ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு காய்கறி வழங்குபவர்களிடமிருந்து லஞ்சம் கேட்டு வாங்கியதற்காக ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தால் ஒரு மூத்த குடியேற்ற அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) சட்டத்தின் பிரிவு 16(a)(B) இன் கீழ் சுல்கிப்லி…
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் நான்கு பிரதிநிதிகள் வேண்டும், பாஸ் வலியுறுத்துகிறது
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் அதற்கு தற்போது இருக்கும் நான்கு இருக்கைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று பாஸ் பிடிவாதம் செய்கிறது. தங்களுக்கு சிலாங்கூர் சட்டமன்றத்தில் 15 இருக்கைகள் இருப்பதால் ஆட்சிக்குழுவில் தங்களுடைய பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று சிலாங்கூர் பாஸ் கமிஷனர் இஸ்கந்தர் அபு சாமாட் கூறினார்.…
சிலாங்கூர் ஆட்சிக்குழு அமைப்பதில் நெருக்கடியா?
சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் அஸ்மின் அலி அவரது ஆட்சிக்குழுவை அமைப்பதில் பெரும் தலைவலியில் சிக்கிக் கொள்வார் எனத் தெரிகிறது. மாநில எம்பி பதவி விவகாரம் பக்கத்தான் கூட்டணி பங்காளிகளுக்கிடையிலான உறவை பாதித்துள்ளது. பாஸ் இதர பக்கத்தானுடன் மனதார உத்துழைக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.…
மகாதீர்: சுல்தான் வரம்பை மீறும் கட்டாயத்திற்குள்ளானார்
பிகேஆர் மற்றும் டிஎபி என்ற பெயர்கள் எதனையும் குறிப்பிடாமல் மந்திரி புசார் நியமன சிக்கலில் சிலர் சிலாங்கூர் சுல்தான் அவரது கடமையின் வரம்பை மீறச் செய்து விட்டனர் என்று மகாதீர் கூறினார். "ஆம், ஆட்சியாளர் (வரம்பை) மீறிவிட்டது போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால், இதற்கு காரணமாவர்கள் மக்கள்தான்.…
மகாதீர்: தாராளமாக கைது செய்யுங்கள்
தாம் சட்டத்தை மீறியிருந்தால் தம்மை தாராளமாக கைது செய்யலாம் என்று டாக்டர் மகாதீர் கூறினார். இன்று பின்னேரத்தில், மகாதீர் தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் செய்திருந்த போலீஸ் புகார் பற்றி கருத்துரைத்த போது, "இப்போது நான் ஒரு சாதாரண குடிமகன். சட்டப்படி…
மகாதீர், நஜிப் ஆகியோருக்கு எதிராக போலீஸ் புகார்
உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி தேச நிந்தனை பற்றி செய்யப்படும் போலீஸ் புகார்கள் 24 மணி நேரத்திற்குள் விசாரிக்கப்படும் என்று அளித்திருந்த்உறுதிமொழியைத் தொடர்ந்து ஒரு டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகம்மட் மற்றும் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோருக்கு எதிராக போலீஸ் புகார்செய்துள்ளார். கடந்த…
எலிசபெத் அரசி கூட பிரதமரை தேர்வு செய்ய முடியாது
பிரிட்டீஷ் வெஸ்ட்மின்ஸடர் நாளாளுமன்ற அமைவுமுறையின் கீழ் எந்த ஓர் அரசருக்கும், எலிசபெத் அரசியார் கூட, பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் கிடையாது என்று நமது நாட்டின் மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸ் கூறுகிறார். 1990-1991 ஆண்டுகளில் பிரிட்டீஷ் அரசியலில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியை எடுத்துக்காட்டாக அவர் முன்வைத்தார்,…
ஸாகிட்டுக்கு எதிராக தேச நிந்தனை புகார், 24 மணி நேரத்திற்குள்…
இன்று பேராக் மாநில டிஎபி உள்துறை அமைச்சர் அஹ்மட் ஸாகிட் ஹமிடிக்கு எதிராக தேச நிந்தனை புகார் செய்துள்ளது. நேற்று, பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தேச நிந்தனை கருத்துக்களைத் தெரிவித்ததற்காக அப்புகார் செய்யப்பட்டுள்ளது. ஸாகிட்டின் பேச்சு தேச நிந்தனையானது. அது மலாய்…
அஸ்மின் “தூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும்” எம்பியா?
பிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அஸிசா மந்திரி புசாராக நியமிக்கப்பட்டால் அவர் "துராத்திலிருந்து இயக்கப்படும்" எம்பியாக செயல்படுவார் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. புதிதாக மாநில எம்பியாக நியமிக்கப்பட்டிருக்கும் அஸ்மின் அலி எப்படி? கேள்விக்கு நேரடியான பதிலைத் தவிர்த்த அவர் தாம் சிலாங்கூர் மாநில அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப…
தேச நிந்தனை சட்டத்தின் புதிய இலக்கு அன்வார் இப்ராகிம்
தேச நிந்தனைக்கு எதிரான அரசின் கடும் நடவடிக்கைகள் இப்போது எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது பாய்கிறது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகள் மீது விசாரிக்கப்பட விருக்கிறார். கோம்பாக்கில் ஓர் அரசியல் கூட்டத்தில் அன்வார் ஆற்றிய உரை இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று…
டிஎபி தலைமைத்துவம் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது, ரோஸ் ஒப்புக் கொண்டது
டிஎபியின் தற்போதைய மத்திய செயற்குழு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செயற்குழு உறுப்பினர்களின் தேர்வில் முறைகேடுகள் நடந்திருந்ததாக டிசம்பர் 2012 லிருந்து மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) கூறி வந்துள்ளது. டிஎபியின் மத்திய செயற்குழுவிற்கு அங்கீகாரம் வழங்காமல் இருந்தது ஓர் ஆலோசனை நடவடிக்கையே தவிர அது சட்டப்படி…
அஸ்மின் அலி எம்பி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்
புக்கிட் அந்தாரா சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். காலை மணி 10.42 க்கு சிலாங்கூர் சுல்தான் முன் அஸ்மின் அலி, 50, பதவி ஏற்றார். அஸ்மின் அலியின் துணைவியார் ஷம்சிடார் தஹாரின் பதவிப்…
சுல்தான் தலையிடவே இல்லை, அரண்மனை சொல்கிறது
பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூரின் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்பட்டதற்கான காரணங்களை இன்று அரண்மனை விளக்கியது. எம்பி வேட்பாளர் நியமனத்தில் பக்கத்தான் ரக்யாட் ஒரு வேட்பாளர் மீது உடன்பாடு காண முடியாமல் போனதே ஆட்சியாளர் அஸ்மின் அலியை தேர்வு செய்ய வேண்டியதாயிற்று என்று விளக்கம் அளிக்கப்பட்டது.…
அஸ்மின் எம்பி நியமனத்திற்கு பிகேஆர் ஒப்புதல் அளித்தது
இன்று சிலாங்கூர் அரண்மனையிலிருந்து சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக நியமனக் கடிதம் பெற்ற பின்னர் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி அப்பதவிக்கு அக்கட்சியின் ஒருமித்த ஆதரவை இன்றிரவு பெற்றார். பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சி தலைவர் வான் அஸிசா மற்றும் இதர தலைவர்களுடம்…
ஆண்டவன் மீது ஆணையாக, தேச நிந்தனை விசாரணை தொடரும், ஸாகிட்
போலீசில் புகார் செய்த 24 மணி நேரத்திற்குள் போலீஸ் விசாரனை தொடங்கும் என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிட் ஆண்டவன் மீது ஆணையாக உறுதியளித்தார். தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில் இந்த…
அஸ்மின் மந்திரி புசார் நியமனக் கடிதம் பெற்றார்
சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி புசாராக பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை அவர் சிலாங்கூர் அரண்மனையிலிருந்து பெற்றுக் கொண்டார். இன்று மாலை அக்கடிதம் பெறப்பட்டது. சிலாங்கூர் மாநில புக்கிட் அந்தாரா சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின் அலி நாளை காலையில் பதவிப் பிரமாணம் எடுப்பார்…
