முகைதின் நீக்கப்பட்டார், ஜாஹிட் புதிய துணைப் பிரதமர்

முகைதின்  யாசின்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  கழட்டி  விடப்பட்டார். இன்று  பிற்பகல் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  புதிய  அமைச்சரவையை  அறிவித்தார். அம்னோ  உதவித்  தலைவரும் உள்துறை  அமைச்சருமான அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  புதிய  துணைப்  பிரதமராக  அறிவிக்கப்படிருக்கிறார். 1எம்டிபி  விவகாரத்தில்  குறைகூறி  வந்ததற்காக முகைதின்  துணைப்  பிரதமர் …

புதிய அமைச்சரவை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் பிஎம்ஓ-வில் செய்தியாளர்கள் குவிந்தனர்

புத்ரா  ஜெயாவில்  பிரதமர்துறை  அலுவலகத்தில்  செய்தியாளர்களின்  கூட்டமோ  கூட்டம். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் விரைவில்  புதிய  அமைச்சரவையை  அறிவிக்கப்  போகிறார்  என்ற  எதிர்பார்ப்புதான்  இதற்குக்  காரணம். முதலில்  மூன்று  மணிக்கு  பிரதமர்  புதிய  அமைச்சரவையை  அறிவிப்பார்  என்று  சொல்லப்பட்டது. பிறகு  பிற்பகல்  1 மணிக்கு  என்றார்கள். மலேசியாகினியும் …

‘துணைப் பிரதமர் சொன்னது தவறு, 1எம்டிபி காரணமாக அம்னோ தேர்தலில்…

1எம்டிபி விவகாரம்  காரணமாக  அம்னோ  அடுத்த  பொதுத்  தேர்தலில்  தோற்றுப்  போகும்  எனத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கூறியிருப்பதை  விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்  நிராகரித்துள்ளார். அம்னோ  ஒற்றுமையாக  இருந்து  அதன்  உறுப்பினர்கள்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  வெற்றி  பெறும்  நோக்கத்துடன் …

அமைச்சரவை மாற்றம்? துணைப் பிரதமர் கழட்டி விடப்படுவாரா?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் புதிய  அமைச்சரவை  பட்டியலுடன்  பேரரசரைச்  சந்தித்திருப்பதாகக்  கூறப்படுகிறது. அமைச்சரவை  மாற்றம்  பற்றி  விரைவில்  அறிவிக்கப்படலாம்  என்று  அம்னோவின்  குரலாக  விளங்கும் உத்துசான்  மலேசியா  ஆன்லைன்  நள்ளிரவுக்குப்  பின்னர்  அறிவித்திருந்தது. இன்று  பிற்பகல்கூட அறிவிக்கப்படலாம்  என  ஊகங்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே,  நஜிப்  1எம்டிபி  விவகாரத்தைக் …

பதவி முடிவுக்கு வந்தது கனிக்கே தெரியாதாம்

உடல்நலக்  குறைவு  காரணமாக தமது  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) பதவி  முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பது  தமக்கே  தெரியாது  என்கிறார்  அப்துல்  கனி  பட்டேய்ல். அரசாங்கத்  தலைமைச்  செயலாளர்  அப்படி  ஓர்  அறிவிப்பைச்  செய்தது  தமக்குத்  தெரியாது  என  கனி  மலாய்  மெயில்  ஆன்லைன்  இணையத்தளத்திடம்  தெரிவித்துள்ளார். “எனக்குத்  தெரியாது.…

கனி பட்டேய்லுக்குப் பதில் புதிய சட்டத்துறைத் தலைவர்

சட்டத்துறைத்  தலைவராக(ஏஜி)  இருந்த  அப்துல்  கனி  பட்டேய்லின்   சேவை  நேற்றுடன்  முடிவுக்கு  வந்தது. ‘உடல்நலக் குறைவு’ காரணமாக  அப்துல்  கனியின்  சேவை  முடிவுக்கு  வருவதாக  அரசாங்கத்  தலைமைச்  செயலாளர்  அலி  ஹம்ஸா அறிவித்ததாக  பெர்னாமா  கூறிற்று. அவருக்குப்  பதிலாக  முன்னாள்  கூட்டரசு  நீதிபதி  முகம்மட் அபாண்டி  அலி  புதிய …

