வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர், எரிபொருள் மானியங்கள், பள்ளி பராமரிப்பு, சுகாதார வசதிகள், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி, மின்னணு விலைப்பட்டியல் (e-invoicing), மற்றும் சிறிய வியாபாரிகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதாகக் கூறுகிறார். வீடமைப்பு…
தலைவருக்கு எதிரான கட்டுக்கதைகளை நம்பாதீர்: கட்சி உறுப்பினருக்கு தெங்கு அட்னான்…
தங்கள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் அம்னோ உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். அம்னோ கட்சியினர் தலைமைக்குப் பிளவுபடாத விசுவாசத்தைக் காட்டிட வேண்டும் என்றார். குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சிறந்த நடவடிக்கை …
எம்பி-கள் நாடாளுமன்றத்துக்கு வெளியில் கூட்டம் நடத்தினர்
நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய 1எம்டிபி விவகாரம் பற்றி எம்பிகள் கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக போலீஸ் பாதுகாப்பைக் கடுமையாக்கி இருந்தனர். எம்பிகள் கூடிப்பேச ஓர் அறைகூட கிடைக்கவில்லை என பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி கூறினார். எம்பிகள் பயன்படுத்த நினைத்த மண்டபத்தை இளைஞர், விளையாட்டு அமைச்சு ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தது. எனவே.…
ரசாக் உருவாக்கிய பெல்டாவை அவரின் மகன் அழித்துக் கொண்டிருக்கிறார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் தந்தையார் அப்துல் ரசாக் உசேன் உருவாக்கிய பெல்டாவை அழித்துக் கொண்டிருக்கிறார். இன்று மகாதிரைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக அனாக் தலைவர் மஸ்லான் அலிமான் மலேசியாகினியிடம் தெரிவித்தார். “நஜிப் ஒழுக்கக்கேடு மிக்க ஒருவரை பெல்டா தலைவராக நியமித்தது ஏன் என்று மகாதிர் …
தீர்ப்பை நிறுத்திவைக்க பழனிவேல் செய்த மனு தள்ளுபடி
மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற சங்கப் பதிவகத்தின் உத்தரவை நிலைநிறுத்தும் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி ஜி.பழனிவேலும் மேலும் மூவரும் செய்திருந்த மனுவை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபது அஸ்மாபி முகம்மட் அவரது அறையில் இம்முடிவைச் செய்தார். இன்னமும் தம்மை மஇகா தலைவர் என்று அழைத்துக் …
ஜோகூரில் டிஏபி நிகழ்வுமீதான தாக்குதலை போலீஸ் விசாரிக்கிறது
ஜொகூர், மாசாயில் ஒரு காப்பிக் கடையில் நடந்த டிஎபி நிகழ்வில் தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் தேடுகிறது. டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை பேச விடாமல் தடுக்க முயன்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டிருப்பதாக ஸ்டார் ஆன்லைன் செய்தி ஒன்று கூறிற்று. ஜோகூர் டிஏபி நடத்தி …
ரசாலி: உடை நெறிமுறைகளில் விட்டுக்கொடுக்க இயலாது
அரசாங்க அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய உடை நெறிமுறை குறித்து எதிரணியினர் உள்பட சில தரப்பினர் கேள்வி எழுப்புவதை நிறுத்த வேண்டும் என்கிறார் பிரதமர்துறை துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம். அரசாங்க அலுவலகங்கள் செல்வோர் கண்ணியத்துடனும் கட்டொழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அது கொண்டுவரப்பட்டது. அவ்விவகாரத்தை யாரும் கேள்வி …
ஃபோர்பஸ்: நஜிப் தாக்குப் பிடிப்பது சிரமம்
1எம்டிபி- இன் யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருக்கும் விவகாரத்தால் மலேசிய பிரதமர் பலவீனமடைந்து விடுவார் அல்லது பிரச்னைகளை எதிர்நோக்குவார். “பணம் அவரது பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்குத்தான் சென்றது என்பது நிரூபிக்கப்பட்டால் நஜிப் நிலைத்திருப்பது சிரமமே. “நிரூபிக்கப்படா விட்டாலும்கூட அதனால் …
பிரதிநிதிகளை நீக்கிய பினாங்கு அரசுக்கு எதிராக பாஸ் வழக்கு தொடுக்கும்