அஸ்மின், நிக் நாஸ்மி அரண்மையில் இருந்தனர் என்பதை மறுக்கின்றனர்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் நிக் நாஸ்மி ஆகிய இருவரும் நாளை நடைபெறவிருக்கும் மந்திரி புசார் பதவி பிரமாண சடங்கின் ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிலாங்கூர் அரண்மையில் இருந்தனர் என்று கூறப்படுவதை மறுத்தனர். அவர் அரண்மனையில் இருந்ததாகக் காட்டும் ஒரு…
சுல்தானின் முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள், பிகேஆர் கெடா கூறுகிறது
புதிய சிலாங்கூர் மந்திரி புசாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவதற்கு இன்னும் 24 மணிக்கும் குறைவான நேரமே இருக்கையில், அரண்மனையுடனான சண்டையை நிறுத்திக் கொள்ளுமாறு சில பிகேஆர் தலைவர்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். கெடா மாநில பிகேஆர் தொகுதி தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் சுல்தான்…
மகாதீர்: அரண்மனை முடிவுக்கு தலையாட்டுங்கள்
சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் சச்சரவை தவிர்க்கும் பொருட்டு சிலாங்கூர் சுல்தானின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் கூறுகிறார். சுல்தானின் முடிவை எந்தத் தரப்பாவது எதிர்த்தால், அது நிச்சயமாக நீண்ட கால அரசியல் சச்சரவுக்கு வழிவகுக்கும் என்றார்.…
துணை மந்திரி புசார்: பாஸ்சுக்கு எதுவுமே தெரியாது!
பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர் ஒருவர் சிலாங்கூர் துணை மந்திரி புசார் பதவியை ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் குறித்து விவாதித்ததே இல்லை என்று கூறுகிறார். சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கந்தர் சாமாட் சிலாங்கூர் துணை மந்திரி புசாராக நியமிக்கப்படவிருக்கிறார் என்பது குறித்து அவரது கருத்தைக் கேட்ட போது "இது…
அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரிக்கு எதிராக போலீஸ்…
மலாக்கா, அலோர்காஜா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி சமீபத்தில் எழுதியிருந்த "கட்டற்ற அதிகாரம் ஆண்டவனுக்கு மட்டுமே சுல்தானுக்கு அல்ல" என்ற கட்டுரை ஓர் ஓன்லைன் தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததற்கு எதிராக அவர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. மலாக்கா மற்றும் நெகிரி…
சிவராசா: அஸிசா எம்பி இல்லை என்றால், விளக்கம் அளிக்கப்பட வேண்டும்
பிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அஸிசா சிலாங்கூர் மாநில எம்பி பதவிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 56 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றுள்ள வான் அஸிசா மந்திரி புசாராக நியமிக்கப்படவில்லை என்றால், "அதற்கான விளக்கம்" அளிக்கப்பட்டாக வேண்டும்…
அஸ்மின் அலி மந்திரி புசாராக நியமிக்கப்படலாம்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி புதிய மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது. பதவி சத்தியப் பிரமாணம் நாளை காலை மணி 10.00 க்கு கிள்ளான், இஸ்தானா அலம் ஷாவில் நடைபெறும். பதவி ஏற்ற பின்னர் அஸ்மின் ஒரு செய்தியாளர் கூட்டத்தை…
காலிட் மிகச் சிறந்த எம்பிகளில் ஒருவர், இஸ்கந்தர் கூறுகிரார்
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் பாஸ் உறுப்பினர் இஸ்கந்தர் அப்துல் சாமாட் மாநிலத்தின் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகப் போகும் காலிட் இப்ராகிம் இம்மாநிலத்தின் மிகச் சிறந்த மந்திரி புசார்களில் ஒருவர் என்று இன்று பாராட்டினார். இன்று சிலாங்கூர் மாநில அரசாங்க நிருவாக கட்டடத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்கந்தர்…