இந்தியாவின் முன்னாள் அதிபர் அப்துல் கலாம் காலமானார்

  இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியும் முன்னாள் அதிபருமான எபிஜே அப்துல் கலாம் நேற்றிரவு மணி 11.25 அளவில் மாரடைப்பால் காலமானார். அப்துல் கலாம் மேகலாயா, சில்லோங்கில் இந்திய நிருவாக கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் மயக்கமுற்றார். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பின்னர்…

எம்டிபி விசாரணை: நிறுவன உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  மீதான விசாரணை தொடர்பில், கடந்த  வெள்ளிக்கிழமை முதல்  தடுப்புக்  காவலில்  வைக்கப்பட்டிருந்த  வர்த்தகர்  ஒருவரை  புத்ரா  ஜெயா  மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. 28-வயது  நிரம்பிய  அந்த  ஆடவர் 50,000 ரிங்கிட் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர்  கடந்த வியாழக்கிழமை  இரவு  1எம்டிபி …

கிட் சியாங்: மகாதிர் ‘மலேசியாவைப் பாதுகாப்போம்’ கூட்டணியில் சேர வேண்டும்

லிம்  கிட்  சியாங்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்மீது  எவ்வளவோ  வசை  பாடியுள்ளார், குற்றச்சாட்டுகளைச்  சுமத்தியுள்ளார். ஆனால்,  இப்போது  நாட்டைப்  பாதுகாக்க  மகாதிரின்  உதவியைத்தான்  அவர்  நாடுகிறார். மகாதிரும்  அவருக்குத்  துணையாக  இருந்த  அப்துல்லா   அஹமட்  படாவியும்  மூசா  ஹித்தாமும்  சேர்ந்து  அடுத்த  பொதுத்  தேர்தலில்  பிஎன்னை …

எதிர்ப்புக் காட்டும் துணைப் பிரதமர் பதவி இழப்பாரா?

அமைச்சரவை  மாற்றம் ஒன்று  நிகழுமானால் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  எதிர்ப்புக்குரல்  எழுப்பும்  முகைதின்  யாசினைத்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  தூக்கும்  சாத்தியம்  இருக்கிறதா? இரண்டு  தசாப்தங்களாக  அமைச்சரவையில்  உள்ள  ஒருவரைத்  தூக்கி  எறிவது  அவ்வளவு  எளிதல்ல  என்கிறார்  தஸ்மானியா  பல்கலைக்கழகத்தில்  ஆசியக்  கழகத்தின்  இயக்குனராகவுள்ள  ஜேம்ஸ்  சின்.…

முகைதின் பேச்சு அம்னோ நாளேடுகளில் வெளிவரவில்லை

அம்னோ துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  நேற்று ஆற்றிய  அனல் பரக்கும்  உரையை  அம்னோவுக்குச்  சொந்தமான  உத்துசான்  மலேசியா  வெளியிடவில்லை. நேற்று  மாலை  செராஸ்  அம்னோ  தொகுதியின்  ஆண்டுக்  கூட்டத்தில் பேசிய  முகைதின்  யாசின்,  1எம்டிபி-இன்  காரணமாக  கட்சி  நெருக்கடியை  எதிர்நோக்குவதாகக்  குறிப்பிட்டார். விரைவில் ஒரு  பொதுத்  தேர்தல் …

நஜிப்பைப் பதவி இறக்கத்தான் எட்ஜ் நாளேட்டுக்குத் தடைவிதிப்பாம்: பாஸ் எம்பியின்…

த  எட்ஜ்  பத்திரிகைகள்  மூன்று-மாதத்துக்கு  இடைநீக்கம்  செய்யப்பட்டதற்குப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்தான்   காரணம்  என்று  பொதுவாகக்  கருதப்படுகிறது. ஆனால்  காரணம்  அதுவல்ல  என்கிறார்  பாஸ்  எம்பி  மாபுஸ் ஒமார். அது, அம்னோ தலைவர்களின்  “அரசியல்  சதித்திட்டமாம்”.  பிரதமரை  இதற்குமேலும்  தற்காக்கவோ  பாதுகாக்கவோ  இயலாது  என்ற  முடிவுக்கு  வந்துள்ள …