ஊராட்சி மன்றங்களிலிருந்த தனது பிரதிநிதிகளைப் பணிநீக்கம் செய்த டிஏபி-ஆல் வழிநடத்தப்படும் பினாங்கு அரசுக்கெதிராக பாஸ் சட்ட நடவடிக்கை எடுக்கும். பணிநீக்கம் செய்யப்பட்ட பிரதிநிதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களின் கொளரவத்தை நிலைநிறுத்தவும் கோரி கடிதம் எழுதுமாறு பாஸ் அதன் வழக்குரைஞர்களைப் பணித்திருப்பதாக அக்கட்சியின் மாநில ஆணையர் பவுஸி முகம்மட் யூசுப் …
கிட் சியாங்: நஜிப் தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக்…
டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். வால் ஸ்திரிட் ஜர்னல் சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளை விலக்கித் தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள நஜிப்புக்கு அது ஒரு …
WSJ செய்தி கணக்காய்வுத் துறை அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டதல்ல
அண்மைய வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) செய்திகள் தனது இடைக்கால கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று தேசிய கணக்காய்வுத் துறை கூறியுள்ளது. “WSJ செய்திக்கும் 1எம்டிபி இடைக்கால கணக்காய்வு அறிக்கைக்கும் தொடர்பில்லை. தேசிய கணக்காய்வுத் துறையிலிருந்து WSJ-க்கு எந்தவொரு செய்தியும் சென்றதில்லை”, என அத்துறையின் ஆய்வுப் …
ஜொகூர் டிஎபி கூட்டத்தில் குண்டர்கள் தாக்குதல்
ஜொகூர், மாசாய்யிலுள்ள ஒரு கோப்பிக் கடையில் நடந்த ஒரு டிஎபி நிகழ்ச்சியில் குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை பேச விடாமல் தடுக்க முயன்றனர். நிகழ்ச்சி பிற்பகல் மணி 2.00 க்கு தொடங்கிய சிறிது நேரத்தில் 50 பேர் அடங்கிய…
‘1எம்டிபி பற்றி விவாதிக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவீர்’-எம்பி கோரிக்கை
நாடாளுமன்றம் சிறப்புக் கூட்டத்தை நடத்தி 1எம்டிபி ஊழல் பற்றி விவாதிக்க வேண்டும் என்கிறார் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு. மற்ற அரசாங்க அமைப்புகளின்மீது நம்பிக்கை குறைந்து வரும் வேளையில், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா விரும்புவதுபோல், நாடாளுமன்றம் சுயேச்சையாக இயங்குவதை நிறுவ இதுவே தருணமாகும் என்றாரவர். “மலேசியர்களுக்கு …
அம்னோ எம்பி: பேங்க் நெகாரா குழப்பத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பணக் கையாடல் செய்தார் என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறிய அம்னோ எம்பி ஒருவர், அதைவிட இவ்விவகாரத்தில் மத்திய வங்கியும் எம்பேங்கும் நிலைமையைத் தெளிவுபடுத்துவதுதான் முக்கியம் என்றார். “பிரதமர் அலுவலகம், 1எம்டிபி, ஆகியவையும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புள்ள பல நிறுவனங்களும் மறுப்புத் …
அம்பிகா: அரசியலா? நன்றி. வேண்டவே வேண்டாம்
வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், டிஏபி-இல் சேருமாறு தமக்கு அழைப்பு விடுத்த தேசிய இலக்கியவாதி ஏ. சமட் சைட்டுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், அரசியல் தமக்குரிய பாதை அல்ல என்றவர் மறுதலித்தார். “இந்நாட்டில் அரசியல் ஈடுபட அவருக்குள்ள துணிச்சல் எனக்கு இல்லை. “பாக் சமட்டுக்கும் டிஏபி-க்கும் …
சித்தி ஆயிஷா: வலைபதிவாளராக இருந்து மிக இளம்வயதில் செனட்டரானவர்
2008 ஆகஸ்டில் புத்தம்புது பட்டதாரியான சித்தி ஆயிஷா ஷேக் இஸ்மாயில் வேலையில்லாதவராக வலைப்பதிவு எழுதுவதில் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். அவரது வலைப்பதிவு நாட்டமே இன்று அவரை ஒரு செனட்டராக்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்குமுன் அவர் பினாங்கைப் பிரதிநிதிக்கும் செனட்டராக பதவி ஏற்றபோது அவருக்கு வயது 30. செனட்டராவதற்கு குறைந்தபட்ச வயது …
அம்பிகா டிஏபி-இல் சேர்வதை விரும்புகிறார் பாக் சமட்
