நாங்கள் புல்லுருவிகளா? கெராக்கான்மீது பெர்காசா பாய்ச்சல்

கெராக்கான்  மாநாட்டில் “புல்லுருவி” என்ஜிஓ-கள்  பற்றிக்  குறிப்பிடப்பட்டது  பெர்காசாவை  மறுபடியும்  உசுப்பி  விட்டிருக்கிறது. சிலாங்கூர்  பெர்காசா  தலைவர் யஹ்யா  அபு  பக்கார்,  மலாய்  மேலாண்மைக்காக  போராடும்  அந்த  அமைப்பைக்    கருத்தில்  வைத்துதான் கெராக்கான்  இளைஞர்  தலைவர்  டான்  கெங்  லியாங்,    அவ்வாறு  குறிப்பிட்டாரா  என  முகநூலில்  வினவினார். “கெராக்கான் …

தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும்: உள்துறை அமைச்சர் ஹமிடிக்கு குலா கண்டனம்

-மு. குலசேகரன், அக்டோபர் 20, 2014. இன்றைய உத்துசான் மலேசிய  நாளிதழில்  உள்துறை அமைச்சர்  சாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும்  ஒரே மொழிப் பள்ளிகளாக  மாற்ற வேண்டும் என்ற தமது தனிப்பட்ட கருத்தை தெரிவித்ததாக  செய்தி வந்துள்ளது. இந்தச் செய்தி மிகவும் கண்டனதுக் குறியது. இந்த…

லியோ: பைபிள் எரிப்பு விவகாரத்தில் அமைச்சரவை முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல

பைபிளைக்  கொளுத்த  வேண்டும்  என்று  தூண்டிய  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  நடவடிக்கை  இல்லை  என்று  அமைச்சரவை  முடிவு  செய்திருப்பதாகக்  கூறப்படுவதைப்  போக்குவரத்து  அமைச்சர்  லியோ  தியோங்  லாய்  மறுத்துள்ளார். அவ்விவகாரம்  பற்றி  அமைச்சரவை  விவாதித்தது  உண்மைதான்  என்பதை  ஒப்புக்கொண்ட  லியோ, அதில்  முடிவு  எதுவும்  செய்யப்படவில்லை …

தண்ணீர் சீரமைப்பு ஒப்பந்தம் இரகசியமானதா? விளக்கம் தேவை

சிலாங்கூர்  நீர்  சீரமைப்பு  ஒப்பந்தம்  எதற்காக  இரகசியமாக  வைக்கப்பட  வேண்டும்  என்பதற்கு  புத்ரா  ஜெயா-விடமிருந்து  விளக்கம்  தேவை  என  சிலாங்கூர்  மந்திரி  புசார்  கேட்கிறார். இன்று  செய்தியாளர்களிடையே  பேசிய  எம்பி,  முகம்மட்  அஸ்மின்  அலி, அந்த ஒப்பந்தத்தைப்  படித்துப்  பார்த்ததாகவும்  அதை  தேசிய  இரகசியப் பாதுகாப்புச்  சட்டத்தின்கீழ்  வைக்க …

‘உணர்ச்சிவயப்பட வைக்கும்’ விவகாரங்களை வெளியிடாதீர்: ஊடகங்களுக்கு கெராக்கான் அறிவுறுத்து

ஊடகங்கள்,,  உணர்ச்சிவயப்பட  வைக்கும்  செய்திகளைக் குறிப்பாக  அரசியல்  தலைவர்கள், கட்சியினர்  எழுப்பும்  இன  விவகாரங்களை   வெளியிடுவதைத்  தவிர்க்க  வேண்டும். “அப்படிப்பட்ட  கருத்துகளுக்கு  ‘இடமில்லை’ என்று  சொல்ல  வேண்டிய  ஊடகங்கள் அவற்றை  வெளியிடுவோருக்கு  விளம்பரம்  கொடுப்பது  அவர்களை ஹீரோக்கள்  ஆக்கிவிடும்” என  கெராக்கான் உதவித்  தலைவர்  ஏ.கோலிலன்  பிள்ளை  கூறினார்.…

