தனியார் கணக்கில் வைக்கப்பட்ட பணம் தேர்தலுக்கு செலவிடப்பட்டது, மகாதிர் கூறுகிறார்

வங்கியில் தனியார் கணக்கில் வைக்கப்பட்டிருந்த பணம் கடந்த பொதுத் தேர்தலுக்கு செலவிடப்பட்டது என்று அம்னோவிடம் கூறப்பட்டதாக மகாதிர் முகமட் தெரிவித்தார். "தனியார் கணக்கில் பணம் வைக்கப்பட்டது மறுக்கப்படவில்லை. அது தேர்தல்களுக்கு என்று அம்னோவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அம்னோ திருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது. "ஓர் அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற…

சரவாக் ரிப்போர்ட் இல்லையென்றால் என்ன கம்போங் ரிப்போர்ட் தொடங்குவோம்

பாஸின்  உதவிச்  செயலாளர்  ஹுசாம்  மூசா  1எம்டிபி  ‘பாவச்  செயல்கள்’ நாட்டின்  மூலை  முடுக்கெல்லாம்  பரவ  வேண்டும்  என  விரும்புகிறார்.  அதற்காக  அச்சடிப்பதற்காகவும்  விநியோகச்  செலவுக்காகவும்  ஒரு  நிதியை  ஏற்படுத்த  வேண்டும்  என்கிறார்  அவர். அந்த  ஊழல்  எல்லாருக்கும்  தெரிந்துவிடும்  எனப்  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்  அஞ்சுவதால் …

இஸ்மாயில் சப்ரி: கெட்ட பரப்புரைகளைத் தடுப்பது முக்கியம்

சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளத்தை  முடக்கிப்போட்ட  மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணைய(எம்சிஎம்சி)  நடவடிக்கை,  நாட்டை  நிலைகுலையச்  செய்யக்கூடிய  தீய  பரப்புரைகள்  பரவுவதைத்  தடுக்கும்  என  விவசாய, விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  கூறினார். “அது  தடுப்பதுடன்  குற்றவியல்  சட்டம் தேச  நிந்தனைச்  சட்டம்,  எம்சிஎம்சி   சட்டம் …

இணையத்தள முடக்கம் பிரதமர் குற்றவாளி என்ற எண்ணத்தைத்தான் வலுப்படுத்துகிறது

சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளம்  முடக்கப்பட்டிருப்பது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  குற்றவாளி  என்ற  எண்ணத்தை  வலுப்படுத்த  உதவுகிறது  என  டிஏபி  பெருந்தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார். அந்த  இணையத்தளத்துக்குச்  செல்ல  முடியாமல்  தடுப்பதன்  மூலமாக  நஜிப்பும்  மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணையமும் “மலேசியர்களுக்கும்   மற்றும் உலகத்தாருக்கும் …

1எம்டிபி-யால் புத்ரா ஜெயாவை இழக்கப் போகிறது அம்னோ

பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி, அம்னோ  தம்மையும்  மற்ற  எதிரணித்  தலைவர்களையும்  பழித்துரைப்பதைக் கண்டு  “குதூகலிக்கிறார்”. “இப்படிப்பட்ட  எதிர்வினைகள் அம்னோ-வுக்கும்  பிஎன்னுக்கும்  எதிராக  மக்களின்  ஆத்திரத்தைக்  கிளறிவிடும். அதுவே  14வது  பொதுத்  தேர்தலில்  எதிரணியை  வெற்றிபெற  வைக்கும்”, என  அவர்  ஒர்  அறிக்கையில்  கூறினார். “1எம்டிபி  ஊழல் …

சரவாக் ரிப்போர்ட்: மேலும் பல விசயங்கள் அம்பலமாகலாம் என்று எம்சிஎம்சி…

1மலேசியா  மேம்பாட்டு  நிறிவனம்  பற்றி  மேலும்  பல  விசயங்களை  சரவாக்  ரிப்போர்ட்  வெளிச்சத்துக்குக்  கொண்டுவரலாம்  என  மலேசியத்  தொடர்பு,  பல்லூடக  ஆணையம் (எம்சிஎம்சி) அஞ்சுகிறதா? தனது  இணையத்தளத்தை  அரசாங்கம்  முடக்கி  வைத்திருப்பதைப்  பார்க்கையில்  அப்படித்தான்  நினைக்கத்  தோன்றுகிறது  என  சரவாக்  ரிப்போர்ட்  கூறியது. அந்த  முடக்கம் 1எம்டிபி  ஊழலை …

