அம்னோ உயர் பதவிகளுக்குப் போட்டி கூடாது என்பதை மகாதிர் ஆதரிக்கிறார்

அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி கூடாது என்று கூறப்படுவதை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் வரவேற்கிறார் என உத்துசான் மலேசியா கூறுகிறது. போட்டி இல்லையென்றால் நஜிப் அப்துல் ரசாக் தலைவராகவும் முகைதின் யாசின் துணைத் தலைவராகவும் தொடர்ந்து இருப்பர். “போட்டி இருந்தால் அம்னோ பிளவுபடலாம்.…

‘இந்தியாவிலிருந்து வந்தார் இரண்டே ஆண்டுகளில் குடியுரிமை பெற்றார்’

இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தவரான பீர் முகம்மட் காடிர்,  1984-இல் தம் உறவினருடன் சாபா வந்தார். இரண்டே ஆண்டுகளில் மலேசிய குடியுரிமை பெற்றார். பிறகு ரேலாவில் சேர்ந்தார். அரசாங்கம் குறைந்த வருமானம் பெறுவோருக்குக் கொடுக்கும் ரிம500 உதவித் தொகையையும் பெற்றார். “என் உறவினர் அடையாள அட்டை பெற உதவினார்”, என…

எம்ஏசிசி -யின் அதிகாரங்களை அதிகரிக்கக் கூடாது என்கிறார் ஒர் அமைச்சர்

ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் தங்கள்  சொத்துக்களை அறிவிப்பதைக் கட்டாயப்படுத்த கூடுதல் தனக்கு கூடுதல்  அதிகாரங்கள் தேவை என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  கூறியுள்ளது. ஆனால் அந்தக் கோரிக்கை அதிகாரம் தவறாகப்  யன்படுத்தப்படுவதற்கு வழி  வகுத்து விடலாம் என பிரதமர் துறை அமைச்சர் நான்சி…

டோனி புவா: ஐபிசிஎம்சிக்கு எதிராக மீண்டும் போலீஸ் கிளர்ச்சியா?

போலீஸ் புகார் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமலாக்கம் செய்யப்படுவதற்கான நடவடிக்கை எதனையும் அன்றைய பிரதமர் அப்துல்லா படாவி நிருவாகம் மேற்கொள்ளுமேயானால் மலேசிய போலீஸ் படை கிளர்ச்சியில் ஈடுபடும் என்று 2006, மே மாதத்தில் மிரட்டியிருந்தது. தற்போது, ஐபிசிஎம்சி அமைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் எழும்பியுள்ள புதிய…

இசி தலைவர்: அழியா மை அழிந்தது என் வாழ்க்கையில் சோகமான…

13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மையை எளிதாக அழிக்க  முடிந்தது குறித்து தாம் மிகவும் ஏமாற்றமடைந்ததாக தேர்தல் ஆணையத் தலைவர்  அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் சொல்கிறார். "என் வாழ்க்கையில் எது சோகமான கட்டம் எது என யாராவது கேட்டால் நான்  'அழியா மை' என்று தான்…

‘இசி பதவி விலக மோசடியை நிரூபியுங்கள்’

இப்போதுள்ள தேர்தல் ஆணைய(இசி) உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமானால் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததை நிரூபியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார் இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப். “சில தரப்பினர் கேட்டுக்கொள்வதால் பதவி விலக முடியாது. அப்படிச் செய்தால் உலகம் சிரிக்கும். “முதலில், நாங்கள் ஏமாற்றினோம், சட்டத்தை மீறினோம் என்பதைத்…

செய்தியாளர் கூட்டத்தில் மலேசியாகினிக்குத் தடை

கோலாலும்பூர் இபிஎப் கட்டிடத்தில் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானின் செய்தியாளர் கூட்டம் ஒன்று நடக்க விருந்தது. செய்தி சேகரிக்க மலேசியாகினியும் அங்கு சென்றது. இபிஎப் தலைமையகத்துக்கு வருகை புரிந்த அஹ்மட், வருகை முடிந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலேசியாகினி செய்தியாளர்கள் காத்திருந்த இடத்துக்கு முதலில் அனுமதிக்கப்பட்டது.…

தேடும் பணி நிறுத்தப்பட்டது

பினாங்கு அங்காடி வியாபாரியின் உடலைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி அவரின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் நிறுத்தப்பட்டது. கடும் புயலில் பினாங்கு ஜாலான் மெக்கலிஸ்டரில் மெனாரா அம்னோ கட்டிடத்தின் உயரே இருந்த 50மீ. நீள இடிதாங்கி விழுந்ததில் ஒரு காருடன் ஆறு மீட்டர் ஆழ குழிக்குள் புதையுண்டதாக நம்பப்படும் லிம் சின்…

‘புயலில் பலியானவர் உடல் இருக்கும் இடம் ஆவியுலகத் தொடர்பாளருக்குத் தெரியுமாம்’