கெராக்கான் அதன் பேராளரைக் கட்சிநீக்கம் செய்ய வேண்டும்; மலாய் என்ஜிஓகள்…

கெராக்கான் பேராளர்  ஒருவர்,  அம்னோ  தலைவர்கள் “வந்தேறிகள்” என்று  கூறுவதை  நிறுத்த  வேண்டும்  ஏனென்றால்  அவர்களும்  குடியேறி  வந்தவர்கள்தாம்  என்று  தெரிவித்த  கருத்துக்காக  அவர்மீது  மலாய்  என்ஜிஓ-கள்  ஆத்திரம்  கொண்டுள்ளன. நேற்றைய  கெராக்கான் மாநாட்டில்  அக்கருத்தைத்  தெரிவித்த ஜோகூர்  பேராளர்  டான்  லாய்  சூன்னை  கெராக்கான்  தலைவர்  கட்சியிலிருந்து …

தேச நிந்தனைச் சட்டம் இருக்கிறது, ஜாக்கிரதை, எச்சரிக்கிறார் அமைச்சர்

  தம்மை குறைகூறிய இருவரை வாயாடிகள் என்று வர்ணித்த நகர நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் தேச நித்தனைச் சட்டம் இருப்பதைக் கவனித்தில் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அமைச்சர் டாலான் மலேசியாவின் தேச நிந்தனைச் சட்டம் குறித்து அமெரிக்க தெரிவித்திருந்த…

நீங்களும் வந்தேறிகள்தான் என்பதை மறந்துவிடாதீர், அம்னோவுக்கு நினைவுறுத்தல்

  இன்று கெராக்கான் மாநாட்டில் பேசிய ஒரு பேராளர் அம்னோ தலைவர்கள் "வந்தேறிகள்" என்று கூறும் கருத்துகளுக்கு எதிராக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று அப்பேராளர் அவர்களுக்கு நினைவுறுத்தினார். "மலேசியர்களின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்துகிறேன். மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகிய அனைவரும், உண்மையான பூமிபுத்ராக்காளாகிய…

பொய்யை நம்பியதால் சீனர்கள் வாக்களிக்கவில்லை, நஜிப்

  பதிமூன்றாவது பொதுத் தேர்தலில் பாரிசானுக்கு சீனர்களின் வாக்குகள் பெருமளவுக்கு குறைந்ததற்குக் காரணம் அவர்கள் பொய்களை நம்பியதுதான் என்று பாரிசான் தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார். "சீனர்களின் வாக்குகள் குறைந்ததற்கு என்ன காரணம் என்று கற்பனை செய்து பாருங்கள்", என்று அவர் செத்தியா அலாம், சிலாங்கூரில் நடைபெற்ற 43…

அன்வார்: நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை

  தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குதப்புணர்ச்சி வழக்கில் தாம் சிறையில் அடைக்கப்படும் சாத்தியம் இருந்த போதிலும், தாம் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். அன்வார் தற்போது பிரிட்டனில் இருக்கிறார். முஸ்லிம் உலகில் உயர்கல்வி சீர்திருத்தம் குறித்த ஒரு பணிப்படை கூட்டத்தில்…

போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டக் குத்தகை மறு ஆய்வு செய்யப்படும்

போர்னியோ  நெடுஞ்சாலைத்  திட்டக் குத்தகை  சாபா  குத்தகையாளர்களுக்குத்தான்  கொடுக்கப்பட  வேண்டும்  என்று  கூறப்படுவது  பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக்கின்  கவனத்துக்குக்  கொண்டு  செல்லப்பட்டிருப்பதாக  சாபா  முதலமைச்சர்  முசா  அமான்  நேற்றுத்  தெரிவித்தார். “அது  பற்றிப்  பிரதமருடன்  பேசினேன். அவரும்  அதை  மறு ஆய்வு  செய்ய  இணங்கியுள்ளார். “அத்திட்டத்தால்  உள்ளூர் …

அன்வாரின் வழக்குரைஞர்களை மிரட்டக்கூடாது

தங்களுக்கு  எதிரான  மிரட்டல்கள்  நிறுத்தப்பட  வேண்டும்  என்ற  அன்வார் வழக்குரைஞர்களின்  கோரிக்கை  குறித்து அரசாங்கமும்  சட்டத்துறைத்  தலைவரும் (ஏஜி) மவுனமாக  இருப்பது  வருத்தமளிப்பதாக  பிகேஆர்  சட்டப்  பிரிவுத்  தலைவர்  ஆர்.சிவராசா  கூறினார். அன்வாரின்  வழக்குரைஞரும்  பாடாங்  செராய்  எம்பி-யுமான  என். சுரேந்திரக்கு  எதிராக  தேச  நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்பட்டிருப்பதன் …