டிஏபி கட்சியில் சேர்ந்துள்ள தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட், பெர்சே 2.0-இல் தம்முடன் இணைத் தலைவராக இருந்த அம்பிகா ஸ்ரீநிவாசனும் மாணவர் தலைவர் ஆடம் அட்லி அப்துல் ஹாலிமும் அரசியலில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறார். “அவர்(அம்பிகா) வருவதை வரவேற்கிறேன். அவர் திறமையானவர், அறிவாளி. அவர் டிஏபி-இல்…
WSJ: எங்கள் செய்தி உண்மையானது, அரசாங்க விசாரணை அறிக்கையை நஜிப்பும்…
வால் ஸ்திரிட் ஜர்னல்(WSJ), பிரதமர் பண மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டி வெளியிட்ட செய்தியைத் தற்காத்துள்ளது. அது அரசாங்கப் புலனாய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அந்த அறிக்கையை நஜிப் அப்துல் ரசாக்கும் பார்த்திருக்கிறார் என்றும் அது தெரிவித்தது. WSJ-இல் நேற்று வெளியான செய்தியில் 1எம்டிபி-இன் பணம் யுஎஸ்$700 மில்லியன் …
நஜிப் WSJ-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1எம்டிபி-இன் பணம் யுஎஸ்$700 மில்லியன் அவருடைய தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக் கூறிய வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு (WSJ) எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிகிறது. சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நஜிப்பின் அரசியல் செயலாளர் முகம்மட் கைருன் ஆசே உறுதிப்படுத்தியதாக …
‘என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்’-ஆதரவாளர்களுக்கு அன்வார் அறிவுறுத்து
சிறையில் உள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தம் ஆதரவாளர்கள் தம்மைப் பற்றிக் கவலைப்படுவதை விரும்பவில்லை. “உங்களுக்கு நன்றி. ஆனால், என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இன்ஷாஅல்லா, நான் நன்றாக இருக்கிறேன். ரமலான் மாதக் கடமைகளைச் செய்வதில் கவனம் செலுத்துமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். “நிறைய தொழுங்கள். விலைவாசி உயர்வை, …
பணக் கையாடல் குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்
சுமார் யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது பற்றி மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரிக்கும். “அந்த விவகாரத்தைக் கவனிப்போம். அதில் ஊழல் நடந்திருப்பதாக தெரிந்தால் விசாரணை செய்வோம்”, என எம்ஏசிசி பேச்சாளர் ரொஹாய்ஜாட் யாக்கூப் வால் ஸ்திரிட் ஜர்னலிடம் தெரிவித்தார்.
குவான் எங் ‘இனவாத மூதாட்டிக்கு’ரிம500ஆயிரம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு
பினாங்கு எதிரணித் தலைவர் டத்தோ ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாத பாட்டி” என அழைத்ததற்காக முதலமைச்சர் லிம் குவான் எங் மீது தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார். லிம் இழப்பீடாக ரிம500,000-மும் வழக்கு தொகையான ரிம40,000-மும் கொடுக்க வேண்டும் என நீதி ஆணையர் நோர்டின் ஹசான் தீர்ப்பளித்தார்.…
WSJ செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி- பிரதமர் அலுவலகம்
வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ)செய்தியை நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான “அரசியல் சூழ்ச்சி”-இன் தொடர்ச்சி எனப் பிரதமர் அலுவலம்(பிஎம்ஓ) வருணித்தது. உலகளாவிய சவால்களுக்கு எதிராக மலேசியப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக அவர் வழிநடத்திச் சென்று கொண்டிருந்தாலும் தனிப்பட்ட சிலர், நம் பொருளாதாரத்தின்மீதுள்ள நம்பிக்கைக்குக் குழிபறிக்கவும் அரசாங்கத்தின் பெயரைக் கெடுப்பதற்கும் ஜனநாயக …
WSJமீது பாய்ந்தார் அமைச்சர்
நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், 1எம்டிபி- இலிருந்து கிட்டத்தட்ட யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்ட வால் ஸ்திரிட் ஜர்னல் ஆசியா(WSJA)-வைக் கடிந்து கொண்டார். அனைத்துலக அளவில் பேர்பெற்ற செய்தித்தாளான அது தனக்கு அத்தகவல் …