அலி திஞ்சுமீது தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டியதில்லை

லவ்  யாட்  பிளாஸா  விவகாரத்தில்  தேச  நிந்தனைச்  சட்டத்தைப்  பயன்படுத்த  வேண்டிய  அவசியமே  இல்லை  என்றும்  இன இணக்கத்தைக்  கட்டிக்காக்க  அச்சட்டம்  தேவை  என்பதைக்  காண்பிப்பதற்காகவே  அரசாங்கம்  அச்சட்டத்தைப்  பயன்படுத்துகிறது  என்றும்  பிகேஆர்  கூறியது. ஜூலை  12-இல்  கோலாலும்பூர்  புக்கிட்  பிந்தாங்  சம்பவம்  தொடர்பில் ஆயுதப்  படை  முன்னாள் …

தி எட்ஜ்: சதித் திட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை

தி  எட்ஜ்  நிதியியல்  நாளேடு,  1எம்டிபி தொடர்பில்  ஆகக்  கடைசியாக  வெளியிட்டிருக்கும்  செய்தியில்  அரசியல்  சதி  என்று  கூறப்படுவதில் தனக்குத்  தொடர்பு  இல்லை  என்று  மறுத்திருப்பதுடன்   செல்வந்தர்  ஜோ  லவ்வும்  பெட்ரோசவூதி  இண்டர்நேசனல் (பிஎஸ்ஐ)  நிறுவனமும்  மலேசியாவிடமிருந்து  பில்லியன்  கணக்கில்  கொள்ளையிட  வகுத்திருந்ததாகக்  கூறப்படும்  ஒரு திட்டத்தையும்   நினைவுபடுத்தியது.…

பாஸ்: கிளர்ச்சிக்காரர்களால் பிஎன்னுக்குத்தான் நன்மை

கெராக்கான்  ஹராபான்  பாரு(ஜிஎச்பி)  அமைந்திருப்பது  பிஎன்னுக்குத்தான்  நன்மையாக  முடியும்  என்று  சிலாங்கூர்  பாஸ்  ஆணையர்  இஸ்கந்தார்  சமட்  கூறினார். ஜிஎச்பி,  பாஸ்  உறுப்பினர்களிடையே  தன்னை  வலுப்படுத்திக்  கொள்வதில்தான் கவனமாக இருக்குமே  தவிர  அம்னோவையும்  பிஎன்னையும்  எதிர்ப்பதில்  அதன்  கவனம்  செல்லாது. ஜூன் மாதம்  பாஸ்  தேர்தலில்  தோல்வியுற்ற  முற்போக்காளர்கள் …

‘என்னுடையது ஜோடிக்கப்பட்ட மின்னஞ்சல் என்றால் உங்களுடையதைக் காண்பியுங்கள்’

சரவாக் ரிப்போர்ட்  தலைமைச்  செய்தியாசிரியர்  கிளேர்  ரியுகாஸல்  பிரவுன்,  தம்மை ஜோடிக்கப்பட்ட  ஆவணங்களைக்  கொண்டு செய்திகள்  வெளியிட்டதாகக் குற்றஞ்  சாட்டுபவர்களால்  அதற்கான ஆதாரங்களைக்  காண்பிக்க  முடியுமா  என்று  சவால்  விடுத்துள்ளார். “லெஸ்டர்  மெலாஞி நான்  அனுப்பிய  மின்னஞ்சலைப் பயன்படுத்திப்  பொய்களைப்  பரப்பியபோது  நான் உடனடியாக   என்னுடைய உண்மையான  மின்னஞ்சலை …

ஜஸ்டோவை சந்தித்தேன் என்று நேரடியகச் சொல்லுங்கள், பாரிசானுக்கு புவா சவால்

  பெட்ரோசெளதி இண்டர்நேசனலின் இயக்குனர் சேவியர் ஆண்ட்ரே ஜஸ்டோவை சந்தித்தவர்களின் தானும் ஒருவர் என்று நேரடியாகக் கூறுமாறு பாரிசான் அமைச்சர்களுக்கு டிஎபி பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சவால் விடுத்தார். மறைமுகமாக இது பற்றி கூறப்படுவதைத் தொடர்ந்து, நகர்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