பிஎன்னுக்குப் ‘புல்லுருவி’ என்ஜிஓ-களுடன் உறவு தேவையில்லை

பிஎன்,  “இன, சமயம்”  சார்ந்த  என்ஜிஓ-களுடன்  நெருக்கமாக  இருப்பது  போல்  காணப்படும் நிலையை  விட்டொழிக்க  வேண்டும். அந்த  என்ஜிஓ-கள்  “புல்லுருவிகள்”  என்றும்  அவற்றால் பிஎன்னுக்குக்  கெடுதல்தான்  என்றும்  கெராக்கான்  இளைஞர் தலைவர்  எச்சரித்துள்ளார். “அவை  பிஎன்னுக்கு  ஆதரவாக  இருப்பதுபோன்ற  தோற்றப்பாட்டை  உருவாக்கி  வைத்துள்ளன.  ஆனால், அவற்றின்  தலைவர்களின்  தீவிரப் …

ஜனநாயகத்துக்கான கூப்பாடு அழிவைக் கொண்டுவரும்: கெராக்கான் வனிதா எச்சரிக்கை

கூடுதல்  ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும்  கோரிக்கைகளுக்கு  செவிசாய்க்க  வேண்டாம்  என்று  எச்சரிக்கும்  கெராக்கான்  மகளிர்  பகுதி,  மலேசியாவின்  “அரசியல்  நிலைப்பாட்டுக்கு”  தடுப்புச்  சட்டங்கள்  தேவை  என்றும்  வலியுறுத்துகிறது. “கெராக்கான்  மகளிர்  பகுதி  தடுப்புச்  சட்டங்களை  முழுமையாக  ஆதரிக்கிறது.  அவை, அரசியல்  நிலைத்தன்மையைக்  காக்கவும்  கூட்டரசு  அரசமைப்பு, ருக்குன் நெகாரா ஆகியவற்றை …

டிஎபி: பெட்ரோல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்

  எரிபொருளுக்கான உலகச் சந்தையின் விலையைப் பார்க்கும் போது மலேசியாவில் ரோன்95க்கு அரசாங்கம் மானியம் ஏதும் அளிக்கவில்லை என்பதோடு மலேசியர்கள் சந்தை விலையை விட கூடுதலான விலை கொடுக்கின்றனர் என்று டிஎபி பேராக் கூறுகிறது. நேற்றைய விலையின்படி, உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை யுஎஸ்$84.47 (ரிம277)…

பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள டிபிகேஎல் நிலங்கள் ‘கமுக்கமாக விற்கப்பட்டன’

கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்றம் (டிபிகேஎல்)  அதன்  நிலங்களைச்  சில  தரப்பினருக்கு   இரகசிமாக  விற்பனை  செய்திருப்பதாக   செராஸ்  எம்பி  டான்  கொக்  வாய்  கூறினார். “திறந்த  டெண்டர்கள்  அழைக்கப்படும்  என  விளம்பரப்படுத்தப்பட்ட  சில  திட்டங்கள்  கடந்த  இரண்டு, மூன்று  ஆண்டுகளில்  சில  தரப்புகளுக்குக்  கமுக்கமாக  விற்கப்பட்டுள்ளன. “நேரடிப்  பேரம்பேசி எல்லாம் …

‘அன்வாருக்காக மீண்டும் தெருவில் இறங்கிப் போராடப்போவதில்லை’

பக்கத்தான்  ரக்யாட்டுக்கு  ஆதரவானது  என்று கருதப்படும்  ஒரு  என்ஜிஓ,  அன்வாரை  ஓய்வுபெறச்  சொல்கிறது. அவருக்காகப்  போராடிப்  போராடி  மக்கள்  “அலுத்துப்  போனார்களாம்”. இது  ரிபோர்மாசி  இயக்கத்தைத்   தோற்றுவித்த  1998-1999  காலக்  கட்டம்  அல்ல  என்பதை  லென்சா  அனாக்  மூடா  மலேசியா(லென்சா) அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்  எஹ்சான்  புகாரி  ஒர்  அறிக்கையில் …

