இசி-இல் ‘எதிரணி ஆதரவாளர்கள்’

தேர்தல் ஆணையத்தில் (இசி) மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவானவர்கள் உண்டு என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். “எனது தொகுதியான புத்ரா ஜெயாவில், பல புதிய வாக்காளர்கள் இருந்தனர். அவர்கள்  ஹுசாம் மூசாவுக்கு (பக்காத்தான் வேட்பாளர்) வாக்களிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவர்கள்.  கேலாங் பாத்தாவிலும் அப்படித்தான் -வேண்டுமானால் (லிம்)…

பிரிட்டனில் எதிரணியினர் தப்பான கருத்தைப் பரப்பியுள்ளனர்: அட்னான்

கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மாற்றரசுக் கட்சியினர் கடந்த மாதத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக “தப்பான கருத்தை” பிரிட்டனில் பரப்பியுள்ளனர் என்று கூறுகிறார். பிரிட்டிஷ் அமைச்சர் ஒருவர் தம் மலேசிய வருகையின்போது தேர்தல் முறைகேடு பற்றியும் கேட்டறிவார் என்று என்ஜிஓ-வான சுவாராம் கூறியிருப்பது பற்றிக்…

அடுத்த சில நாள்களுக்கு மழை: வானிலை துறை ஆருடம்

வானிலை துறை அடுத்த சில நாள்களுக்கு மலேசியாவின்  பல பகுதிகளில் மழை பெய்யும் என ஆருடம் கூறியுள்ளது. பெர்லிஸ், கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் மாலை வேளைகளில் மழை பெய்யும். கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகியவற்றில் மாலையிலும் இரவிலும் இடியுடன் கூடிய…

முருகனின் கொலையை நாடாளுமன்றம் விசாரிக்க மகஜர்

தாப்பாவில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்ட கே.வசந்த குமாரிடம் உதவியாளராக இருந்த கே. முருகன், தேர்தலுக்கு முதல்நாள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதன் தொடர்பில் அந்தக் கொலையைப் புலன்விசாரணை செய்ய நாடாளுமன்றம் ஒரு குழுவை அமைக்க வேண்டுமென அவரின் தாயார் பி.ராஜம்மா கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கான மகஜர் ஒன்றை ராஜம்மா,  இன்று நாடாளுமன்ற…

தேச நிந்தனைச் சட்டம் மீதான அவசரத் தீர்மானம் தள்ளுபடி

1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்வது மீது விவாதம் நடத்தக் கோரும் அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தள்ளுபடி செய்தார். பாஸ் கட்சியின் சிப்பாங் எம்பி ஹனிபா மைடின் (வலம்) செவ்வாய்க்கிழமை அத்தீர்மானத்தைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அது ஓர் அவசர…

அரசாங்க வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை அதுதான் எப்டிஐ நம்பிக்கை குறைந்தது

அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) நம்பிக்கை குறைந்ததற்கு, அரசாங்கத்தின் உருமாற்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதுதான் காரணமாகும் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். AT Kearney's 2013 எப்டிஐ நம்பிக்கை குறியீட்டுப் பட்டியலில்  கடந்த ஆண்டில் 10வது இடத்தில் இருந்த மலேசியா இவ்வாண்டில்…

அரசாங்கம் மேலும் ஆய்வு செய்வதற்காக ஜிஎஸ்டி-யை முடக்கி வைக்கிறது.

அரசாங்கம் மேலும் ஆய்வு செய்வதற்காக ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை  வரியின் அமலாக்கத்தை முடக்கி வைத்துள்ளது. மலேசியாவில் அதனை அமலாக்குவதற்கு பொருத்தமான நேரம், குறைந்த  வருமானம் பெறும் மக்களுக்கு அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து  பாதுகாப்பது ஆகியவை அந்த ஆய்வின் நோக்கங்களாகும். "2008ம் ஆண்டு நாங்கள் ஜிஎஸ்டி மசோதாவை…

மருந்து விலை அதிகரிக்கும் என்றால் டிபிபிஏ-இல் கையெழுத்திட மாட்டோம்

மருந்துகளின் விலையேற்றத்துக்கு வழிகோலும் எனத் தெரிந்தால் ட்ரேன்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தை (டிபிபிஏ) மலேசிய அரசாங்கம் எதிர்க்கும். “மருந்துவிலை காப்புரிமையில் இப்போதுள்ள நிலை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்”, என அனைத்துல வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். “நமது தேசிய நலனைப் பாதுகாப்போம்.…

‘ரிச்சர்ட் ரியோட் பற்றிய விவரம் அமைச்சு இணையத் தளத்தில் உள்ளது’