கேஎல்ஐஏ அமிழ்ந்து கொண்டிருக்கிறது, ஏர் ஏசியா எச்சரிக்கை

கோலாலும்பூர் அனைத்துலக  விமான  நிலையத்தின்  ‘பட்ஜெட்’ பயண முனையம் பூமிக்குள்  அமிழ்ந்து  கொண்டிருக்கிறது. விமானங்கள்  மெதுவாக  நகர்ந்து  செல்லும்  நடையோடுபாதையில்  விரிசல்கள்  ஏற்பட்டு  நீர்  தேங்கி  நிற்கிறது. இக்குறைபாடுகளால்  பயணங்கள்  தாமதமாகலாம், விமானங்களில்  தேய்மானங்கள்  அதிகரிக்கலாம் ஆபத்துகளும்  நிகழலாம்  என  ஏர்  ஏசியா  நிறுவனம்  கூறிற்று. இதுவரை விமானங்களின் …

முற்போக்குவாதிகளே மலேசியாவை காப்பாற்ற வாருங்கள், அழைக்கிறார் கிட் சியாங்

  பாஸ் கட்சியை விட்டு விலகி கெராக்கான் ஹரப்பான் பாரு (ஜிஎச்பி) அமைப்பை தோற்றுவித்தவர்கள் புதிய அரசியல் கட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கையில், டிஎபியின் நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் பாரிசானிலுள்ள முற்போக்குவாதிகள் இந்த புதிய அரசியல் கூட்டணியில் இணந்துகொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாட்டில் தலைவிரித்தாடும்…

1எம்டிபி விவகாரம் பற்றிய கேள்விகளுக்கு நஜிப்பின் பதில்: ஓகே லா!

நாடும் அம்னோவும் இக்கட்டான நிலையில் இருந்த போதிலும், முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி இன்று அளித்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமரும், துணைப் பிரதமரும் புன்னகை தவிழ்ந்த முகத்தோடு காணப்பட்டனர். உபசரிப்பிலிருந்து கிளம்பிய பிரதமர் நஜிப்பின் காரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்களுக்கு அவர்  ஒரே ஒரு…

பினாங்கு அம்னோ: புவா பிஎசியிலிருந்து விலக வேண்டும்

  டிஎபியின் நாடாளுமன்ற உறுப்பினராக டோனி புவாவுக்கு பெருந்தன்மையும் வெளிப்படையான தன்மையும் இருக்குமானால் அவர் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவிலிருந்து (பிஎசி) விலகிக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு அம்னோ தொடர்புக் குழு தலைவர் மூசா  ஷெய்க் பாட்ஸீர் கூறினார். நேற்றிரவு புக்கிட் மெர்தாஜாமில் நடந்த ஹரி ராயா விருந்து உபசரிப்புக்குப்…

புவா: கணக்காய்வர் அறிக்கையை பிரதமர் வெளியிட முடியாது என்று கூறும்…

  1எம்டிபியின் இடைக்கால அறிக்கையை தேசிய கணக்காய்வர் முன்னதாகவே பொதுமக்களுக்கு வெளியிடுவதை நாடாளுமன்ற நிறைநிலை விதிகள் தடுக்கின்றன என்று பாரிசான் தரப்பினர் கூறுவதை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் அறிவற்ற கருத்து என்றார். பாரிசானின் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் உண்மையை மறைக்க நாடாளுமன்ற நிறைநிலை விதிகளில்…

பிகேஆர்: சரவாக் ரிபோர்ட் ஆசிரியருக்கு எதிரான ஸாகிட்டின் மருட்டல் நகைப்புகுரியது

  1எம்டிபியை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளியிட்ட சரவாக் ரிப்போர்ட்டின் ஆசிரியர் கிளேர் பிராவ்ன் மலேசியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடி நேற்று மருட்டல் விடுத்திருந்தார். அது சட்ட அடிப்படையற்ற ஒரு கூற்றாகும் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கூறினார். கிளேரை…