நல்ல தலைவர்கள் மதுவை ஊக்குவிக்க மாட்டார்கள்

பீர்  விழாக்களில்   கலந்துகொண்டு  “அழிவுக்கு”  ஆதரவுகொடுக்கும்  அரசியல்  தலைவர்களை பெர்லிஸ்  முன்னாள்  முப்தி  முகம்மட்  அஸ்ரி  சைனுல்  அபிடின்  சாடினார். ஒரு நல்ல  தலைவர்  “அழிவுக்கு”  ஆதரவுதேட  மாட்டார்  என  முகம்மட் அஸ்ரி  கூறினார். “இந்நாட்டில்  அரசியல்  தலைவர்கள் பீர்  விழாக்களை  ஊக்குவிக்க  இயக்கம்  நடத்துகிறார்களே, எப்படி? எந்தக்…

கடல்கரையில் மேல்சட்டையின்றிக் காணப்பட்ட பெண்களை போலீஸ் தேடுகிறது

போர்ட்  டிக்சன்  கடல்கரையில்  மேல்சட்டையின்றி  சூரிய  குளியல்  போட்ட  நான்கு  பெண்களை  நெகிரி  செம்பிலான் போலீசார்  தேடுகின்றனர். அது  பற்றி போர்ட் டிக்சன்  முனிசிபல்  மன்றம்  புகார்  செய்திருப்பதை  போலீஸ்  உறுதிப்படுத்தியதாக சின்சியு  டெய்லி கூறியது. த ஸ்டாரும்  அச்செய்தியை அறிவித்திருந்தது.  20-வயதுடைய  பெண்கள் மூவரும்  40-வயது  பெண் …

ஆடம்: அம்னோவில் சேர்வதா? நன்றி, ஆனால், வேண்டாம்

அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடினும்  மாணவப்  போராட்டவாதி  ஆடம்  அட்லி  அப்துல்  ஹமிட்டும்  இளைஞர்  அரசியலை  விவாதிக்கும்  கூட்டமொன்றில்  கலந்துகொண்டனர் ஆனால், கைரி  பேசிக்க்கொண்டிருந்தபோதே  ஆடம்  கிளம்பிச்  சென்று விட்டார். அதை அறிந்து  கைரி  எமாற்றம்  தெரிவித்தார். ஆடம்  இருந்திருந்தால் அவரிடம்  அம்னோ  உறுப்பினர்  பாரம்  ஒன்றைக் …

அது இஸ்லாத்தைத் தற்காப்பதாகும் என ஏஜி சொன்னதை அமைச்சரவை ஆதரிக்கிறதா?

பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படாததற்கு  பிரதமர்துறை அமைச்சர்  நன்சி  ஷுக்ரி நாடாளுமன்றத்தில்  அளித்த  பதில்  தொடர்பில்  அதன்  நிலைப்பாடு  என்னவென்பதை  அமைச்சரவை  முடிவு  செய்ய  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “இப்ராகிம்  அலிக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை.....காரணம்இஸ்லாத்தின்  புனிதத்தைக்  காக்கும்  நோக்கில்தான்  மலாய்மொழி  பைபிள்களைக்  கொளுத்தப்போவதாக  …

கேஎல் பட்ஜெட் அதிகாரத்துவ இரகசியமா?

கோலாலும்பூர்  மாநகராட்சி (டிபிகேஎல்) பட்ஜெட்  அதிகாரத்துவ  இரகசியச் சட்ட(ஒஎஸ்ஏ)த்தின்கீழ்  வருகிறதாம். இன்று  கேஎல்  மேயரின் விளக்கக்  கூட்டத்தில்  கலந்துகொண்ட  லெம்பா  பந்தாய்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  இவ்வாறு  டிவிட்  செய்துள்ளார். “இன்று  மேயரைச்  சந்தித்து  பட்ஜெட்  பற்றி  விளக்கம்  அளிக்கப்பட்டதைக் கேட்டு  உற்சாக  இருந்தேன். பிறகுதான்  தெரிந்தது.…

ஜாஹிட்: பிபிஎஸ் போலீஸ் வேலையை எடுத்துக்கொள்ள முயன்றது

பினாங்கு அரசால்  ஏற்படுத்தப்பட்ட  தன்னார்வ  காவல்  படை(பிபிஎஸ்)  போலீசின்  பணிகளை  எடுத்துக்கொள்ள  முன்றது  எனவும்  அம்மாநிலத்தில்  குற்ற  விகிதம்  குறைந்தததற்கும்  அதற்கும்  தொடர்பில்லை  என்றும்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட்  கூறினார். பிபிஎஸ்  உறுப்பினர்கள்  வாகனங்களைப்  சோதனையிடும் வேலையை  மேற்கொண்டதாக  தமக்குப்  புகார்கள்  கிடைத்துள்ளன என்றாரவர். அது  போலீசின் …