முன்னாள் பாஸ் முஸ்லிம்-அல்லாதவர் பிரிவு தலைவர் கட்சியுடனான உறவை முறித்துக்…

பாஸ் ஆதரவாளர்கள் கிளப்பின் கூட்டு நிறுவனரான ஹு பாங் சௌ பாஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார். பாஸ் ஆதரவாளர்கள் கிளப் பின்னர் அக்கட்சியின் நான்காவது பிரிவாக தரம் உயர்த்தப்பட்டது. கட்சியுடனான உறவை தாம் முறித்துக் கொண்டதை அவர் தொடர்பு கொண்ட போது உறுதிப்படுத்தினார். தாம் கட்சியின் புதிய…

அன்வாருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் பெருநாள் கொண்டாட்டம் இல்லை

பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில், ஹரி  ராயாவின்  முதல்  நாளில் அவரும்  அவரின்  குடும்பத்தாரும்  அவரின்  கணவர்  அன்வார்  இப்ராகிமைச்  சந்திக்க  அனுமதிக்கப்படாததை  எண்ணி  வருத்தமடைந்துள்ளார். முன்பு  அன்வார்  சிறையில்  இருந்தபோது  ஹரி  ராயா முதல்  நாளில்  அல்லது  இரண்டாவது  நாளில்  அவரைச்  சந்திக்க …

அம்னோ ஆள் பெட்ரோசவூதி ஆவணங்களை வாங்கினாராம்

பெட்ரோசவூதி  இண்டர்நேசனலிடமிருந்து  திருடப்பட்ட  ஆவணங்களை  அதன்  முன்னாள்  இயக்குனர்  சேவியர்  எண்ட்ரி  ஜுஸ்டோவிடமிருந்து  விலைக்கு  வாங்கிய  10  பேரடங்கிய  ஒரு  குழுவில்  அம்னோ-வைச்  சேர்ந்த ஒருவரும்  இருந்ததாக  சிங்கப்பூரின்  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  கூறியது. தம்மிடமிருந்த  தகவல்களை  வெளியிடாமலிருக்க  2.5 மில்லியன்  சுவீஸ்  பிரான்க் கொடுக்க  வேண்டும் என்று பெட்ரோசவூதியை …

ஜுஸ்டோசைச் சந்தித்த எதிரணி ஆள் யார் என்பது போலீசுக்குத் தெரியும்

பெட்ரோசவூதி  இண்டர்நேசனல்  நிறுவனத்தின்  முன்னாள்  தலைவர்   சேவியர்  எண்ட்ரி  ஜுஸ்டோவைச்  சந்தித்த  எதிரணித்  தலைவரின்  அடையாளம் தெரிய  வந்திருப்பதாக  போலீஸ் படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  இன்று  தெரிவித்தார். அவரின்  பெயரை  வெளியிட  மறுத்த  காலிட், அவர்  போலீசுடன்  ஒத்துழைக்க  வேண்டும்  மறுத்தால்  போலீசாரால்  தடுத்து  வைக்கப்படுவார் …

ஹரி ராயா நல்வாழ்த்துகள்

செம்பருத்தி.கோம் ஹரி ராயா நல்வாழ்த்துகள் செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசிய மக்களுக்கும் அதன் ஹரி ராயா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

நஜிப் மீது குண்டுகளைப் பொழிகிறார் மகாதிர்

  ரமதான் மாதத்தில் நஜிப்பை தாக்குவதிலிருந்து ஒதுங்கியிருந்த மகாதிர் ஹரிராயா தொடக்கத்தில் நஜிப் மீது குற்றச்சாட்டு குண்டுகளை பொழியத் தொடங்கியுள்ளார். தாம் கூறுவதை செவிமடுக்காத நஜிப் பினாங்கில் பிறந்த கோடீஸ்வரன் ஜோ லவ் மற்றும் சிங்கப்பூர் தரப்பினர் கூறுவதை கேட்டுக்கொள்வதில் நஜிப் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார் என்று மகாதிர்…

1எம்டிபி தாக்குதல் அன்வாருக்காக நடத்தப்படுகிறதாம்: காணொளி கூறும் பரபரப்பான தகவல்

1எம்டிபி  மீது கூறப்படும்  குற்றச்சாட்டுகள்  அனைத்துமே  ஜோடிக்கப்பட்டவை  என்றும்  எதிரணித்  தலைவர்கள்  பலர்  அதன்  பின்னணியில்  இருப்பதாகவும்  லெஸ்டர்  மெலாஞி காணொளி  ஒன்றில்  கூறியுள்ளார். லெஸ்டர்,  தாம்  சரவாக்  ரிப்போர்டில்  வேலை  செய்ததாகவும்  கிளேர்  ரியுகாஸலைத்  தலைமைச்  செய்தியாசிரியராகக்  கொண்டு  செயல்படும்  அந்த   இணையத்  தளத்துக்குச்  செய்திகளை  இட்டுக்கட்டிக் …