பினாங்கில் கடும் புயலில் பினாங்கு அம்னோ கட்டிடத்தின் உயரே இருந்த இடிதாங்கி விழுந்ததில் ஒரு காருடன் ஆறு மீட்டர் ஆழ குழிக்குள் புதையுண்டதாக நம்பப்படும் ஒரு அங்காடி வியாபாரியின் உடல் எவ்வளவு தேடியும் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது ஆவியுலகத் தொடர்பாளர் ஒருவர் உடல் இருக்கும் இடத்தைக் ‘கண்டுபிடித்து’ …

‘தடுப்புக் காவலில் உள்ள இந்தியர்களை அடிப்பதுதான் போலீஸ் நடைமுறையா?’

உங்கள் கருத்து : "தங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்திய கைதிகளை  அவர்கள் அடிக்க முடியும் என்பது வழக்கமாகி விட்டதாகத் தெரிகின்றது." தடுப்புக் காவலில் மரணமடைந்த கருணா உடலில் 49 காயங்கள் காணப்பட்டன கலா: போலீஸ் தடுப்புக் காவலில் இன்னொரு இந்தியர்  ரணமடைந்தார். வழக்கம்  போல தாங்கள்…

நஜிப் டாக்டர் மகாதீரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்

'பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததற்கும் சிலாங்கூரை  மீண்டும் கைப்பற்ற முடியாமல் போனதற்கும் மகாதீரே காரணம் என்று அவரிடம்  சொல்ல வேண்டும்' எதிர்க்கட்சிகளிடம் அரசாங்கம் கடுமையான போக்கை பின்பற்ற வேண்டும் என  டாக்டர் மகாதீர் விரும்புகிறார் 2 டிம் 1:7: மலேசிய சமுதாயத்தை இன அடிப்படையில் பிரிக்கும்…

செம்பருத்தியில் செய்திச்சுருக்கம்!

செம்பருத்தியின் வாசகர்களுக்கு, மலேசியாவின் முதன்மையான தமிழ் இணையத் தளமாக செம்பருத்தி.காம் உருவாக வாசகர்களாகிய நீங்கள்தான் காரணம். தற்போது 39,320 வாசகர்கள் 104,429 முறை எங்களின் இணையத்தளத்தை வலம் வருகிறார்கள். அவர்கள் 362,188 பக்கங்களைப் பார்வையிடுகிறார்கள்.  பிப்ரவரி 25, 2008 -இல் தொடங்கப்பட்ட எங்களின் இந்த இணையத்தளம் ஐந்தாண்டுகளைக் கடந்துள்ளது. இதன் வழி…

சிலாங்கூர் மந்திரி புசார்: தர்மேந்திரன் குடும்பத்துக்கு உதவி தேவை

போலீஸ் தடுப்புக் காவலிலிருந்த போது மரணமடைந்த என் தர்மேந்திரன்  குடும்பத்துக்கு நிலையான உதவி தேவை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித்  இப்ராஹிம் கூறுகிறார். அந்தக் குடும்பத்தில் வேலை செய்த ஒரே நபரான தர்மேந்திரன் மரணமடைந்து  விட்டதே அதற்குக் காரணம் என்றார் அவர். பண்டார் துன் ரசாக் எம்பியுமான…

‘கிளந்தான் தேர்தல் மனுக்கள் ‘வினோதமானவை’

கிளந்தான் பிஎன் தான் அந்த மாநிலத்தில் தோல்வி கண்டதற்கு கொடுத்துள்ள  காரணங்களில் ஒன்றாக தம்மை பெயர் குறிப்பிட்டுள்ளது 'வினோதமாக' உள்ளது  என பிரபல சமய அறிஞர் அஸ்ஹார் இட்ருஸ் வருணித்துள்ளார். இஸ்லாமிய அரசாங்கத்தை வீழ்த்துவது ஹராம் (தடுக்கப்பட்டுள்ளது) எனத் தாம் தேர்தலின் போது சொன்னதை பாஸ் கிளந்தானில் நடத்திய…

முனைவர்: நஜிப்பை தோற்கடிக்க முடியாது

மக்களவையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை  நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் தோல்வி  காணும் என Universiti Kebangsaan Malaysia (UKM) அரசியல் அறிவியல்  விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் சம்சுல் அடாபி மாமாட் சொல்கிறார். பிஎன் எம்பி-க்களிடம் நஜிப்புக்கு பெரும் செல்வாக்கு இருப்பதே…

பக்காத்தான் அதிக வாக்குகளை வென்றிருக்கலாம் ஆனால் ‘ தலைவிதி’பிஎன் பக்கம்

பக்காத்தான் ராக்யாட் அதிகமான வாக்குகளை பெற்றிருப்பதை ஒப்புக் கொண்ட  நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான்  டஹ்லான் 'தலைவிதி'  பிஎன் -னுக்கு சாதகமாக இருந்ததாக  கூறுகிறார். சுருக்கமான சொன்னால் இறைவன் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான். அதனால்  பிஎன் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது," என அவர் சொன்னார்.…