த எட்ஜுக்கு என்ஜிஒக்கள் மலர்க் கொத்துகள் அளித்து ஆதரவு தெரிவித்தனர்

  இன்று பல அரசு சார்பற்ற அமைப்புகள் (என்ஜிஒ-க்கள்) த எட்ஜ் ஊடகக் குழுமத்தின் அலுவலகத்திற்குச் சென்று  மலர்க் கொத்துகளை வழங்கி தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தன. த எட்ஜின் இரு வெளியீடுகளுக்கான உரிமைத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அந்த என்ஜிஓ-க்களின் சுமார் 20 பிரதிநிதிகள் மதியம்…

முக்ரிஸ்: தகவல்சொல்லிகளிடம் நன்றி பாராட்டுங்கள். சுட்டுத் தள்ளாதீர்

கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர் “தகவல்சொல்லிகளை சுட்டுத் தள்ளாதீர்”  என  அம்னோ  தலைவர்களை  எச்சரித்துள்ளார். “சில  தலைவர்களுக்கு  அறிவுரை  பிடிக்காது. அவர்களை  இடித்துரைத்தால்  அப்படிச்  செய்பவர்களைச் சுட்டுத்  தள்ளுவார்கள்”, என  இன்று  கோலாலும்பூரில்  செராஸ்  அம்னோ  தொகுதியின்  ஆண்டுக்  கூட்டத்தைத்  தொடக்கி  வைத்தபோது  முக்ரிஸ்  கூறினார். இப்படிப்பட்ட …

தகவல் சொல்லும்போது அடக்கி வாசியுங்கள், பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார் ஐஜிபி

தகவல் சொல்பவர்களுக்குப்   பாதுகாப்பு  தேவை  என்றால் , தகவல்களை  எங்கு  சொல்ல  வேண்டுமோ  அங்கு  சொல்ல  வேண்டும்,  ஊடகங்களில்  வெளியிடும்  வேலை  கூடாது  எனப் போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறுகிறார். “மலேசிய  சட்டத்தில்  தகவல் சொல்பவர்களுக்குப்  பாதுகாப்பு  உண்டு. அவர்கள் முறைப்படி, சட்டப்படி  நடந்து …

ஹகாம்: தடைவிதிப்பு சந்தேகத்தை வலுப்படுத்துகிறது

தி  எட்ஜ் நாளிதழுக்கும்  வார  இதழுக்கும்  இடைக்கால தடை  விதிக்கப்பட்டிருப்பது  புத்ரா  ஜெயா  எதையோ  மூடிமறைக்கப்  பார்க்கிறது  என்ற  சந்தேகத்துக்கு  வலுவூட்டுவதாக  அமையும்  என  தேசிய  மனித  உரிமைக் கழகம்  எச்சரித்துள்ளது. 1எம்டிபி  பற்றி  விரிவாக  செய்திகள்  வெளியிட்டு  வந்த  அவ்விரு  செய்தித்தாள்களையும்  தடை  செய்திருப்பது  பொதுமக்கள்  அதைப்…

1எம்டிபி: மேலும் ஒருவர் இன்று தடுத்து வைக்கப்படுவார்

1எம்டிபி-யுடன்  தொடர்புள்ள  மேலும்  ஒரு  நிறுவன இயக்குனர் இன்று  சிறப்புப்  பணிக்குழுவால்  தடுத்து  வைக்கப்பாடுவார்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு  டத்தோவான  அவர்  பணிக்குழுவால்  இந்த  வாரத்தில்  தடுத்து  வைக்கப்படும்  நான்காவது  நபராவார். நேற்று வர்த்தக  நிறுவனமொன்றின்  உரிமையாளர்  ஒருவர்  நான்கு  நாள்களுக்குத்  தடுத்து  வைக்கப்பட்டார். அதே  வேளை  செவ்வாய்க்கிழமை …