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர்: என் மின்னஞ்சலில் மாற்றம் செய்திருக்கிறார்கள்

சரவாக்  ரிப்போர்ட்  தலைமை  செய்தியாசிரியர்  கிளேர்  ரியுகாஸல்,  தாம் 1எம்டிபி  பற்றியும்  பிரதமருடன்  தொடர்புள்ளவர்களையும் பற்றியும்  தகவல்களை  இட்டுக்கட்டி வெளியிடுவதாக  தம்மீது  குற்றம் சாட்ட,  பாரிசான்  நேசனல்  ஒரு மின்னஞ்சலில் சில மாற்றங்களைச்  செய்து அதைப்  பயன்படுத்திக்  கொண்டிருப்பதாகக் குற்றம்  சுமத்தியுள்ளார். மேலும், சரவாக்  ரிப்போர்டின்  முன்னாள்  செய்தியாசிரியர் …

ரபிஸி: இது என்னை மாட்டிவிடுவதற்கான பயங்கர சூழ்ச்சி

பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி, 1எம்டிபி  தொடர்பாக  பொய்யான ஆவணங்கள்  தயாரிக்கப்பட்டதாகக்  கூறப்படும் விவகாரத்தில்  தம்மையும்  தொடர்புப்  படுத்திச்  செய்யப்பட்ட  போலீஸ் புகாரை ஒரு “கொடிய  சதி”  என்று  நிராகரித்தார். போலீஸ்  புகாரில்  சரவாக்  ரிப்போர்டின்  “முன்னாள்  செய்தி ஆசிரியர்”  என்று  கூறப்பட்டுள்ள   லெஸ்டர்  மெலாஞி-யைச்  சந்தித்ததே …

பிஎன் ஏற்பாடு செய்யும் பெருநாள் நிகழ்வுகளை பிகேஆர் புறக்கணிக்கும்

பிகேஆர்,  அதன்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சிறைக்கு  அனுப்பப்பட்டதற்கு  கண்டனம்  தெரிவிக்கும்  வகையில்  பிஎன்  ஏற்பாட்டில்  நடக்கும் ஹரி ராயா  நிகழ்வுகளில்  கலந்துகொள்வதில்லை  என  முடிவு  செய்துள்ளது. “அன்வார்  இப்ராகிம்  குற்றஞ்சாட்டப்பட்டதற்கும்  தொடர்ந்து  சிறையில்  வைக்கப்பட்டிருப்பதற்கும்  எதிர்ப்புத்  தெரிவிக்கும்   நோக்கத்தில்,  கூட்டரசு  நிலையிலும்  மாநில  அளவிலும்  பாரிசான்…

லவ் யாட் விவகாரம்: அம்னோ தலைவர் ஒருவரும் வலைப்பதிவர்களும் இன்னமும்…

லவ்  யாட்  பிளாசா  மோதல் தொடர்பில்  கைதானவர்களில்  24பேர்  நேற்று போலீஸ்  பிணையில்  விடுவிக்கப்பட்டனர். மூவர் மட்டும்  1948  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக  கோலாலும்பூர்  சிஐடி  தலைவர்  சைனுடின்  அஹ்மட்  கூறினார். வான்   முகம்மட்  அஸ்ரி   வான்  டெரிஸ்(பாபாகோமோ),  சமூக  ஆர்வலர் முகம்மட்  அலி பஹாரோம்(அலி …

ஆஸி செய்திதாள்கள் மகாதிர்மீது குற்றஞ்சாட்டாதது ஏன்?

மலேசிய  அதிகாரிகள்  ஊழல் விவகாரத்தில்  ஈடுபட்டதாக  செய்தி  வெளியிடும்  ஆஸ்திரேலிய  செய்திதாள்கள்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  பெயரை  இழுக்காதது  ஏன்  என்று  பிரதமர்  அலுவலகம்(பிஎம்ஓ)  கேள்வி  எழுப்பியுள்ளது. ஊழல்  நடந்ததாகக்  கூறப்படும் 1999-க்கும் 2004க்குமிடையிலான  காலத்தில் மகாதிர்தான்  பிரதமராக  இருந்தார்  என  பிஎம்ஓ  இன்று  வெளியிட்ட  அறிக்கையில்  கூறியது.…