி) விசாரணையை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தக் கூடாது என பிஏசி துணைத் தலைவர் டாக்டர் டான் செங் கியாவ் கூறினார். இன்று ஓர் அறிக்கையில் இவ்வாறு உரைத்த கெப்போங் எம்பியுமான டான், செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறும் விசாரணை …
‘நஜிப்பைக் கைது செய்’ என்று கூறும் குரல் என்னுடையது அல்ல:…
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கைது செய்ய வேண்டுமென்று தாம் ஒரு போதும் சொன்னதில்லை என்று மறுத்திருக்கிறார். சுவாரா டிவி-இல் ஒலிக்கும் குரல் தம்முடையது அல்ல என்றாரவர். “சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் அந்தக் குரல் என்னுடையது எனச் …
எம்எச்370-இன் உடைந்த பாகம்தான் என்பதில் ஆய்வாளர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 370 காணாமல்போய் 16 மாதங்கள் ஆகும் வேளையில் புதிதாகக் கிடைத்துள்ள ஒரு தடயம் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது. மடகாஸ்கார் கரைக்கு அப்பால் மாரிசியஸ் தீவிலிருந்து 175 கிமீ தொலைவில், ரியூனியன் தீவில் விமானத்தின் உடைந்த பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இந்த …
சட்ட நிபுணர் அசீஸ் பாரி டிஏபி-இல் சேர்ந்தார்
அரசமைப்புச் சட்ட வல்லுனரும் முன்னாள் சட்ட விரிவுரையாளருமான அப்துல் அசீஸ் பாரி டிஏபி-இல் சேர்ந்துள்ளார். டிஏபி திறமைக்கு மதிப்புக் கொடுப்பதும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அதன் பண்பும் தம்மை வெகுவாகக் கவர்ந்து விட்டது என்றாரவர். கடந்த பொதுத் தேர்தலில், அசீஸ் சாபாக் பெர்ணம் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக …
1எம்டிபி விசாரணைக்கு முழுக்கு?…. டிஐ-எம் அப்படித்தான் நினைக்கிறது
நாட்டில் ஏற்பட்டுள்ள சில அரசியல் நடப்புகளைப் பார்க்கையில் 1எம்டிபி மீதான விசாரணைகள் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை என்று கூறும் ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா (டிஐ-எம்) விசாரணைகளுக்கு முழுக்குப் போடப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. 1எம்டிபி மீது தனித்தனியே இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒன்று நாடாளுமன்ற …
கணக்கில் ரிம2.6 பில்லியன் வைக்கப்பட்டதை பிரதமர் ஒப்புக்கொண்டார் என்கிறார் முகைதின்
நேற்றிரவு முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரது இல்லத்தில் பலரைச் சந்தித்து அவர்களுடன் நடத்திய உரையாடல் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு கசிய விடப்பட்டுள்ளது. தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அந்த வீடியோ பதிவில் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட கணக்கிற்கு பல மில்லியன்கள் மாற்றப்பட்டது பற்றி…
பெர்சே 4.0 பேரணி நஜிப் பதவி விலகக் கோரிக்கை விடுக்கும்
பெர்சே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மூன்று மாநகரங்களில் மிகப் பெரிய அளவில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 29-30 இரவில் நடத்தப்படும் அப்பேரணி நிறுவனப்பூர்வமான சீரமைப்புகள் உள்பட, நான்கு கோரிக்கைகளைக் கொண்டிருக்கும். அப்பேரணி கோலாலும்பூர், கூச்சிங், கோட்டா கினாபாலு ஆகிய …
முகைதின்: ஒரு தலையசைவில் பதவி பறிபோயிற்று
ஒரு சிறிய தலை அசைவுதான். அதன் மூலமாக பிரதமர் நஜிப் ரசாக் துணைப் பிரதமராக இருந்த முகைதின் யாசினைப் பதவியிலிருந்து வெளியேற்றினார். தாம் பதவிநீக்கம் செய்யப்பட்ட விதத்தை முகைதின் செய்தியாளர்களிடம் விவரித்தார். “நேற்று பிற்பகல் 12.15க்குப் பிரதமரைச் சந்திக்குமாறு என்னிடம் கூறப்பட்டது. “சிறிது பேசிய பின்னர் அழைத்தது ஏன் …