சுல்கிப்லி: இசி நாடாளுமன்ற அதிகாரத்துக்குள் வரக் கூடாது

இசி என்ற தேர்தல் ஆணைய ஆணையர்கள் நியமனம் நாடாளுமன்ற  அதிகாரத்துக்குள் கொண்டு வரப்பட்டால் அது 'தேசத் துரோகமாகும்' என பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் கூறுகிறார். இசி-யின் அமைப்பு அகோங்கின் தனிப்பட்ட உரிமை என்பதே அதற்குக் காரணம்  என அவர் சொன்னார். கூட்டரசு அரசமைப்பின் 114வது பிரிவைச் சுட்டிக்…

புகை மூட்டம் சிறிது காலத்துக்கு நீடிக்கும்

மீண்டும்  புகை மூட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று காலை கிள்ளானிலிருந்து ஜோகூரின் மூவார்வரை காற்றின் தரம் “ஆரோக்கியமற்றதாக” இருந்தது என சுற்றுப்புறத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. துணைக் கோளப் படங்களிலிருந்து சுமத்ராவில் 46 இடங்கள் “பற்றிக்கொண்டு எரிவதாக”த் தெரிகிறது.  அதனால் எழும் புகைமூட்டம் காற்றில் தீவகற்ப…

கெடா நீருக்குக் கட்டணம் விதிப்பது நியாயமல்ல: பினாங்கு

கெடா, அதன் ஆறுகளிலிருந்து நீர் சேகரிப்பதற்காக பினாங்குக்குக் கட்டணம் விதிக்கப்போவதாகக் கூறுவதை பினாங்கு முதலைமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்துள்ளார். “கெடா ஒன்றும் நீர் வழங்கவில்லை. மூடா ஆறு  பினாங்கு வழியே ஓடுகிறது. பினாங்கு பக்கத்திலிருந்துதான் நீரை எடுத்துக்கொள்கிறோம். “மேலும், மூடா  ஆறு  இயற்கையான ஒரு நீர் ஆதாரம்.…

போர்க் குற்ற நடுவர் மன்ற வழக்குரைஞர் பெர்சேயின் நடுவர் மன்றத்தை…

கோலாலும்பூர் போர்க்குற்ற நடுவர் மன்றத்தில் தலைமை வழக்குத் தொடருனராக பணியாற்றிய சிறந்த வழக்குரைஞர் ஒருவர் மக்கள் நடுவர் மன்றத்தை வழி நடத்த உதவுவார் என்று பெர்சே அறிவித்துள்ளது. “நன்கு மதிக்கப்படும் வழக்குரைஞரும் சட்டத்துறை பேராசிரியருமான குருதயாள் சிங் நிஜார் சாது சிங், நடுவர் மன்றத்தில் மக்கள் சார்பில் வழக்குகளை…

சமய அறிஞர்: கிளந்தான் பிஎன் முறையீடு ‘வேடிக்கையாக’ இருக்கிறது

பிரபல சமய அறிஞரான அஸ்ஹார் இட்ருஸ், கிளந்தான் பிஎன் அதன் தேர்தல் முறையீட்டு மனுவில் அதன் தேர்தல் தோல்விக்கான காரணங்களில் தம் பெயரையும் சேர்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க “வேடிக்கையாக” இருக்கிறது என்கிறார். தேர்தலின்போது அவர் ஓர் இஸ்லாமிய அரசை வீழ்த்துவது ஹராம் (தவிர்க்கப்பட்ட செயல்) என்று கூறினாராம். அதை…

தேர்தல்: நஜிப் தாம் விதைத்தை இப்போது அறுவடை செய்கிறார்

"13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இனம், சமயம் ஆகியவை கூடின பட்சம்  பயன்படுத்தப்பட்டன. இப்போது நஜிப் அதனை கட்டுப்படுத்த விரும்புகிறார்.  அம்னோ அரவணைப்பு போக்கை அதிகம் பின்பற்ற வேண்டும் என யோசனை  சொல்கிறார்." நஜிப் தலைமைத்துவ சவாலை எதிர்நோக்கக் கூடும் பெர்ட் தான்: எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தல்…

‘நாகரீகமானதைச் செய்யுங்கள்’ என அம்பிகா இசி உயர் அதிகாரிகளைக் கேட்டுக்…

தேர்தல் ஆணைய (இசி) உயர் அதிகாரிகள் 13வது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட  முறையில் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என நம்புவதால் பதவி  விலகுமாறு விடுக்கப்படும் வேண்டுகோட்களுக்கு செவிசாய்க்க மறுத்து  வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதைத் தொடர்ந்து பெர்சே இணைத்  தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், இசி உயர்…