‘முக்கியமான கடமைக்கு கூடுதல் போலீஸ்காரர்கள் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆர்சிஐ…

ஜைடின் போலீஸ் அரச விசாரணை ஆணையம் பரிந்துரைகளை வழங்கி எட்டு  ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் போலீஸ்காரர்களில் அதிகமானோர் காவல்  பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற அந்த ஆணையத்தின் முக்கியமாக  பரிந்துரை இன்னும்  நிறைவேற்றப்படவில்லை என டிஏபி கூறுகிறது. போலீஸ்காரர்களில் 22 விழுக்காட்டினர் குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்ற…

‘பழனிவேலும் ஜாம்ரியும் தனிப்பட்ட முறையில் பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்ள…

பேராக் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் பதவி மீது மஇகா தலைவர் ஜி  பழனிவேலுக்கும் மாநில மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிருக்கும் இடையில்  பகிரங்கமாக நிகழும் வாக்குவாதம் பிஎன் -னுக்கு எந்த நன்மையையும் தரவில்லை  என அம்னோ தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். "பகிரங்கமாக குறை கூறுவது போதும். பிரச்னை…

‘மதம் மாற்ற சம்பவம் அமைச்சரவை முடிவுகள் வலு இல்லாதவை என்பதைக்…

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரகசியமாக மதம் மாற்றம் செய்வதை தடை  செய்யும் அமைச்சரவை முடிவை அரசு ஊழியர்கள் மீறுவதால் அமைச்சரவை  வலிமை இல்லாதவை என சமயங்களுக்கு இடையிலான மன்றம் குறை  கூறியுள்ளது. "2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவை செய்த அந்த முடிவு அத்தகைய  சம்பவங்கள் அநீதியாக இருப்பதால்…

ஜோகூரில் ஷியாரியா குற்றங்களுக்காக 22 மகளிருக்குப் பிரம்படி தண்டனை

ஜோகூரில் ஷியாரியா குற்றங்களில் ஈடுபட்டதற்காக பிரம்படி கொடுக்கப்பட்ட 39 பேரில் 22 பேர் பெண்கள் ஆவர். தகாத புணர்ச்சியில் ஈடுபட்டதற்காகவும் திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவில் ஈடுபட்டதற்காகவும் அவர்களுக்கு இத்தண்டனை கொடுக்கப்பட்டது. பிரம்படி தண்டனையை அனுமதிக்கும்  ஷியாரியா குற்றச்செயல் தண்டனைச் சட்டம்  நாடு முழுக்க அமலுக்கு வந்திருந்தாலும் ஜோகூரில்தான் முதல்முறையாக…

பிகேஆர்: எம்பி பதவி பிரமாணத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் இருந்ததில்லை

எம்பிகளின் பதவி பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்க என்றும் எண்ணியதில்லை என பிகேஆர் அறிவித்துள்ளது. “2013, ஜூன் 24-இல் நடைபெறும் பதவி பிரமாணச் சடங்கை பிகேஆர் புறக்கணிக்கும் என்று ஊடகங்களில் கூறப்பட்டு வந்துள்ளது. “ஆனால், பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வைப் புறக்கணிக்க பிகேஆர் என்றும் நினைத்ததில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன்”,…

அரசாங்கம் செய்தி இணையத் தளங்களுக்கு அனுமதி முறையை அறிமுகம் செய்யாது

செய்தி இணையத் தளங்களுக்கு அனுமதி முறையை அமலாக்கும் எண்ணம்  அரசாங்கத்துக்கு இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். ஊடகங்கள் சட்ட எல்லைகளை மீறாமல் பார்த்துக் கொள்வதற்கு நடப்புச்  சட்டங்களை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர் சொன்னார். "இந்த நாட்டில் ஐக்கியத்தைச் சீர்குலைக்க இனம் அல்லது மொழி அட்டைகளை…

முன்னாள் நீதிபதி அப்துல் காடிரை சபாநாயகராக பாக்கத்தான் முன்மொழிகிறது

பக்கத்தான் ராக்யாட் ஏகமனதாக முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி அப்துல் காடிர் சுலைமானை நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி அப்துல் கடீரின் நியமனத்தை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி புசாருமான காலிட் இப்ராகிம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது என்று…

மெட்ரிகுலேசன்:இந்திய அமைச்சர்கள் பதவி விலகுவோம் என்று ஏன் சவால் விடலில்லை?