மனித வள அமைச்சர் 'ரிச்சர்ட் ரியோட்-டின் கல்வித் தகுதிகள் பற்றிய விவரம்  அரசாங்க இணையத் தளம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டதாக டிஏபி செர்டாங் எம்பி  ஒங் கியான் மிங் கூறுகிறார். அந்த விவரம் 'ஜோடிக்கப்பட்டது' அல்ல என அவர் சொன்னார். ரிச்சர்டும் இன்னொரு அமைச்சரும் 'போலி பட்டங்களை' வைத்துள்ளதாக நேற்றுக்…

தெங்கு அட்னான்: நமக்கு அழியா மை தேவை இல்லை

மலேசியாவுக்கு தேர்தல் நடைமுறையின் ஒரு பகுதியாக அழியா மை இருக்க  வேண்டிய அவசியம் இல்லை என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு  அட்னான் தெங்கு மான்சோர் சொல்கிறார். காரணம் நாம் 'மூன்றாம் உலக நாடு'  இல்லை என்றார் அவர். அவர் இன்று மக்களவைக்கு வெளியில் நிருபர்களிடம் பேசினார். 'எதிர்க்கட்சிகள்…

எம்ஏசிசி-க்கு அனைத்துலக ஆலோசனை வாரியம்

எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அறிவுரை  கூறுவதற்கு ஒர் அனைத்துலக ஆலோசனை வாரியம் அமைக்கப்படும் என  பிரதமர் துறை அமைச்சர் பால் லாவ் கூறுகிறார். "சிறந்த அனைத்துலக நடைமுறைகளுக்கு இணையாக எம்ஏசிசி அடைவு நிலையை  உயர்த்துவதும் எம்ஏசிசி குறித்த அனைத்துலக எண்ணத்தை சீர்படுத்துவதும் அந்த  வாரியம்…

உள்துறை அமைச்சர்மீது ஏஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்பால்

வழக்குரைஞரும் புக்கிட் குளுகோர் எம்பி-யுமான கர்பால் சிங், 2006-இல் தம் கட்சிக்காரரான அமீர் பஜ்லி அப்துல்லாவை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கடுமையாகத் தாக்கிக் கொலை செய்ய முயன்றார் என்று குறிப்பிட்டு அதற்காக அவர்மீது சட்டத்துறை தலைவர் (ஏஜி) வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். “அமீர்…

கூட்டரசு நீதிமன்றம் ஜஹிட் ஹமிடியின் மனுவை நிராகரித்தது

ஒரு வணிகர் தம்மீது தொடுத்துள்ள தாக்குதல் வழக்கைத் தள்ளுபடி செய்ய அம்னோ உதவித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அஹ்மட் ஜஹிட் ஹமிடி செய்துகொண்ட மனுவைக் கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது. மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி முகம்மட் ரவுஸ் ஷரிப் தலைமையில் அதை ஆராய்ந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு,…

ஐஜிபி காலித் கௌரவம் இல்லாதவர் என்கிறார் பூச்சோங் எம்பி

கார் திருடன் என சந்தேகிக்கப்பட்ட ஏ குகன் மரணத்திற்கான காரணம்  மறைக்கப்பட்டதில் ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு  பாக்காரை உயர் நீதிமன்றம் சம்பந்தப்படுத்தியிருப்பதால் அவருடைய  தோற்றத்துக்குப் பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளதாக பூச்சோங் எம்பி கோபிந்த் சிங்  டியோ கூறுகிறார். 'குகன் வழக்கு இன்னும்…

மூன்று இடங்களைத் தவிர எல்லாப் பகுதிகளிலும் புகை மூட்டம் குறைந்தது

இன்று காலை 7.00 மணி வாக்கில் நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில்  புகை மூட்டம் குறைந்தது. அவற்றில் 'மிதமானது' அல்லது 'நன்றாக உள்ளது' என  காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு பதிவானது. என்றாலும் நெகிரி செம்பிலான் நீலாய் (144), மலாக்கா புக்கிட் ரம்பாய் (111)  சிலாங்கூர் பந்திங் (104)…

அந்த மையை விநியோகம் செய்த நிறுவனத்தின் அடையாளம் என்ன அவ்வளவு…

"அமைச்சரும் இசி-யும் எந்தப்  பாதுகாப்புக் காரணங்களைப் பற்றிப் பேசிகின்றனர்  ? பொதுத் தேர்தல் முடிந்து விட்டது. ஆகவே அவர்கள் யாரை அல்லது எதனைப்  பாதுகாக்கின்றனர் ?" இரசாயனப் பொருள் ஏதுமில்லை. வெறும் உணவுப் பொருளில் கலக்கும் சாயமே (food colouring) சேரிநாய்: அந்த அழியா மையை விநியோகித்த நிறுவனத்தின்…