முகைதின்: நாடாளுமன்ற கொறடா சொல்வதைக் கேட்பேன்
நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்க்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமானால் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அம்னோவின் நாடாளுமன்ற கொறடா சொல்படிதான் நடந்து கொள்வார். “நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பது எனக்குத் தெரியாது. “(அப்படி கொண்டுவரப்பட்டால்) கட்சியின் பொறுப்பான உறுப்பினர் என்ற முறையில் கட்சி கொறடா …
முகைதின்: மகாதிர் மகனுடன் சேர்ந்து சதி செய்யவில்லை
டாக்டர் மகாதிரின் புதல்வர் முக்ரிஸுடன் சேர்ந்து சதி செய்வதாகக் கூறப்படுவதை முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் மறுத்தார். முக்ரிஸ் நேற்று முகைதினைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றதை வைத்து அவ்வாறு கூறப்படுகிறது. புக்கிட் டமன்சாராவில் உள்ள தம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முகைதின் அது வழக்கமான ஒரு …
சைட் அலி: 1எம்டிபி விவகாரத்தில் முகைதினுடன் ஒத்துப் போகிறேன்
செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி, 1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கொண்டுள்ள கவலையைத் தாமும் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார். “1எம்டிபி விவகாரத்துக்குத் தீர்வு காணாவிட்டால் அது அம்னோவுக்கும் பிஎன்னுக்கும் சுமையாகிவிடும் என முகைதின் கூறியதை நானும் ஒத்துக்கொள்கிறேன்”, என்றாரவர். “1எம்டிபி …
மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க பிரதமருக்கு உதவுவேன் -நூர் ஜஸ்லான் சூளுரை
உள்துறை துணை அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நூர் ஜ்ஸ்லான் முகம்மட், அரசாங்கத்தின்மீது மக்களின் நம்பிக்கையைப் பெருக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு உதவியாக இருக்கப்போவதாக உறுதி கூறியுள்ளார். “பொதுஒழுங்கை நிலைநிறுத்தி அரசாங்கத்தின்மீது மக்களுக்குள்ள நம்பிக்கை உயர்வதற்கு உதவுவேன் என வாக்குறுதி அளிக்கிறேன். “அத்துடன் (புதிதாக துணைப் பிரதமராகியுள்ள) உள்துறை …
முகைதினை வெளியேற்றிய நஜிப்பைச் சாடுகிறார் அம்னோ மூத்த உறுப்பினர்
அம்னோ அவை துணைத் தலைவர் முகம்மட் அசீஸ், துணைப் பிரதமர் பதவியிலிருந்து முகைதின் யாசினைத் அகற்றியதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சாடியுள்ளார். ஜோகூர் சட்டமன்றத் தலைவரும் அம்னோவில் 50 ஆண்டுகளுக்குமேல் உறுப்பினராகவுமுள்ள முகம்மட், நஜிப் கட்சியை அழிக்கப் பார்க்கிறார் எனக் குற்றம் சாட்டினார். “இது அம்னோவுக்கு நல்லதல்ல.…
பிரதமரின் முகநூல் பக்கத்தில் பதவி விலகச் சொல்லும் செய்திகள் குவிகின்றன
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துணைப் பிரதமர் முகைதின் யாசினைப் பதவியிலிருந்து வெளியேற்றியதை அடுத்து அவரது முகநூல் பக்கத்தில் நேற்று தொடங்கி "#najibletakjawatan” செய்திகள் நிறைந்து வருகின்றன. இன்று காலைவரை 34,952 கருத்துகள் அப்பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன. பெரும்பாலானவை நஜிப்பைப் பதவி விலகச் சொல்லியிருந்தன. அதை எதிர்க்கும் வகையில் நஜிப் …
புதிய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர்கள் ஐவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை புதிதாக எழுவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறாரக்ள். புதிய அமைச்சர்கள்:- -வில்வ்ரெட் மட்யுஸ் தங்காவ் (அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர்) -ஹம்சா சைனுடின் (உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர்) -வான் ஜுனாய்டி…