-மு. குலசேகரன், எம்பி, ஜூன் 12, 2013.  இந்தியர்களின் பிரச்சனைகளை நாங்கள்தான் முன்னின்று காப்போம் என்று ம.இ.கா ஒருபுறமும், இல்லை உங்களால் 54 வருடங்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை, ஆகவே ஹிண்ட்ராப்தான் அப்பிரச்சனைகளைக் கையாள வேண்டும் என்று புதிதாக அச்சடிக்கப்பட்ட துணை அமைச்சர் வேதமூர்த்தி  மறுபுறமும் சிண்டு பிடித்திக்கொண்டிருக்கும்…

இசி தலைமை பதவி விலகாது: அப்துல் அசீஸ் திட்டவட்டம்

தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், 13வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மனநிறைவு அடையாதவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் என்பதற்காக இசி தலைமை பதவி விலகாது எனக் கூறுகிறார். இசி தலைமை என்பது தம்மையும் துணைத் தலைவரையும் ஐந்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியது. தாங்கள் அனைவருமே கூட்டரசு அரசமைப்புப்படியும்…

ஜாஹிட் வாக்குகளை வாங்கினார்; நிறைய செலவிட்டார்: பிகேஆர்

அம்னோவின் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, நாடாளுமன்றத் தொகுதிக்கு அனுமதிக்கப்பட்ட தெர்தல் செலவினத் தொகையான ரிம200,,000-த்தைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக, ரிம2 மில்லியனுக்கும் கூடுதலாகச் செலவிட்டிருக்கிறார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. அது, ஜாஹிட் மே 5 பொதுத் தேர்தலில் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதாகவும் அனுமதிக்கப்பட்ட தொகையைக்…

இப்போது பிரதமருடைய சகோதரரை குவான் எங் பாராட்டுகின்றார்

ஏர் ஏசியா எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ரான் ஒஸ்மான் ரானிக்கு  ஆதரவாகப் பேசிய சிஐஎம்பி குழும தலைமை நிர்வாகி நாஸிர் அப்துல் ரசாக்கை  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பாராட்டியிருக்கிறார். "நாங்கள் யார் பக்கமும் சாயவில்லை. எது சரியோ அதைத் தான் நாங்கள் சொல்ல  விரும்புகிறோம்.…

பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணிப்பது பற்றி பிகேஆர் இன்றிரவு முடிவு…

ஜுன் 24ம் தேதி புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் போது பதவி  உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கை தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள்  புறக்கணிக்க வேண்டுமா இல்லையா என்பதை பிகேஆர் இன்றிரவு முடிவு  செய்யும். "அதனை அரசியல் பிரிவு விவாதிக்கும்," என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி  இஸ்மாயில்…

‘நாஸிர் சகோதரர் நஜிப்புக்கு நெருக்குதலை அதிகரித்து விட்டார்

உத்துசான் மலேசியாவைக் குறை கூறிய ஏர் ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி  அஸ்ரான் ஒஸ்மான் ரானி-க்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததின் மூலம்  நாஸிர் அப்துல் ரசாக் அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல்  ரசாக்கிற்கு "அதிகமான பிரச்னைகளை உருவாக்கியுள்ளார்." இன்று உத்துசான் மலேசியாவில் வெளியான கருத்துக் கட்டுரையில் ஜைனுடின்…

எர் டெக் ஹுவாவுக்கு டிஏபி கடும் எச்சரிக்கை

கட்சிக் கட்டளையை மீறி நேற்றைய நாடாளுமன்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பக்ரி எம்பி எர் டெக் ஹுவா-வை டிஏபி கொறாடா அந்தோனி லோக் கடுமையாக எச்சரிப்பார். ஆனால், எர் எழுத்து வடிவில் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதால் அவ்விவகாரம் கட்சியின் ஒழுங்குக் குழுவுக்கு கொண்டுசெல்லப்பட மாட்டாது என்று அதன் தொடர்பில் வெளியிட்டிருக்கும்…

பிகேஆர்: அல்டான்துன்யா வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி கரிம், அல்டான்துன்யா வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியதைப் பிடித்துக்கொண்ட பிகேஆர் மகளிர் பகுதி ‘என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. “சந்தேகத்துக்குரிய முக்கியமானவரே வெளியில் இருக்கிறார். அவர்தான் மலேசிய பிரதமர்”, என பிகேஆர்…

சைபுடினின் புதிய பணி ‘இன்னும் விளக்கப்படவில்லை’

சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் பிகேஆர் கட்சியின் அரசியல் தொடர்பு  அதிகாரி என்ற ரீதியில் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனின்  கடமைகள் என்ன என்பது இன்னும் சிலாங்கூர் பிகேஆர்-ருக்கு  தெரிவிக்கப்படவில்லை. "அவருடைய பணிகள் பற்றிய விவரம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சிலாங்கூர்  பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி இங்கு…