அன்வார்: இடைத் தேர்தல் பக்காத்தானுக்கு மிக முக்கியமானது

திரெங்கானுவின் கோலா பெசுட்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இடைத் தேர்தல் பக்காத்தான் ரக்யாட்டைப் பொறுத்தவரை “முக்கியமானதாகும்”, என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். பொதுத் தேர்தலில் அச்சட்டமன்றத் தொகுதியை காலஞ்சென்ற அம்னோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ரஹ்மான் மொக்தார் வென்றார். அவர் 2,434 வாக்குகள் பெரும்பான்மையில்…

இசி தலைவருக்கு அறுக்கப்பட்ட கோழித் தலை அனுப்பப்பட்டுள்ளது

தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அலுவலகத்துக்கு  சில நாட்களுக்கு முன்பு அறுக்கப்பட்ட கோழித் தலையைக் கொண்ட பார்சல்  அனுப்பப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டிருந்த அந்த "நாற்றமான' பார்சலில் மிரட்டும் குறிப்பு  ஒன்றும் இருந்தது. "பதவி விலகுங்கள் அல்லது ... 505" என அந்தக் குறிப்பில் எழுதப்பட்டிருந்தது…

குகன் குடும்பம் அரசாங்கத்திற்கு எதிரான சிவில் வழக்கில் வெற்றி பெற்றது

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த ஏ குகன் குடும்பத்தினர்,  அரசாங்கத்திற்கும் போலீசாருக்கும் எதிராகத் தொடுத்த சிவில் வழக்கில் வெற்றி  பெற்றுள்ளனர். அந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 751,700 ரிங்கிட்டும் செலவுத்  தொகையாக 50,000 ரிங்கிட்டும் பிரதிவாதிகள் கொடுக்க வேண்டும் என  கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.…

IPCMC அமைப்பீர்: நீதிபதி வலியுறுத்து

போலீஸ் மீதான புகார்களையும் தப்பான நடவடிக்கைகளையும் விசாரிக்க தனி ஆணையம் (IPCMC) அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை கோலாலும்பூர்  உயர்நீதிமன்ற நீதிபதி வி.டி. சிங்கம் வரவேற்கிறார் . தடுப்புக்காவல் மரணம் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு அவர் அந்த ஆணையம் அமைவதை ஆதரிக்கிறார். “அரச ஆணையம் செய்த பரிந்துரையைக் கிடப்பில்…

புகை மூட்ட நெருக்கடியை விவாதிப்பதற்கான அவசரத் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன

மக்களவையில் புகை மூட்ட நெருக்கடியை அவசரமாக விவாதிப்பதற்காக பிஎன்,  பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் சமர்பித்த தீர்மானங்களை சபாநாயகர்  பண்டிக்கார் அமீன் முலியா நிராகரித்துள்ளார். அரச உரை மீதான விவாதத்தின் போது அந்தத் தீர்மானங்களை டிஏபி கூலாய்  எம்பி தியோ நீ சிங்-கும் மசீச ஆயர் ஹீத்தாம் எம்பி வீ…

அன்வார் மீண்டும் எதிர்த்தரப்பு தலைவராக நியமிக்கப்பட்டார்

13வது நாடாளுமன்ற மக்களவையில் எதிர்த்தரப்புத் தலைவராக அன்வார்  இப்ராஹிம் இன்று மீண்டும் நியமிக்கப்பட்டார். பெர்மாத்தாங் பாவ் எம்பி-யுமான அன்வார் எதிர்த்தரப்புத் தலைவராக நியமிக்கப்படுவதை மக்களவை சபாநாயகர் பண்டிக்கார் அமீன் முலியா அறிவித்தார். "அவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடைய ஏகமனதான ஆதரவை  அன்வார் பெற்றுள்ளார் என்பதில் நான் மனநிறைவு கொள்கிறேன்,"…

மலாக்கா முதலமைச்சருடைய ஜோங்கர் சாலை அறிக்கை ‘ பொய்யானது’

ஜோங்கர் சாலை சோதனை அடிப்படையில் நான்கு வாரங்களுக்கு மட்டுமே  மூடப்படும் என மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹரோன் கூறியது 'பொய்' என  டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். மலாக்கா மேயருக்கு வழங்கப்பட்ட ஒரு சுற்றறிக்கை இட்ரிஸ் அறிக்கைக்கு  முரணாக உள்ளது என அவர்…