பெற்றோர்களில் ஒருவர் மட்டும் பிள்ளைகளை மதம் மாற்றுவது ‘தார்மீக ரீதியாக…

ஒரு குழந்தையை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவர்  மட்டும் ஒப்புக் கொள்வது போதுமானது என நெகிரி செம்பிலான் இஸ்லாமிய  விவகாரத் துறை இயக்குநர் ஜொஹானி ஹசான் சொல்லியிருப்பது 'தார்மீக ரீதியாக  தவறானது' என மலேசிய குருத்துவார் மன்றம் வருணித்துள்ளது. "அது அரசமைப்புக்கு முரணானது மட்டுமல்ல தார்மீக ரீதியிலும்…

எம்பி : ‘தேடப்படும்’ போலீஸ்காரரின் நிழற்படத்தை வெளியிடுக

தர்மேந்திரனின் தடுப்புக்காவல் மரணத்துடன் சம்பந்தப்பட்ட நான்காவது நபராகக் கருதப்படும் போலீஸ் அதிகாரியின் பெயரையும் நிழற்படத்தையும் போலீஸ் வெளியிட வேண்டும் என செகாம்புட் எம்பி, லிம் லிப் எங் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வதிகாரி தலைமறைவாகி விட்டதால், அவரது பெயரையும் படத்தையும் வெளியிட்டால் அவரைத் தேடிப் பிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என லிம்…

நாஸிர் மலாய் எதிர்ப்பாளர் அல்ல அவர் எல்லா மலேசியர்களுக்கும் பாடுபடுகிறார்

அம்னோ உட்பூசல் பெரிதாகியுள்ளது. பிரதமருடைய சகோதரர் கூட விட்டு  வைக்கப்படவில்லை. அதிகாரத் தரகர்கள் உயர் பதவிக்கு குறி வைக்கின்றனர்.  அவர்கள் முதலில் உடன் பிறப்புக்களைத் தாக்குகின்றனர் இப்போது நாஸிர் ரசாக் மலாய் எதிர்ப்பாளர் சக மலேசியன்: உத்துசான் மலேசியா உட்பட மலாய் வலச்சாரி அமைப்புக்களின்  நேர்மையற்ற கடுமையான தாக்குதலுக்கு…

இப்போது நாஸிர் அப்துல் ரசாக் ‘மலாய் எதிர்ப்பாளர்’

ஏர் ஏசியா எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ரான் ஒஸ்மான் ரானிக்கு  ஆதரவாகப் பேசிய பிரதமரது சகோதரர் நாஸி அப்துல் ரசாக் 'மலாய்  எதிர்ப்பாளர்' என மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கத்தின் தலைமையில்  இயங்கும் மலாய் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணி ஒன்று  வருணித்துள்ளது. உத்துசான் மலேசியா…

வாக்குறுதிகளை கைவிடுங்கள் எனப் பிரதமருக்கு ஆலோசனை

மூன்று மாநிலங்களில் சீன உயர் கல்விக் கூடங்களை அதிகரிப்பதாகவும் தரம்  உயர்த்துவதாகவும் தாம் அளித்த எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக் கைவிட வேண்டும் என மலாய் முஸ்லிம் அரசு சாரா  அமைப்புக்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. பிஎன்-னை ஆதரிப்பதாக 'தாங்கள் அளித்த வாக்குறுதியை' மலேசிய…

பிகேஆர்: பதவி பிரமாணம் செய்துவைப்பதை மறுக்கும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு…

மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணிக்கும் எம்பிகளைத் தாமும் புறக்கணிக்கப்போவதாக வேடிக்கையாகக் குறிப்பிட்டதற்கு பிகேஆர் உதவித் தலைவர் சுரேந்திரன் பதிலடி கொடுத்திருக்கிறார். சுரேந்திரன், நிலை ஆணை 5(10)ஐ பண்டிகாருக்கு நினைவுறுத்தினார். அது மக்களவை செயலாளர் எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.…

போலீஸ் மீதான புகார்கள் : ஐபிசிஎம்சி-க்காக தெரு ஆர்ப்பாட்டமா?

போலீஸ் மீதான புகார்களையும் அவர்களின் தவறான நடத்தைகளையும் விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக  Stop State Violence இயக்கம் தெரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக்கூடும். இவ்வாண்டில் மட்டும் போலீஸ் காவலில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதை அடுத்து அது பற்றி ஆலோசிக்கப்படுபவதாக 30…